மாங்காய் இஞ்சி பிசறல்.
பிப்ரவரி 16, 2012 at 10:56 முப 10 பின்னூட்டங்கள்
இந்த மாங்காய் இஞ்சி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை
வந்த பிறகு மாங்காயிஞ்சியை ஸ்மரிக்காமல் இருக்க முடியுமா?
கேட்பதற்கு முன்னாடியே எனக்கு பிடிக்கும் என்ற முறையில் மாஇஞ்சியை
என் பெண் வாங்கி வந்து விட்டாள். ஸரி, எதையும் தேடிப் போகாமல்
இருப்பதைவைத்து ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது.
ஸாதாரணமாக பொடியாக மாஇஞ்சியை நறுக்கி, உப்பு சேர்த்து,
எலுமிச்சை சாறு சேர்த்து , கடுகு தாளித்து, பச்சைமிளகாயையும்
துளி வதக்கிப் போட்டால் அதுவே மிக்க ருசியாக இருக்கும்.
எனக்கு எப்படி செய்தால் பிடிக்கும்,செய்தேன் என்பதையும்தான்
நீங்களும் படியுங்களேன். பிரமாதமொன்றுமில்லை. இருந்தாலும்
எழுதுகிறேன். படியுங்கள்.
வேண்டியவைகள்—–
நல்ல கேரட்—பெறியதாக ஒன்று
திட்டமான நீளம் கொண்ட மாங்காயிஞ்சி—4 துண்டுகள்
கேப்ஸிகம்—1 பச்சைநிறம்.
பச்சைமிளகாய் பாதியோ அல்லது ஒன்றோ
பூண்டு இதழ்—ஒன்று.பிடித்தவர்கள் உபயோகிக்கவும்.
வெங்காயம்—-1
உப்பு—ருசிக்கு
சர்க்கரை—ஒரு துளி
கடுகு, சீரகம்—மொத்தமாக அரை டீஸ்பூன்.
உளுத்தம் பருப்பு—-சிறிது
எண்ணெய்—-துளி. தாளிக்க
சின்ன எலுமிச்சம் பழம்—1
கொத்தமல்லித்தழை—மேலே தூவ
செய்முறை—இஞ்சி,கேரட்டைத் அலம்பித் தோல்
சீவிப் பொடியாக நறுக்கவு்ம்.
காப்ஸிகத்தையும் அதே அளவில் நறுக்கவும்.
ஒரு கரண்டியில் துளி எண்ணெயில் கடுகு,சீரகம் உ.பருப்பு,தாளித்து
பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி வைக்கவும்.
எலுமிச்சை சாற்றில்,,உப்பு, சர்க்கரை சேர்த்து நறுக்கிய துண்டங்களின்
கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
தாளிதத்தைச் சேர்த்து கொத்தமல்லி தூவவும். உரிகானோ இருந்தலும்
ஒரு துளி போடலம்.
வாய்க்கு ருசியானது. பார்க்கவும் அழகாக இருக்கு. சாப்பாட்டுடன்,
ருசிதான். வெங்காயத்தை பிடித்த முறையில் வதக்கியோ,
பச்சையாகவோ நறுக்கிச் சேர்க்கலாம்.
வினிகர் சேர்த்தும் செய்யலாம்.
Entry filed under: சுலபமானது.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Prabu | 2:38 பிப இல் பிப்ரவரி 16, 2012
மாமி,
நமஸ்காரங்கள், இது கலக்கல்.. சூப்பர்-ஆ இருக்கு…
நான் அடுத்த தடவை இந்தியன் ஸ்டோர்-ல கண்டிப்பா வாங்கிண்டு வந்து பண்ண போறேன்!
-பிரபு
2.
chollukireen | 11:45 முப இல் பிப்ரவரி 19, 2012
ஆசிகள் உங்கள் யாவருக்கும். பண்ணுப்பாபண்ணு.நிஜமாகவே. ரொம்பவே நன்ராகத்தான் இருக்கும். அடிக்கடி சித்தே ப்ளாக் பக்கமும் வா. நினைவிருக்குன்னு தோன்றும். நீங்களிருவரும் தாம்பாவையே கலக்கறீங்கோன்னு படிக்கிறேன்.பசங்களும் அப்படியே. சும்மா தலை காட்டாதே. வரவிற்கு ஸந்தோஷம். அன்புடன் மாமி
3.
Sheela sarma | 11:37 முப இல் பிப்ரவரி 21, 2012
Mami Namskarams
Idhai nanum padithen. Udane amma ninaivu vandathu. Amma
ma ingi koodave green pepper m serthu pannuva. Athu enna enru solla mudiyuma?
Sorry not able to continue in Tamil. Though i do not give the feedback, i do read your blog & try to prepare the items.
Rest all ok.
Regards
4.
chollukireen | 1:21 பிப இல் பிப்ரவரி 21, 2012
ஆசிகள்.எனக்கும் பிரபுவின் ரிப்ளை பார்த்ததும் உன் அம்மாவின் நினைவு நிறைய பின்னோக்கிப் பாய்ந்தது. பச்சைமிளகு கொடியினின்றும் பறித்துக் கொத்துக்,கொத்தாக பசுமையாகவும், புதியதாகவும் விற்பனைக்கு வரும். கேரளாவில் அதிகம். தமிழ்நாட்டிலும்மாஇஞ்சியுடன்,பச்சைமிளகும் சேர்த்து விற்பனை செய்வார்கள்.பார்த்திருக்கிறேன்.விஷயத்திற்கு வருகிறேன். பூண்டு வெங்காயமெல்லாம் தினப்படி உபயோகிப்பது இல்லை. மாஇஞ்சியுடன் காரத்திற்கு பச்சை மிளகு உப்பு சேர்த்து எலுமிச்சைபிழிந்து தாளித்துக் கொட்டுவதுதான் வழக்கம். முறையும் அதுதான் தெறியும். நான் எல்லா ஸ்டேட்ஸும் கலந்த மிக்சர் இல்லையா? சில மாறுதல்களும் அவ்வப்போது செய்து ரஸிக்கிறேன். அதுவும்
கிடைத்ததை வைத்துக் கொண்டு.
