நன்றி தெறிவித்தல்.
செப்ரெம்பர் 10, 2012 at 1:28 பிப 19 பின்னூட்டங்கள்
அன்பார்ந்த சொல்லுகிறேனுடைய அன்பார்ந்த
அபிமானமுள்ள ஆதரவாளர்களுக்கு அன்பும், ஆசியும்
கலந்து, பெறியோர்களுக்கு வணக்கமும் கலந்துதெறிவித்து
இந்த சுருக்கமான என் ஸந்தோஷ வார்த்தைகளை
எழுதுகின்றேன்.
ஸெப்டம்பர் 2 ஆம் தேதி சொல்லுகிறேனைப் பற்றி
அறிமுகப்படுத்தி , பாராட்டியும், உள்ளதை உள்ளபடிச்
சொல்லி என்னை மிகவும் ஸந்தோஷத்தை அனுபவிக்கும்
பதிவாகப் பதிவிட்டு எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்
திரு ஸைபர்ஸிம்ஹன் அவர்கள்.
நம்முடைய வேர்ட்ப்ரஸ். டாட் காமின் பிரபல வலைப்
பதிவர். அவரைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது.
அவரிடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்தியது
திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள். குறுகிய கால
மாகத்தான் எங்கள் இருவருக்கும் எங்களின் வலைப்பூவின்
வாயிலாக பின்னூட்டங்களின் மூலம் நட்பு ஏற்பட்டது.
என் நல்ல அதிருஷ்டம் அவர் மூலமாக திரு .ஸிம்மன்
அவர்கள் என்னைப் பற்றி எழுதும்படியான வாய்ப்பைப்
பெற்றதற்கு நான் இப் பதிவு மூலம் அவர்களிருவருக்கும்
என்னுடைய நன்றியையும், அன்பையும் தெறிவித்துக்
கொள்கிறேன்.
விசேஷமாக பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்
திரு.ஸிம்ஹன் அவர்களே. எதுவும் நான் மிகைப்படுத்தவில்லை. என்னுடைய நன்றியை அன்புடன்
ஏற்றுக் கொள்ளுங்கள்.
திருமதி ரஞ்ஜனி உங்களுக்கும் இதையே சொல்லுகிறேன்.
திருமதி ரஞ்ஜனி நாராயணனும் நம்முடைய
வேர்ட்ப்ரஸ்டாட்காமின் பிரபலமான வலைப் பதிவர்.
என்னுடைய ஆதரவார்களே உங்களுக்கும்
ஸந்தோஷம்தான். எனக்குத் தெறியும். உங்கள் யாவருடனும்
இந்த வரைவு மூலம் என் ஸந்தோஷத்தைப் பகிர்ந்து
கொள்கிறேன். எல்லோருக்கும் அன்புடனும், ஆசிகளுடனும்
உங்கள் சொல்லுகிறேன்.
80 வயது பாட்டியின் வலைப்பதிவு.
கீழே லின்க் கொடுத்திருக்கிறேன்.
http://cybersimman.wordpress.com/2012/09/03/cooking-2/
Entry filed under: Uncategorized.
19 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வெங்கட் | 1:38 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
சிறப்பான பகிர்வும்மா. உங்களுடைய இடுகைகளை சில நாட்களாகத் தான் படிக்க ஆரம்பித்தேன். நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. இனி தொடர்ந்து வருவேன்….
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
2.
chollukireen | 1:48 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
நன்றி வெங்கட் அவர்களே. சுடச்சுட பின்னூட்டமிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து
வருகிறேன் என்று சொன்னதில் மிகவும் ஸந்தோஷம்.
வருக வருக என்று வரவேற்பேன். அன்புடன்
3.
ranjani135 | 1:53 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
அற்புதமான ஒரு நன்றி அறிவித்தல்! உங்களது தொடர்பு கிடைத்தது எப்போதோ யாரோ பெரியவர்கள் செய்த புண்ணியம்!
இதை தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். பல ஊர்களில் பல வெளிநாடுகளில் இருந்திருக்கிறீர்கள். அதைப் பற்றி எல்லாம் சின்ன சின்னப் பதிவுகளாக எழுதுங்கள்.
