பாகற்காய் வறுவல். முறை 2
பிப்ரவரி 24, 2012 at 7:29 முப 9 பின்னூட்டங்கள்
மாதிரிக்குத்தானே. ஸுமார் 4 பாகற்காய் எடுத்துக்கொண்டு செய்து
பார்க்கலாம். சுலபமாக செய்வதற்கு மைக்ரோவேவ் மிக்க
ஒத்தாசையாக இருக்கிறதல்லவா?
வேண்டியவைகள்—எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்தான்.
அரை டீஸ்பூன்–சர்க்கரை
கால் டீஸ்பூன்—–மஞ்சள்ப்பொடி
புளி ஜலம— கெட்டியாக 1 டேபிள்ஸ்பூன்
உப்பு—வேண்டிய அளவு
எண்ணெய்—–வேண்டிய அளவு
செய்முறை—பாகற்காயை அலம்பி மெல்லிய வட்டங்களாக
நறுக்கி விதைகளை நீக்கவும்.
புளிஜலம்,உப்பு,ம.பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசறி
ஊற வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து நன்றாக ஒட்டப் பிழிந்து மைக்ரோவேவ்
பாத்திரத்தில் மாற்றவும்.
4 டீஸ்பூன் எண்ணெயைக் காயுடன் கலந்து பிசறி ஹை
பவரில் மைக்ரோவேவ் செய்யவும்.
திரும்பவும் எடுத்துக் கிளறிவிட்டு 2 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்யவும்.
இப்படியே பின்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து ஒரு நிமிஷம்
மைக்ரோவேவ் செய்யவும்
தண்ணீர் வற்றும் வரை ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டுமைக்ரோவேவ் செய்து
நல்ல கரகரப்பான பதம் வரும்போது எடுத்து ஒரு நிமிஷம் ஆற வைக்கவும்.
வாணலியில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வறுவலையும்
சேர்த்து போதும், போதாதற்கு உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து கரகர பதத்தில்
இறக்கி உபயோகிக்கவும். வெங்காயம் வேண்டாம். அதுவும் ஸரி. பூண்டு,
பெருங்காயப்பொடி எது வேண்டுமானாலும் வாஸனைக்கு சேர்க்கலாம்.
பாகற்காய் ருசி பிடித்தவர்களுக்கு இந்த வகையும் முயற்சிக்கலாம்.
Entry filed under: வறுவல்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 3:22 பிப இல் பிப்ரவரி 24, 2012
வறுவல் பார்க்க க்றிஸ்ப்பியா இருக்குமா! கசப்பு அவ்வளவாத் தெரியாதோ?? நான் மைக்ரோவேவில் செய்ததில்லை, பாகற்காய் வாங்கினால் நான் மட்டுமே சாப்பிடணும். 😉
அடுத்தமுறை ஒரு காய் வாங்கிட்டுவந்து செய்துபார்க்கிறேன்.
2.
chollukireen | 7:00 முப இல் பிப்ரவரி 25, 2012
புளிப்பு,காரம்,இனிப்பு சேர்ப்பதால் நன்றாகவே இருக்கு.
ஒரு காயில் இன்னும் சீக்கிரமாகவே தயாராகிவிடும்.ஸாம்பார் சாதம் சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள நன்றகவே இருக்கு. கசப்பு அவ்வளவாகத் தெறியாது. கமென்ட்டிற்கு ஸந்தோஷம் மஹி. அன்புடன்
3.
சந்திரமால்யா | 10:28 முப இல் பிப்ரவரி 26, 2012
ரொம்ப நன்றாக இருக்கும் போலுள்ளது. என் மகள் தான் பாகற்காய் என்றால் பத்தடி ஓடுவாள். இப்படி செய்து கொடுத்துப்பார்க்கவேண்டும். அது சரி அம்மா நீங்கள் இணத்திருக்கும் படத்தைப் பார்த்தால் நல்ல கிறிஸ்பியா மொறு மொறுன்னு இருக்கும் போலுள்ளதே. அப்போ சிப்ஸ் மாதிரியும் சாதத்துடன் சாப்பிட்டுக்கலாமோ?……..
காய் வாங்கும்போது செய்துவிட்டு சொல்கிறேன் அம்மா.
4.
chollukireen | 9:55 முப இல் பிப்ரவரி 27, 2012
பிடித்தவர்களுக்கு நன்றாகவே இருக்கும். வறுவல்ன்னாலே சிப்ஸ் மாதிறிதான்.சாதத்துக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கு. பாகற்காய் டேஸ்ட் பிடித்தவர்களுக்கு வாஸனையாக இருந்தால் கசப்பைக்கூட பொருட்படுத்த மாட்டார்கள். பிடிக்காதவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம். புளிப்பு காரம்,இனிப்பு கசப்பைப் போக்கும் ஓரளவாவது. வாம்மா, அடிக்கடி. அன்புடன்.
