பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.
ஏப்ரல் 2, 2012 at 10:08 முப 15 பின்னூட்டங்கள்
வெந்தயக் குழம்பைத்தான் நாங்கள் மெந்திக் குழம்பு என்று பேச்சு
வழக்கில் சொல்லுவோம்.
துவாதசி சமையலில் சுண்டைக்காயும் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது.
சென்னையில் சுண்டைக்காய் சுலபமாக கிடைத்ததால் குழம்பும்
செய்து, சுண்டைக்காய்ப் பருப்புசிலியும், ப்ளாகில் போட செய்தும்,
படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.
பருப்புசிலியைப் பின்னாடி பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ
சீஸனானதால் கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.
இப்போது குழம்பிற்கு வேண்டியதைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்
புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—-1
நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லம்—சிறிது
ருசிக்கு—உப்பு
ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்
அரிசிமாவு—ஒரு டீஸ்பூன்
முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்
இருந்தால் பலாக்கொட்டை—7 அல்லது 8
கறிவேப்பிலை—சிறிது.
செய்முறை
புளியை 2 கப் ஜலம் விட்டுக் கறைத்துக் கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்றாக நசுக்கித்
தண்ணீரில் அலசவும்.
விதைகள் ஓரளவிற்கு வெளியேறும். வடிக் கட்டவும்.
பலாக் கொட்டையையும் மேல் தோல் நீக்கி உட் பருப்பைத்
துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு
வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச் சேர்த்து நிதான தீயில்
நன்றாக வதக்கவும்.
சுண்டைக்காய் வதங்கியதும், ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்
சற்றுப் பிரட்டி புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்
உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
துவாதசி சமையல் ஆனபடியால் பூண்டு, வெங்காயம்
சேர்ப்பதில்லை.
துளி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
குழம்பு சற்று சுண்டி சுண்டைக்காய் வெந்தவுடன்
சற்று திக்காக இருப்பதற்காக அரிசி மாவைத் துளி
ஜலத்தில் கறைத்துக் கொட்டிக் கொதிக்கவைத்து இறக்கவும்.
முன்போ, பின்போ கறிவேப்பிலை சேர்க்கவும்.கமகம
குழம்பு தயார்.
சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான ஜோடி.
ஸாம்பார் பொடிக்குப் பதில்,தனியா,மிளகாய், மிளகுப் பொடி
சேர்த்தும் செய்யலாம். தேங்காய் சேர்த்து வறுத்து அறைத்தும்
செய்யலாம் சாதத்துடன். நெய் சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பருப்பு சாதத்துடன் துவாதசியன்று சூப்பர் காம்பினேஷன்.
Entry filed under: குழம்பு வகைகள்.
15 பின்னூட்டங்கள் Add your own
சித்ராசுந்தர் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
சித்ராசுந்தர் | 2:26 பிப இல் ஏப்ரல் 2, 2012
காமாஷி அம்மா,
துவாதசி சமையலாகப் போட்டுக் கலக்கறிங்க.குழம்பு கமகம வாசனையுடன் சூப்பரா இருக்கு.எனக்கு சுண்டைக்காய் என்றால் ரொம்பப் பிடிக்கும். சுண்டைக்காயை ஏன் நறுக்கிய பிறகு அலச வேண்டும்? விதைகள் இருக்கக்கூடாதா?
‘சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான ஜோடி’_ இரண்டுமே கிடைக்காத பொருள்களாக உள்ளன.இங்கு எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை. கிராமங்களில் வேலி ஓரங்களில் தானாகவே வளர்ந்து கிடக்கும். ஊருக்குப் போனால்தான் செய்து பார்க்கலாம். அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 7:52 முப இல் ஏப்ரல் 3, 2012
சிலஸமயம் சுண்டைக்காய் விதை முற்றி இருந்தால் கசப்பு அதிகம் தெறியும். அலசுவதால் சற்று நிறம் மாறாமலும், ஓரளவு விதைகள் நீங்குவதால் கசப்புத் தன்மையும் குறையும்.
பிஞ்சு சுண்டைக்காய் கசப்பிறாது. தாய் சமையலில் சுண்டைக்காய்
நசுக்காமலே போடுகிறார்கள். எனக்கு எப்படித் தெறியும்.எங்களுக்குத்
தெறிந்தவர்கள் ஜெனிவாவில் சமைத்தார்கள். சுண்டைக்காய்
ஜெனிவாவிலும் எனக்குக் கிடைத்தது. நம்ம ஊர்ப்பக்கம் புதராகவே மண்டிக் ரிடக்கும். உன்னுடைய பகிர்வுக்கு நன்றி.அன்புடன் சொல்லுகிறேன்.
3.
பிரபுவின் | 6:59 முப இல் ஏப்ரல் 3, 2012
நான் ஈழத் தமிழன். உங்கள் சில சமையல் பொருட்களின் பெயர்கள் விளங்கவில்லை. முயற்சி செய்கிறேன்.
