மாங்காய்ப் பச்சடி
ஏப்ரல் 12, 2012 at 10:21 முப 10 பின்னூட்டங்கள்
இங்கே மாங்காய் ஸீஸன். மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிடலாம்.
ஒட்டு மாங்காய் அதிக புளிப்பு இருக்காது. அதைப் பார்த்ததும், ஸரி
இதையும் ருசித்து,புசித்து பிடித்து, போடுவோம் என்றுத் தோன்றியது.
செய்யலாமே
வேண்டியவைகள்.
கிளி மூக்கு மாங்காய்—-ஒன்று
வெல்லத்தூள்—1 கப்பைவிட கொஞ்சம் அதிகம்.
பச்சை மிளகாய்—2 காரமிளகாய்
முந்திரி—7 அல்லது 8 துண்டுகள்
ஏலக்காய்—1 பொடிக்கவும்
செய்முறை.
மாங்காயை அலம்பித் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தோல் பருமனாக இருந்தால் தோலைச் சீவவும்.
இந்த வகை மாங்காயிற்கு அப்படியே போடலாம்.
பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு நான் மைக்ரோவேவில்தான்
10 நிமிஷங்கள் ஹைபவரில் வேகவைத்து எடுத்தேன்.
வெல்லப் பொடியை சிறிது ஜலம் விட்டுக் கறைத்து தீயில்
2அல்லது 3 கொதிவிட்டு இறக்கி வடிக்கட்டவும்.
வடிக்கட்டிய வெல்ல ஜலத்தைக் கொதிக்கவிட்டு அதில்
வெந்த மாங்காய், பச்சை மிளகாயைச் சேர்த்து நிதான தீயில்
சற்று கெட்டியாகும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஏலப்பொடி
சேர்க்கவும்.
முந்திரியை ஒடித்து பச்சையாகவோ, வறுத்தோ அலங்கரிக்கவும்.
துளி உப்பு சேர்க்கலாம்.
இனிமையும்,காரமுமான மாங்காய்ப் பச்சடி தயார்.
புளிப்பு மாங்காய்களிலும் தயாரிக்கலாம்.
புதுவருஷத்திலும் ,வேப்பம்பூ பச்சடியுடன் இந்தப் பச்சடியும்
செய்வதுண்டு. இதிலேயே துளி வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்து
சாஸ்திரத்திற்கு சேர்த்துவிட்டேன் என்று சொல்பவர்களும் உண்டு.
எது எப்படியோ புதுவருஷத்திற்கு மாங்காய்ப் பச்சடியை
சொல்லியிருக்கிறேன்.சித்திரைப் புத்தாண்டு நந்தன வருஷத்தை
இனிமையாக வரவேற்போம்.
எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் நந்தன வருஷத்து
சித்திரையை வரவேற்று வாழ்த்துகளைக் கூறும்
அன்புடன் சொல்லுகிறேன் காமாட்சி.
Entry filed under: ஸ்வீட் கார பச்சடிகள்.
10 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 7:13 பிப இல் ஏப்ரல் 12, 2012
சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் காமாட்சிம்மா! மாங்காய்ப் பச்சடி அருமை!
2.
chollukireen | 10:20 முப இல் ஏப்ரல் 13, 2012
ஆசிகள் மஹி. வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த புத்தாண்டு மஹிக்கு மேன்மேலும் நல்ல வளர்ச்சியைத் தரவேண்டும்.
உஙுகளிருவருக்கும், நட்புக் கூட்டத்தினருக்கும், வாழ்த்துக்கள். தொடருவோம் மேலும் அன்புடன்
3.
asianherbs | 2:29 முப இல் ஏப்ரல் 13, 2012
வணக்கம். காமாக்ஷி அம்மா, என் பேர் விஜி. என் பாட்டியின் பேரும் காமாக்ஷி. அவர்கள் இப்போ இல்லை ஆனால் நல்ல கைபக்குவம். என் பாட்டிக்கு. இங்கு இன்று தான் முதல் வருகை. நல்ல வலைதளம். நல்ல அருமையான் ரெசிப்பிஸ். எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. அடிக்கடி வருகிறேன்.
நல்ல் புத்தாண்டிற்க்கு ஏற்ற பச்சடி.
உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி.
4.
chollukireen | 10:14 முப இல் ஏப்ரல் 13, 2012
மிக்க மகிழ்ச்சி விஜி. புத்தாண்டு வாழ்த்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்
5.
