மாலாடு

ஓகஸ்ட் 23, 2012 at 2:42 பிப 19 பின்னூட்டங்கள்

இதுவும்  மிகவும்  சுலபமாக   நினைத்தால்  செய்யக்கூடிய

லட்டு.   வாயில் போட்டால்  கரையக்கூடியதும், ருசியானது

மானது. நீங்களும்  செய்து  பாருங்கள்.

மாலாடு

வேண்டியவைகள்

பொட்டுக்கடலை—-ஒருகப்

சர்க்கரை—1 கப்

பாதாம்—–    8

முந்திரி—8

பிஸ்தா—8

ஏலக்காய்—3

நெய்—-2 கரண்டிகளுக்கு  அதிகம்.

லாடுக்கான ஸாமான்கள். நெய் தவிர

செய்முறை

பொட்டுக்கடலை  அதாவது   தேங்காய் சட்னியில் கூட

வைத்து அரைப்போமே ஸாக்ஷாத் அதுவேதான்.

வாணலியிலோ,   மைக்ரோவேவில்  வைத்தோ  பொட்டுக்

கடலையை   சற்று  சூடாக்கி    மிக்ஸியில்  நன்றாக அறைத்து

சலித்து எடுத்துக் கொள்ளவும்.   சில ஸமயம்  பொட்டுக்கடலை

நமுத்துப் போயிருக்கலாம்.  அதற்காகவும்,வாஸனைக்காகவும்

சூடாக்க வேண்டும்.

பருப்பு வகைகளையும்   லேசாக  வறுத்து   மிக்ஸியில்

நறநறப்பாகப்   பொடிக்கவும்

உறித்த  ஏலக்காயுடன்   சர்க்கரையையும் நன்றாக மிக்ஸியில்

அறைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியின்  சிறிய   கன்டெய்னரில்   அறைத்தால்

யாவையையும் நைஸாகப் பொடி செய்ய   முடியும்

பொட்டுக் கடலைமாவுப்ளஸ் முந்திரி பாதாம்பொடி
அறைத்த சர்க்கரைப் பொடி

இப்போது பொடித்த   எல்லாவற்றையும்   ஒரு  அகன்ற

தாம்பாளத்திலோ  தட்டிலோ   சேர்த்துக்  கலக்கவும்.

இனிப்பு   குறைவாக  வேண்டியவர்கள்   சர்க்கரைப் பொடியைக்

குறைக்கவும்.

முந்திரி,  பாதாம்  வகைகளை   ஸவுகரியம் போல  சேர்க்கவும்.

எல்லாமே  அவசியம் என்று  நினைக்க வேண்டாம்.

வாணலியில்    பாதியளவு   நெய்யை விட்டு  மிதமான  தீயில்

நன்றாகச்   சூடாக்கவும்.

தாம்பாளத்தில்   கலவையை பாதியாக  பிரித்துக் கொள்ளவும்.

பாதிக் கலவையில்  நன்றாகக்  காய்ச்சிய  நெய்யைவிட்டு

அகலமான  கரண்டியினால் நன்றாகக்   கலக்கவும்.

சூடான நெய்யுடன்

நெய்யின்  சூட்டில்    சர்க்கரை இளகி   உருண்டை பிடிக்க

முடியும்.

அகலமான  தட்டில் கொட்டி  கலப்பதால்   மாவுக்கலவையை

அழுத்தமாக   சேர்த்து  கெட்டியான   உருண்டைகள் பிடிக்கும்

அளவிற்கு  சூடு  குறைவாகும்.

சற்று சூடாகவே  இருக்கும் போது   லட்டைப் பிடிக்கவும்.

மிகுதி நெய்யைச் சூடாக்கி   மீதமுள்ள  கலவையையும் இதே

முறையில்   லாடுகளாகப்   பிடிக்கவும்.

ஏலக்காய் மணத்துடன்   முந்திரி பாதாம்  ருசியுடன்

அமக்களமான   மாலாடு தயார்.

தமிழ்நாட்டின்   பல    பிரிவுகளில்   மாலாடு  ஒரு  முக்கியமான

அங்கம்  வகிக்கும்   பக்ஷணம்.

முந்திரி பாதாம்   பொடித்துப் போடுவதால்   லாடு பிடிக்க

எளிதாக  வரும்.

முதலில்   ஒரு கரண்டி   பொட்டுக் கடலையிலாவது  செய்து

பாருங்கள்.

நெய்  சற்றுக்  கூடக் குறைவாக சிலவு செய்ய வேண்டும்.

