வெஜிடபிள் பிட்ஸா
ஓகஸ்ட் 14, 2012 at 7:19 முப 26 பின்னூட்டங்கள்
என்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா?
கட்டாயம் யோசிப்பீர்கள். 10, 12 வருஷங்களாக செய்வதைப்
பார்த்து, கூடமாட எல்லாம் செய்தும் பழக்கந்தான். ஆனால்
இங்கே பிட்ஸாவெல்லாம் செய்வதில்லை. ஜெனிவா ஸுமனுக்கு
ஃபோன் செய்யும்போது பிட்ஸா பண்ணும் போது எல்லாத்தையும்
படமெடுத்து அனுப்பு. வாராவாரம் சனிக்கிழமை பிட்ஸாதினம்
ஆயிற்றே என்றேன்.
வந்து சேர்ந்து 4வாரம் ஆகிறது. நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
பிட்ஸாவின் அடிபாகம் தயாரிப்பதற்கு
ஈஸ்ட்—-7 கிராம்…காய்ந்த பொடி
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கைபொருக்கும் அளவுள்ள சுடு தண்ணீர்—250 மிலிகிராம்
மைதா—-350 கிராம் அல்லது
கோதுமைமாவு—200கிராம் இதனுடன்
மைதா—-150 கிராம் ஆக கலக்கவும்.
உப்பு —1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில்—–3 டேபிள்ஸ்பூன்.
மேலே நிரப்புவதற்கு வேண்டிய ஸாமான்கள்.
3 டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ் அல்லது டொமேடோ ப்யூரி
3 தக்காளி– ஸ்லைஸாக நறுக்கியது
3 மீடியம் சைஸ் வெங்காயம் –ஸ்லைஸாக நறுக்கியது
காப்ஸிகம் சிகப்பு,பச்சை, மஞ்சள் எது விருப்பமோ அந்த-
-வகையில் நறுக்கியது—-1 கப்
ப்ரகோலி நறுக்கியது—1 கப்
பேஸின் மேல் தடவுவதற்கு—1 டேபிள்ஸ்பூன் ஆலிவாயில்
மொஜரில்லாசீஸ்–துறுவியது—200 கிராம்
அமெரிக்கன் சோளம்–பதப்படுத்தியது. 2டேபிள்ஸ்பூன்.–டின்–
–களில் கிடைக்கும்.
கேப்பர்ஸ்—2 டேபிள்ஸ்பூன். புளிப்பு சுவையுடன் கூடியது.
பர்மேஸன் சீஸ்—-துருவியது—2டேபிள்ஸ்பூன்
ரிகோட்டாசீஸ்—-50 கிராம்.
செய்முறை
1 ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட்,சர்க்கரையுடன் 50 மிலிகிராம்
தண்ணீரைக் கலந்து வெப்பமான இடம் அதாவது அடுப்படியில்
15 நிமிஷங்கள் வைக்கவும். வைத்த அளவைவிட இரண்டு பங்கு
அளவு பொங்கி இருக்கும்.
2 ஒரு அகன்ற தாம்பாளத்தில் மாவுடன் உப்பைக் கலந்து பரத்தி
நடுவில் ஒரு குழிமாதிறி இடம் செய்து, ஆலிவ்ஆயில், ஈஸ்ட்-
-கலவையைச் சேர்க்கவும். மிகுதித் தண்ணீரை விட்டு, ரொட்டிக்கு
மாவு பிசைவதுபோல அழுத்தி 5,6 நிமிஷங்கள் விடாது நன்றாகவும்,
மிருதுவாகவும் மாவைப் பிசைந்து வைக்கவும்.
3 மாவின் மேல் லேசாக எண்ணெயைத் தடவி, ஒரு பாலிதீன்
பேப்பரால் கவர் செய்து ஒரு குழிவான பெறிய பாத்திரத்தில் அறை
மணிக்கதிகம் ஊறவிடவும். மாவுக்கலவை உப்பிக்கொண்டு
இரண்டு மடங்கு பெறிய சைஸைாக ஆகும். அம்மாதிறி உப்பும் வரை இருந்து
பிறகு செய்ய ஆரம்பிக்கவும்.
