முளைக்கீரை மசியல்.
மார்ச் 22, 2012 at 9:09 முப 20 பின்னூட்டங்கள்
இந்தக்கீரை எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய ஆரோக்கிய சத்து மிகுந்த ஒரு நல்ல கீரை. இதை
பருப்பு சேர்த்தும் சேர்க்காமலும் சமைக்கலாம்.
வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?
முளைக்கீரை—2கட்டு
அவசியமானால் பூண்டு—4 இதழ்
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்–1 டீஸ்பூன்
மிளகாய்—1
துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன். ஊறவைக்கவும்.
தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளித்துக் கொட்ட—1ஸ்பூன் நெய்
சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.
செய்முறை—–கீரையை நன்றாக சுத்தம் செய்துப்
பொடியாகநறுக்கி தண்ணீரில் 2, 3,முறை அலசித்
தண்ணீரைவடியவிடவும்.
துவரம்பருப்பை முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்
தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
மசியஅரைத்துக் கொள்ளவும்.
நிதான தீயில் வடியவைத்த கீரையுடன், பூண்டைத் தட்டிப்
போட்டு கால்கப் ஜலத்துடன் பாத்திரத்தில் சேர்த்து வேக
வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் பச்சென்று
கீரை நிறம் மாறாமலிருக்கும்.
கீரை வெந்ததும் குழிக் கரண்டியாலோ, மத்தாலோ
நன்றாக மசிக்கவும்.
அறைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கீரையில்க்
கொட்டிக் கலக்கி பின்னும் இரண்டொரு கொதி விடவும்.
இறக்கி வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்
முதலியவைகளை நெய்யில் தாளித்துக் கொட்டவும்.
துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில் வேகவைத்த பயத்தம்
பருப்போ அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.
சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்
சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்
கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.
Entry filed under: மசியல்கள்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. URL | 1:00 முப இல் மார்ச் 23, 2012
… [Trackback]…
[…] Read More Infos here: chollukireen.wordpress.com/2012/03/22/முளைக்கீரை-மசியல்/ […]…
2.
priyaram | 4:02 முப இல் மார்ச் 23, 2012
முளைக்கீரை மசியல் நல்லா இருக்கு அம்மா… போட்டோ அருமை… நான் துவரம் பருப்பு அரைத்து கொட்டி செய்தது இல்லை…. தேங்காய், மிளகு, சீரகம் அரைத்து கொட்டி செய்வேன்… இல்லைனா வெறும் பருப்பு வேக வைத்து சேர்த்து செய்வேன்…. இல்லைனா தயிர் சேர்த்து செய்வேன்… இந்த முறையில் ட்ரை பண்ணி பார்க்கிறேன்…
3.
chollukireen | 9:48 முப இல் மார்ச் 23, 2012
இன்னும் எத்தனையோ தினுஸுகள். சென்னைக்கீரை
போஸ்ட்டுக்கு ஓடிவந்துடுத்து. வெறும் உப்புபோட்டு
மசித்து ஒரு சீராம் மிளகு பொடித்துப் போட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டினாலே திவ்யமா
இருக்கும். இது சுயமான ருசி. இப்படிச் சொல்லியே
முதலில் நான் செய்திருக்கிறேன். உன் வருகையும்
மகிழ்ச்சியாயிருக்கம்மா. அன்புடன்
4.
Mahi | 6:15 முப இல் மார்ச் 23, 2012
நான் செய்யும் முறை வேறு..இந்தமுறை இப்படி செய்துபார்க்கப்போறேன்! முளைக்கீரை பாத்து பலவருஷங்களாச்சு, கண்ணில் காட்டியதுக்கு நன்றிம்மா! 😉
5.
chollukireen | 9:59 முப இல் மார்ச் 23, 2012
வாவா. மகி எவ்வளவு நாட்களாக பார்க்காத வஸ்து. அருமையாயிருக்கும்வஸ்துக்களையெல்லாம் கேட்டு கேட்டு வாங்கிவரச்சொல்லி சமைத்து ருசிக்கிறேன். பாரு கண்குளிரப்பாரு. இந்த முளைக்கீரையைப் பார்த்துப்
பரவசமாயிடுத்து எனக்கும். எல்லாம் கோயம்பேடு கீரை.
