பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு
ஓகஸ்ட் 26, 2012 at 7:37 முப 17 பின்னூட்டங்கள்
இது 5 நட்சத்திர ஹோட்டலில் செய்யும் தமிழ் நாட்டுக் குழம்பு.
நானும் எழுதுகிறேன். நீங்களும் செய்யுங்கள்.ருசிப்போமா.
வேண்டியவைகள்.
பூண்டு—100 கிராம். தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்
தக்காளி—2 அல்லது 3
கடுகு–அரை டீஸ்பூன்
வெந்தயம்—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
வற்றல்மிளகாய்—2 இவைகள் எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.
வேண்டிய பொடிகள்
தனி மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—-4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
புளி—1 பெறிய நெல்லிக்காயளவு.
ருசிக்கு உப்பு
உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே
இருக்கலாம்
1 மேலே தூவ சிறிது கறிவேப்பிலை பாக்கி வைத்து விட்டு சிறிது
எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து வைக்கவும்.
2 புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.கறைத்து சாரெடுக்கவும்.
3 சின்ன வெங்காயத்தை உறித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில்
போட்டு சுற்றி எடுக்கவும்.
4 தக்காளிப் பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. குழம்புப் பாத்திரத்தை காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.
6 எண்ணெய் காய்ந்ததும் கடுகு மிளகாயைப் போட்டு, கடுகு வெடித்ததும்
பருப்புகள் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து, வெங்காயம், பூண்டு
சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
7 தக்காளியைச் சேர்த்து வதக்கி மிளகாய்,தனியா, மஞ்சள்பொடி
வகையைச் சேர்த்துப் பிரட்டி புளி ஜலம், உப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விடவும்.
பூண்டு வெந்து , பொடி வாஸனைகள் அடங்கி, குழம்பு திக்காக வரும்
பொழுது கறிவேப்பிலை பொடித்ததைச் சேர்க்கவும்.
குழம்பு நீர்க்க இருக்கும் போலிருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை
தண்ணீரில்க் கரைத்து சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
கமகமவென்று குழம்பு தயார்.மிகுந்த கறிவேப்பிலையைத் தூவவும்
சாதத்துடன் சாப்பிடவும், மற்றும் வேண்டியவைகளுடன் சாப்பிடவும்
ருசியான குழம்பு தயார்.
வேண்டுமானால் துளி வெல்லம் போடலாம்.
ருசித்து பார்த்து எழுதுங்கள்.
முருங்கைக்காய் வேறு கூட இருக்கிறது. அதையும் போட்டு ருசிக்கலாம்.
Entry filed under: குழம்பு வகைகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
ஸ்ரீராம் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
chitrasundar5 | 7:01 பிப இல் ஓகஸ்ட் 26, 2012
காமாட்சிமா,
“உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே”_அதுதான் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஸ்டைல் பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு வாசனை இங்குவரை வருகிறது போலும்.குழம்பு சூப்பரா இருக்கு. அன்புடன் சித்ரா.
2.
chollukireen | 6:34 முப இல் ஓகஸ்ட் 27, 2012
நன்றி சித்ரா. பச்சை கறிவேப்பிலை பூண்டு இவை இரண்டும் ருசியோடுகூட ஆரோக்கியத்தையும் உடலுக்கு கொடுக்கும். பசியை உண்டாக்கும். சாப்பிடும்போதே இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிட வைக்கும். வாஸனை பிடித்தாகி விட்டது.
தானே சாப்பிடத் தோன்றும். அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 12:50 முப இல் ஓகஸ்ட் 28, 2012
நல்லா இருக்கே…
விளக்கமாக கொடுத்துள்ளீர்கள்… மிக்க நன்றி…
4.
chollukireen | 1:19 பிப இல் ஓகஸ்ட் 28, 2012
தொடர்ந்து பாராட்டும் உங்களுக்குதான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். அன்புடன்
5.
Mahi | 4:23 முப இல் செப்ரெம்பர் 5, 2012
கடைசி படம் அழகா இருக்குமா! சூப்பர் குழம்பு!
6.
பிரபுவின் | 5:46 முப இல் செப்ரெம்பர் 5, 2012
ஆரோக்கியமான சமையல்.நன்றி அம்மா.
7.
darshini | 10:42 முப இல் செப்ரெம்பர் 12, 2012
பாட்டிமா,
நேற்று பூண்டு கருவேப்பில்லை குழம்பு செய்தேன் . நாங்கள் இரண்டு பேர் தான்
வீட்டில் இருக்கிறோமே . மறு நாளைக்கும் வைத்து கொள்ளலாம் என்று நிறைய செய்தேன் .
