பீட்ரூட் ஜூஸ்
ஜூன் 14, 2012 at 6:35 முப 11 பின்னூட்டங்கள்
இதுவும் ரொம்பவே சுலபமானது. நான் கொஞ்சமா ஒரு பீட்ரூட்டில்
செய்து பார்த்தேன். மாதிரிக்கு துளித் துளி ருசி பார்த்ததிலேயே
அரைடம்ளர் காலியாகி விட்டது. பரவாயில்லை.
இன்னொரு தரம் செய்யமுயற்சிப்பதைவிட இருப்பதையே குடுத்தால் போதும்.
யார் குறை சொல்லப் போகிறார்கள் என்று தோன்றியது.
யாருக்கு வேண்டுமோ தயங்காமல் சொல்லுங்கள்.
செய்து அனுப்பி விட்டால் போகிறது.
நான் பீட்ரூட்டை வேகவைத்துச் செய்தேன். அதனால்
பச்சையான வாஸனை இல்லாமல் நன்றாக இருந்தது.
வேண்டியவைகள் அதிகம் ஒன்றுமில்லை
பீட்ரூட்—–ஒன்று
இஞ்சித் துருவல்—-சிறிது
எலுமிச்சை சாறு—-ருசிக்குத் தக்கபடி
சர்க்கரை—-4 டீஸ்பூன்
காலா நமக்—-அரை டீஸ்பூன்.
செய்முறை
பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டங்களாக்கி வேக வைக்கவும்.
மைக்ரோவேவில் வேகவைத்தாலும் ஸரி.
இஞ்சித் துருவலைச் சேர்த்து ஆறினவுடன் மிக்ஸியில்
சிறிது தண்ணீருடன் நன்றாக அறைக்கவும்.
வேகவைத்த தண்ணீர் இருந்தாலும் அதையும் சேர்த்துக்
கறைத்து பெறிய கண் உள்ள வடிக்கட்டியினால் ஜூஸை
வடிக்கட்டவும்.
சர்க்கரை, எலுமிச்சை சாறு. காலாநமக் சேர்த்துக் கலக்கவும்.
டம்ளரில் நல்ல கலருடன் ஜூஸ் தயார்.
ஐஸ் துண்டுகள் சேர்த்துப் பருகினால் ஜில் என்று
ருசியாக இருக்கும்.
Entry filed under: Uncategorized.
11 பின்னூட்டங்கள் Add your own
Prabu க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Prabu | 1:26 பிப இல் ஜூன் 14, 2012
மாமி, நமஸ்காரங்கள்..
பசங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டாச்சு! இது மாதிரி item எல்லாம் பண்ணி குடுக்கறேன்
-பிரபு
2.
chollukireen | 6:14 முப இல் ஜூன் 15, 2012
அத்திப்பூத்தாற்போல வந்துவிட்டுப் போரே. பசங்கள் லைக் பண்ணுவார்களிதை. ஜூஸ் பிடிக்காத பசங்களுண்டா? மாமியார் ஊரிலில்லை. அய்டமெல்லாம் பண்றதுக்கு உனக்கு சான்ஸ்தான்.வாப்பா.வந்துண்டு போயிண்டு இரு. ஆசிகள்.அன்புடன்
3.
Prabu | 3:11 முப இல் ஜூன் 18, 2012
மாமி, நமஸ்காரங்கள்..
இன்னிக்கு இத பண்ணி குழந்தைகளுக்கு குடுத்தேன்! முதலில் எதோ பிடிக்காத மாதிரி குடித்தார்கள்!!!! பின்னர் இன்னும் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்தேன்! குடித்து விட்டார்கள்..
போடோஸ் facebook -ல் போட்டிருக்கிறேன்!
-பிரபு
4.
chollukireen | 11:02 முப இல் ஜூன் 19, 2012
போட்டோக்கள் பார்த்தேன். குட்டி செல்லங்கள் பாட்டியின் ரஸிகர்களாக்கி விட்டாய். என்போன்ற வயதானவர்களுக்கு ஆஸ்டியோபோரஸ் முலானவைகளுக்கும் மிகவும் நல்லதாம்.
ரொம்பவே பாராட்றேன் உன்னை. நேபால் மாமி என்று என்னை
குறிப்பிட்டது பழைய ஞாபங்களை அசைபோட வைத்துவிட்டது. லதா எங்கே காணோம்.
5.
Mahi | 8:48 பிப இல் ஜூன் 14, 2012
பீட்ரூட்டில் ஜூஸ்?! கலர்ஃபுல்லா இருக்கும்மா! 🙂
6.
chollukireen | 6:17 முப இல் ஜூன் 15, 2012
ஆமாம். கலர்ஃபுல் மட்டும் இல்லே. டேஸ்ட் ஃபுல்லாவும் இருக்கும்.
