பழு பாகல் வதக்கல்
ஓகஸ்ட் 30, 2012 at 6:35 முப 28 பின்னூட்டங்கள்
இந்தக்காயை வெகு வருஷங்களுக்கு முன்பாகவே எனக்குத்
தெறியும். காட்மாண்டுவில் எங்கள் வீட்டிலேயே இந்தக்
கொடியை வேலிஓரத்தில் படரவிட்டு நிறைய காய்கள் காய்த்து
பறித்து சமைத்திருக்கிறோம். இதை நேபாலியில் மீட்டோ கரிலா
என்று சொல்வார்கள். அதாவது இனிமையான பாகற்காய் என்பது
பொருள்.
இதற்குச் ஸமமான தமிழ்ப் பெயரை பழுபாகல் என்பதை
பசுமை விகடன் மூலந்தான் தெறிந்து கொண்டேன். இங்கு
இந்தக் காயைப் பார்த்தவுடன் ஒரு ஸந்தோஷம்.இதே காயை
நியூஜெர்ஸியிலும் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.வடமாநிலங்களில்
எங்கும் கிடைக்கும்.
கசப்பு அதிகமில்லாமல் காய் சாப்பிட ருசி பாகற்காய் போல,
வாஸனையுடன் நன்றாக இருக்கும்.
எனக்கு ஒரு பதிவுபோட உற்ற துணையாய் பரிச்சயமான ஒரு
காய் கிடைத்தது. இதை எல்லா விதமாகவும் சமைக்கலாம்.
நான் ஸிம்பிளாக வதக்கினேன். வெங்காயம், பூண்டு, இஞ்சி
என எது பிடிக்குமோ அதைக் கூட சேர்த்து சமைக்கலாம்.
பாருங்கள். செய்யுங்கள்.
வேண்டியவைகள்.
பழு பாகற்காய்—-கால்கிலோ
மிளகாய்ப்பொடி—அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி—-கால்டீஸ்பூன்
ருசிக்கு–உப்பு
அரை டீஸ்பூன்—மாங்காய்ப் பொடி.
எண்ணெய்—3 டேபிள்ஸ்ப்பூன்
கடுகு, பெருங்காயம்.
செய்முறை.
காயை அலம்பி மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
விதைகள் முற்றியதாக இருந்தால், நீக்கினால்ப் போதுமானது.
தோல் சீவுவது போன்ற வேலைகளில்லை.
நறுக்கின துண்டங்களை வடிக்கட்டி, உப்பு,மஞ்சள், காரம்,புளிப்பு
சேர்த்துப் பிசறி சற்று நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து
கடுகைத் தாளித்து ஊறின காயைப் போட்டு வதக்கவும்.
அடிக்கடிசட்டுவத்தால் பிரட்டிவிட்டு மூடித்திறந்து
வதக்கவும்.
மைக்ரோவேவ் முறையில் வதக்கினாலும் எண்ணெய்
குறைவாக சிலவாகும்.
உங்கள் ரஸனைக்கேற்ப உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கினாலும்
நன்றாக இருக்கும்.
பல விதங்களில் சமைத்து ருசியுங்கள். அதிக கசப்பிருக்காது.
இதன் முற்றிய விதைகள் பருவல் என்ற காயின் விதைபோல் குண்டு,
குண்டாக இருக்கும். வதக்கலில் அதுவும் சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம்.
தேங்காய் சேர்த்து சமைத்தால் கூட்டு, குழம்பு,கறி எல்லாமே ருசியுடன் இருக்கும்.
Entry filed under: கறி வகைகள்.
28 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 6:43 முப இல் ஓகஸ்ட் 30, 2012
அன்பு காமாட்சி அம்மா,
உடல்நலமில்லாமல் இருந்ததால் சென்னை பதிவர் திருவிழா பற்றி உடனே எழுத முடியவில்லை. இப்போது தான் எழுதினேன். இதோ இணைப்பு:
http://ranjaninarayanan.wordpress.com/2012/08/30/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
2.
chollukireen | 5:27 முப இல் செப்ரெம்பர் 1, 2012
பதிவர் திருவிழாபற்றி எழுதினது படிக்க ஸந்தோஷமாக இருந்தது.
3.
திண்டுக்கல் தனபாலன் | 6:53 முப இல் ஓகஸ்ட் 30, 2012
எங்கள் ஊரில் அதிகம் கிடைப்பதில்லை… இருந்தாலும் வீட்டில் செய்முறையை குறித்துக் கொண்டார்கள்… நன்றி…
4.