ஆனால் பாருங்கள் நேற்று இரவே காலி ஆகி விட்டது . நல்ல ருசி … என் தங்கை சொல்கிறாள் இனி அவர்கள் செய்துள்ள அனைத்தையும் ஆபீசில் பார்த்து மனம் செயஞ்சிடு வந்து சமைகனு 🙂 சமையல் தெரியாத நான் செய்ததே இவ்ளவு
நன்றாக இருந்தால் நீங்கள் செய்தது எப்படி இருக்கும் என்று நெனைக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது பாட்டிமா ..
ஆனால் சாப்பிட தான் குடுப்பினை இல்லை…
உங்கள் பேத்தி
தர்ஷினி
8.
darshini | 10:47 முப இல் செப்ரெம்பர் 12, 2012
பாட்டிமா ,
நாங்கள் அதிகம் காய் கறிகள் சேர்த்தி கொள்வது இல்லை …
எங்களை போல் கம்ப்யூட்டர் துரெயில் இருக்கும் பெண்கள் ஆபீஸ் முடித்து போய்
சமைப்பது என்பதே பெரிய வேலையாக உள்ளது .. சுலபமாகவும், கை கறிகள் சேர்த்து செய்ய கூடிய நல்ல துரித உணவு வைகளை எங்களை போன்றவர்கள் ஈஸ்ய செய்ய கூடிதையும் எழ்ளுதுங்கள் பாட்டிமா பிளஸ்
9.
chollukireen | 11:53 முப இல் செப்ரெம்பர் 15, 2012
தர்ஷினி உங்களிடம் என்ன வசதிகள் இருக்கு . அதைத் தெறிந்து கொண்டால் உனக்கு ஸ்பெஷலாகவே
மெயிலில் அனுப்பலாம். முன்புகூட கேட்டிருந்தேன். அருமைப் பேத்திகளா ஞாபகத்தோடு பாட்டியை மறக்காமல் எழுதறிங்களே. என்ன ஸந்தோஷம் தெறியுமா? ஆசிகளுடன் அன்பும் சொல்லுகிறேன்
10.
thooralauthor | 2:09 பிப இல் செப்ரெம்பர் 19, 2012
நன்று
11.
chollukireen | 11:48 முப இல் ஓகஸ்ட் 23, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மீள்பதிவு வரிசையில் இன்று 5 நக்ஷத்திர ஹோட்டல் குழம்பு வருகிறது. பிடித்தவர்களுக்கு கமகமதான். அன்படன்
12.
ஸ்ரீராம் | 11:53 முப இல் ஓகஸ்ட் 23, 2021
ஆஹா… சுவை நாக்கை எட்டுகிறது. நான் இதில் தக்காளி போடாமல், தனியா பொடி தனியாய்ப் போடாமல் செய்வதுண்டு.
13.
chollukireen | 11:57 முப இல் ஓகஸ்ட் 23, 2021
என்ன பூண்டு குழம்பா என்று கேள்வி வரும் என்று நினைத்தேன்.போனால்ப் போகிறது நம்ம காமாட்சி அம்மா என்று பதிலில்லை. நன்றி அன்புடன்
14.
ஸ்ரீராம் | 1:50 பிப இல் ஓகஸ்ட் 23, 2021
ஹா… ஹா.. ஹா… இன்று செய்தால்தானா? நாளை அல்லது அப்புறம் செய்தால் போகிறது. எங்கள் வீட்டின் ஃபேவரைட் குழம்பு இது!
15.
chollukireen | 11:50 முப இல் ஓகஸ்ட் 24, 2021
மறு பதிவுகள். ஸம்பந்தம் இருப்பதில்லை. பிளாகை சற்று உயிர்ப்புடன் இருக்க இதுவே முடிகிறது. பிடித்தமான குழம்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
16.
Revathi Narasimhan | 11:19 முப இல் ஓகஸ்ட் 24, 2021
மிக அருமையான ரெசிப்பி காமாக்ஷி மா.
கருவேப்பிலை,கொத்தமல்லி, சிறிது
அரிசி வறுத்து அரைத்து சேர்ப்பதுண்டு.
அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
மிக நன்றி.
17.
chollukireen | 11:55 முப இல் ஓகஸ்ட் 24, 2021
வறுத்து அரைத்தால் ருசி இன்னும் ஜோராகவே இருக்கும். இது ஹோட்டல் குறிப்பு. அதில் பொடிபோட்டே செய்தது எழுதியிருந்தார்கள். உங்கள் குறிப்பிற்கும் மிக்க ஸந்தோஷமும் நன்றியும். அன்புடன்