முடிந்தபோது முயலவும். குடிக்க ஆளில்லேன்னா நான் வரேன். அன்புடன்
7.
chitrasundar5 | 3:53 பிப இல் ஜூன் 15, 2012
காமாஷி அம்மா,
நல்ல கலர்ஃபுல்லான,வித்தியாசமான ஜூஸ்.வாங்கினால் செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு.
அதன் கலரினாலோ என்னவோ இவர்கள் சாப்பிட மாட்டார்கள்.வீட்டில் நான் மட்டுமே (சமைத்ததற்காக) சாப்பிடுவேன்.
8.
chollukireen | 6:58 முப இல் ஜூன் 17, 2012
நானும் யாரோ சொன்னதை வைத்துத்தான் செய்தேன்.
இப்படி நடுநடுவே இம்மாதிறி குறிப்புக்களும்.. சில பழக்கமில்லாததை எல்லோருமே ஏற்றுக்கொள்ள முடியாது. அது வாஸ்தவம் தான். பதிலுக்கு நன்றி.
அன்புடன்
9.
chitrasundar5 | 8:58 பிப இல் ஜூன் 18, 2012
காமாஷி அம்மா,
ஒரே மாதிரியான காய்களுக்கு நடுவே மற்ற காய்களையும்,எந்த விதத்திலாவது சேர்த்துக்கொள்வது நல்லதுதானே.
மேலும் ஒரு உதவி அம்மா.மஞ்சள் பூசணி ஒரு பெரிய கீற்று வாங்கிவிட்டேன். அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா.நேரமிருக்கும்போது சொல்லுங்க.நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 10:50 முப இல் ஜூன் 19, 2012
எல்லோரும் செய்வது,ஸாம்பார்,கறி. துருவலாகச்செய்து அடைமாவுடன் கலந்து காரஸாரமாக அடை செய்யலாம்.
முற்றின காயாக இருந்தால் துருவி ஹல்வா கிளறலாம்.
புளி வெல்லம், பச்சை மிளகாய் சேர்த்து கொத்ஸு செய்யலாம்.. முள்ளங்கி பரோட்டா மாதிரி பரோட்டா செய்யலாம். பெரிய துண்டுகளாக நறுக்கி, தனியா,மிளகாய்ப்பொடி சேர்த்து எண்ணெயில் வதக்கலாம்.பச்சை மிளகாய்,தேங்காய்,சீரகம் அறைத்து விட்டு ,தயிர் சேர்த்து தனி அவியல் மாதிறியும் செய்யலாம். எது செய்தாலும் துளி இனிப்புச் சுவை
கூடவே வருவது போலத்தான் தெறியும்… ஸூப் கூடத்தான் செய்கிறார்கள். வெந்தயம்,மிளகாய் தாளித்து
நேபாலில் வதக்குவார்கள். எல்லாவற்றிலும், வெங்காயம்
சேர்ப்பதென்பது வழக்கமில்லை. விரும்பினால் அதுவும்
ருசிதானே. கடைசியில் சொல்றேன். எல்லாம் சேர்த்து
துவையலும் அரைக்கலாம்.. உனக்குத் தெறியாதது
இந்த லிஸ்டில் எதுவுமில்லை. காப்ஸிகம்,தக்காளி,ப.மிளகாய் சேர்த்து அறைத்துவிட்ட ஸாம்பார் நிறைய பருப்புடன் தனி ருசி.
பருப்பரிசி பொங்கலும், இந்த ஸாம்பாரும் கிராமத்து விசேஷங்களின் பெயர் வாங்கும் ஐட்டம். கதை போதுமா.
11.
chitrasundar5 | 2:24 பிப இல் ஜூன் 19, 2012
காமாஷி அம்மா,
மஞ்சள்பூசணியில் இவ்வளவு செய்முறைகளா! எவ்வ்வ்வ்வளவு பெரிய பதிவு!உதவிக்கு நன்றி அம்மா.
வாங்கியாச்சு,என்ன செய்வது எனத்தெரியாம முழிச்சிட்டிருந்தேன்.நேற்று மஞ்சள்பூசணியுடன் வேர்க்கடலை,காய்ந்தமிளகாய் சேர்த்து கூட்டு மாதிரி செய்தேன். இருந்தாலும் அந்த இனிப்புச் சுவைதான் அதிகமாகத்தெரிகிறது.இன்று முதலில் பூசணி பரோட்டா. நாளை அவியல் என பூசணி வாரமாகப்போகிறது. அன்புடன் சித்ரா.