ருசித்து எழுதவும்.

மாலாடு

போட்டோக்களில்  சொல்லுகிறேன்  பெயர் போடவில்லை.

சுடசுடப் பண்ணிய   லாடுதான்.   சுவையுங்கள் என்று

சொல்லுகிறேன்.

Entry filed under: இனிப்பு வகைகள்.

வெஜிடபிள் பிட்ஸா பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு

19 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ranjani135  |  2:59 பிப இல் ஓகஸ்ட் 23, 2012

    என் சம்மந்தி அடிக்கடி இதைச் செய்து அனுப்புவார். நீங்கள் எழுதிய பின் எனக்கும் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நிச்சயம் செய்து பார்க்கிறேன். அடுத்த மாதம்தான் எங்களுக்கு ஸ்ரீ ஜெயந்தி. இதையும் செய்து விடுகிறேன்.

    மறுமொழி
    • 2. chollukireen  |  10:57 முப இல் ஓகஸ்ட் 24, 2012

      அடுத்த மாதம்தான் பண்டிகையா. நல்லதாகப்போயிற்று. இனி நீங்கள் சம்பந்திக்கும் செய்து கொடுக்கலாம். உன் பதில் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

      மறுமொழி
    • 3. chollukireen  |  11:11 முப இல் ஓகஸ்ட் 24, 2012

      பெங்களூர் பண்டிகை பக்ஷணமெல்லாம்
      பந்தலில் கட்டி ஏகத்திற்கும் விமரிசையாகக்
      கொண்டாடுவார்களே. அம்மாதிறி கொண்டாட்டம்தானா உங்களுடயதும். பதிவர் ஸந்திப்பிற்கு போய் வந்து விறிவாக
      ஸமாசாரங்கள் கொடுப்பீர்களென்று நம்புகிறேன். அன்புடன்

      மறுமொழி
      • 4. ranjani135  |  2:58 பிப இல் ஓகஸ்ட் 24, 2012

        நம்மூர் வழக்கப்படிதான் நாங்கள் கொண்டாடுவோம். பக்கத்தில் இந்த ஊர் காரர்கள் நீங்கள் சொன்னதுபோல கொண்டாடுவார்கள்.
        பதிவர் சந்திப்பிற்கு போய் விட்டு வந்து நிச்சயம் எழுதுகிறேன். பேசுகிறேன்.
        அன்புடன்,
        ரஞ்ஜனி

  • 5. chitrasundar5  |  5:39 பிப இல் ஓகஸ்ட் 23, 2012

    காமாட்சி அம்மா,

    எல்லா உருண்டைகளும் ஒன்றுபோலவே,பார்க்கவே அழகா இருக்கு.வறுத்த பொட்டுக்கடலை மாவு வாசனையுடன்,பருப்புகளும் கலந்து சத்தான, சுவையான லட்டுகள்.

    “முந்திரி பாதாம் பொடித்துப் போடுவதால் லாடு பிடிக்க எளிதாக வரும்” _ உபயோகமான தகவல்.

    “முதலில் ஒரு கரண்டி பொட்டுக் கடலையிலாவது செய்துபாருங்கள்”_ ஆறு பூந்தி லட்டுகள் மீதமுள்ளன. .காலியானதும் முதல் வேலை இதுதான். பகிர்வுக்கு நன்றி அம்மா.

    மறுமொழி
    • 6. chollukireen  |  11:03 முப இல் ஓகஸ்ட் 24, 2012

      லட்டின் சுவை எப்படியோ. உன் பதில் மிகவும் சுவையாக இருக்கிறது. பாராட்டுகள்
      எழுதுவதற்கு உற்சாகத்தைத் தருகிறது.இந்த வழி தொடரட்டும். லாடு லட்டு லட்டாக வந்துள்ளது. அன்புடன்

      மறுமொழி
  • 7. திண்டுக்கல் தனபாலன்  |  10:54 முப இல் ஓகஸ்ட் 24, 2012

    எளிதாக இருக்கிறது… விளக்கம் அருமை…
    வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி…

    தொடர வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 8. chollukireen  |  5:23 முப இல் ஓகஸ்ட் 25, 2012

