புடலங்காய்க் கறி.
மே 29, 2012 at 6:29 முப 4 பின்னூட்டங்கள்
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். பருப்பு,தேங்காயும் கூட்டிக் குரைக்கலாம்.
Entry filed under: கறி வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 2:43 பிப இல் மே 29, 2012
Looks colorful n delicious! My sister also does this soaking part,but with chilli powder – salt & pudalngai.
Am not getting fresh ash gourd here..once in a blue moon, Indian store will have some pudalngai, in a poor(!) condition,which won’t taste good! 😉
2.
chollukireen | 10:47 முப இல் மே 31, 2012
ஆமாம். வெளிநாட்டில் இப்படிதான். சில பொருட்கள் இவ்விடத்தைவிட சில சமயம் நல்லதாகவும் கிடைக்கும். பார்க்கவே பிடிக்காத மாதிரியும் இருக்கும் சில சமயங்களில். எப்படியோ எனக்கு உங்களுடன் கலந்து பேச சான்ஸ் கிடைப்பதென்னவோ உண்மை.அன்புடன் தொடருவோம்.
3.
chitrasundar5 | 5:14 பிப இல் மே 29, 2012
காமாஷி அம்மா,
காயின் கலரிலேயே பொரியலும் நல்லாருக்கு.பிசறி வைப்பது தவிர மற்றவை எல்லாம் செய்வேன்.நீங்க செய்வது எல்லாமே ஃப்ரெஷ் காய்களில் செய்வதால் சுவை அதிகமாகத் தெரியும்.
மகி சொன்னதுபோல் நானும் கடைகளில் வாங்கமாட்டேன்.ஆனால் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இளம் பிஞ்சாக புடலங்காய்,பீர்க்கங்காய் எல்லாம் சீஸனில் கிடைக்கும்.அங்குதான் வாங்குவேன்.அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 11:00 முப இல் மே 31, 2012
வாழைத்தண்டு,புடலங்காய்,முள்ளங்கி போன்றவைகளுடன் இம்மாதிறி பருப்பைப் பிசறி செய்தால் தண்ணீரை இழுத்துக் கொண்டு வேலையை சுலபமாக்குகிறது. நம் தமிழ்நாட்டுப் பெண்களாகிய மகி, நீ எல்லாம் தெறிந்து கொள்ளாதது ஒன்றுமில்லை. ஸந்தோஷமாக இருக்கு. உங்கள் கமென்ட்டுகள்
படிப்பதற்கு. அன்புடன் அடிக்கடி ஸந்திக்கலாம்.