சந்திரமால்யா | 7:31 முப இல் ஏப்ரல் 13, 2012
அம்மா உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! உங்கள் ஆசி என்றும் எங்களுக்கு வேண்டுமம்மா.
மாங்கா பச்சடி இப்படியும் செய்யலாம்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். எங்கம்மா கொஞ்சூண்டு தேங்காய் + பச்சைமிளகாய் சேர்த்தரைச்சு செய்வாங்க. அது ஒருவித ரேஸ்ட். இங்கு இன்றும் வேலை நாள் என்பதால் புதுவருட சமையல் சாப்பாடு எல்லாம் நாளைக்குதான். முக்கியமான ஐட்டம் இந்த மாங்கா பச்சடிதான். ஆனால் இந்த மாங்கா இங்க கிடைக்காது. கிடைக்கிற மாங்காவில செய்திட இருக்கேன்.ரெஸிப்பிக்கு ரொம்ப நன்றி அம்மா!
6.
chollukireen | 9:59 முப இல் ஏப்ரல் 13, 2012
ஆசிகள். உன்னை வெகு நாட்களாக பார்க்கவில்லையே என்று நினைத்தேன். நீயே கமென்ட்டுடன் வந்துவிட்டாய்.நேசமுள்ளவரை நெஞ்சில் நினை. ஸரியாக இருக்கிறது. எந்த மாங்காயிலும் பச்சடி செய்யலாம். பொடிபோட்டு, அரைத்துவிட்டு, மிளகாய் கிள்ளி தாளித்துக்கொட்டி,
மஸாலா சேர்த்து நம் இஷ்டத்துக்கு செய்தாலும் ருசி மாங்காயுடயது. நன்றாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் அன்பான
ஆசிகளும், விசாரிப்புகளும். உன் அன்பிற்கு மிக்—-க ஸந்தோஷம். அடிக்கடி வரவும். அன்புடன் சொல்லுகிறேன்.
7.
Sheela sarma | 12:06 பிப இல் ஏப்ரல் 13, 2012
Mami
Namaskaram.
Engal ellorin sarbaga Ungalukkum Puthandu nal valzthukal. Nanum nalaikuthan (Vishukani) vaithu panna pogiren. Indha murai ungalin pachadi udan thodanguven.
Sorry could not write in Tamil properly.
Happy New year.
with regards
8.
chollukireen | 2:28 பிப இல் ஏப்ரல் 13, 2012
ஆசிகள் எல்லோருக்கும். விஷுக்கனி வாழ்த்துகள். எல்லோருக்கும் சொல்லவும். பரவாயில்லை.இங்லீஷ் ஒன்றும் புரியாத பாஷையுமில்லை
மும்பையிலிருந்து. உன்னை நேரில் பார்த்ததுபோல இருக்கிரது. அடிக்கடி பார்க்கலாம். அன்புடன் மாமி
9.
chitrasundar5 | 9:41 பிப இல் ஏப்ரல் 13, 2012
காமாஷி அம்மா,
உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையிலா?அல்லது மும்பையிலா?
மாங்காய் பச்சடி சூப்பர்.நான் ப.பயறு,மிளகாய்த்தூள்,வெல்லம் சேர்த்து செய்வேன்.
எனக்கு இந்த ஒட்டு மாங்காய் பிஞ்சுகள் என்றால் அவ்வளவு இஷ்டம்.ஆனால் நான் ஊருக்கு வரும்போது பழ சீஸனாக இருப்பதால் அதை சாப்பிட்டு 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.அதென்ன மாங்காயும் கிளி உட்கார்ந்திருப்பது போலவே உள்ளது!அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 10:17 முப இல் ஏப்ரல் 16, 2012
வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா. இப்போது வாஸம் மும்பையில்தான். ப்ளான் இல்லாமல் நாட்கள் மாதங்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. சமையல் பலவிதம். மாங்காய்ப் பச்சடியோ எத்தனை விதம் செய்தாலும் அலுக்காது,சலிக்காது.
ஒட்டுமாங்கா, பெங்களூரா என்று பல பெயர் கொண்டது இந்தவகை
மாங்காய். சென்னையில் எந்த சீஸனிலும் ஏதோ ஒருவித மாங்காய்
பெயரளவிலாவது கிடைக்கிறது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உன் குடும்பத்தின் அனைவருக்கும். ஸந்திப்போம் அன்புடன்