ஃப்ரைட்ரைஸ்
மார்ச் 5, 2012 at 6:36 முப 8 பின்னூட்டங்கள்
இதுவும் ஒரு சுலபமான விதம்தான். ஃப்ரைட் ரைஸ் இருப்பதை
வைத்து பலவிதங்களில் ஒப்பேற்றலாம்.ஆனால் நான் மும்பையில் என்
பேத்திகளுக்காக லஞ்ச் பாக்ஸில் சொடுத்தனுப்ப புதியதாக காலையில்
7மணிக்குள் தயாரித்து அனுப்பியதிது. நீங்களும் தான் படித்துச் சுவையுங்கள்.
வேண்டியவைகள்—- ஒரு கப் அரிசியிலோ முக்கால் கப் அரிசியிலோ
உதிராக வடித்த சாதம்..
தண்ணீர் சற்றுக் குறைவாக வைத்து சாதம் தயாரானவுடன் தட்டில்
கொட்டி பரப்பலாக வைத்தால் சாதம் உதிர் உதிராக வரும்.
வெங்காயத் தாள்—அரைகப்பிற்கு மேலாகவே. துண்டுகளாக நறுக்கியது.
காரட்—-1
மஷ்ரூம்—5, 6
காப்ஸிகம்—1
ருசிக்கு—-உப்பு
மஞ்சள்ப்பொடி—மிகவும் துளி
எண்ணெய்—-5அல்லது 6 டீஸ்பூன்
மேகி மஸாலா க்யூப் பாதி பொடியாகச் செய்தது
அல்லது ஏதாவது மஸாலாவுடன் காரம் சிறிது.
செய்முறை
வெங்காயத் தாளைத் தனியாக நறுக்கவும்.
மீதி காய்களை நன்றாக அலம்பிப் பொடியாக நறுக்கி வடியவிட்டு
ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டுக் கலந்து மைக்ரோவேவில் ஹைபவரில்
வேகவைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத் தாளை நன்றாக
வதக்கவும்.
மைக்ரோவேவ் செய்த காய்களையும் உப்பு சேர்த்து வதக்கி வேண்டிய
மஸாலா, மஞ்சள் சேர்த்து தயாராகவுள்ள சாதத்தைச் சேர்த்துச்
சிறிது வதக்கிக் கீழே இறக்கி உபயோகிக்கவும்..
மஷ்ரூமையும் காய்கள் லிஸ்டிலேயே சேர்த்துவிட்டேன் போலுள்ளது.
சேர்ப்பது அவரவர்கள் சாய்ஸ்.
ஃப்ரைட் ரைஸ் ரெடி.
இக்காலப் பசங்களின் சாய்ஸ் மஷ்ரூமாக இருக்கிறது.
ஸிம்பிளான ரைஸ் இது. எது பிடிக்குமோ அதை உடன்
சேர்த்துச் சாப்பிடவும்.
ப்ளஸ் காரம். அவ்வளவுதான்.
Entry filed under: சித்ரான்னங்கள்.
8 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Prabu | 4:06 பிப இல் மார்ச் 5, 2012
மாமி,
நமஸ்காரங்கள்.. சாதம் பார்க்கும் போதே ரொம்ப டஸ்டி-ஆ இருக்கு.
கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
-பிரபு
2.
chollukireen | 1:56 பிப இல் மார்ச் 7, 2012
அப்படியா? கட்டாயம் பாரு.நீங்களெல்லாம் கமென்ட் கொடுத்தால் அதுவும் எனக்கு ரொம்பவும் டேஸ்ட்டியாக இருக்கு. அடிக்கடி வா. தோன்றதெல்லாம் எழுதுகிறேன்.
3.
சித்ராசுந்தர் | 6:47 பிப இல் மார்ச் 5, 2012
காமாட்சி அம்மா,
எளிதாக செய்யக்கூடிய ஃப்ரைட் ரைஸ் நல்லாருக்கு. நல்ல பசுமையாக. இதுபோல் தொடர்ந்து வந்துட்டேயிருங்கமா.