எலுமிச்சம்பழ ஊறுகாயுடன் பச்சைமிளகைக் கலந்து தயாரிக்கலாம். புளிப்பும்,காரமுமாக ஊறிக்கொண்டு மணமான பச்சை மிளகைச் சுவைக்கலாம்.
ஷீலா உன்னைப் பார்ப்பதே அறிதாகிவிட்டது.ஒரே குடும்பமாகப் பழகியவர்கள். மனது லயிக்கிறது அன்புடன்மாமி.
5.
Mahi | 6:09 பிப இல் பிப்ரவரி 16, 2012
சூப்பரா இருக்கு! நான் இந்த மா இஞ்சியை இதுவரை வாங்கியதே இல்லை..ஊரில் இருக்கையில் ஒரு சிலமுறை சாப்பிட்டிருக்கேன். இனி கடைக்குப் போகையில் மறக்காமல் பார்த்து வாங்கணும்!
சுலபமான சுவையான ரெசிப்பிக்கு நன்றிமா! 🙂
6.
chollukireen | 11:54 முப இல் பிப்ரவரி 19, 2012
சுலபமானது. நான் ஒத்துக் கொள்கிறேன். சூப்பர் செய்து பார்த்துவிட்டு மனதில் நினைத்துக்கொள். அமெரிக்காவில் கிடைக்காததே ஒன்றுமில்லை. நான் நியூஜெர்ஸியில் வாங்கியிருக்கிறேன். கண்ணில் படவேண்டும். எனக்கு எழுதுவதற்கு நீ கொடுக்கும் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி பெண்ணே.
7.
priyaram | 2:37 முப இல் பிப்ரவரி 17, 2012
காமாட்சி அம்மா, மா இஞ்சி சூப்பர்…. எனக்கு கூட மா இஞ்சி – ரொம்ப ரொம்ப புடிக்கும்…. இஞ்சி, மாங்காய் வாசனையோட, சாப்பிடவே சூப்பர் ரா இருக்கும்… எங்க மாமியார், மா இஞ்சி -யை தோல் சீவி துருவி அதுல கடுகு தாளித்து கொட்டி, எலுமிச்சம் பழம் பிழிந்து செய்வாங்க… சூப்பர் ரா இருக்கும்…. எனக்கு ரொம்ப நாளாக மா இஞ்சியை மாங்காய் தொக்கு மாதிரி செய்யணும்னு ஆசை…. எப்படி இருக்கும்னு தெரியலை… நீங்க பண்ணி இருக்க முறையும் நல்லா இருக்கு.. ட்ரை பண்ணிட்டு சொல்லறேன் மா….
8.
chollukireen | 12:10 பிப இல் பிப்ரவரி 19, 2012
ப்ரியா துருவிப் பண்ணின ரிஸிப்பி எழுதினதற்கு மிகவும் மகிழ்ச்சி. உன்னுடைய ரிஸிப்பிகளைப் படிக்கும்போது அச்சு அசல் ட்ரெடிஷனல் பளிச்சிடுவதைக் கவனித்து இருக்கிறேன். சூப்பர்.
மாஇஞ்சி அதிக நாட்கள் தங்கும் பொருளில்லையென்று நினைக்கிறேன்.. கொஞ்சமாக செய்து உபயோகிக்கலாம். புளிப்பு சேர்த்து செய். நன்றாகவேவரும். உன்னுடைய பதிவுகளுக்கு அனுப்பும் கமென்ட்டுகள் அடிக்கடி ஏதாவது தகறாறு.
போவது இல்லை. உன்னுடைய ரிப்ளை ரொம்படச்சிங்.
9.
சித்ராசுந்தர் | 7:04 முப இல் பிப்ரவரி 17, 2012
காமாட்சி அம்மா,
ஒரு தோழியின் தயவால் நிறைய தடவை சாப்பிட்டதுண்டு (தமிழ்நாட்டில்). ஆனால் அதை செய்து பார்க்க வேண்டும் என்றுகூட அப்போது நான் நினைத்ததில்லை.சமையல் என்றால் அவ்வளவு பயம்.
உங்களின் கலர்ஃபுல்லான மா இஞ்சி பிசறலைப் பார்த்ததும் வாங்கிவிட வேண்டுமாயுள்ளது.கடையில் கிடைத்தால் வாங்கிவந்து செய்துவிடுவேன்.
10.
chollukireen | 12:22 பிப இல் பிப்ரவரி 19, 2012
மாங்கா வாஸனையுடன் இஞ்சியுடைய காரமில்லாமல் நன்றாகத்தானிருக்கும். தோழி தயவால் சாப்பிட்டதை, அம்மாவின் குறிப்புகளாலும் ருசித்தால் போகிறது.அங்கே
கிடைக்காத வஸ்துவே இல்லை. பெண்ணே மனதிருந்தால் மார்கமுண்டு. அகஸ்மாத்தாகக் கண்ணில் தென்படும். எல்லாருக்குமே என் ரிப்ளை தாமதமாகிவிட்டது. தொடருவோம் பெண்ணே.