4.
chollukireen | 7:40 முப இல் ஏப்ரல் 3, 2012
எந்த பொருட்களின் பெயர் விளங்கவில்லையோ ப்ளாகில் கேட்டால் கூட நான் தெறிந்தவரையில் பதில் எழுதுகிறேன். என்னுடையது ப்ராமணத்தமிழ். அதிகம் வித்தியாஸமில்லை. எது விளங்கவில்லையோ தயங்காமல் கேளுங்கள்.
5.
பிரபுவின் | 7:02 முப இல் ஏப்ரல் 3, 2012
ஜலம் என்றால் என்ன?
6.
chollukireen | 9:38 முப இல் ஏப்ரல் 3, 2012
ஜலம் என்றால் சுத்தத் தண்ணீர். ஸம்ஸ்க்ருத வார்த்தை ப்ராமணத்தமிழில் அங்கங்கே எட்டிப் பார்க்கும்.
7.
chollukireen | 9:38 முப இல் ஏப்ரல் 3, 2012
ஜலம் என்றால் சுத்தத் தண்ணீர். ஸம்ஸ்க்ருத வார்த்தை ப்ராமணத்தமிழில் அங்கங்கே எட்டிப் பார்க்கும்.
8.
priyaram | 9:36 முப இல் ஏப்ரல் 3, 2012
காமாட்சி அம்மா, பச்சை சுண்டைக்காய் மெந்திய குழம்பு அருமை. எங்க வீட்டுல பலாக்கொட்டை கத்தரிக்காய் கூட்டுக்கு தான் சேர்ப்போம்.
9.
chollukireen | 9:49 முப இல் ஏப்ரல் 3, 2012
ப்ரியா கத்தரிக்காய் கூட்டும் செய்து தயாராக உள்ளது., எதைப் போட்டு மெந்திய குழம்பு செய்தாலும் பலாக் கொட்டை அதனுடன் நன்றாக ஜோடி சேருகிறது. முடிந்தபோது நீ கூட செய்து பார். உன்னை வரவேற்கிறேன்.
10.
chollukireen | 9:57 முப இல் ஏப்ரல் 3, 2012
நானும் கத்தரிக்காய் கூட்டு செய்து ரெடியாக இருக்கிறது. போஸ்ட் செய்யத்தான். எந்த மெந்தியக்குழம்பு செய்தாலும்
பலாக்கொட்டை அருமையாக ஜோடி சேர்ந்து விடுகிறது. கிடைக்கும் போது செய்து பார்.வெங்காயம் இன்னும் அருமை.
11.
Mahi | 7:34 பிப இல் ஏப்ரல் 3, 2012
குழம்பு நல்லா இருக்கும்மா! ஊருக்குப் போனபோது சுண்டைக்காய் கிடைக்கவில்லை,வத்தல்தான் வாங்கிவந்திருக்கேன். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை! 😉
12.
chollukireen | 9:13 முப இல் ஏப்ரல் 4, 2012
சுண்டைக்காய் வற்றல் என்றும் பதினாறு. நினைத்தபோது வற்றல் குழம்பு செய்ய உதவும். இதன் பெயர் தெறியாதவர்களே அதிகமிருப்பார்கள். நீ அதையும் ஸ்டாக் வைத்திருக்கிறாய்.நல்ல ஸ்டாக்கிஸ்டுதான். ஸந்தோஷம். அன்புடன்
13.
Deepa | 11:46 பிப இல் செப்ரெம்பர் 11, 2012
This is one of my fav food, last i ate previous day of my son’s birth. ate it and then went to hospital. miss it here as we dont get pachai sundai kai in US :(:(
14.
chollukireen | 6:04 முப இல் செப்ரெம்பர் 12, 2012
ப்ரிய தீபா நிரைமாத கர்பிணிப் பெண்களுக்கு
புளிப்பும்,காரமுமாக தேன்மாதிறி வத்தக்குழம்பு சாதம் கையில் பிசைந்து போடுவார்கள். அமுதமாக இருக்கும். இப்படி
உன்னுடொய உனக்கு உன் க்ராண்ட் மதர் ஞாபகம் வருகிறது. அது எனக்கு வெற்றி இல்லையா? உன்னுடைய பாராட்டுதலுக்கும்,வரவிற்கும் மிகவும் நன்றி.
அடிக்கடி வாம்மா. ஆசிகளும், அன்புடனும்
சொல்லுகிறேன்.
15.
chollukireen | 6:19 முப இல் செப்ரெம்பர் 12, 2012
பச்சை சுண்டைக்காய் தாய்லான்த் சமையலில் யூஸ் செய்கிறார்களென்று ஜெனிவாவில் கடையில் கிடைத்தது. சில இடங்களில் அந்தந்த தேசத்து விசேஷமான ஸ்டோர்களில் கிடைப்பதுபோல நீயும் அமெரிக்காவில் ட்ரை செய்து பார். கிடைத்தாலும் கிடைக்கலாம், பிடித்த வஸ்து படித்தால் கூட நாவில் ஜலம் ஊறுவது போல இருக்கும். அடிக்கடிவா. அன்புடன்