பாதாம்ஹல்வா
ஜூன் 27, 2012 at 6:55 முப 11 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
கொடுப்பதற்கு ஸரியாக இருக்கும்.
நெய் கணக்கைவிட அதிகம் கூட இழுக்கும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 9:09 பிப இல் ஜூன் 27, 2012
காமாஷி அம்மா,
பாதாம்ஹல்வா_பெயரைப்பார்த்ததும் ஊர் ஞாபகம்தான் வந்தது.ஹல்வா சூப்பரா இருக்கு.’திரட்டுப்பால்’ பதம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள ஈஸியா இருக்கு.
“நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்,நெய் கணக்கைவிட அதிகம் கூட இழுக்கும்.”_ சொல்லும்போதே ஆஹானு இருக்கு.முந்திரியை வறுத்துப் போட்டிருந்தால் இன்னும் கலர்ஃபுல்லாக இளம் மஞ்சளுடன் ஆங்காங்கே சிவந்த நிறத்தில் இருந்திருக்கும்.சிரமம் பாராமல் ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 6:43 முப இல் ஜூலை 3, 2012
கிச்சன் என்னிதில்லை பாரு. முந்திரி பருப்பைத் தேடினேன். அப்போ கிடைக்கவில்லை. கிடைத்தப்போ அப்படியே போடு என்று மனது சொல்லிவிட்டது. ஆமாம் .வறுத்திருந்தால் கலர் காம்பினேஷன் வந்திருக்கும். பாராட்டி எழுதியதற்கு ரொம்ம்ப ஸந்தோஷம். கொஞ்சம் கசிவாக ஈரப்பதத்தில் எடுத்தால் ஆறினபின் ஸரியாக இருக்கும் என்பதை திரட்டுப்பால் பதம் என்று என் கணக்கில் எழுதினேன்.அன்புடன்
3.
Mahi | 8:19 பிப இல் ஜூன் 28, 2012
சூப்பரா இருக்கும்மா! திரட்டுப் பால் பதமெல்லாம் எனக்குத் தெரியாதும்மா..ஒரு முறை ஹல்வா செய்கிறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சு, அது பர்ஃபியில் போய் முடிந்தது. அதிலிருந்து பாதாம் ஹல்வாவை படங்களில் பார்த்து ரசிப்பதோடு சரி! 😉
4.
chollukireen | 6:59 முப இல் ஜூலை 3, 2012
சூப்பராயிருந்தால் இன்னும் கொஞ்சம் தருகிறேன்.
பதம் என்ன ஒருமுறை வராவிட்டால் பயபக்தியுடன் அடுத்த முறை சற்று முன்பாகவே இறக்கி வைத்துவிட்டால்ப் போகிறது. உன்னிடம்
ஸரியாக வராத அந்த ஹல்வா பர்பியில் முடிந்ததா. அதுவும் ஒரு ருசிதானே.4 பர்பியை எடுத்து ஒரு கரண்டி பாலைத் தெளித்து ஊற வைத்து லேசாக காஸில் வைத்து கிளறிப் பார்க்கறதுதானே.
இப்படி திருத்தம் ஸரிவருமா பார்க்க வேணும்.
கரெக்ட் என்று சொல்ல முடியாட்டாலும்
ஹல்வான்னு சொல்லமுடியும். நேரபார்த்தால்
நிறைய சொல்லலாம். அன்புடன்
5.
petunia | 2:31 முப இல் நவம்பர் 20, 2013
Dear patti, naan inda recipe try panninen. nandraga vandadu. color yellow illamal white a irundadu. kungumapoo kammiyanu theriyala.
Matrapadi ellam nandraga irundadu. detailed steps and photos ku nandri.
6.
chollukireen | 10:18 முப இல் நவம்பர் 22, 2013
குங்குமப்பூவுக்கெல்லாம் கணக்கு எதற்கு. இன்னொரு முறை செய்யும்போது கூட சிறிது சேர்த்துக் கொள். வாஸனையாகவும் இருக்கும். அடிக்கடி இரண்டு மூன்றுதரம் செய்து விட்டால்,
அப்புறம் யோசனையே செய்யாது செய்ய வந்துவிடும்.
என் பேரன் கமென்ட் கொடுக்கலியா?
குடும்பத்தில் நீ, ஒரு நாட்டுப்பெண் வகையில் தமிழ் படித்தவளாயும், பின்னூட்டம் கொடுப்பவளாகவும் அமைந்தது
நன்றாக உள்ளது. அடுத்தது பால் போளியா?
அடுத்து என்ன கமென்ட் . கார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்புடன்
7.
chollukireen | 6:25 முப இல் திசெம்பர் 27, 2013
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஆங்கிலப் புத்தாண்டை ஆசையுடன் வரவேற்று அதற்காக பாதாம் ஹல்வாவை செய்து பாருங்கள். கொஞ்சம் கேஸரிக் கலரோ,குங்குமப்பூவோ அதிகம் சேர்த்துக் கிளருங்கள். முந்திரியை நெய்யில் வருத்துப் போடுங்கள். அருமையான
ஹல்வா. ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
8.
ranjani135 | 10:40 முப இல் திசெம்பர் 27, 2013
என்னுடைய பின்னூட்டம் எங்கே? காலையிலேயே படித்து எழுதினேனே?
சரி போனால் போகட்டும் போடா!
புத்தாண்டிற்கு பாதாம் அல்வாவுடன் வரவேற்பு சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்!
9.
chitrasundar5 | 1:33 முப இல் திசெம்பர் 28, 2013
உங்க பின்னூட்டம் எங்கே இருக்குன்னு ஆள் வச்சு தேடிக் கண்டுபிடிச்சிட்டேங்க. இங்கே போய்ப் பாருங்க.
https://chollukireen.wordpress.com/2013/12/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-2/#comments
10.
இந்த வார வல்லமையாளர்! | ranjani narayanan | 4:31 பிப இல் ஓகஸ்ட் 4, 2014
[…] அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், […]
11.
chollukireen | 12:30 பிப இல் ஓகஸ்ட் 5, 2014
இது பாதாம் ஹல்வா. நல்ல ஞாபகம் உங்களுக்கு. அன்புடன்