இந்த வயதிலும் (செய்ய மனமிருந்தாலும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே) விதவிதமாக செய்து கொடுப்பதால் உங்க பேத்திகள் கொடுத்து வைத்தவர்கள்தான்.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 2:10 பிப இல் மார்ச் 7, 2012
நான் அங்கிருக்கும் நாட்களில் மருமகள் ஏதோ ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் போனால் எனக்கு சான்ஸ் கிடைக்கும். வயதாச்சு கஷ்டம் எதுக்கு ஒரே வார்த்தை. சொல்லி விடுவார்கள். ப்ளாகுக்காக ஸமயங்களில் நுழைய வேண்டியிருக்கும். மருமகள் பரதநாட்டியம், ஸத்ரியா டான்ஸில் தேர்ந்தவள். எனக்கு இந்த ப்ளாக் ஒன்றுதான்
மனதைத் திருப்பிக்கொண்டு இருக்கிறது. அதிலொரு அலாதியான திருப்தி. உன்னுடைய அக்கரையான அன்புக்கு
மிக்க ஸந்தோஷம்.தொடரலாம். அன்புடன்
5.
Mahi | 6:17 முப இல் மார்ச் 7, 2012
காமாட்சிம்மா,சும்மா சொல்லக்கூடாது, ஃப்ரைட் ரைஸ் செம சூப்பரா இருக்கு! சாதம் நல்லா உதிரிஉதிரியா, முல்லைப்பூ போல தெரியுது! 🙂 😀
மேகி மசாலா க்யூப் சைவத்தில கிடைக்குதா அம்மா? இங்கே நான் பார்த்தவரை அசைவத்தில்தான் க்யூப் இருக்கு.
போட்டோவைப் பார்த்து கண்ணாலயே சாப்ட்டுட்டேன்! 😛 😛
6.
chollukireen | 2:26 பிப இல் மார்ச் 7, 2012
நா ன் மஷ்ரூம், அது இது என்று எதுவும் சாப்பிடுவதில்லை.
புதுசா எதுவும் ப்ளஸ் வேண்டாம்.இப்படி சொல்லிவிடுவேன்.
மருமகள் வெசிடேரியன் என்றுதான் இந்தக் க்யூபைக் கொடுத்தாள். திரும்பவும் விசாரிக்கிறேன். நான் எதையும் விசாரிப்பேன். நானாக வாங்குவது எதுவும் கிடையாது.
உன்னுடைய கமென்ட் எங்கேயோ என்னை உயர ஸந்தோஷத்தில் தூக்கிக்கொண்டு போய்விட்டது. ஸமநிலைக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து மிகவும் ஸிம்பிளான அன்றாட வீட்டு சமையல்களாக எழுத உத்தேசம். வந்த இடங்களில் சுலபமாக மேனேஜ் பண்ணிவிடலாம். அதுதானே ஸரியான வழியும். பகிர்வு ஸரிதானே? நன்றி மகி.
7.
Sheela sarma | 8:30 முப இல் மார்ச் 10, 2012
Mami
Namaskaram.
Super, even now whenever I make fried rice I alwasy remember you. The 1st time I learned to make fried rice was from you only (Mehti rice) .
regards
8.
chollukireen | 9:21 முப இல் மார்ச் 10, 2012
பார்த்தாயா? நன்றாக நீ ஞாபகம் வைத்துள்ளாய். மனதிற்கு எப்படி இருந்தது தெறியுமா? இப்படிதான் பலவேறு விஷயங்கள் அவ்வப்போது நினைவுக்கு வந்து மனதைப் பசுமைப் படுத்துகிறது
இந்த சென்னை வெய்யிலிலும். நீ கமென்ட் எழுதியது ஞாபகம் வைத்திருப்பது எல்லாவற்றிற்கும் ஒரு பெறிய பாராட்டு.அன்புடன் மாமி