5.
சித்ராசுந்தர் | 7:00 முப இல் பிப்ரவரி 27, 2012
காமாட்சி அம்மா,
இது பாகற்காயில் போட்ட சிப்ஸ் போலவே உள்ளது. பார்க்கவே எடுத்து சாப்பிட வேண்டும்போல் உள்ளது.இதே முறையில் (சர்க்கரை சேர்க்காமல்) செய்து பார்க்கிறேன். எங்கள் மூவருக்குமே பாகற்காய் என்றால் ரொம்ப பிடிக்கும்.
இன்னும் சில நாட்களில் எங்கள் ஊர் உழவர் சந்தையில் விதவிதமான வகைகளில்,அளவுகளில் பாகற்காய் கிடைக்கும்.நிறைய வாங்கி வந்து வத்தல் போட்டுவைத்து விருப்பமானபோது குழம்பு வைப்பேன். அது புது காயைவிட சூப்பராக உள்ளது.நன்றி அம்மா.
அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 10:09 முப இல் பிப்ரவரி 27, 2012
பாகற்காய் உங்கள் மூவருக்கும் பிடிக்கும். மிகவும் ஸந்தோஷமான வரவேற்பு
என்னுடைய ரிஸிப்பிக்கு. தயிரில் ஊரவைத்து வெய்யிலில் உலர்த்தி எடுத்தால் அது வற்றல். இது வறுவல். அடிப்படை ஈரப்பதத்தை அகற்றுகிறோம்.அவ்வளவுதான். நினைத்தபோது சுவைக்க வத்தல் . ஸீஸனில் சுவைக்க காய். சர்க்கரை கசப்பைக் குறைக்கும். காய் ஸீஸனில் நிறையவே செய்துபார். அன்புடன்
7.
சித்ராசுந்தர் | 7:12 முப இல் பிப்ரவரி 27, 2012
காமாட்சி அம்மா,
மேலும் மாஇஞ்சியில் ஒரு உதவி.இங்கு உழவர் சந்தையில் ஃப்ரெஷ்ஷாக இஞ்சி போலவே குவியல் குவியலாக வச்சிருக்காங்க.கேட்டதற்கு sweet potato taste ல் இருக்குமென்றும்,.உருளை மாதிரியே சமைக்கலாம்னும் சொன்னாங்க.பெயர் மறந்துவிட்டது. வீட்டிற்கு வந்ததும் கூகுளில் தேடி jerusalem artichoke என்று கண்டுபிடித்துவிட்டேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அதன் படத்தைப் பார்த்து இதுதான் மாஇஞ்சியா என சொன்னால் நான் சீக்கிரமே வாங்கிவந்து கலர்ஃபுல்லான இஞ்சிபிசறல் செய்துவிடுவேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.நன்றி அம்மா
8.
chollukireen | 10:29 முப இல் பிப்ரவரி 27, 2012
அன்புள்ள சித்ரா நீ குறிப்பிட்ட ஜெருஸலேம் ஆர்டிசோக்கை கூகுளில் பார்த்தேன். அது மாங்கயிஞ்சி இல்லை. சேப்பங்கிழங்கு போன்ற கிழங்குஅது.
வேகவைத்து தோலுரித்து ரோஸ்ட் முதலானவைகள் செய்யலாம். வறுத்துப் பார்த்தாலும் நன்றாக இருக்குமோ என்னவோ?முயற்சிக்கவில்லை.
நான் கடைக்குப் போவதென்பது வெகு அபூர்வமாகத்தான். எங்குமே அப்படிதான். போனால் இதில் அது செய்யலாம், அதில் இது செய்யலம் என்ற பேச்சுதான். நீங்களெல்லாம் பார்த்து வகைவகையாக செய்யுங்கள்.
அடிக்கடி இம்மாதிரி பதில்களை எதிர் பார்க்கும், உங்கள் மூவருக்கும் ஆசிகளுடன் அன்புடனும் சொல்லுகிறேன்
9.
சித்ராசுந்தர் | 1:42 முப இல் பிப்ரவரி 28, 2012
காமாட்சி அம்மா,
உடனே பதிலளித்ததற்கு நன்றி அம்மா.நீங்க அதைத்தான் மாஇஞ்சினு சொல்லுவிங்கனு எதிர்பார்த்தேன்.ஒரு சின்ன ஏமாற்றம்.(உண்மையில் பெரியதுதான்) அடுத்த வாரம் நம்மூர் கடைகளில் தேடிப்பார்க்கிறேன்.
அன்புடன் சித்ரா.