பலாக்காய் பொடித்தூவல்
மார்ச் 10, 2012 at 7:16 முப 10 பின்னூட்டங்கள்
பிஞ்சு பலாக்காய்—1 அரைக்கிலோஎடை
.பச்சைமிளகாய்—3
இஞ்சி—1சிறியதுண்டு
தேங்காய்த் துருவல்—அரைகப்.
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்
எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை—சிறிது
செய்முறை.
காயை 2 துண்டங்களாக வெட்டவும்.
பால்போல பிசின் வெளிப்படும். நிறைய தண்ணீர்விட்டு
காயை அலம்பவும்.
கடைகளிலேயே காயை ஒழுங்காக தோல் நீக்கி துண்டங்களாக
வெட்டியும் கொடுக்கிறார்கள்.
சின்ன காயானால் நாமே பட்டை பட்டையாக தோலைச்
சீவிக் கொட்டிவிட்டு உள் பாகத்தை சற்று பெறியதுண்டுகளாக
நறுக்கி தண்ணீரில் போட்டு அலம்பிக் கொள்ளவும்.
வாணலியில் துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி
சேர்த்து திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
காய் முக்கால்பதம் வெந்ததும் இறக்கி வடிக்கட்டவும்.
காய் ஆறியவுடன் மிக்ஸியிலிட்டு வைப்பரில் 2 ,3 முறை
சுற்றி எடுக்கவும்.
இப்பொழுது உதிர் உதிராக காய் பக்குவமாக இருக்கும்.
திரும்பவும் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு பருப்பை சிவக்க வறுத்து நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
உதிர்த்த காயைக் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.
தேங்காயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பொடித்தூவல் தயார். தினப்படி சாப்பாட்டில் இதுவும்
ஒரு கறிதான்.எலுமிச்சை சாறு துளி சேர்க்கலாம்
இது சிரார்த காலங்களில் விசேஷமான ஒருகறிகாயாக
தேடி வாங்கப்படும்.1008 கறிகளுக்கு சமானமான காயிது.
கேரளாவில் இது பரவலாக எல்லோராலும் சமைக்கப்படும்
காய்.
பலா முசு என்று சிறிய வகைக் காய்கள் சமைப்பதற்கு
மிகவும் ஏற்றது.
வட இந்தியாவிலும் மிகவும் விரும்பப் படுகிறது.
மாதிரிக்கு இங்கு செய்த பொடித்தூவலும் சின்ன காயும்.
காய் ஒன்றோடொன்று உராய்ந்து சற்று கருப்பாக காட்சி
தருகிறது. அவ்வளவுதான்.
Entry filed under: கறி வகைகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
priyaram | 10:47 முப இல் மார்ச் 10, 2012
பலாக்காய் பொடித்தூவல் பார்க்கவே நல்லா இருக்கு அம்மா. செய்து பார்க்கிறேன்.
2.
chollukireen | 11:11 முப இல் மார்ச் 10, 2012
அங்கே இம்மாதிரி காய் கிடைக்குமா?கேன்களில் பதப்படுத்திய பலாத்துண்டுகள் சிலஸமயம் கிடைக்கும்.பதில் சீக்கிரமே அனுப்பி இருக்கே. கிடைக்கும்போது செஞ்சு பார்.
3.
சித்ராசுந்தர் | 5:47 பிப இல் மார்ச் 10, 2012
காமாட்சி அம்மா,
பலாக்காய் பொடித்தூவல் ரொம்ப நல்லாருக்கு. பெயரைப் போலவே.பச்சைக் கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை, தேங்காய்ப் பூவெல்லாம் போட்டு. எனக்கும் செய்ய ஆசையா இருக்கு.என்ன செய்வது!
இது எங்க வீட்டிலும் செய்வாங்க.பிஞ்சு பலாக்காயைக் கொத்துக்காய்னும்,அதில் செய்வதைக் கொத்துக்காய் பிரட்டல்னும் சொல்லுவோம்.ஒருசில மாறுதல்களுடன் செய்வோம்.
மிக்ஸி எல்லாம் கிடையாதுமா.அப்படியே பச்சைக்காயைக் கத்தியால் கொத்திக்கொத்தி பூ மாதிரி நறுக்கிடுவாங்க.பிரட்டலை வெறுமனே அப்படியே சாப்பிடலாம்.ரொம்ப நல்லாருக்கும்.உங்க சமையல் அதுவும் சென்னைக்குப் போனபிறகு பழைய ஞாபகங்களை வரவைக்கிறது.
அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 7:13 முப இல் மார்ச் 11, 2012
பலாக்காயை கொத்துவதென்றுதான் சொல்லுவார்கள்.
காயை வேக வைத்து அம்மியில் வைத்து நசுக்கியோ
உரலில் போட்டு இரண்டு இடி இடித்தோதான் செய்வார்கள். நீ சொல்வது ரொம்பவும் ஸரி. இப்போதான் எல்லா வசதிகளும் இருக்கே. சமையல்விதம் பழசு. தயாரிப்பு வசதிகள் எளிது. நான் சென்னையிலிருப்பதால்
கிடைத்தவற்றைக் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுகிறேன். உன்னுடைய பதிலுக்கு என் வழக்கமான அன்பே பதில்
5.
Mahi | 7:04 பிப இல் மார்ச் 15, 2012
எங்க சித்தி வீட்டுப்பக்கத்திலே ஆசாரி ஒருவர் இருப்பார்..அவரிடம் பிஞ்சுப்பலாவைக் கொடுத்தால் உளியில் கொத்திக் கொடுப்பார். கொத்திய பலாவை இப்படி சமைப்பாங்க. 🙂
இங்கே பட்டர் ஃப்ரூட் என்று ஒருவகை அவ்வப்பொழுது கிடைக்குது. கறிப்பலா என்று கேரளாவிலே சொல்லுவாங்களே,அது போல. ஆனால் நம்மூர் பலா போல சுவை வராது. செய்யத்தெரியாமல் செய்து அனுபவப்பட்டாச்சு.. பட்டர் ஃப்ரூட்டில் கொஞ்சம் இனிப்புதான் தூக்கலாய் இருக்கும். இனிப்பும் ஒரு மாதிரி ருசிதானே..இனிமே வாங்கினா என்ன செய்யணும் என்றும் தெரிந்துகொண்டேன். 🙂 வழக்கம்போல அரட்டை அடிச்சாச்சு,வரட்டுமா அம்மா? 😉
6.
chollukireen | 10:14 முப இல் மார்ச் 17, 2012
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் கல்கொத்தா,மும்பை,டில்லி என எல்லா இடங்களிலும் பலாக்காயை நறுக்கியே கடைகளில் கொடுக்கிறார்கள். உளியில் கொத்திக் கொடுத்தாலும் எவ்வளவு ஸவுகரியம் பார். பட்டர்ஃப்ரூட் ஜெனிவா போனால் தேடி
வாங்கணும். புதுசா ஒரு காய். யாராவது பேசக்கிடைத்தால் வசனம் ஒன்று உண்டு.
பேசறத்துக்கு ஆள் கிடைச்சா புளியஞ்சாதம்
கிடைத்தமாதிறி என்று. நான் அப்படிதான் என்று.
தயிர் சாதமும் சாப்பிட வர்ரேன் ஸரியா?
7. URL | 1:00 முப இல் மார்ச் 23, 2012
… [Trackback]…
[…] Read More here: chollukireen.wordpress.com/2012/03/10/பலாக்காய்-பொடித்தூவல்/ […]…
8.
chollukireen | 11:09 முப இல் செப்ரெம்பர் 5, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பலாக்காய் பொடித்தூவல் காய் கிடைக்கும்போதுதான் செய்கிரோம். விசேஷமானகாய் இது. என்னுடைய பதிவுகளில் மிகவும் விசேஷமாக இன்று கிடைத்தது. வட இந்தியாவில் கோப்தாவும் செய்கிரார்கள்.பாருங்கள் இதையும். அன்புடன்
9.
ஸ்ரீராம் | 11:25 முப இல் செப்ரெம்பர் 5, 2022
இதுவரை செய்து பார்த்ததில்லை. பின்னு பலாக்காய் போட்டு சமைத்ததே இல்லை. எப்போதோ ஒருமுறை பலாக்காய் சாதாரணமான கறி சாப்பிட்ட நினைவு.
10.
chollukireen | 10:48 முப இல் செப்ரெம்பர் 6, 2022
இந்தப்பதிவுகூட சென்னை வந்திருந்தபோது சமைத்ததைப் போட்டதுதான். நறுக்கியதை மும்பை,கல்கத்தா தில்லி முதலிய இடங்களில் வாங்கி சமைத்திருக்கிறேன் .கேரளாவில் அதிகம். வழக்கமில்லாத ஒன்று உங்களுக்கு.மிகவும் நன்றி பின்னூட்டத்திற்கு. அன்புடன்