கோயம்பத்தூர் கீரை எர்ணாகுளம் வரை வரும். அந்தக்கீரை ருசித்தது, இப்போது படத்தில் பார்த்து
ரஸிப்பது.
6.
chitrasundar5 | 4:45 முப இல் மார்ச் 24, 2012
காமாட்சி அம்மா,
கீரை மஸியலை ஒரு கரண்டி எடுத்து சாதத்தில் ஊற்றிக்கொள்ளலாம்போல இருக்கு.எனக்கும் சமயங்களில் இதுமாதிரி கீரை கிடைக்கும்.கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.செய்வதற்கு எளிதாகத்தான் இருக்கும்போல.கீரை மஸியலுக்கு நான் இதுவரை தேங்காய் சேர்த்ததில்லை.வித்தியாஸமா இருக்கு.நன்றி அம்மா.
7.
chollukireen | 10:54 முப இல் மார்ச் 25, 2012
ரொம்ப நாள்க் கழித்து முளைக்கீரை ருசியே தனியாகத் தெறிந்தது. பரவாயில்லை. ஸமயத்தில் கீரை கிடைக்கும் என எழுதியிருக்கிறாய். தேங்காய் சேர்த்தால் நன்றாக இருக்கும். இயற்கையான கீரையின் ருசி அலாதி.அந்தந்த
ப்ராந்தியத்தில் கிடைக்கும் வஸ்துக்கள் சமையலில் உடன்
அங்கம் வகிக்கிறது. ஒருதரம் சேர்த்து சமைத்துப் பார். அன்புடன்
8.
Mahi | 5:42 முப இல் மார்ச் 24, 2012
காமாட்சிம்மா, இது நான் செய்யும் முறை..கிட்டத்தட்ட நீங்க சொல்லியிருப்பது போலவேதான் செய்திருக்கேன், பூண்டும்,பெருங்காயமும் மட்டும் சேர்க்கலை! http://mahiarunskitchen.blogspot.com/2012/01/spinach-kootuspinach-dhal-coconut-gravy.html
ஆனா இதை கீரை கூட்டு-ன்ற பேர்ல செய்வேன்! 🙂 🙂
இன்று உங்க ரெசிப்பிய ரெஃபர் பண்ணி செய்துட்டே இருந்தேனா, வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கையில் ‘அடடே,ஏற்கனவே செய்தமாதிரியே இருக்கே!’ன்னு பல்ப் எரிஞ்சது.ஹிஹி! 😉 அதான் மறுபடி அரட்டை பண்ண வந்துட்டேன்! 😉
கீரை மசியல் சூப்பராக இருந்ததும்மா! மதியம்சாதத்துக்கும், மீதியானதை அப்படியேவும்(!) சாப்பிட்டுட்டேன்! 😛
9.
chollukireen | 10:30 முப இல் மார்ச் 25, 2012
மஹி எந்த பெயரில் செய்தாலும் கீரையுடன் சேர்மானங்கள் சற்றேறக்குறைய ஒரேமாதிரி சேரும்போது
ருசி நன்றாகவே அமையும். பூண்டு, வெங்காயமெல்லாம்
விருப்பமானவர்களுக்கு சேர்த்துச் செய்யும் வஸ்து. பெருங்காயம் இவைகளுக்கு சற்று மாற்று. அவ்வளவுதான். என்னையும் மனதில் நினைத்துக்கொண்டு செய்திருக்கிறாய் அதற்கு ஒரு ஸ்பெஷல்
நன்றியா, ஸந்தோஷமா? இரண்டுமேதான். கீரையிலே வெல்லம்போட்ட கீரை, புளியிட்டகீரை, மோர்க்கூட்டு
பொறிச்ச கூட்டு இப்படி பலதினுஸுகள் உண்டு. நானும் அகப்பட்டாபோரும். எழுத்து நீண்டுவிடும். திரும்பப் பார்க்கலாம். அன்புடன்
10.