4 உப்பி வந்த மாவை 2 நிமிஷங்கள் சேர்த்துப் பிசையவும். ஒரு
பட்டர் பேப்பர் மீதோ,அல்லது, குக்கி ஷீட்டின் மீதோ குழவியின்
உதவியால் ஓவல் வடிவத்திலோ,வட்ட வடிவத்திலோ பெறிய
அப்பளாமாக இடவும். இட்டதை அவன் ட்ரேயில் மாற்றவும்.
30 ஸென்டிமீட்டர் பரப்பளவிற்கு இட்டது இருக்கலாம்.
5 இட்டதின் மேல் லேசாக ஆலிவ் ஆயிலைத் தடவவும்.
அடுத்து டொமேடோ பூரியைத் தடவவும்.
இரண்டு டேபிள்ஸ்பூன் மொஸரில்லா சீஸைப் பரவலாகத்
தூவவும்.
வெங்காய வில்லைகளைப் பரவலாகப் பரத்தவும்.
காப்ஸிகம்,ப்ரகோலி, டொமேடோவில்லைகளைப் பரத்தவும்.
சோளமணிகள்,கேப்பர்ஸையும் பரவலாகப் போடவும்.
எல்லாவற்றிற்கும் மேல் மொஜரில்லா, பர்மேஸன்,ரிக்கோட்டா
சீஸ்களையும் பரவலாகத் தூவவும்.
6 அவனை முன்னதாகச் சூடாக்கவும்.
சூடான அவனில் அலங்காரம் செய்த பிட்ஸா அடங்கிய ட்ரேயை
வைத்து 240 டிகிரி ஸென்டிகிரேடில் 20 அல்லது 25 நிமிஷங்கள் வைத்து
பேக் செய்து எடுக்கவும்.
சூடான ருசியான பிட்ஸா தயார். கட் செய்து சாப்பிட வேண்டியதுதான்.
கட்டும் செய்தாயிற்று. பிட்ஸா கட்டரினால் கட் செய்யவும்.
டேபிளில் டபாஸ்கோ, மிளகுப்பொடி.பொடிஉப்பு.சில்லிஃப்ளேக்ஸ்,
ஒரிகானோ, மஸாலாக்கள் ஊரிய எண்ணெய், எல்லாம் இருக்கிறது.
எந்த வகை பழச்சார் வேண்டுமோ ஃப்ரிஜ்ஜில் அதுவும் இருக்கிறது
- காய்கறிகளுடன் ஒரு பார்வை
பின் குறிப்பு பிட்ஸாவிற்கான டொமேடோ சாஸை வீட்டிலேயே
தயாரிக்கலாம்.
2 லவங்கம் —–பொடி செய்யவும். 4 இதழ் பூண்டைத் தட்டிக் கொள்ளவும்
பேஸில் இலை காய்ந்தது சிறிது. 2 ஸ்பூன் –ஆலிவ் ஆயில்
2 கப் அரைத்த தக்காளி விழுது.
2 டேபிள்ஸ்பூன்—டொமேடோ ப்யூரி
சிறிது, உப்பும், மிளகுப்பொடியும்
செய்முறை—–பொடித்த பேஸில், பூண்டு, லவங்கப் பொடி இவைகளைச் சேர்த்து
அரைத்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் நிதான தீயில் ஒரு பாத்திரத்தில்
கொதிக்க விடவும். வேண்டிய அளவு மிளகுப் பொடி சேர்க்கவும். திக்காக
சேர்ந்து சாஸ் பதம் வரும் போது, உப்பையும் டொமேடோ ப்யூரியையும்
சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும்.
பிட்ஸாவிற்குண்டான சாஸ் ரெடி.
ஆற வைத்து பிட்ஸாவிற்கான சாஸாக உபயோகிக்கலாம்.
பிட்ஸா கோதுமை மாவும், மைதாவும் சேர்த்துச் செய்தால் அடிக்கடி
செய்பவர்களுக்கு நல்லது.
