வேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.
மார்ச் 24, 2012 at 3:54 பிப 9 பின்னூட்டங்கள்
புதியதான வேர்க்கடலையைப் ப்ரெஷ்ஷாக பார்த்ததும் கூட்டோடு
சேர்த்துப் பண்ணுவது ஞாபகத்திற்கு வந்தது. சாப்பிடறதோட எழுதறது
ஒரு வைடமின் B12 எனக்கு. மார்க்கெட்டிலிருந்து பீர்க்கங்காயும் நான்
தயார் என்றது. ஸரி. கூட்டு மட்டும் நான் பண்றேன். பர்மிஷன்
வாங்கினேன்.
ஒரு அரைகப்புக்கு மேலேயே வேர்க்கடலையை உறித்தேன்.
எங்கள் ஊர்பக்கம் மல்லாக் கொட்டை என்று சொல்லுவோம்.
மைசூர்லே கள்லேகாய். நார்த்லே இது பதாம்.
வேர்க்கடலை என்ற பெயர் அதிகம்.காமன் இல்லையா?
வேண்டியவைகள்.
பீர்க்கங்காய்—-2 திட்டமான ஸைஸ்
தேங்காய்த்துருவல்—-2 டேபிள்ஸ்பூன்
மிளகு—1டீஸ்பூன்
சீரகம்—அரை டீஸ்பூன்
மிளகாய்—-4 காரத்திற்கு தகுந்தாற்போல்
உளுத்தம் பருப்பு—-2 டீஸ்பூன்
அரிசி—1டீஸ்பூன்
உறித்த பச்சை வேர்க்கடலை—அறைகப்பிற்கு மேல்
தாளித்துக்கொட்ட—-வேண்டிய அளவு எண்ணெய்
கடுகு, உளுத்தம்பருப்பு, பெறுங்காயம் வகைக்கு சிறிதளவு
இருக்கவே இருக்கு கொத்தமல்லி கறிவேப்பிலை.
பருப்பு–வெந்த துவரம்பருப்போ, அல்லது பயத்தம்பருப்போ
4அல்லது 5 கரண்டிகள்.
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி சிறிது
செய்முறை.
பீர்க்கங்காயை நன்றாக அலம்பி தோலைச் சீவி எடுக்கவும்.
தோலையும் உபயோகப் படுத்தி விடலாம். எதுக்குத் தெறியுமா?
அதையும் கூட ஒரு துவையலாக அறைக்கலாம்.
அதை அடுத்துப் பார்ப்போம்.
காயை திட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுவோம்.
மிளகாய், உ.பருப்பு,அரிசி, மிளகை துளி எண்ணெயில் நன்றாக
வறுத்துக் கொள்வோம்.
தேங்காய் சேர்த்து சீரகத்துடன் வறுத்தவற்றை மிக்ஸிலிட்டு
துளி ஜலம் சேர்த்து அறைத்து வைத்துக் கொள்ளுவோம்.
வழக்கமான பாத்திரம் இருக்குமே, அதில் சிறிது ஜலம்
வைத்து நறுக்கிய காய்,வேர்க்கடலை,உப்பு, மஞ்சள்ப்பொடி
சேர்த்து வேக வைப்போம் அதிக நேரமெடுக்காது.
காய் வெந்ததும், அரைத்த விழுதைக் கரைத்துக் கொட்டி
ஒரு கொதிவிட்டு பருப்பையும் சேர்த்துக் கொதிக்கவைத்து
இறக்குவோம்.
அரிசி சேர்ப்பது நீர்க்கும் காய்களை ஓரளவு சேர்ந்தாற்போல
இருப்பதற்குதான்.
இஷ்ட்டப் பட்டால் துளி நெய்யில் கடுகு, பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டினால் கூட்டு ரெடி. எண்ணெயிலும் தாளிக்கலாம்.
கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதற்கு ஜோடியாக புளி வைத்து அறைத்த துவையலையும்
சொல்லி விடுகிறேன். கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள்.
துவையலுக்காக வேண்டியவை.
பெறிய சைஸ் வெங்காயம்—1
இஞ்சி—1 அங்குல நீளம்
இஷ்டப்பட்டால் 4அல்லது5 பூண்டு இதழ்கள்
மிளகாய்—-3அல்லது 4 எதுவானாலும் ஸரி
வறுப்பதற்கு—எண்ணெய்
உளுத்தம் பருப்பு—-ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயம் துளி
புளி—ஒரு நெல்லிக்காயளவு
ருசிக்கு –உப்பு
கொத்தமல்லி, கறிவேப்பிலை எதுவானாலும் கூட
வைக்கலாம். கலர் பச்சையாகவும் வாஸனையாகவும் இருக்கும்.
செய்யலாமா?
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு
மிளகாய் பருப்பை வறுத்துக்கொண்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி
வதக்கிக்கொண்டு நருக்கிய பீர்க்கந் தோலையும் சேர்த்து நன்றாக
வதக்கவும்
புளி, உப்பு சேர்த்து வதக்கியதைத் துவையலாக மிக்ஸியில்
அறைத்தெடுக்கவும்.
