அரட்டிகாய வேப்புடு.
ஏப்ரல் 16, 2012 at 9:50 முப 18 பின்னூட்டங்கள்
அரட்டிகாய வேப்புடு புதுசா எதுவோ என்று பார்த்தால்
தெலுங்கில் வாழைக்காய் வறுவல் சில மாறுதல்களுடன்.
அவ்வளவுதான்.
நான் இங்கு வந்த ஸமயம் வாழைமரங்கள் குலைகள் முற்றி
ஒன்றன் பின் ஒன்றாக பழமாகவும், காயாகவும், தண்டாகவும்
உபயோகப் படுத்த வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.
வறுவல், கறி, தண்டில் கறி,கூட்டு,ஸாலட், என விதவிதமாக
செய்ய முடிந்தது. ஆட்கள் வேலை செய்ததால் நிறைய சாப்பாட்டுத்
தேவையும் இருந்தது. நிறைய செய்ததைச் சாப்பிடவும் ஆட்களிருந்தால்
குஷியோ குஷிதான்.
அதில் சில துளிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழை மரத்தின்
பட்டைகளைக்கூட இலை மாதிரி கிராமங்களில் சீவி உபயோகப்
படுத்துவார்கள்.
அம் மாதிரி ஒரு இலை தயாரித்தும் ஸந்தோஷப் பட்டேன்.
போட்ட இரண்டு குலைகளும் கல்பூர வல்லி என்ற நல்ல பழ
வகையைச் சேர்ந்தது.
நான் அதை வகைவகையாகச் செய து அதைப் பிடித்தும்
போட முயன்று இருக்கிறேன்.
வீட்டில் விளைந்தது என்றால் அலாதி ஸந்தோஷம்தானே?
அம்மாதிரி அந்தக்காயில் செய்த வேப்புடுவைப் பார்க்கலாம்.
முற்றிய எந்த வாழைக்காயிலும் இதைச் செய்யலாம்.
நான் இந்தக் கல்பூர வல்லி காயிலே செய்ததுதான் இது.
செய்த வகையைப் பார்ப்போமா?
~ஒன்றும் இவ்வளவு, அவ்வளவு என்று நான் குறிப்பிடவில்லை.
நல்ல முற்றிய வாழைக்காயைத் தோல்சீவித் தண்ணீரில் போடவும்.
வாழைக்காயைச் சற்றுப் பருமனாக ஒரு அங்குல அளவிற்குநீளமான
மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு சுத்தமான துணியில் பரப்பி
ஈரம் போக காற்றாட விடவும். எடுத்து துளி மஞ்சள்பொடி பிசறவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய காய்த்துண்டுகளை
கரகர பதத்தில் வறுத்து எடுக்கவும்.
வேறொரு வாணலியில் ஒருஸ்பூன் எண்ணெயில் சிறிது மெல்லியதாக
நறுக்கிய வெங்காயத்தை, முறுகலாக வதக்கவும்.
உப்பு மிளகாய்ப் பொடி வறுத்த வறுவலில் பிசறி வெங்காயத்துடன் சேர்த்து
முறுகலாகும் வரை வதக்கவும். இறக்கவும்.
பச்சைக் கறிவேப்பிலையும், ஒரு சின்ன மிளகாயும் வறுத்துச் சேர்த்து
அலங்கரிக்கவும். கடுகு, உ.பருப்பும் தாளிக்கலாம்.
டேபிளில் எல்லாப் பொருட்களுடனும் இதையும் அலங்காரமாகச் சுவைக்கக்
கொடுக்கலாம்.
தெலுங்குப் பெயரில் அரட்டிகாய வேப்புடு என்ற 5 நட்சத்திர ஹோட்டல்
சமையலும் இதுதான். அதான் வறுவல்தான்.
ஸாதாரண வறுவல் காயை மெல்லியதாக நறுக்கி வறுத்து உப்புக் காரம்
பிசறுவோம்.