தனி மைதாவிலும் தயாரிக்கலாம்.
பொருமையாக முயற்சியுங்கள்.
முடியாதது எதுவுமில்லை.
எனது மருமகள் ஸுமனின் குறிப்பு இது.
பிட்ஸாவின் மேல் உப்பு,மிளகுப் பொடி, காரம்,உரிகானோ,டபாஸ்கோ
மஸாலா எண்ணெய் என வேண்டியதைத் தூவிக்கொண்டு ருசியாகச்
சாப்பிடுங்கள்.
Entry filed under: பிட்ஸா.
26 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 7:38 முப இல் ஓகஸ்ட் 14, 2012
விரிவான செய்முறை… பாராட்டுக்கள்…
வீட்டில் செய்து பார்ப்போம்…
தொடர வாழ்த்துக்கள்… நன்றி…
2.
chollukireen | 5:14 முப இல் ஓகஸ்ட் 16, 2012
பாராட்டினது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. செய்து பார்ப்போம் என எழுதியது உங்களின் ஆர்வத்தைப் புலப்படுத்தியது. நிதானமாய் செய்துவிட்டு எழுதுங்கள். தொடர்ந்து அபிப்ராயங்கள் கொடுங்கள். அன்புடன்
3.
ranjani135 | 8:24 முப இல் ஓகஸ்ட் 14, 2012
சூப்பர்! என் பெண்ணிற்கு இணைப்பை அனுப்பியாச்சு!
சென்னையில் வரும் 26 ஆம் தேதி தமிழ் பதிவர்கள் சந்திப்பு இருக்கிறது. நீங்கள் சென்னையில் இருந்தால் தவறாமல் வாருங்கள். சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். விவரங்கள் இந்த இணைப்பில்:
http://ranjaninarayanan.wordpress.com/2012/08/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/
4.
chollukireen | 5:38 முப இல் ஓகஸ்ட் 16, 2012
உங்கள் பெண்ணும் மிக்க ஆர்வமுடன் செய்து பார்ப்பாள் என்று நம்புகிறேன். நான் மும்பையில் இருக்கிறேன். தமிழ்ப் பதிவர்கள் ஸந்திப்பில் நீங்கள் பங்கேற்கும்போது 80 வயது ஒரு அம்மா, கத்துகுட்டியாக
எழுதுகிறார். உங்கள் எல்லோரையும் தெறிந்து கொள்ள மிகவும் ஆவலாக
உள்ளார். விசாரித்து சொல்லச் சொன்னார் என்று சொல்லவும். உன்னுடைய பறிவிற்கும், அன்பிற்கும் என் மனமார்ந்த அன்பு. அன்புடன்
5.
ranjani135 | 5:46 முப இல் ஓகஸ்ட் 16, 2012
நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.
சைபர் சிம்மன் என்று ஒரு வலைபதிவாளர் இருக்கிறார். அவர் ஒரு முறை ’80 வயதில் டிவிட்டரில் கலக்கும் பாட்டி’ என்று எழுதியிருந்தார். நான் அவருக்கு இந்தியாவிலும் எங்களைப் போன்ற பாட்டிகள் பதிவு உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறோம், எங்களைப்பற்றியும் எழுதுங்கள் என்று உங்களது இணைய முகவரியையும் என்னுடைய முகவரியையும் கொடுத்தேன். அவரும் எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ் பதிவர் விழாவிலும் கட்டாயம் உங்களைப் பற்றியும், உங்கள் எழுத்துக்கள் பற்றியும் சொல்லத்தான் போகிறேன்.
கணவர் உடல்நிலை பரவாயில்லையா?
