பன்னா. மாங்காஜூஸ்
மே 7, 2012 at 11:18 முப 4 பின்னூட்டங்கள்
ஒரு மாங்காய் உபயோகிக்காமல் இருந்தது. அதையும்
உபயோகிக்கலாம் என்ன செய்யலாம்? மாங்காய் ஜூஸ்
ஸுமன் செய்வது ஞாபகத்திற்கு வந்தது. செய்தாச்சு.
குடித்தும் ஆச்சு. பகிர்ந்து கொள்வதுதானே என் பழக்கம்.
இதையும் பாருங்கள். பருகுங்கள்.
வேண்டியவைகள்
அதே புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய்—ஒன்று
வேறு வகையானாலும் அதிகம் புளிப்பில்லாத மாங்காயானாலும்ஸரி.
சர்க்கரை—-4 டீஸ்பூன்.வேண்டிய அளவு அதிகறிக்கவும்.
ஏலக்காய்–1 பொடிக்கவும்.
காலா நமக்கென்று சொல்லும் உப்பு அரை டீஸ்பூன்.
இஞ்சி வாஸனைக்குத் துளி
புதினா—4 இலைகள்
செய்முறை
மாங்காயை அப்படியே முழுதாக குக்கரில் வேகவைத்து
எடுக்கவும்.
பருப்பு வேகவைக்கும் போது மேலே ஒரு பாத்திரத்தில்
துளி தண்ணீருடன் மாங்காயை வைத்தாலும் ப்ரஷரில்
நன்றாக வெந்து விடும்.
ஆறினவுடன் மாங்காயின் தோலையும் கொட்டையையும்
எடுத்து விடவும்.
இப்போது மாங்காயின் உட்பகுதியை கரண்டியினாலோ,
க்ரஷ்ஷரினாலோ நன்றாக மசிக்கவும்.
2 கப் குளுமையான தண்ணீர் விட்டுக் கறைத்து பெறிய
கண்உடைய சல்லடையிலோ, வடிக்கட்டியிலோ வடிக்கட்டவும்.
சர்க்கரை, காலாநமக்,ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கலக்கவும்.
இஞ்சித் துருவலில் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிழிந்து
கலக்கவும்.
ருசி பார்க்கவும்.
புளிப்புக்கு ஏற்ற ஜலம் சேர்க்கவும். இனிப்பும் அப்படியே.
புதினா இலையைச் சற்று கசக்கினாற்போல தயாரான ஜூஸைக்
கண்ணாடித் டம்ளரில்விட்டு மேலே அலங்கரித்துக் கொடுக்கவும்.
எடுத்து விட்டு குடிக்கட்டும்.ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
இங்கே புதினா முடிந்து விட்டது. போடாவிட்டால் கூட ருசியாக
இருந்தது.
செய்து தான்பாருங்களேன்.
Entry filed under: ஜூஸ் வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 8:15 பிப இல் மே 7, 2012
புதுசா இருக்கும்மா ஜூஸ்! இதுபோல பச்சைமாங்காயில் ஜூஸ் செய்ததில்லை..வெயிலுக்கேற்ற பானம்!
2.
chollukireen | 6:06 முப இல் மே 8, 2012
மாங்காய் ஸீஸனில் நடக்கும் கல்யாணங்களில் ஜெயின் ஸமூகத்தினர் விசேஷமாக இந்த வகை ஜூஸ்
பல ருசி வகைகளில் தயாரித்து வழங்குவார்கள். இது என் மருமகளின் விசேஷச் செய்தி. .மகிழ்ச்சி மஹி
3.
chitrasundar5 | 10:11 பிப இல் மே 8, 2012
காமாஷி அம்மா,
வித்தியாசமான குறிப்பாக உள்ளது.கோடைக்கேற்ற பானம்.இங்கும் வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. கடைசியில் உள்ள ஜூஸை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் போலுள்ளது.மாங்காய் வாங்கினால் செய்து பார்க்கிறேன்.அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 4:54 முப இல் மே 9, 2012
மிக்க ஸந்தோஷம் சித்ரா. ஏதாவது எழுதக் கிடைத்தால், மனதில் தோன்றினால் எழுத இம்மாதிரி ஒரு இடமும் இதுதான் இப்போதைய ஸந்தோஷம்.
செய்து பார்த்து எனக்கும் ஒரு கிளாஸ் அனுப்பு.
அன்புடன்