பொறித்த கூட்டும், புளிப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.
கொஞ்சம் அப்பளாத்தை சுட்டுவிட்டு பருப்பு ஜலம்விட்ட நாட்டு
தக்காளி ரஸமும் வைத்துவிட்டால் ஒரு ஸிம்பிளான ருசியான
சமையல்தான் பிடித்தவர்களுக்கு. யாருக்கு பிடிக்கும் பார்க்கலாம்
.
Entry filed under: கூட்டு வகைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 2:51 பிப இல் மார்ச் 26, 2012
காமாஷி அம்மா,
இந்த தடவ 2ன்1 சமையலா!கூட்டு,துவையல் எல்லாம் காயின் கலரிலேயே இருப்பது அருமையாக இருக்கிறது.பீர்க்கையில் பச்சை வேர்க்கடலை!இன்னும் கொஞ்ச நாளில் எனக்கும் கிடைக்கும்.செய்துவிடுகிறேன்.நான் பச்சை மல்லாட்டையை அவரைக்காயில் சேர்த்துதான் செய்வேன்.நாங்க மல்லாட்டை என்றுதான் சொல்லுவோம்.
சாதத்துடன் பீர்க்கை பொரித்த கூட்டு,புளிப்புத் துவையல்,சுட்ட அப்பளம், நாட்டுத்தக்காளி சேர்த்த பருப்பு ரசம்___இவற்றைக் கொடுத்தால் யாருக்குத்தான் சாப்பிடப் பிடிக்காது!நானே முதல் ஆளாக வந்துவிடுகிறேன்.நன்றி அம்மா.
2.
chollukireen | 6:52 முப இல் மார்ச் 28, 2012
நான்கூட இந்த சமையல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று நினைத்தேன்.
அதிக எண்ணெய் சிலவில்லாமல் கூட்டு கறி முதலானவைகள் செய்தால்
பொதுவாக உடல் நலத்திற்கு நல்லது. நடுத்தர வயது தாண்டிவிட்டால் தானே ஸர்வ சாதாரணமாக எல்லாவற்றையும் குறைக்க ஆரம்பிப்போம்.
பச்சை மல்லாட்டை சட்னி செய்தாலும் நன்றாக இருக்கும். விவரமான பதிலுக்கு நன்றி. அன்புடன்
3.
Mahi | 1:05 முப இல் மார்ச் 28, 2012
பச்சை கடலைக்காயை சமையலில் உபயோகித்ததில்லை, வேகவைத்து சாப்பிடுவதோடு சரி..கூட்டும் துவையலும் நல்லா இருக்குதும்மா! துவையல் சூப்பர் கலரா இருக்கு,நான் இதிலே கொஞ்சம் தேங்காயும் சேர்ப்பேன்.
கூட்டு-துவையல்-நாட்டுத் தக்காளி போட்ட பருப்புரசம்..ஆஹா,இப்படி காம்பினேஷன் சொல்லி பசியைக் கிளப்பறீங்களே! 😉 😛
/.பீர்க்கையில் பச்சை வேர்க்கடலை!இன்னும் கொஞ்ச நாளில் எனக்கும் கிடைக்கும்.செய்துவிடுகிறேன்./ சித்ரா மேடம், நீங்க கலிஃபோர்னியால இருக்கீங்கனு ஒரு நம்பிக்கையில கேக்கிறேன், எந்த கடைகளில் பச்சைவேர்க்கடலை கிடைக்கும்னு சொல்லுங்களேன், நானும் தேடிப் பார்க்கிறேன். 🙂
4.
chollukireen | 7:10 முப இல் மார்ச் 28, 2012
பச்சையோடு பச்சையாக கொத்தமல்லி முதலானது சேர்ப்பதால் பச்சென்று இருக்கு. கூட்டில் தேங்காய்சேர்த்து விட்டதால் சட்னியில் மிஸ்ஸிங். பருப்பு கூட சட்னியில் குறைவாகப் போட்டதால் கலர் தூக்கலாகத் தெறிகிறது. என்னவோ என் இரண்டு அபிமானப் பெண்களுக்கு பிடித்திருக்கு என்பதில் பெருமை கொள்கிறேன். காய்ந்த கடலைக்காயையும் முதலிரவே ஊரவைத்து புளிக்கூட்டுகள், பிட்லை
முதலானவைகளுடன் பருப்போடு வேகவைத்தோ,காயுடன் வேகவைத்தோ செய்தால் ருசியாக இருக்கும். மொச்சைப் பருப்பு மாதிறி புது கடலைக்காயை உபயோகிக்கலாம். முதலில் அங்கு கிடைக்க வேண்டுமே. பழயபடி லெக்சர். போரடிக்கப் போகிரது அன்பான பதிலுக்கு நன்றி .