அன்புடன்,
ரஞ்ஜனி
6.
chitrasundar5 | 10:36 பிப இல் ஓகஸ்ட் 14, 2012
காமாஷி அம்மா,
வெஜிடபிள் பிட்ஸா சூப்பரா இருக்கு.மருமகளிடம் படங்கள் வாங்கி செய்முறையை வெளியிட்டு எங்களுடன் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. பிட்ஸா நல்லா இருந்துச்சின்னு சொல்லிடுங்க.இவ்வளவு பெரிய பதிவை தெளிவா,விளக்கமா எழுதியிருக்கீங்க. கேப்பர்ஸ் பற்றி இப்போதான் கேள்விப்படுகிறேன்.
“என்னது நான் பிட்ஸா எழுதுகிறேனே என்று யோசிக்கிறீர்களா?” _ உண்மையில் நான் யோசிக்கவேயில்லை அம்மா.நானே கேட்க வேண்டுமென நினைத்தேன்,நீங்க போன நாடுகளில் உள்ள உணவு முறைகளைப்பற்றி.அன்புடன் சித்ரா.
7.
chollukireen | 6:03 முப இல் ஓகஸ்ட் 16, 2012
சித்ரா தெளிவா, விளக்கமா இருக்கு என்று எழுதினது அதுதான் பிட்ஸா செய்முறைபற்றி நீ குறிப்பிட்டிருந்தது எங்கேயோ எவ்வளவோ தூரத்திற்கு உயரத் தூக்கிக் கொண்டு போய்விட்டது போலத் தோன்றியது. ஸந்தோ ஷமம்மா. என் மருமகளுக்கும் சொன்னேன். மஹி ஊரில் இல்லை. நீ,மஹி இருவரும் எழுதாத கமென்ட் பூர்த்தியாகாது. மஹிக்கும் எழுத வேண்டும். நிறைய பதிலில் எழுத நினைத்தும் இவ்வளவே எழுத முடிந்தது. அன்புடன்
8.
kalyanimurugan | 3:43 பிப இல் ஓகஸ்ட் 15, 2012
வாழ்க வளமுடன் அம்மா, பீட்சா மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பொறுமையைக் கண்டு வியக்கிறேன். எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறீர்கள்? அம்மா, எனக்கு என்று தனி வலைத்தளமெதுவும் இல்லை. என்னுடைய ப்ளாக் kalyani-m.blogspot.in
9.
chollukireen | 12:33 பிப இல் ஓகஸ்ட் 16, 2012
எழுதறது யாருக்காவது உபயோகப்பட ஆசை. 80 வயஸுலே எழுதும் போது மனதிலே பதிந்திருப்பது சற்று வெளியே வருகிறது என்று நினைக்கிறேன். உன்னுடைய பாராட்டுதல்கள் மனதை வருடுகிறது. நன்றியம்மா. உன்னுடைய ப்ளாகிற்கு போனேன். இன்னும் அதை ஸரியாக எனக்கு பார்க்கத் தெரியவில்லையென்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி அறிந்து கொள்ள ஆசை. முடிந்தபோது எழுதவும்.
வாழ்க வளமுடன் எல்லோருக்கும் பொதுவான நல்ல ஒரு அழகான
வாக்கியம். வாழ்த்த பொருள் நிறைந்தது. நன்றியும், ஆசியும்,அன்புடன்
10.
angelin | 1:52 பிப இல் ஓகஸ்ட் 21, 2012
காமாட்சிம்மா உங்க நெல்லிக்காய் பச்சடி குறிப்பு நான் செய்து பார்த்து என் வலைப்பூவில்பகிர்ந்திருக்கேன் ..நேரம் இருக்கும்போது வந்து பாருங்க
11.
chollukireen | 9:35 முப இல் ஓகஸ்ட் 22, 2012
angelinஉன் வலைப்பூவைப் பார்த்தேன். உன்னுடைய பகிர்வுக்கு மிகவும் ஸந்தோஷம். கமென்ட் எழுதி போஸ்ட் செய்தால் ஏனோ போகவில்லை. உன்னுடைய வலைப்பூவினால் இன்னும் அதிக நபர்களுக்கு சொல்லுகிறேனைப்பற்றி தெறிய வாய்ப்புள்ளது. மிக்க நன்றி. திரும்பவும்எழுத
முயற்சிக்கிறேன். அன்புடன்
12.
faizakader | 10:38 பிப இல் ஓகஸ்ட் 21, 2012
அம்மா உங்களின் வலைப்பூ க்கு இன்று தான் வருகிறேன்.. அருமையாக இருக்கு.. விரிவான விளக்கம்..