என்னுடைய 231 ஆவது போஸ்ட் இது. நாளை 17—4–2012 எனக்கு 80 வயது
முடிகிறது. என்னுடைய சொல்லுகிறேன் ப்ளாக் அபிமானிகளுக்கு சிலவில்லாத
சென்னை வீட்டு தோட்டத்தின் வாழைப்பழங்களைக் காட்டி அளவில்லாத அன்புடன்
எங்கள் ஆசீர்வாதங்களைத் தெறிவித்துக் கொள்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
மும்பை.
Entry filed under: வீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 11:57 பிப இல் ஏப்ரல் 16, 2012
கற்பூரவல்லி பழங்கள் பார்க்கவே எடுத்து சாப்பிடவேண்டும் போல இருக்கிறதும்மா! எங்க வீட்டிலும் ஒரு காலத்தில் கற்பூரவல்லி வாழை வளர்த்து பழம் ருசித்தது நினைவு வருகிறது. தெலுங்குப் பேரில் வாழைக்காய் கறியும் நல்லா இருக்கிறது. நம்ம வீட்டில் விளைந்தது என்றாலே அது ஒரு ஸ்பெஷல்தான்!
231-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! இன்னும் பலநூறு பதிவுகள் எழுதி எங்களுக்கு உதவவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
80 வயதுப் பூர்த்தி நாளைக்கு என்று தெரிந்து மகிழ்ச்சி. என் அம்மாவை விடவும் மூத்தவர் நீங்க..எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா! 🙂
2.
chollukireen | 10:01 முப இல் ஏப்ரல் 19, 2012
என்னுடன் எழுத்துமூலம், பேசிப் பழகும் அன்புடைய உங்களைப் போன்றவர்களுக்கு தெறிவிக்கவே ப்ளாகில் இதைத் தெறிவித்தேன். பகிர்வு நமக்குள் ஏற்பட்டுள்ளதை நினைத்துப் பெருமிதம் அடைகிறேன். வேறு எதைக் கொடுக்க இயலாவிட்டாலும், வயது முதிர்ந்தவள் என்ற் பட்டத்தில் உங்கள் யாவருக்கும் மனம் குளிர்ந்த ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறேன். உன்னுடைய அன்பிற்கு நன்றி. அன்புடன்
3.
chitrasundar5 | 12:09 முப இல் ஏப்ரல் 17, 2012
காமாஷி அம்மா,
இந்த இனிய 80 வது பிறந்த நாளைப்போல பல பல 80 பிறந்த நாட்களை உடல், மன ஆரோக்கியத்துடன் கொண்டாடவும், மேலும் இந்த வலை மூலமாக எங்களுடன் பேச வேண்டுமெனவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.இந்த இனிய நாளில் உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.
வாழைத்தோட்டத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன்.இந்த சென்னை வெயிலில் நல்ல பசுமையாக உள்ளது.இங்கு வாழைக்காய் கிடைக்கும்.வறுவல் செய்துவிடலாம். வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக,படத்தில் பார்க்கும்போதே அதன் சுவை தெரிகிறது. 5 ஸ்டார் ஹோட்டல் அரட்டிகாய/வாழைக்காய் வேப்புடுவின் குறிப்பைப் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம் அம்மா.
4.
chollukireen | 10:12 முப இல் ஏப்ரல் 19, 2012
அன்புள்ள சித்ரா ஆசிகள் அனேகம். உங்களுடன் யாவற்றையும் பகிர்ந்து கொள்ளவதின் மகிழ்ச்சியே வேறுவிதம். சாதாரண கமென்ட் பறிமாற்றமாக நான் நினைப்பதில்லை. அம்மா என்று அழைக்கும் உங்கள் பரிவை அதே கோணத்தில் மனதில் பதிந்திருக்கிறது. இந்த வாக்கியம் ஒன்றே என் அன்பைத் தெறிவிக்கும். உன் பரிவான பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
5.
ranjani135 | 7:13 முப இல் ஏப்ரல் 17, 2012
அன்புள்ள திருமதி காமாட்சி,
இன்று உங்கள் பிறந்தநாள் என்று சித்ராவின் ப்ளாக் பார்த்துத் தெரிந்துகொண்டேன். இன்று போல என்றென்றும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் கூடிய வாழ்க்கையை உங்களுக்கு அளிக்க ஸ்ரீரங்க நாச்சியார், ஸ்ரீரங்கநாதனைப் பிரார்த்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ரஞ்ஜனி
6.
chollukireen | 10:17 முப இல் ஏப்ரல் 19, 2012
அன்புள்ள ரஞ்சனி உன்னுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. என்னுடைய பலபல ஆசிகளும் உங்கள் யாவருக்கும். அன்புடன் தொடருவோம்.
பல விஷயங்கள் பகிருவோம். அன்புடன்
7.
darshini | 8:43 முப இல் ஏப்ரல் 18, 2012
பாட்டிமா,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உங்களுடைய ஆசிர்வாதமும் அன்பும் வேண்டும் .
உங்கள் பேத்தி
8.
chollukireen | 10:23 முப இல் ஏப்ரல் 19, 2012
அன்புப் பேத்தி நிறைய ஆசீர்வாதங்கள்.எப்பவோ ஒருதரம் வந்தூட்டு அப்புறம் தலைகாட்டவே இல்லையே? ரொம்ப பிஸியா. எப்போவாவது வந்து தலையைக் காட்டு. ஸந்தோஷமாஇருக்கும். ஸரியா அன்பு கலந்த ஆசிகள். அன்புடன் சொல்லுகிறேன்.
9.
Sheela sarma | 8:54 முப இல் ஏப்ரல் 18, 2012
Mami
Namaskaram & Belated Happy Birthday.
Very happy to see / read your 231st post & feeling very proud knowing you. You have been always an inspiration to all of us.
if Amma had been here, she would be really very happy.
Regards
10.
chollukireen | 10:35 முப இல் ஏப்ரல் 19, 2012
ஆசிகள் ஷீலா. உங்கள் யாவரின் அன்பை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். இன்னிக்கு எப்படியாவது பதிலெழுதணும்னு நினைத்து எழுதுகிறேன். கால் கொஞ்சம் தேவலை. அம்மாவை நினைக்காத நாளில்லை. எல்லோருக்கும் என் மனமுவந்த ஆசிகள். ஸந்தித்துக் கொண்டே இருப்போம். அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. அன்புடன் சொல்லுகிறேன். மாமி
11.
சந்திரமால்யா | 1:04 பிப இல் ஏப்ரல் 18, 2012
அம்மா! நேற்று உங்க பிறந்ததினமா? சரியான நேரத்தில் அறிந்துகொள்ளாமல் விட்டுவிட்டேனே:(
இருந்தாலும் உங்கள் பிறந்த தினத்தில் மட்டுமல்லாமல் என்றென்றுமே நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியோடு நிறைவாக வாழ மனமாரப் பிரார்த்திக்கின்றேன்.
உங்களின் அன்பான ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்.
அம்மா! உங்கள் வயதிற்கு நீங்கள் செய்யும் இந்த சேவையை என்னவென்பேன்? உங்களின் மகத்தான இந்தப்பணி மேலும் மேலும் எமக்குக் கிடைக்க அதற்கான உடல் உள நலனையும் உங்களுக்கு பரம்பொருள் தந்திட வேண்டுகிறேன். இந்த வலைப்பக்கத்தை நல்லமுறையில் உங்களுக்கு அமைத்துத்தந்து என்றென்றும் ஆதரவாக உறுதுணையாக இருக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள்.
