இடு போளி கோதுமைமாவில்.
ஜூலை 9, 2012 at 11:07 முப 12 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக போளி என்றால் மைதாமாவுக்கலவையில் பூரணம்
நிறப்பி செய்வதுதான் வழக்கம்.
ஆனால் கோதுமை மாவுக்கலவையில் சர்க்கரைப்,பருப்பு கலந்த
பூரணம் நிறப்பி போளியைக் குழவியால் இட்டுச் செய்வதை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள ரொம்ப நாட்களாகவே நினைத்திருந்தேன்.
ரவை கலந்து கூட தயாரிக்கலாம்.
இலையில் போளியைத் தட்டாமல், அப்பளாம் இடுவது போல
அப்பளாக் குழவியினால் மேல்மாவு தொட்டு இடும் வகை
இந்தப் போளி.
ஏற்கெனவே சர்க்கரைப் போளி என்ற பெயரில், பூரணம்
வைத்துச் செய்யும் மைதா போளி எழுதியிருக்கிறேன்.
என்னுடைய இனிப்பு வகைகளில் அது இருக்கிறது.
கோதுமை மாவில் தயாரிப்பதால் உடம்பிற்கு நல்லது.
பாருங்கள் .இந்த முறையையும்.
பூரணம் தயாரித்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால்
வேண்டும் போதெல்லாம் தயாரித்துக் கொள்ளலாம்.
போளிகளைத் தயாரிப்பதற்கு இடும்போது ஒற்றி இட
நல்ல நைஸான அரிசி மாவு உபயோகப் படுத்தினால்
போளிகள் அழகாக இட வரும்.
முன்னுறை போதும். காரியம் செய்து போளியைத்
தயாரிப்போம்.
வேண்டியவைகள்
கடலைப் பருப்பு—அரை கப்
துவரம் பருப்பு—அரைகப்
சர்க்கரை—2 கப்
தேங்காய்த் துருவல்—அரைகப்
ஏலக்காய்ப்பொடி—-அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்
நல்ல ரிஃபைண்ட் ஆயில்—அரைகப்
நெய்—தேவையான அளவு
நன்றாக சலித்த கோதுமைமாவு—3 கப்
நைஸான அரிசிமாவு—வேண்டிய அளவு
செய்முறை
1 பருப்புகளைக் களைந்து துளி மஞ்சள்பொடி சேர்த்துத்
திட்டமான தண்ணீரில் ப்ரஷர் குக்கரில் ஒரு விஸில்விட்டு
வேகவைத்து எடுக்கவும்.
ஸப்ரேட்டரில் வேகவைத்தாலே போதும். தண்ணீர்
அதிகமிருந்தால் வடிக்கட்டவும். பருப்பு நன்றாக வேக
வேண்டும் என்ற அவசியமில்லை.
2. கோதுமைமாவுடன் உப்பு,துளி மஞ்சள் பொடி சேர்த்து ,
திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். ரொட்டி மாவு
மாதிறிதான். மூன்று டேபிள்ஸ்பூன் ரீஃபைண்ட் ஆயில்
சேர்த்து மாவை நன்றாக இழுத்துப் பிசைந்து ஊர விடவும்.
காற்றுப் புகாமல் மாவை மூடிவைக்கவும்.
3 ஆறிய பருப்புடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்
விடாது அறைக்கவும். துளி சர்க்கரை சேர்த்தரைத்தால்
சுலபமாக இருக்கும்.
4 பருப்புக்கலவை அறைந்ததும், சர்க்கரையையும் சேர்த்து
அறைக்கவும்.
5 பருப்புடன் சர்க்கரை சேர்த்து அறைக்கும் போது கலவை
நெகிழ்வாக இருக்கும்.
6 ஒரு நான்ஸ்டிக் வாணலியிலோ, அல்லது அடி கனமான
பாத்திரத்திலோ கலவையைக்கொட்டி, நிதான தீயில்
வைத்துக் கிளறவும்.
7 தீயை ஸிம்மில் வைத்து, 2, 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து,
அடி பிடிக்காமல் கிளறவும்.
8 பூரணம் கையில் பிசுக்கென்று ஒட்டாத மாதிறி பதம் வரும்
வரைக் கிளறி இறக்கி ஏலப்பொடி சேர்க்கவும்.