ANGELIN | 1:28 பிப இல் ஓகஸ்ட் 30, 2012
இந்த பழு பாகலை இங்கே இந்திய மார்க்கட்டில் பார்த்திருக்கேன் ..
ஏதோ ஒரு காய் என்று இதுவரைக்கும் வாங்கியதே இல்லை ..
இனி சமைத்து விடுவேன் .படங்களுடன் போடும்போது நன்கு தெரிகிறது .ரெசிப்பி பகிர்வுக்கு நன்றிம்மா
5.
chollukireen | 6:25 முப இல் ஓகஸ்ட் 31, 2012
உன்பதில் பார்த்து ஸந்தோஷம். ஸரி இந்தக் காயை யாராவது பார்த்தேன் என்றாவது சொல்வார்களா என்று ஒரு யோசனை மனதில்.
அது நிவர்த்தியாகி விட்டது. யாருக்காவது உதவும். அடிக்கடி கமென்டுடன் வா. அன்புடன்
6.
chollukireen | 6:10 முப இல் ஓகஸ்ட் 31, 2012
மிகவும் நன்றி. எப்பொழுது கிடைக்கிறதோ அப்பொழுது வாங்கலாமே. பிரமாதமான பொருளில்லை.
7.
chitrasundar5 | 6:28 பிப இல் ஓகஸ்ட் 30, 2012
காமாட்சிமா,
பதிவைப் படிக்க ஆரம்பிக்கவே கொஞ்ச நேரம் ஆனது.’பழு பாகல்’ தலைப்பைப் படித்துவிட்டு ஏதோ புது காயாக இருக்கிறதே என நினைத்து, படத்தைப்பார்த்தால் மிதி பாகல்போல் தெரிந்தது.கடைசியில் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து இன்று கொத்துக்காய்(பிஞ்சு பலாக்காய்) சமையலா! என்று நானே ஒரு முடிவுக்கு வந்து படித்தால் இனிமையான பாகற்காய்னு இனிப்பா சொல்லிட்டிங்க.
புது காயாக இருக்கிறது.வதக்கல் நல்லாருக்கு.அப்படியே பாகற்காய் வதக்கல் போலவே உள்ளது.என்றைக்காவது கிடைத்து வாங்கினால் உங்க ஞாபகம்தான் வரும். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 6:36 முப இல் ஓகஸ்ட் 31, 2012
சித்ரா மிதிபாகல் பலாக்கொத்தாகி, பழுபாகலாகி
இனிப்பு பாகற்காயாக அறிந்து ரொம்பவே வேலை
கொடுத்து விட்டதல்லவா.சமைக்க சுலபமாகிவிடும். உணர்வுகளை பிரதிபலிக்கும்
கமென்ட். மகிழ்ச்சி. அன்புடன்
9.
chollukireen | 11:06 முப இல் ஓகஸ்ட் 31, 2012
இதை விரும்பிய ரஜ்ஜனி நாராயணனிற்கும் என்னுடைய நன்றியும் அன்பும்
10.
ranjani135 | 5:20 முப இல் செப்ரெம்பர் 3, 2012
அன்புள்ள காமாட்சி அம்மா,
உடனே இந்தப் பதிவைப் படிக்கவும்.
உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!
http://cybersimman.wordpress.com/2012/09/03/cooking-2/
11.
chollukireen | 9:47 முப இல் செப்ரெம்பர் 3, 2012
உன் வாயாலேயே அந்த விஷயத்தைச் சொல் எனக்கேட்டுக் கொண்டது எவ்வளவு ஸரியான விஷயம். நிஜமாக என்னுடைய ஒரு முன்னுரையை வைத்து இவ்வளவு ஸரியாக
எழுதியதைப் படித்தபோது மனது நெகிழ்ந்துவிட்டது. உன்னுடைய அம்மா என்று எழுதியதைப் படித்த போதும் உண்மையில் அம்மா என்ற உறவு உணர்ந்து
கிடைப்பதுதான். அதை நீ செய்திருக்கிறாய்.
என்று நினைத்துக் கொண்டேன்.
மிக்க ஸந்தோஷம் ரஜ்ஜனி. நன்றியுடனும்
அன்புடனும் சொல்லுகிறேன். நீஉன்னுடைய போன் மூலம் தொடர்பு கொண்டு அளவளாவியதற்கு. அன்பு தொடரட்டும்.
12.
rathnavelnatarajan | 4:00 பிப இல் செப்ரெம்பர் 3, 2012
உங்களது அனுபவங்களைப் பகிர்வதற்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
13.
chollukireen | 6:09 முப இல் செப்ரெம்பர் 4, 2012
உங்கள் வரவு நல்வரவாகுக என்று வாழ்த்துகிறேன்.