12.
chollukireen | 11:23 முப இல் ஏப்ரல் 19, 2012
அன்புள்ள சந்திரமால்யா உனக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள். உன்னுடைய அன்பான வார்த்தைகளுக்கு எந்தவிதத்தில் ஸந்தோஷத்தைத் தெறியப்படுத்துவதென்று எனக்கே புறியவில்லை. இந்த ப்ளாக் எழுதும் பழக்கம் இல்லாவிட்டால்
வயதான நேரத்தில் பொழுதைப்போக்க ரொம்ப சிரமப்பட வேண்டும். நிஜமா ஜெனிவா பிள்ளைக்குத்தான் நன்றி போய்ச் சேரவேண்டும். அடுத்தபடி
எல்லோரும் ஒத்தாசையா இருந்திருக்கா. பெறிய பணி ஒன்றும் இல்லேம்மா. மனதிற்கு இதமாக இருக்கு என்பதை மறுக்க முடியாது. பாரு உன்போன்ற ஆதரவான பெண்களைத் தேடிக் கொடுத்தது எது. புகழ்ச்சிக்காக இல்லை. வலைத்தளங்கள் ஓயஸிஸ் போன்றவை. இதில் ஈடுபட
.மனத்தூண்டல் வேண்டும். நீ அடிக்கடி வா. ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன் சொல்லுகிறேனம்மா.
13.
Dr.M.K.Muruganandan | 6:50 முப இல் ஏப்ரல் 20, 2012
தலைப்பில் அசர வைத்து விட்டீர்கள்
ஆனாலும் பசியைக் கிளறிவிட்டீர்கள்
14.
chollukireen | 7:08 முப இல் ஏப்ரல் 20, 2012
உங்களுடைய பின்னூட்டத்தை நான் மிகவும் ரஸித்தேன். அந்த வேப்புடுவைச் சாப்பிட்டால் கொஞ்சம் பசியடங்குமே? வாழைக்காயல்லவா. கொஞ்சம் ஹெவியாகப் பசியை அடக்கும்.
நான் அடிக்கடி உஙகள் தளத்தைப் படிக்கிறேன். மிகவும் உபயோகமாக
அழகாக ஸிம்பிளாக எழுதுகிறீர்கள். நான் கூட சில உதவிகளைக் கேட்க நினைத்துள்ளேன். நிதானமாகக் கேட்கிறேன்.
உங்கள் முதல் வரவை அன்புடன் வரவேற்கிறேன். சொல்லுகிறேனில் இருக்கும். வேறு ஏதாவது பிடித்த டிபனாகப் பார்த்து சாப்பிட்டுப் பசியாருங்கள். நன்றியும் ஆசிகளும்,சொல்லுகிறேன்.
15.
Dr.M.K.Muruganandan | 7:20 முப இல் ஏப்ரல் 20, 2012
ஆம் வாழைக்காய் மாப்பொருள் மட்டுமின்றி நார்ப்பொருளும் ஏனைய சத்துக்ளும் உடையது. பசியடங்கும். சுவை கிளப்பும்
16.
chollukireen | 7:29 முப இல் ஏப்ரல் 20, 2012
மிகவும் நன்றியும், ஸந்தோஷமும்.
17.
Darshinik | 1:12 பிப இல் ஏப்ரல் 21, 2012
எவ்வளவு வேலை இருந்தாலும் நாள் தவறாமல் உங்கள் தளம் வந்து பார்பேன் பாட்டிமா .
அம்மா சமையல் கற்றுகொள் என்று சொன்ன போது எல்லாம் முடியாது என்று கூறினேன்
இன்று தனியே வேலைக்காக வந்த பின் சமைக்க வேண்டிய கட்டாயம் .
நிறைய சமையல் விஷயங்களை உங்கள் தளம் மற்றும் மகி அக்கா தளங்களை பார்த்து முயற்சி செய்துளேன்
ஆனால் கமெண்ட் போடாமல் போய்விடுவேன் 🙂
இனி செய்து பார்த்த தவறாமல் பகிர்ந்து கொள்கிறேன் பாட்டிமா
18.
chollukireen | 9:44 முப இல் ஏப்ரல் 24, 2012
ஸந்தோஷம் பேத்தி. கொஞ்ச நாட்களாய் நலக்ருரைவு எனக்கு. .அப்புரமா நிறையப் பேசலாம்.