      தொடர்ந்து கமெண்ட் எழுதுவதற்கு தனிப்பட்ட முறையில் நன்றி என்பதைவிட மகிழ்ச்சி என்ற பதமே மிகவும் ஏற்றதாக இருக்கும். மிக்க மகிழ்ச்சி.
      உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன். பிரமிப்பாக இருந்தது. தெறியப் படுத்தலாம் என்று பார்த்தால் இன்னும் ஏதேதோ எழுதி அனுப்ப இருக்கிறது. அதாவது கமெண்ட் எழுதுவதற்கு. நிதானமாக புறிந்து கொண்டு எழுதுகிறேன். பதிவர் ஸந்திப்பு எல்லாம்
      எழுதுவீர்களென்று நினைக்கிறேன். அன்புடன்

      மறுமொழி
    • 9. chollukireen  |  5:46 முப இல் ஓகஸ்ட் 25, 2012

      வீட்டிலே அவர்கள் குறித்துக் கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி

      மறுமொழி
  • 10. Dr.M.K.Muruganandan  |  3:16 பிப இல் ஓகஸ்ட் 24, 2012

    சுவையோ சுவை!!!

    மறுமொழி
    • 11. chollukireen  |  5:33 முப இல் ஓகஸ்ட் 25, 2012

      நெய் அதிகம். மிதமாகச் சாப்பிடுங்கள் என்று ஒரு வரி
      சேர்த்து எழுதச் சொல்வீர்களென்று நினைத்தேன்.சுவையோ சுவை என்று டாக்டர் முருகானந்தம் அவர்களின் அத்தாட்சியைப் பெற்ற
      மாலாடு என்றும் ஒரு வரி சேர்த்தாலும் நன்றாக
      இருக்கும்என்று இப்போது நினைக்கிறேன். மிக்க ஸந்தோஷம் . அன்புடன்

      மறுமொழி
  • 12. srinivasan  |  6:40 பிப இல் ஓகஸ்ட் 24, 2012

    Ms.Kamatchi’s narrative style of the recipe is so interesting, not to say the recipe itself is any less interesting!

    மறுமொழி
    • 13. chollukireen  |  5:55 முப இல் ஓகஸ்ட் 25, 2012

      உங்களின் மனமார்ந்த பாராட்டுதல்கள் ஸொந்த மகனின் பாராட்டுகள்போல மனதை நெகிழ வைத்தது.
      அன்பிற்கு அன்பே பரிசு. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். அன்புடனும் ஆசிகளுடனும்
      சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 14. rama blasubramaniam  |  4:21 முப இல் ஓகஸ்ட் 25, 2012

    ungal blogkku suscribe seyya virumbugiren…nanri

    மறுமொழி
    • 15. chollukireen  |  5:42 முப இல் ஓகஸ்ட் 25, 2012

      ரொம்பவே ஸந்தோஷமாயிருக்கு ரமா. ஸஸ்க்ரைப் பண்ணு. அடிக்கடி பின்னூட்டங்கள் எழுது. உன்னைப்
      பற்றியும் எழுது. தெறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன் அன்புடன்

      மறுமொழி
  • 16. akila  |  2:39 பிப இல் செப்ரெம்பர் 18, 2012

    mami namaskaram. aval vikatan 25.09.12 ithazh parthu ungal valaipathivu parthu vanthen. Realy interesting and helpfull. Ivlo naal theriyama pochenu feel pannen. Inimel ithai nangu use panni kolven. mikka nandri

    மறுமொழி
    • 17. chollukireen  |  10:44 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      அவள் விகடன் உங்களை எல்லாம் எனக்கு வேண்டியவர்களாகப் பண்ணி இருக்கிறது. மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வந்து கருத்தைத் தெறிவியுங்கள். அகிலா உங்கள் யாவருக்கும் என் ஆசிகள். அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 18. Mrs.sivasankari muthukrishnan  |  4:44 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

    dear grandma… iam soooo happy to see your blog. ur words will help me in many ways… cooking is very new to me and iam sure i ll learn a lot from u. thanks a lot …

    மறுமொழி
  • 19. chollukireen  |  7:23 முப இல் ஒக்ரோபர் 18, 2014

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    இந்த மாலாடுவும் 2012 இல் எழுதியதுதான். தீபாவளியையொட்டி இதுவும் ரி ப்ளாக் செய்துள்ளேன்.
    ஸுலபமானது. எதையாவது எழுதிப் பழக்கம். இதையாவது போடுவோம் என்று இந்தப்பதிவு. யாருக்காகவாவது உபயோகப்பட்டால் போதும். ருசியுங்கள். வாழ்த்துகளுடனும்,
    அன்புடனும் சொல்லுகிறேன்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஓகஸ்ட் 2012
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,908 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: