ஆலு மேதி வதக்கல்.
ஜூலை 31, 2012 at 10:53 முப 12 பின்னூட்டங்கள்
வெந்தயக்கிரை ஒரு எழுத்து அச்சாக ஸ்ட்ரைக். அதனாலே
ஆலு மேதி
ஹிந்தி பேர் எழுதிவிட்டேன். சுலபமாக செய்யும் விதம் எழுதுகிறேன்.
வேண்டியவைகள்
உருளைக் கிழங்கு—-ஐந்து அல்லது ஆறு திட்டமான சைஸ்
தக்காளிப் பழம்—–1
பச்சைமிளகாய்—-2
வெங்காயம்—-1
பூண்டு இதழ்—4
இஞ்சி—ஒரு துண்டு
எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு, கடுகு, மஞ்சள்பொடி
பொடியாக நறுக்கி அலம்பிய வெந்தயக்கிரை ஒருபிடி
செய்முறை
கிழங்கைநன்ராக அலம்பி தோலைஎடுத்து விட்டு
துண்டுகளாகச் செய்து திரும்பவும் அலம்பி வடிக்கட்டவும்
இஞ்சி,ப.மிளகாய்,வெங்காயம், பூண்டு
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய,கிழங்குத் துண்டுகளுடன் மஞ்சள் பொடி,1டேபில்ஸ்பூன்
எண்ணெய் சேர்த்துக் கலக்கி 2ண்டு 2ன்டு நிமிஷங்களாகக் கிளறி
விட்டு மைக்ரோவேவில் மொத்தம் 6 நிமிஷங்கள் ஹைபவரில்
வேகவைத்து எடுக்கவும்.
அடி கனமான வாணலியில் மிகுதி எண்ணெய்யைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு வெங்,இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாயை
வதக்கவும்.
உப்பு, தக்காளி சேர்த்து பின்னும் வதக்கவும்.
யாவும் வதங்கியவுடன், வெந்தயக்கிரையை சேர்த்து நன்றாக
வதக்கி உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
மஸாலா எதுவும் அவசியமில்லை.
கிரை மணத்துடன் வதக்கல் ருசி நன்றாக இருக்கும்.
ee என்ற எழுத்து அச்சாகவில்லை, இ சப்தத்திலேயே இருக்கிறது.
Entry filed under: கறி வகைகள்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 5:37 பிப இல் ஜூலை 31, 2012
மசாலா சேர்க்காமல் சிம்பிளான கறி. கீரை மற்றும் உருளைக் கிழங்கின் ஒரிஜினல் ருசியுடன் நன்றாக இருக்கும். நல்ல கறி அம்மா!
கீ-போர்டில் ஏதாவது தூசு மாட்டி ஈ-யைப் பிடிச்சுக் கொண்டிருக்கிறதோ என்னமோ! 😉 தமாஷுக்கு சொல்கிறேன், என்னவென்று பார்த்து சரியாக்க முயற்சியுங்க. அல்லது ஹிந்தி கூட ஓகே! 🙂
2.
chollukireen | 10:44 முப இல் ஓகஸ்ட் 1, 2012
நன்றாக இருக்கும் இல்லையா. செஞ்சு பார்த்துவிட்டு எழுதினேன். cமிகவும் நன்றி.
நிஜமாகவே கம்ப்யூட்டர் தகராரு பண்றது. அதையும் சொன்னபடி கேட்கச் சொல்லணும். தூசியை பிடித்து வைத்திருக்கும் போல இருக்கு. மாமியார் அகத்திற்கு போய்வரச் சொல்ல வேண்டும். பார்க்கலாம்.
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:11 பிப இல் ஓகஸ்ட் 2, 2012
(http://mahikitchen.blogspot.com/) தளம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
ஆலு மேதி வதக்கல் – துணைவியார் குறித்து வைத்துக் கொண்டார்கள்… நன்றி சகோ…
4.
chollukireen | 6:36 முப இல் ஓகஸ்ட் 11, 2012
மஹியின் தளத்தின் மூலம் முதல் வருகை தந்த உங்களை உள்ளன்புடன் வரவேற்கிறேன். இப்படியே வருகை தந்துகொண்டு இருங்கள்.
உங்கள் துணைவியாருக்கு ஆலுமேதி வதக்கலை குறித்துக் கொண்டதோடிராமல் செய்து பார்த்தும் ருசிக்கச் சொல்லுங்கள். எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும்.
இருவருக்கும் என் அன்புப் பகிர்வுகள்.நன்றி.
5.
chitrasundar5 | 1:29 முப இல் ஓகஸ்ட் 3, 2012
உருளைக்கிழங்கு,வெந்தயக்கீரையுடன் நல்ல மணமாக உள்ளது.இரண்டும் அதனதன் நிறத்திலேயே உள்ளன. செய்முறையும் வித்தியாசமாக,சுலபமாகவே உள்ளது. வேண்டிய சாமான்கள் எல்லாமே இருக்கின்றன. செய்திடலாம்.நன்றி அம்மா.
ஒரு எழுத்து ஸ்ட்ரைக் இந்நேரம் முடிவுக்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 6:43 முப இல் ஓகஸ்ட் 11, 2012
கம்பியூட்டர் பேட்ரி, கீ போர்ட் எல்லாம் சேஞ்ச் பண்ணிக்கொண்டு வர இவ்வளவு தாமதமாகி விட்டது. செய்திடலாம் என எழுதியுள்ளாய்.
செய்திருப்பாய். ஒரு வாரமாய் யாருடனும் எதையும் பகிர முடியவில்லை. ஏதோ ரொம்ப நாட்களாக யாரையும் பார்க்காதது போன்று இருக்கிறது.
அன்புடன்
7.
பிரபுவின் | 10:13 முப இல் ஓகஸ்ட் 4, 2012
சுலபமான செய்முறை என்று படிக்கும் போது தெரிகின்றது.
நன்றி சொல்லுகிறேன் அம்மா.
8.
chollukireen | 12:24 பிப இல் ஓகஸ்ட் 4, 2012
மிகவும்ஸுலபம்தான்.-செய்துபார்த்தால்தெரியும்.–நன்றி
9.
ranjani135 | 5:35 பிப இல் ஓகஸ்ட் 9, 2012
உங்கள் செய்முறை படித்துவிட்டு செய்தே பார்த்துவிட்டாள் என் மாட்டுப் பெண். மிக நன்றாக இருக்கிறது. நன்றியும், பாராட்டுக்களும்!
10.
chollukireen | 6:53 முப இல் ஓகஸ்ட் 11, 2012
முதலில் உன், என் நாட்டுப் பெண்ணிற்கு என் அன்பு. செய்தது தெறிந்தால் நான் சாப்பிட வந்திருப்பேனே. உங்கள் யாவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும். அன்புடன்
11.
ranjani135 | 6:59 முப இல் ஓகஸ்ட் 11, 2012
என் நாட்டுப் பெண்ணிற்கு புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று ஆசை. அன்றைக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது, உங்கள் வலைப்பதிவைப் பார்த்து செய் என்றேன். இந்த ஆலு மேதி வதக்கலை செய்தால். மிக ருசியாக வந்தது.
உங்கள் அன்புக்கு நன்றி, காமாட்சி அம்மா!
12.
chollukireen | 7:02 முப இல் ஓகஸ்ட் 11, 2012
சுறுசுறுப்புத் தெறிகிறது. ஸந்தோஷம்.