வாழைத் தண்டு மோர்க்கூட்டு
ஜூன் 20, 2012 at 11:32 முப 4 பின்னூட்டங்கள்
தயிரை விட்டுதான் செய்கிரோம். சொல்வது என்னவோ
மோர்க்கூட்டுதான். வாழைத் தண்டில் கறி, பச்சடி மாதிறி
இதுவும் ஒரு வகை. கிராமப்புறங்களில் வாழைத்தண்டு,
சுலபமாக கிடைப்பதால் எளிய முறையான இது அடிக்கடி
செய்யும் ஒரு வியஞ்சனமாகும்.
வேண்டியவைகள்.
ஒரு துண்டு—வாழைத்தண்டு. இளசாக
பச்சைமிளகாய்—2
இஞ்சி—ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்—3 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு—-2 டீஸ்பூன்
தனியா—1 டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
நல்ல தயிர்—1 கப்பிற்கதிகம்
ஒரு துளி மஞ்சள் பொடி
ருசிக்கு உப்பு.
தாளிக்கஎண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு
பச்சைக் கொத்தமல்லி வேண்டிய அளவு.
செய்முறை
வாழைத் தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி லேசான
மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
கடலைப்பருப்பு,சீரகம், தனியாவை அலம்பி ஊரவைத்து
அதனுடன் மிளகாய், இஞ்சி, தேங்காய் சேர்த்து மிக்ஸியில்
நன்றாக அறைத்துக் கொள்ளவும்.
தயிரைக் கெட்டியாகக் கடைந்து , அரைத்த விழுதைச்
சேர்த்துக் கலக்கவும்.
வாழைத் தண்டை சிறிது தண்ணீரில், ஒட்டப் பிழிந்து போட்டு
நன்றாக வேக வைக்கவும். உப்பு, மஞ்சள்பொடி சேர்க்கவும்.
தண்ணீர் அதிகமானால் இறுத்து விடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் அரைத்த கலவையைக் கொட்டிக்
கிளறி ஒரே ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவவும்.
ருசியான மோர்க்கூட்டு தயார். இஷ்டப்படி எத்துடனும் சேர்த்துச்
சாப்பிடலாம்.
Entry filed under: வீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 1:45 பிப இல் ஜூன் 20, 2012
காமாஷிமா,
வாழைத்தண்டை வைத்து மீண்டும் அருமையான ஒரு குறிப்பு.வாழைத்தண்டு மோர்க்கூட்டு பார்க்கவே சூப்பரா இருக்கு.நான் இதையெல்லாம் செய்ததேயில்லை.எங்கம்மாவும் பொரியல் மட்டுமே செய்வாங்க.கிடைத்தால் செய்து பார்க்கலாம்.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 11:09 முப இல் ஜூன் 24, 2012
முக்கால் வாசிப்பேர் அப்படிதான் சொல்லிக் கேட்டிருக்கேன். எங்கள் வீட்டில் எங்கம்மா இப்படி எல்லாம் செய்வார்களென்று ஒரு 80 வயதுக்குழந்தை
நினைவு கொள்கிறது..அதுதான் விசேஷம்.. அன்புடன்
3.
Mahi | 12:09 முப இல் ஜூன் 23, 2012
ஆஹா, மோர்க்கூட்டு கலரே சாப்பிடத் தூண்டுகிறது! சூப்பரா இருக்கும்மா! தனியா எல்லாம் அரைத்து சேர்த்து…ஹ்ம்ம், வாசனை பிரமாதமா இருக்குமே! 🙂
4.
chollukireen | 11:16 முப இல் ஜூன் 24, 2012
வாழைத் தண்டுக்கு வாஸனை இல்லை. சேர்க்கும் ஸாமான்களினால்தான் வாஸனை. ஸரியாகச் சொன்னாய். இன்னும் ஸாலட் பண்ணினால் கூட நன்றாக இருக்கு. அன்புடன்