13.
chollukireen | 7:04 முப இல் ஓகஸ்ட் 22, 2012
வாருங்கள். மிகவும் ஸந்தோஷம். அடிக்கடி படித்து கருத்தைத் தெறிவிக்கவும். நன்றி அன்புடன் சொல்லுகிறேன்.
14.
chollukireen | 9:36 முப இல் ஓகஸ்ட் 22, 2012
உங்களின் முதல் வரவை அன்புடன் வரவேற்கிறேன்.
15.
Geetha Sambasivam | 1:23 முப இல் ஜூலை 12, 2015
காப்பர்ஸ் பற்றித் தெரியாது. பேசில் இலைகளையும் சிலர் சேர்ப்பது உண்டு. ஆனால் அதுவும் இந்தியாவில் கிடைப்பதில்லை. மற்றபடி அவன் வைத்திருந்தபோது, குழந்தைகளும் எங்களுடன் இருந்தார்கள். அப்போ அடிக்கடி பிட்சா/ பர்கர் எல்லாம் வீட்டிலேயே செய்திருக்கேன். முட்டை சேர்க்காத கேக்கும் செய்வேன். பிட்சா பேஸ் 90 களிலேயே ஜாம்நகர், மும்பை ஆகிய ஊர்களில் கிடைக்கும். அவற்றை வைத்தும் செய்தது உண்டு. பேஸ் தயாரித்தும் செய்தது உண்டு.
இப்போக் குழந்தைகளும் வெளிநாடுகளில். அவங்க குழந்தைங்களுக்குப் பிடித்த மாதிரி தயாரிக்க அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு! 🙂 அங்கே போனால் நமக்குச் செய்து தருவார்கள். 🙂 அதெல்லாம் ஒரு கனாக்காலம் என்று ஆகிவிட்டது இப்போது. அவனும் இப்போது இல்லை. தூக்கி தானம் பண்ணியவற்றில் அதுவும் ஒன்று. 🙂
16.
chollukireen | 10:33 முப இல் ஜூலை 14, 2015
முதலில் இந்தப்பிட்ஸா முதலானவைகள் தெரியாது. இப்போது நீங்கள் சொல்லியமாதிரி வெளிநாட்டில் அவர்களுக்குத் தெரியாததே ஒன்றுமில்லை. நாமே நம் சமையல்களில் எவ்வளவோ மாறுதல்களைச் சந்திக்கிறோம் இது இருந்தால்தான் செய்ய முடியும் என்ற எண்ணம் நமக்கேற்படுவதில்லை. அது ஒன்றுதான் வித்தியாஸம். உங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
17.
chollukireen | 11:14 முப இல் மார்ச் 17, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
ஏதாவது சாப்பிடும் வஸ்து மீள்பதிவு செய்ய நினைத்தேன். பிட்ஸா நான் ஸீனியர் என்றது. பாருங்கள். வீட்டில் செய்து நிறைய அலங்காரங்களுடன் வலம் வருகிறது. மலரும் ஞாபகங்கள். அன்புடன்
18.
நெல்லைத்தமிழன் | 12:29 பிப இல் மார்ச் 17, 2021
நல்லா விளக்கமான செய்முறை. ரொம்பவே மனசை ஈர்க்குது.
பஹ்ரைனில் எனக்கு நினைத்தால் பிட்சா சாப்பிடும்படியான வாய்ப்பு (அலுவலகத்தில்). ஆனால் அவ்வளவாக ஆர்வம் காண்பித்ததில்லை (சீஸ் உடலுக்குக் கெடுதல் என்றே என் மனதில் பதிந்திருந்தது) அதனால் நான் எப்போதும் ஸ்டாஃப் பிட்சா என்று சொல்லப்படும் 6 இஞ்ச் பிட்சாவை மட்டும் வாங்கிக்கொள்வேன். அங்க வருடத்துக்கு ஒரு தடவை, கிட்டத்தட்ட 1 மாதம், 450 ரூபாய்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிட்சா சாப்பிடலாம் என்று ஒரு ஆஃபர் வரும். அப்போதும் நான் கொஞ்சம்தான் சாப்பிடுவேன். பசங்களையும் கூட்டிச் சென்றால் ஸ்டாஃப் பிட்சாதான் வாங்கித்தருவேன்.