இம்மாதிறி என் அனுபவங்களுக்கு மகிழ்ச்சி தெறிவிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அள்ளி
அள்ளிக் கொடுக்கும் ஆசிகள். அன்புடன் சொல்லுகிறேன்.
14.
ஸ்ரீராம் | 1:26 முப இல் செப்ரெம்பர் 4, 2012
முதல்முறை இந்தப் பக்கம் வருகிறேன். என்னுடைய பெயரிலேயே இருப்பது போல (!!) நான் சாப்பாட்டு ராமனும் கூட! இங்கிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது! ஒவ்வொரு கைக்கும் ஒவ்வொரு ருசி. அடிக்கடி வருகிறேன்! எனக்கொரு இலை தயாராக வைத்திருக்கவும்!
அறிமுகப் படுத்திய ரஞ்சனி மேடத்துக்கு நன்றி.
15.
chollukireen | 7:33 முப இல் செப்ரெம்பர் 5, 2012
வாங்கோ,வாங்கோ. வந்துகொண்டே இருங்கள். உங்களுக்குமட்டுமல்லாது இன்னும் எவ்வளவு பேரைக் கூட்டிவரமுடியுமோ அவ்வளவு பேரையும்
அழைத்து வாருங்கள். எல்லோருக்கும் நல் விருந்து
கொடுக்க தயாராக உள்ளேன். எல்லாவற்றையும் விட
உண்பதற்கும், உடுத்துவதற்கும்தானே வாழ்நாள்.
நோயற்று உண்டு வாழ கடவுள் எல்லோருக்கும்
அருள் புரியட்டும். ஆமாம். ரஞ்ஜனி மூலம்தான்
நம்முடைய புரிதலே ஆரம்பமாகிறது. மிக்க மகிழ்ச்சி. அன்புடனும், ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.
16.
chitrasundar5 | 3:42 பிப இல் செப்ரெம்பர் 4, 2012
காமாட்சி அம்மா,
58 வது திருமண நாள் இனிமையான நினைவுகளுடன் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.நீங்க மேலும் மேலும் பல திருமண நாள்களை இதே சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.அன்புடன் சித்ரா.(ரஞ்சனியின் பின்னூட்டத்திலிருந்து உங்க திருமண நாளைத் தெரிந்துகொண்டேன்)
17.
chollukireen | 7:22 முப இல் செப்ரெம்பர் 5, 2012
ரஞ்சனி முதல் முறையாக டெலிபோனில் தொடர்புகொண்டு ஒரு ஸந்தோஷமான செய்தியைத் தெறிவித்தார். அப்போது இந்தச் செய்தியைச் சொன்னேன். உன்னுடைய வாழ்த்துகள்
கிடைத்ததில் மிகவும் ஸந்தோஷம். ஸைபர்ஸிம்மன்
அவர்களின் பதிவில் ரஞ்ஜனி வேண்டுகோள் விடுத்ததில் சொல்லுகிறேனைப் பற்றி உணர்ந்து
எழுதியிருந்தார். மனதில் சொல்லமுடியாத
உணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
நன்றியும்,அன்பும் ரஜ்ஜனிக்கும்திரு , ஸைபர் ஸிம்ஹனுக்கும்தான் .நிறையபேர் பார்த்து
மெயில் அனுப்பியுள்ளார்கள். என் ஸந்தோஷத்தில்
பகிர்வு உங்கள் யாவருக்கும் தான். அன்புடன்
18.
Mahi | 4:20 முப இல் செப்ரெம்பர் 5, 2012
காமாட்சிம்மா, 58 வது திருமணநாள் வாழ்த்துக்கள். தேதி சரியாகத் தெரியலை, இருந்தாலும் என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு! 🙂
பழுபாகல் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா பார்ப்பது இதுதான் முதல் முறை..சிம்பிளாகவும் சுவையாகவும் இருக்கு. பகிர்வுக்கு நன்றிமா!
19.
chollukireen | 6:57 முப இல் செப்ரெம்பர் 5, 2012
மஹி வாவா.வரச்சே வாழ்த்துகளுடன் வந்திருக்கிறாய். ஸந்தோஷமம்மா. பழுபாகல் நீ கேள்விப்பட்டிருக்கிறாய். பார்க்கவும் பார்த்தாச்சு.
கிடைக்கும்போது வாங்கினால்ப் போச்சு. எனக்கும் ஏதாவ துஎழுதக் கிடைக்கிறது. அன்புடன்
20.
பிரபுவின் | 5:42 முப இல் செப்ரெம்பர் 5, 2012
நல்ல சமையல்.நன்றி அம்மா.