9 பிசைந்த மாவைத் திரட்டி உருட்டி, ஸமமான
உருண்டைகளாகச் செய்து கொள்ளவும்.
10 அதே அளவில் பூரணத்தையும் பிறித்து உருட்டிக்
கொள்ளவும்.
11 அரிசி மாவையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
12 சப்பாத்தி இடும் மணையிலோ, அல்லது கல்லிலோ அதில்
அரிசிமாவைத் தொட்டு ஒரு மாவு உருண்டையைச் சின்ன
வட்டமாகக் குழவியின் உதவியினால் இட்டுக் கொள்ளவும்.
13. துளி எண்ணெயை வட்டத்தின் மீது தடவி, பூரணத்தைச்
சற்று தட்டையான வடிவத்தில் வட்டத்தின் நடுவே
வைக்கவும்.
14 மாவின் விளிம்புகளால் பூரணத்தைச் சுற்றி இழுத்து
மூடவும்.
15 திரும்பவும் அரிசி மாவில் பிரட்டி அப்பளாங்கள் வடிவில்
போளிகளை இடவும்.
16 ரொட்டி செய்யும் நான் ஸ்டிக் தோசைக் கல்லைக்
காயவைத்து அவ்வப்போது செய்யும்போளிகளைப் போட்டு
இருபுறமும் நெய் தடவி திருப்பிப் போட்டு பதமாகச் செய்து
எடுக்கவும்.
17 எடுக்கும் போதே மடித்தெடுக்கவும். ஆசீர்வாத்கோதுமை
மாவு உபயோகப் படுத்தியே செய்தேன்.
18 கையில் ஒட்டாத பதமாகச் செய்த பூரணத்தை நல்ல
கனமான பாலிதீன் பைகளில் சேமித்து காற்றுப்புகாமல் மூடி
ஃப்ரிஜ்ஜில் வைத்து அதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்.
19 மாவு அவ்வப்போது பிசைந்து கொண்டால் போதும்.
20 மாவையும் சற்று நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்தெடுத்துச்
செய்தால் மிகவும் ஸரியாக இடவரும்.
செய்து ருசித்துப் பாருங்கள். பரோட்டா செய்யும் முறைதான்
என்று தோன்றி விடும்.
கீழே கொடுத்திருக்கும் படங்களைப் போலவே இன்னும் சில
படங்களும் 2009 பிப்ரவரியில் சர்க்கரைப் போளி என்ற
தலைப்பில் கொடுத்திருக்கிறேன்.
அடுத்து ஆடிப் பண்டிகை வருகிரது. செய்து பார்க்க
முடிந்தால் செய்யலாமே.
செய்து வைத்து பின்னர் மைக்ரோவேவில் லேசாக
சுடவைத்தும் சாப்பிடலாம்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 10:09 பிப இல் ஜூலை 9, 2012
வேலை வாங்கும் என்பதால் இதை செய்ய பயம். ஆனாலும் அதன் சுவையினால் எப்போதாவது செய்வதுண்டு.படங்களைப் பார்க்கும்போது இந்த வாரமே செய்துவிட வேண்டியதுதான்.தெளிவான நடையுடன்கூடிய,நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 9:41 முப இல் ஜூலை 11, 2012
பதிவுக்கு மேலே லக்ஷணமா போளிகளின் போட்டோ போட்டிருக்கணும். அது செய்யலே. உன் பதிலுக்கு லேட்டாதான் பதில் கொடுக்கிறேன்.
இந்த போளி ஸுலபமானதுதான். நிறைய பதிவுகள் எழுதுபவர்களுக்கு உனக்கும் சேர்த்து தான் இது ஒன்றும் பிரமாதமில்லை. இது சென்னையில் செய்ததின் குறிப்பு. சர்க்கரைப் போளி என்ற தலைப்பில், எனது இனிப்பு வகைகளில் ஜெனிவாவிலிருந்து போஸ்ட் செய்ததையும் பார்.பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி போளியில் துவரம் பருப்பு சேர்ப்பதால் மிருதுவாக போளிகள் இருக்கும்.
3.
Mahi | 8:29 பிப இல் ஜூலை 11, 2012
துவரம்பருப்பு சேர்த்தா போளி மிருதுவா இருக்கும்– புதிய தகவல். போளி நல்லா இருக்கும்மா!
4.
chollukireen | 10:12 முப இல் ஜூலை 12, 2012
ஆமாம். கட்டாயம் சும்மா ஒரு கரண்டி பருப்பில் செஞ்சு பாரு. வித்தியாஸம் உணர முடியும். நல்லாயிருக்கு சொன்னது மிக்க ஸந்தோஷம்.
5.
Mahi | 8:31 பிப இல் ஜூலை 11, 2012
http://en.wikipedia.org/wiki/Funnel_cake
ஃபனல் கேக் பற்றிய தகவல்கள் மேற்கண்ட லிங்கில் இருக்கு. நேரமிருக்கையில் பாருங்கம்மா! ஒண்ணும் பிரமாதமில்லை, கேக் மாவை கொஞ்சம் தண்ணியாக கரைத்து ஜிலேபி சுடுவது போல எண்ணெயில் பொரித்தெடுத்து ஐஸிங் சுகர் தூவி தருவார்கள். அவ்வளவுதான்! 🙂
6.
பிரபுவின் | 10:33 முப இல் ஜூலை 14, 2012
போளி மிகவும் ருசியானது.ஆனால் இலங்கையில் மக்கள் இதனை விரும்புவதில்லை.இதனால் உணவகங்களில் அரிதாகவே காண முடியும்.படங்களைப் பார்க்கும் போது உண்ண விருப்பமாக இருக்கின்றது.
7.
chollukireen | 11:39 முப இல் ஜூலை 14, 2012
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
இங்கு எங்காவது இருந்தால் செய்தே அனுப்பிவிடுவேன். இது தென்னிந்தியாவின்
பழையகால இனிப்பு. ஆந்திர,கர்நாடக,தமிழ், மஹாராஷ்டிர மக்களுக்கு தெறிந்த ஒன்று. பரவாயில்லை.நான் மனதால் உங்களுக்கு
அனுப்பி வைக்கிறேன். சாதாரணமாக இது
உணவகங்களில் கிடைப்பதில்லை. அடிக்கடி வந்து விருப்பங்களைச் சொல்லுங்கள். நன்றியுடன் சொல்லுகிறேன்.
8.
ranjani135 | 5:32 பிப இல் ஓகஸ்ட் 9, 2012
போளி செய்முறை மிகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். என் மகளுக்கும், மாட்டுப்பெண்ணிற்கும் உங்கள் வலைப் பதிவுகளை படிக்கச் சொல்லியிருக்கிறேன். சற்று வித்தியாசமான குறிப்புகள் நன்றாக இருக்கின்றன.
பாராட்டுக்கள்
9.
chollukireen | 6:49 முப இல் ஓகஸ்ட் 11, 2012
உனக்குப் பிடித்து, உன் பெண், மாட்டுப் பெண்ணிற்கும் என் வலைப்பூவை ரெகமண்ட் செய்தது ஆஹா எவ்வளவு மகிழ்ச்சி தெறியுமா.
உன் பாராட்டுக்கும் மிகவும் நன்றிகள். உன் பதிவுகள் விடாது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அன்புடன்
10.
ranjani135 | 7:02 முப இல் ஓகஸ்ட் 11, 2012
நல்லது எங்கிருந்தாலும் என் பெண்ணிற்கும், மாட்டுப் பெண்ணிற்கும் சொல்லுவேன். உங்கள் அனுபவம் சிறியவர்களுக்கும் உதவட்டும் என்று ஒரு ஆசை!
அரிசியில் கீர் இன்னும் பண்ணவில்லை. பண்ணிவிட்டு சொல்லுகிறேன்.
11.
chollukireen | 7:08 முப இல் ஓகஸ்ட் 11, 2012
லைனில் பேசுவதுபோல இருக்கு. ஸவுக்கியமா. அதிகம் நேரம் கிடைப்பதில்லை. உடம்பு ஸரியில்லாத பெறியவர். ரொம்ப அன்போடு பதில் எழுதுகிறாய். மனதிற்கு இதமாக இருக்கிறது.
12.
ranjani135 | 7:56 முப இல் ஓகஸ்ட் 11, 2012
சௌக்கியம், நீங்கள் சௌக்கியமா? எனக்கும் நேரில் பேசுவது போலவே இருக்கிறது. என் பதிவுகளை தவறாமல் நீங்கள் படிப்பது மகிழ்ச்சி!