பச்சை கொத்தமல்லிப்பொடி
மே 3, 2012 at 7:32 முப 7 பின்னூட்டங்கள்
கொத்தமல்லித் தழை வாங்கியது அளவுக்கு அதிகமாக மிகுந்து
விடும் போல இருந்தது. காரம் அதிகமில்லாமல் பொடியாகச்
செய்து உபயோகிக்கலாம் என்று செய்தது. சாதத்திலேயே
நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்போல அமைந்து விட்டது.
வேண்டியவைகள்
நிறைய மிகுந்த கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து
நிழலில் ஃபேன் அடியில் ஒரு துணியில் பறத்தி மூடி காற்றாட
உலர்த்தவும். ஈரம் இல்லாதிருக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு—2 டேபிள்ஸ்பூன்
குண்டு மிளகாய்—-12,அல்லது இன்னும் சில
ருசிக்கு உப்பு
துளி சர்க்கரை
பெருங்காயப்பொடி–சிறிது
புளி—-ஒரு நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—-2 டீஸ்பூன்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் பருப்புகள்,மிளகாய்
பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
புளியையும் வெறும் வாணலியில் , பிய்த்துப்போட்டு
லேசாக வேண்டுமானால் வறுத்துக் கொள்ளலாம்.
பருப்புகள்,மிளகாய்,உப்பு, பெருங்காயம்,சர்க்கரை
சேர்த்து மிக்ஸியில் ரவை மாதிறி கரகரப்பாகப் பொடித்து
எடுக்கவும்.
கொத்தமல்லி இலையையும் புளியையும் சேர்த்து மிக்ஸியில்
தண்ணீர் சேர்க்காமல் 4 சுற்று சுற்றினால் பேஸ்ட் பதத்தில்
இலைகள் மசியும்.
முதலில் செய்த வைத்த பொடியைச் சேர்த்து 2 சுற்று சுற்றி
எடுக்கவும்.
தயாராகும் போது சற்று சேர்ந்தாற்போல இருந்தாலும் நாழியாக
ஆக உதிர்ந்தாற்போல ஆகும்.
எல்லாவற்றுடனும் எண்ணெய் சேர்த்துச் சாப்பிட,மோர் சாதத்துடன்
தொட்டுக்கொள்ள ஏற்றது.
அதிகம் ஸாமான்கள் சேர்த்துத் தயாரித்து நாட்பட உபயோகிக்க
ஃப்ரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
ருசிக்கேற்ப காரம் அதிகரிக்கவும்.
இதுவும் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது
ஏற்படுகிறது.
Entry filed under: பொடி வகைகள்.
7 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 4:56 பிப இல் மே 4, 2012
காமாஷி அம்மா,
பச்சைக்கொத்துமல்லி பொடியை விளக்கமா சொல்லியிருக்கீங்க. நல்லாருக்கு. இதே மாதிரிதான் ஆனால் கடலைப்பருப்பு,சர்க்கரை இல்லாமல் துவையலாக்கிவிடுவேன் “நாம் செய்வதிலேயே சில வித்தியாஸங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது”_ அழகா சொல்லியிருக்கீங்க.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 10:31 முப இல் மே 7, 2012
கொத்தமல்லி மலிவாக இருக்கும்போது நிறைய வாங்கி இம்மாதிரி பொடி செய்து நாட்படகூட வைத்துக் கொள்ளுவோம். இப்போதெல்லாம்ஃப்ரிஜ் இருப்பதால் விசாரமே இல்லாமல் பொடித்து வைத்துக்கொள்ள முடிகிறது. காரசாரமாகச் செய்தால்
தோசை இட்லிக்கு திடீர்த்துணையாகச் செயல்படும்.
கமென்ட்டுக்கு நன்றி. அன்புடன்
லிக்கு
3.
Mahi | 8:17 பிப இல் மே 7, 2012
நல்லா இருக்கு கொத்தமல்லிப் பொடி..நான் சட்னி அரைப்பேன், இந்த மாதிரியும் செய்து பார்க்கறேன்.
ஒவ்வொரு நேரமும் சமையல் ஒவ்வொரு ருசிதானே..சந்தோஷமா இருந்தால் சமையலும் ருசிக்கும். 🙂
4.
chollukireen | 6:16 முப இல் மே 8, 2012
நிஜமாகவே செய்து பார். உனக்கும் மிகவும் பிடிக்கும்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. இதேமாதிறி புதினாவிலும் செய்யலாம்.. உனக்காக விசேஷ டிப்ஸ் இது.நான் நிறைய முறைகள் செய்திருக்கிறேன். அன்புடன் ஸந்தோஷமான சமையல்கள் ஸந்தேகமில்லாமல் ஸத்துடன் ருசிக்கும்.
5.
chollukireen | 12:15 பிப இல் ஒக்ரோபர் 31, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நாமெல்லாம் விரும்பித் தொட்டுக்கொள்ள உதவும் இந்தப்பொடி புதியது ஒன்றும் இல்லை என்று நினைப்பீர்கள்.மீள் பதிவுதான்.செய்துபாருங்கள். அன்புடன்
6.
Geetha Sambasivam | 12:34 பிப இல் ஒக்ரோபர் 31, 2022
I used to add jaggery instead of sugar. The others are same except no kadalai paruppu. 😀
7.
chollukireen | 12:45 பிப இல் ஒக்ரோபர் 31, 2022
ஒருவருக்கொருவர் சற்று மாறு படுவது இயற்கைதானே. மிக்க ஸந்தோஷம் உங்கள் கருத்திற்கு. அன்புடன்