பிடிகருணைக் கிழங்கு மசியல்.
ஏப்ரல் 30, 2012 at 7:56 முப 4 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு அதிகம்.
பிடிகரணை—கால் கிலோ
பச்சைமிளகாய்—-2 விருப்பம்போல நறுக்கவும்.
இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக நறுக்கியது 1டேபிள்ஸ்பூன்
ஸாம்பார் வெங்காயம்,நறுக்கியது—-அரைகப்பிற்கு அதிகம்.
ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது தனியா,மிளகாய், மிளகும்
பொடித்துப் போடலாம்.
மஞ்சள்பொடி—சிறிது
தாளித்துக்கொட்ட
கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு
வகைக்கு 1 டீஸ்பூன்,
பெருங்காயம்—சிறிது
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை விருப்பத்திற்கு
ருசிக்கு–உப்பு
எலுமிச்சம் பழம்—2
தக்காளியும் போடலாம்.
செய்முறை
பருப்பைக் களைந்து தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து ப்ரஷர்
குக்கரில் பருப்பை நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
கருணைக் கிழங்கை நன்றாக அலம்பிச் சற்றுப் பெறிய
துண்டங்களாக நறுக்கவும்.
சின்ன குக்கரில் கிழங்கு அமிழத் தண்ணீர் வைத்துத் துளி
புளியையும் அதில் உருட்டிப்போட்டு ப்ரஷர் குக்கரில்
நிதானத் தீயில் 3 விசில் வரும்வரை வைத்து வேகவிடவும்.
நீராவி போனவுடனே தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த
தண்ணீரைவிட்டுத் தோலை உறிக்கவும்.
நன்றாக வெந்த கிழங்கை ஆறியபின் மிக்ஸியில், வைப்பரில்
2, 3, சுற்று சுற்றி மசிக்கவும்
உருளைக்கிழங்கு மசிப்பது போல கரண்டியினாலும் மசிக்கலாம்.
குழம்புப் பாத்திரத்திலோ, வாணலியிலோ எண்ணெயைக் காய
வைத்து தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து, வெங்காயம்,
ப.மிளகாய்,இஞ்சியை நன்றாக வதக்கி, இரண்டு கப்பிற்கு அதிகமாகவே
தண்ணீரைச் சேர்த்து, உப்பு, ரஸப்பொடி போட்டு, கொதிக்க விடவும்.
வேகவைத்துள்ள பருப்பையும், மசித்த கிழங்கையும் கொதிக்கும்
கலவையுடன் சேர்த்து நிதான தீயில் அடிக்கடி கிளறிவிட்டு அடி
பிடிக்காமல் குழம்புப் பதத்தில் இறக்கி வைக்கவும்.
எளுமிச்சம் சாற்றைப் பிழிந்து சேர்த்து கொத்தமல்லி கறி
வேப்பிலையால் அழகைக் கூட்டவும்.
கெட்டியாகவோ, சற்று நீர்க்கவோ இருப்பதற்கு நீங்கள்
கொதிக்கும் போதே சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக்
குறைக்கவும்.
மசியல் ருசியாக இருக்கும். சாதத்துடன்,கலந்து சாப்பிடவும்,
மற்றவைகளுடன் தொட்டுக் கொள்ளவும் ஏற்றது.
கருணைக் கிழங்கு காரும் தன்மையுடையது.
புளியுடன் வேகவைப்பதாலும், பிறகு எலுமிச்சை சாறு
சேர்ப்பதாலும், காரும் தன்மை குறைந்து ருசியாக
இருக்கும்.
இந்தக்கிழங்கும் மருத்துவ சக்தி அதிகம் கொண்டது.
புதிய கிழங்கைவிட சற்று நாட்களான கிழங்கு நல்லது.
கிராமங்களில் நெல் புழுக்கும்போது அதில் வைத்துப்
புழுக்கி எடுத்து உபயோகிக்கும் வழக்கம் உண்டு.
காறல் இருக்காது.
Entry filed under: மசியல்கள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 3:23 முப இல் மே 1, 2012
காமாஷி அம்மா,
எங்க வீட்டில் இதை வைத்து புளிக் குழம்புதான் செய்வாங்க. உங்க செய்முறையைப் பார்த்தால் சாம்பாரின் ருஸி இருக்கும்போல் தெரிகிறது.ஆனால் இஞ்சி,எலுமிச்சையெல்லாம் சேர்த்திருக்கீங்க. வித்தியாசமான சுவையில் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்குமென நினைக்கிறேன்.அதைப் படமே சொல்கிறது.
எனக்கு இந்தக் கிழங்கு கிடைக்காது.ஊருக்குப் போனால்தான் செய்து பார்க்க வேண்டும்.ப்ளாக் இருப்பதால் எங்கேயிருந்தாலும் எடுத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.வித்தியாசமான குறிப்புக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 6:50 முப இல் மே 3, 2012
இந்தக்கிழங்கில் கறி, குழம்பு மசியல் எல்லாம் செய்ய முடியும். மிளகாய்ப்பொடி, புளி என சேர்ப்பதாலும், பருப்பும் போடுவதாலும் ஸாம்பார் டேஸ்ட் வருமோ என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? எலுமிச்சை, ப.மிளகாய், இஞ்சி தூக்கலாக இருப்பதால் கிழங்குடன் சேர்ந்து உருளைக்கிழங்கு ருசிகூட மனதில் தோன்றும். உன்னுடைய கமென்ட் ரொம்பவும் பிடித்திருக்கு. அன்புடன்
3.
Mahi | 6:02 பிப இல் மே 2, 2012
இந்தக் கிழங்கு எங்க வீட்டில் சமைத்ததே இல்லம்மா! புது ரெசிப்பி..பாத்து ரசித்துட்டுப் போறேன். செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் உங்க ரெசிப்பிதான்! 🙂
4.
chollukireen | 7:06 முப இல் மே 3, 2012
மஹி ரஸித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. பார்ப்பதெல்லாம் செய்து பார்க்க முடியுமா என்ன? நானும் சென்னை போனதால் சில வகைகள் செய்ய சாப்பிட அக்கறை வந்தது. கிராமத்து சமையல் என்றே இதைச் சொல்லலாம். ஸந்தோஷம் அன்புடன்