அன்புடன்.
5.
chitrasundar5 | 7:04 பிப இல் மார்ச் 28, 2012
காமாஷி அம்மா,
எனக்கு லேட் ஸ்பிரிங்,சம்மரில் கிடைக்கும்.என்ன விலைதான் அதிகம்.கிடைக்கிறதே என சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.நீங்க இப்படி அடிக்கடி வந்து பேசினால்தான் நல்லாருக்குமா.
மகி,
நான் இருப்பது silicon valley ல்.farmers market,99 ranch போன்ற இடங்களில் கிடைக்கும்.இவை அருகில் இருந்தால் ஒரு விசிட் போய்ட்டு வாங்க. இல்லை, காமாஷி அம்மா சொன்ன மாதிரி முதல்நாளே ஊற வச்சி செஞ்சிடுங்க.எப்படியோ செஞ்சிட்டு வந்து சொல்லுங்க.
6.
Mahi | 5:29 முப இல் மார்ச் 29, 2012
சித்ரா மேடம், பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி! 99 ரான்ச் கொஞ்சம் தூரத்தில இருக்குங்க, ஆனா அங்கே போவது ரொம்ப அரிது. இத்தனைக்கும் கடைக்கு அருகிலேயே எங்க நண்பர்கள் வீடுகளும் இருக்கு. ஒவ்வொரு முறை அவங்க வீட்டுக்கு போகையிலும் நான் கேட்பேன், என்னவர் “நோ” சொல்லுவார்!! அந்த சைனீஸ் ஸ்டோர் வாசனை(!) அவருக்கு அவ்வளவாப் பிடிக்காது!! ;))))
ஒரு சில முறைகள் போய் முருங்கைகீரை வாங்கிருக்கேன். இந்த சீஸனுக்கு பலாப்பழமும் வாங்கப்போலாம்னு இருக்கேன், பார்ப்போம். பச்சை வேர்க்கடலை கிடச்சா நல்லா இருக்கும். ஊறவைத்தால் அந்த ருசி வருவதில்லையே!! 🙂
காமாட்சிம்மா, நீங்க சொன்ன ரெசிப்பிகள் எனக்குப் புதுசு..நான் காய்ந்த கடலையை ஊறவிட்டு அவித்து சாப்பிட்டிருக்கேன்,அவ்வளவுதான்! தகவலுக்கு நன்றிம்மா!
7.
chollukireen | 10:13 முப இல் மார்ச் 29, 2012
வேர்க்கடலை மாத்திரமில்லை. பொறித்த கூட்டுகளில் முந்திரி பருப்பு வறுத்துப் போட்டாலும் ருசியோ ருசி.. வேர்க்கடலை நடுத்தர எல்லா வர்கத்தினரின் முந்திரிப்பருப்பு. வற்றல் குழம்பு, கலந்த சாதம் எல்லாவற்றையும் வரவேற்கும் காய்ந்த வேர்க்கடலை. யாமிருக்கப் பயமேன்தான் வேர்க்கடலை. சித்ரா நீயும் ஆமோதிப்பாய் என நினைக்கிறேன், அன்புடன்
8.
asianherbs | 2:32 முப இல் ஏப்ரல் 13, 2012
வணக்கம். காமாக்ஷி அம்மா, என் பேர் விஜி. என் பாட்டியின் பேரும் காமாக்ஷி. ஆனால் நல்ல கைபக்குவம். என் பாட்டிக்குஇங்கு உங்க சமைய்லை பார்க்கும் போது எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது.. இங்கு இன்று தான் முதல் வருகை. நல்ல வலைதளம். நல்ல அருமையான் ரெசிப்பிஸ். எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. அடிக்கடி வருகிறேன்.
நல்ல் ஹெல்தி+ப்ரோட்டின் சத்தோட கூட்டு.அவச்யம் செய்து பார்க்கிறேன்.
என் வலைதளம்: http://www.vijisvegkitchen.blogspot.com
நிங்க டைம் கிடைக்கும் போது வாங்க.
9.
chollukireen | 10:11 முப இல் ஏப்ரல் 13, 2012
உன்னுடைய முதல் வரவை, பாட்டியின் ஞாபகத்தின் பரிவுதன்னையும் பார்த்து எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா? அவ்வளவு ஸந்தோஷம்.
வா,வா அடிக்கடி கமென்ட்டுடன் வந்தால் கசக்குமா என்ன? இந்த வயதிலும் கமென்ட்டுக்களைப் பார்த்தால் ஏதோ முதல்தரம் சமைத்தாற்போலுள்ளது. நானும் கட்டாயம் வரேன். நான் வந்திருப்பேன். கமென்ட் எழுதியிருக்கமாட்டேன். இனி கட்டாயம் எழுதுவேன்.உங்கள்
யாவருக்கும் நந்தன வருஷத்து நல் வாழ்த்துக்கள், ஆசிகளுடன் காமாட்சி அம்மா.