படிக்கக் காத்திருக்கிறோம் உங்கள் ரசிக ரசிகையர்கள்.
அன்புடன்,
ரஞ்ஜனி
4.
chollukireen | 2:04 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
என்ன ஒரு உற்சாகம். ஸந்தோஷம் உனக்குத்தான். சுடச்சுட என ஒருவருக்கு பதில் கொடுத்தேன். உன்னுடயது கமகமவென்று இருக்கிறது. சமையல் குறிப்பு செய்தால் இந்த வகைகள் மேலோங்க வேண்டும் இல்லையா? அதான் பின்னூட்டமும் அதே சாயலில். இப்படி நினைக்கத் தோன்றும் இல்லையா? நன்றி.அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 4:07 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
நானும் படித்தேன் அம்மா… தங்களின் பதிவுகளை படிக்கும் ஆவலுடன் தொடர்கிறேன்… நன்றி அம்மா…
6.
chollukireen | 10:41 முப இல் செப்ரெம்பர் 11, 2012
ஸந்தோஷம். உங்களின் தொடர் வரவை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்புடன் அம்மா
7.
chitrasundar5 | 6:07 பிப இல் செப்ரெம்பர் 10, 2012
காமாட்சிமா,
நன்றி நவிலல் சமையல் குறிப்புகளையேத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.சமையல் வலைப்பதிவு என்பதால் பின்னூட்டமும் சாப்பாட்டை நோக்கிப் போய்விட்டது. உங்களுடன் சேர்ந்து நாங்களும் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டோம். அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 10:51 முப இல் செப்ரெம்பர் 11, 2012
சமைத்துக் கொடுப்பதற்கு பக்கத்திலில்லை.
ஸந்தோஷத்தையாவது பகிர்ந்துகொள்ள வேண்டாமா? இது மனதில் தோன்றக்கூட
ஏனோ காலதாமதமாகிவிட்டது.இல்லையா?
உங்களுடைய ஸந்தோஷப் பகிர்விற்கு என் அளவில்லாத ஆசிகளும், அன்பும். அன்புடன்நீ விருந்தே கொடுத்துவிட்டாய்.நன்றி
அன்புடன்
9.
priya | 9:52 முப இல் செப்ரெம்பர் 11, 2012
அம்மா உங்க வலைப்பூவை அவள்விகடனில் வெளியிட்டு உங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா.
10.
chollukireen | 11:56 முப இல் செப்ரெம்பர் 11, 2012
அன்புள்ள ப்ரியா உன் வாழ்த்துக்களுக்கு என் நன்றி.இந்தப் பெறுமையான செய்தியை ரஞ்சனி நாராயணன் அவர்களும் கூறினார்கள்.
உங்கள் மூலமும் திரும்பக் கேட்பதற்கு மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது.உங்களுடைய அறிமுகமும் கிடைத்தது மிக்க ஸந்தோஷமாக இருக்கிறது.
விகடனை என்னுடைய விவரம் அறிந்த நாட்களிலிருந்து நான் படித்து ரஸித்ததுடன், என் காலத்து முதியவர்களுக்கு படித்துக் காட்டிய அனுபவமும் உண்டு.அன்புடன் சொல்லுகிறேன்.
11.
ranjani135 | 4:44 பிப இல் செப்ரெம்பர் 11, 2012
அன்புள்ள காமாட்சி அம்மா,
அவள் விகடன் பார்த்தீர்களா?
உங்களை எனக்குத் தெரியும் என்று எல்லோரிடமும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் – உங்களுடன் ஒட்டிக்கொண்டு கொஞ்சம் புகழ் பெறலாமே என்று!
பாராட்டுக்கள்!