சித்ராசுந்தர் | 3:43 பிப இல் மார்ச் 24, 2012
என்னுடைய பின்னூட்டங்களும் பதிவாகியுள்ளன!
11.
chollukireen | 3:59 பிப இல் மார்ச் 24, 2012
நான் முன்னமே பார்த்தேன். ஸந்தோஷமாக இருந்தது.. நாளைக்கு மீதி எல்லோருக்கும் பதில் அனுப்புகிறேன். அன்புடன்
12.
Pattu | 3:09 பிப இல் ஏப்ரல் 16, 2014
அம்மா, இன்று செய்தேன். நன்றாக வந்தது, அதுவும் மாடியிலிருந்து ஃபெரஷ் கீரை போட்டு.
தேங்க்ஸ்.
13.
chollukireen | 8:48 முப இல் ஏப்ரல் 18, 2014
டெரஸ் கார்டன் கீரை எல்லோருக்கும் கிடைக்குமா? நம் ஸொந்த முயற்சிக்கு ஈடு இணை கிடையாது. வீட்டுக்கீரை
சேர்த்து,அதுவும் முளைக்கீரை சேர்த்து வடை செய்துபார்.
என்னுடைய பதிவிற்கு கீரைக்கு பதில் மிகவும் ருசியாக இருக்கிறது. நன்றி.என்றும் அன்புடன்
14.
இடுகைகள் | 7:25 முப இல் ஜூன் 19, 2015
There is certainly a great deal to learn about this subject.
I love all the points you’ve made.
15.
chollukireen | 2:41 பிப இல் ஜூன் 22, 2015
மிக்கமகிழ்ச்சி. உங்கள் முதல்வரவு நல்வரவாக இருக்கட்டும். உற்சாகமளிப்பது நல்ல செயல். அன்புடன்
16.
chollukireen | 12:26 பிப இல் பிப்ரவரி 23, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பத்துவருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவிது. சென்னை போயிருந்த போது செய்தது இது. மும்பையிலும் ஸரி, டில்லியிலும் ஸரி முளைக்கீரை கிடைத்து வாங்கியதில்லை. பார்த்தவுடன் போடத் தோன்றியது. வற்றல் குழம்பும், கீரை மசியலும் ஊர் ஞாபகம் வருகிறது. செய்யத் தோன்றுகிறதா? பார்ப்போம். அன்புடன்
17.
ஸ்ரீராம் | 1:52 பிப இல் பிப்ரவரி 23, 2022
நாங்களும் இபப்டிதான் செய்வோம். பூண்டு சேர்க்க மாட்டோம். என் பாசிப்பருப்பு சீரகம் போட்டு செய்வார்கள்.
18.
chollukireen | 2:06 பிப இல் பிப்ரவரி 23, 2022
பூண்டு வெங்காயமெல்லாம் தினப்படி சேர்க்கவே மாட்டோம். வழக்கமே இல்லை.சேர்த்துச் செய்வது எல்லாம் தற்காலமே. நன்றி. அன்புடன்
19.
Geetha Sambasivam | 2:20 பிப இல் பிப்ரவரி 23, 2022
Super keerai. I used to cook without poondu.
20.
chollukireen | 12:43 பிப இல் பிப்ரவரி 24, 2022
அதுவும் கச்சட்டியில் கீரை மசித்தால் மிகவும் ருசி.கரண்டியால்தான் மசிப்போமே தவிர மத்து எல்லாம் உபயோகித்ததும் இல்லை. பூண்டு எல்லாம் வழக்கமே இல்லை. மீள் பதிவு செய்யும் போது உங்களை நினைத்துக் கொண்டேன்.பாரம்பரியச் சமையல் நிபுணி கீதா சாம்பசிவம் என்று. பூண்டெல்லாம் வழக்கமே இல்லை. உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்