செய்முறையும் நன்று. படங்களும் மிக அழகு. சாப்பிட வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது.
19.
chollukireen | 11:11 முப இல் மார்ச் 18, 2021
உங்களுடைய பிட்ஸா அநுபவமும் நன்றாக இருக்கிறது. இந்தப் பதிவை ரஸித்திருக்கிறீர்கள் அது போதும் எனக்கு. பொதுவாக ஜங்க் ஃபூட் என்ற பெயரும் இருக்கிறது அல்லவா! இந்தக் கிழவி க்கு பிடிக்குமாம் இப்படி நினைத்துவிட்டால் என்ன செய்வது. நான் நினைத்துக் கொண்டேன். மிக்க நன்றி. அன்புடன்
20.
ஸ்ரீராம் | 1:50 பிப இல் மார்ச் 17, 2021
சிறப்பு அம்மா. விரிவான செயல்முறை. ஆனால் பொறுமை வேண்டும் இவ்வளவையும் செய்வதற்கு! இத்தனை பொருள்களும் வீட்டிலும் இருக்க வேண்டும்!
21.
chollukireen | 11:21 முப இல் மார்ச் 18, 2021
எதுவுமே பழகிவிட்டால் ஸுலபம். நம் இஷ்டத்திற்கு மேலே போடும் வகைகளைக் குறைக்கலாம். பாலக்.கத்தரிக்காய் முதலானதுகூட மேலே சேர்த்துச் செய்வதையும் பார்த்தேன்.இந்தியாவில் பச்சைமிள. காய்,பனீர்துண்டுகள் மேலே சேர்த்தும், இந்திய ருசிப்படியும் செய்கிரார்கள் ரஸித்தற்கு மிகவும் நன்றி. அன்புடன்
22.
athiramiya | 5:12 பிப இல் மார்ச் 17, 2021
மிக அருமை காமாட்ஷி அம்மா. நாங்களும் இடைக்கிடை செய்வோம், இடைக்கிடை கடையில் வாங்குவோம்:))
23.
chollukireen | 11:23 முப இல் மார்ச் 18, 2021
மிக்க நன்றி அதிராமியா. அன்புடன்
24.
chollukireen | 11:29 முப இல் மார்ச் 18, 2021
விருப்பம் தெரிவித்த முத்துஸாமி இரா அவர்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
25.
Geetha Sambasivam | 4:56 முப இல் மார்ச் 22, 2021
ஏற்கெனவே வந்திருக்கேன் போல! மறுபடியும் இப்போவும் பார்த்தேன்; படிச்சேன். எளிய செய்முறை தான். பொருட்கள் வட மாநிலங்களில் கிடைப்பது போல் தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. சில இங்கே புரியவே புரியறதில்லை. ஆனாலும் இங்கேயும் இப்போது பரவலாக பிட்சா உண்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். நல்ல பதிவுக்கு நன்றி.
26.
chollukireen | 11:40 முப இல் மார்ச் 22, 2021
இதுகூட ரொம்ப வருஷத்திற்குமுன் போட்ட பதிவு. நீங்கள் மறுபடி வந்து பதிலெழுதியதற்கு ஸந்தோஷம். இங்கு மும்பையில் ஸாமான்கள் கிடைக்கிறது. வெளிநாட்டில் அவன் ஸௌகரியம் எல்லார் வீட்டிலும் இருக்கிறது. ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடும் வாரிசுகளால் இதெல்லாம் எனக்குத் தெரியவருகிறது.நன்றி. அன்புடன்