அன்புடன்,
ரஞ்ஜனி
12.
chollukireen | 5:25 முப இல் செப்ரெம்பர் 12, 2012
அன்புள்ள ரஞ்சனி ஆசிகள். ஆன் லைனில் இன்னும் புதிய அவள் விகடன் பதிப்பு வெளி வரவில்லை. இங்கே கடைகளில் கேட்கச் சொல்லி இருக்கிறேன். எந்த முறையில் வந்திருக்கிறதென்பதை நீ சொல்லி தெறிந்து கொண்டாலும் ஸந்தோஷம்தான். நம்மால் வெளியில்போய் விசாரித்து வாங்கிவர முடியாது. யாருடன் ஒட்டிக்கொண்டாலும்
ஸ்வயம் மதிப்பு விஷயம் இருப்பவர்களுக்கு உன்னைப்போல இருப்பவர்களுக்கு புகழ் ஓடி வந்து கொண்டே இருக்கும். ஸரி.உன் பாராட்டுக்கு நன்றி. அவள் விகடன் எப்போது தரிசனம்
கொடுக்கிறதோ பார்க்கலாம். அன்புடன்
13.
tMrs.Mano Saminathan | 9:13 முப இல் செப்ரெம்பர் 12, 2012
உங்களைப்பற்றிய அறிமுகம் படித்தேன். மகிழ்ச்சியாயிருந்தது. பழைய குறிப்புகள், தெளிவான விளக்கங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன!சாதனைகளைத்தொடருங்கள்! சோர்வுற்று இருப்பவர்களு உங்களின் உற்சாகமான எழுத்து நல்லதொரு டானிக் தான்!!
14.
chollukireen | 9:51 முப இல் செப்ரெம்பர் 12, 2012
அன்புள்ள மனோஸ்வாமிநாதன் உங்கள் பின்னூட்டத்திற்கு எல்லாயில்லா மகிழ்ச்சி. ஒரு முறை ஓடிப்போய் உங்களை யாரெனப்பார்த்துவிட்டு பதிலெழுதுகிறேன்.
என் முயற்சி சாதனையோ, இல்லையோ எனக்கு நல்ல முறையில் பிறருடன் தொடர்பு கொள்ள,தெறிந்ததைப் பகிர்ந்துகொள்ள ஒரு வழிகாட்டி சாதனமாக இருந்து வருகிறது. உங்கள் பாராட்டுதலுக்கும், அறிமுகம் கிடைத்ததற்கும் ரொம்பவே ஸந்தோஷப் படுகிறேன். தொடர்ந்து ஸந்திக்க விரும்புகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
15.
tMrs.Mano Saminathan | 9:14 முப இல் செப்ரெம்பர் 12, 2012
உங்களின் 58 ஆவது திருமண நாளுக்கு என் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!
16.
chollukireen | 9:53 முப இல் செப்ரெம்பர் 12, 2012
ஸந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு ஆசீர்வாதங்களை அளிக்கிறேன். அன்புடன்
17.
Sheela | 10:41 முப இல் செப்ரெம்பர் 12, 2012
Mami,
Super. innum niraiya ezuthungo. We are all very happy (incl Soumya, Nandini). When Soumya came to know about your acclaims, she was very happy.
Neengal ippediye melum melu niraiya ezuthi engal ellorukkum asirvadhikka vendugiren.
But again my request , write about other things also. like your journey to various places, meeting many type of people.
Awaiting eagerly for your valuable words.
with regards
18.
chitrasundar5 | 12:35 முப இல் செப்ரெம்பர் 13, 2012
காமாட்சிமா,
அவள் விகடனில் உங்கள் வலைப்பதிவை வெளியிட்டிருக்காங்களா. சந்தோஷமாக உள்ளது.நானும் படிக்க வேண்டுமே.யாரையாவது அந்தப் பக்கத்தை வெளியிடச் சொல்லுங்கமா.
விகடனுடனான உங்களின் சிறு வயது தொடர்பு (பின்னூட்டமளித்தல் மூலம்)இன்னமும் தொடர்கிறது. மேலும்மேலும் எழுத இறைவனின் ஆசிகள் கிடைக்க வேண்டும்.அன்புடன் சித்ரா.
19.
chollukireen | 11:39 முப இல் செப்ரெம்பர் 15, 2012
தமிழின் மூத்த வலைப் பதிவர் என்ற தலைப்பில், போட்டோவுடன் போட்டிருக்கிறார்கள்.திரு. ஸைபர்ஸிம்ஹன் அவர்கள் எழுதினதின் சுருக்கம் என்று கொள்ளலாம். உன்னுடைய ஸந்தோஷத்திற்கு
என் நன்றி. நிறைய பேர்களுக்கு என்னையும் தெறிய ஒரு வாய்ப்பு. அன்புடன்