21.
chollukireen | 6:50 முப இல் செப்ரெம்பர் 5, 2012
அப்போ சாப்பிட எல்லோரும் வரலாம். நல்ல சமையல் செய்கிறேன்.
22.
Sheela | 10:40 முப இல் செப்ரெம்பர் 5, 2012
மாமி
நமஸ்காரம். மிஸ்டர். சிமொனின் பதிவை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது. எங்கள் எல்லோருக்கும் ரொம்பவும் பெருமை ஆகஉள்ளது. நீங்கள் இப்படியே நிறைய எழுத வேண்டுகிறோம். இன்னும் பலவற்றை பற்றியும் எழுதுங்கள்.
உங்கள் அன்னிவேர்சரியில் எங்கள் எல்லோரின் சார்பாக நமஸ்காரம். உங்களுடைய ஆசி எப்பொழுதும் வேண்டும்.
with regards
sheela
23.
chollukireen | 11:03 முப இல் செப்ரெம்பர் 5, 2012
ஆசிகள் ஷீலா. உங்கள் குடும்பத்தினரின்குறிப்பா உங்கள் மூவர்,லதா,லக்ஷ்மிசேர ஐவரின் ஸந்தோஷங்கள் எழுதினாலும், எழுதாவிட்டாலும் என் மனதில் பதிந்துபோன
ஒன்று. உன் பாராட்டுதலை அன்போடு வரவேற்கிறேன். பசங்களா நீங்கள் யாவரும் நல்ல ஸமயங்களில் மாமியிள் அன்பைப்
பகிர்ந்து கொள்கிறீர்கள். இதை நான் வரவேற்கிறேன். உன்கணவர்,ஸௌம்யாவிற்கு
என் ஆசிகள். அன்புடன்
24.
ranjani135 | 8:22 முப இல் செப்ரெம்பர் 8, 2012
அன்பு காமாட்சி அம்மா, உங்களுக்கு இன்னும் ஒரு நல்லா செய்தி. வரப்போகும் ‘அவள்’ விகடன் இதழில் நம் இருவரையும் பற்றி எழுதி இருக்கிறார்கள். நேற்று எனக்கு விகடன் அலுவலகத்திலிருந்து செய்தி வந்தது. அவசியம் வாங்கிப் படிக்கவும்.
நானும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்ஜனி
25.
chollukireen | 11:08 முப இல் செப்ரெம்பர் 8, 2012
அன்புள்ள ரஞ்ஜனி உன் நல்ல செய்தி படித்தேன். ஸந்தோஷமாயிருந்தது. ஆன் லைனில் ஆனந்தவிகடன் சந்தா செலுத்தியிருப்பதால் கொஞ்சம் சீக்கிரம் பார்க்க
லாம். இவ்விடம் கடைகளில் லேட்டாகத்தான் கிடைக்கும். நான் பல வருஷங்களாக ஆன் லைனில்தான் படிக்கிறேன்
.இதற்கும் உன்னோடு நான் வருகிறேன் போலும்.ஸந்தோஷமா, நன்றியா.இரண்டையும்
சேர்த்துச் சொல்லுகிறேன் உனக்கு.அன்புடன்
எல்லாம் சொல்லுகிறேன் உனக்கு.
26.
chollukireen | 11:25 முப இல் செப்ரெம்பர் 8, 2012
அன்புள்ள ரஞ்ஜனி உன் நல்ல செய்தி படிக்க ஸந்தோஷம். விகடனை நான் ஆன் லைன் மூலம் படிக்கிறேன். இவ்விடம் புத்தகங்கள் மிகவும் தாமதமாகத்தான் கிடைக்கும். எப்படியும் முயற்சி செய்கிறேன். உன்னோடுகூட நானும் எட்டிப்பார்க்கிறேனா. எல்லாவற்றிற்கும் சேர்த்து நன்றியும் ஸந்தோஷமும். ஜி.மெயிலில் எழுத நினைக்கிறேன். கைவரவில்லைன்னு ஒரு வார்த்தை சொல்வார்களே அம்மாதிறி நேரம்,நிச்சிந்தையாகக் கிடைக்கவில்லை. அன்புடன் அடுத்து எழுதுகிறேன்.
27.
angelin | 6:35 பிப இல் செப்ரெம்பர் 17, 2012
காமாட்சி அம்மா ..உங்க குறிப்பு பார்த்து பழு பாகல் வதக்க செய்திட்டேன் நேரமிருக்கும் போது வாங்க
28.
chollukireen | 10:12 முப இல் செப்ரெம்பர் 19, 2012
உடனே பாத்துட்டேன். சுருக்கவே போட்டுவிட்டதில் எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா?அன்புடன்