ஸொஜ்ஜி அப்பம்.
செப்ரெம்பர் 21, 2012 at 1:18 பிப 13 பின்னூட்டங்கள்
வீட்டில் எல்லோரும் வெளியூர் போயுள்ளனர். எதைச் செய்தாலும்
சாப்பிட மனிதர்கள் வேண்டுமே. பிள்ளையார் சதுர்த்திக்கு சற்று
மாறுதலாக வயதானவர்களுக்கு விரும்பிச் சாப்பிடும்படியாக,
ஸொஜ்ஜி அப்பம் செய்வோமென்று தோன்றியது. முதல் நாளே
ஆசாரமாக அதான் மடியாகக் கொஞ்சம் செய்தேன். உங்கள்
யாவரிடமும் பகிர்ந்து கொள்ளாத வஸ்து கிடையாது.
அதற்காகவே முன்னாடி செய்தேன் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள். சுலபம்தான்
வேண்டியவைகள்.
நல்ல ரவை—-1கப்
மைதா—ஒன்றரை கப்
பாகு வெல்லத்தூள்—1கப். கொஞ்சம் அதிகம் போடலாம்.
மெல்லியதாகத் துருவிய தேங்காய்த் துருவல்-3டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி—-சிறிது
அப்பம் போட்டெடுக்கத் தேவையான –எண்ணெய்
இருந்தால் வெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
நைஸான அரிசிமாவு கொஞ்சம். ஒட்டாமல் இட உதவும்.
செய்முறை
1 ரவையை துளி நெய்விட்டுப் பிசறி மைக்ரோவேவில்
ஒவ்வொரு நிமிஷமாகக் கிளறிவிட்டு 3நிமிஷங்கள் வைத்து
எடுக்கவும். அல்லது வாணலியில் வறுத்தெடுக்கவும்.
2 வெல்லத்தை ஒருகப் தண்ணீர் விட்டு நிதான தீயில் சூடாக்கி
வெல்லம் கறைந்ததும் வடிக்கட்டவும்.
3 வடிக்கட்டிய வெல்லக் கறைசலை நல்ல தீயில் சலசல என்று
கொதிக்க வைக்கவும். தேங்காயைச் சேர்க்கவும்.
4 தீயை நிதானப் படுத்தி வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும்.
5 இரண்டொரு நிமிஷம் மூடிவைத்துப் பின் கிளறவும்.
ரவை நன்றாக வெந்து உப்புமா மாதிறி ஆகும்.
6 பந்துபோல கட்டிஇல்லாமல் கிளறி ,ஈரப்பசையுடன் கையில்
ஒட்டாது வரும்படியான பதத்தில் இறக்கி ஏலப்பொடி சேர்த்து
மூடி வைக்கவும்.
7 அடுத்து மைதாவுடன் துளி, உப்பும், வெண்ணெயும் சேர்த்து
திட்டமாகத் தண்ணீர் விட்டு கெட்டியாக
நன்றாகப் பிசைந்து ஒரு அரைமணி நேரம் ஊரவிடவும்.
இதை முன்னதாகவும் செய்யலாம்.
8 மாவைச் சமமான உருண்டைகளாகப் பிறித்து உருட்டிக்
கொள்ளவும்.
9 ரவை பூரணத்தையும் மாவைப் பிறித்து உருட்டிய மாதிறி
உருட்டிக் கொள்ளவும்.
10 மாவை, அரிசிமாவைத் தொட்டுக்கொண்டு சிறு அப்பளமாக
இட்டு, நடுவில் ரவை பூரணத்தை வில்லையாகத் தட்டிவைத்து
அப்பளத்தின் ஓர விளிம்பைக் கொண்டு மூடவும். திரும்பவும்
11 மேல் மாவின் உதவியால் பூரி மாதிறி இட்டுக் கொள்ளவும்.
இப்படியே எல்லாவற்றையும் இட்டுக் கொண்டு,
12 வாணலியில் எண்ணெயைக்காயவைத்து ஒவ்வொன்றாக
எல்லாவற்றையும் திருப்பிவிட்டு நன்றாகப் பொறித்தெடுக்கவும்
டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெய் நீக்கி உபயோகிக்கவும்.
சுடச்சுட நன்றாக இருக்கும். ஆறினால் மெத்தென்று ம்ருதுவாக
ஆகி விடும். சற்று எண்ணெய் குடிக்கும் இனிப்புதான் இது.
ரவை ஸொஜ்ஜிமாதிறி பூரணம் செய்வதால் ஸொஜ்ஜி அப்பம்
என்கிற பேர் போல இருக்கிறது.
காமிரா வேலை செய்யவில்லை. படமில்லாத பக்குவம் தான்.
இடுபோளி கோதுமை மாவில். மாதிரிதான். அதைப் போல
சின்ன சைஸில் இதை தயாரித்தால் போதும்.
வேண்டியதைச் செய்து கொண்டு மாவு ,பூரணம்
அதிகமிருந்தால் போளியாகவும் செய்யலாம்.
என்னுடைய பதிவு இடுபோளி கோதுமை மாவில் பார்த்தால்
இடும் விதம் முதலானது தெறியவரும். அதையும் பார்த்த
மாதிறி இருக்கும். கூடக் கொஞ்சம் படிக்கக் கொடுக்கிறேன்.
எல்லோருக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு. ரவை மெல்லிய ரகமாக இருந்தால் தண்ணீரைக்
குறைக்கவும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
13 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
gayathri gajendran | 3:04 பிப இல் செப்ரெம்பர் 21, 2012
super taste.
2.
chollukireen | 1:03 பிப இல் செப்ரெம்பர் 22, 2012
நன்றி காயத்ரி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 3:21 முப இல் செப்ரெம்பர் 22, 2012
இது போல் செய்ததில்லை… செய்து பார்ப்போம்… நன்றி அம்மா…
4.
chollukireen | 1:05 பிப இல் செப்ரெம்பர் 22, 2012
பழைமையான தின் பண்டம்தான். ருசியானது. அன்புடன்
5.
chitrasundar5 | 8:08 பிப இல் செப்ரெம்பர் 22, 2012
காமாட்சிமா,
படம் இல்லாட்டியும் விளக்கமாக இருப்பதால் செய்துவிடலாம்.வேலை அதிகமா இருக்குமோ என்று நினைத்தால் நீங்க தனியாளா இருந்து செஞ்சிருக்கீங்க. தீபாவளிக்கு செய்யலாம் என நினைக்கிறேன். அருமையான ஸ்வீட்டுக்கு நன்றிமா.அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 11:56 முப இல் செப்ரெம்பர் 23, 2012
நினைத்தால் செய்துவிடவேணும்னு நினைக்கிற பார்ட்டிநான். கொஞ்சமா வேறு செய்வதால் தள்ளிக்கொண்டு போகிறது. பாதி ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்து இன்று பேத்திகளுக்குச் செய்தேன். உன்னுடைய பாசமான பதிலுக்கு ஸந்தோஷம். அன்புடன்
7.
priyaram | 11:01 முப இல் செப்ரெம்பர் 23, 2012
சக்கரை வைத்து இந்த பூரி செய்வோம் எங்க வீட்டில்… ரொம்ப நல்லா இருக்கு காமாட்சி அம்மா…
8.
chollukireen | 12:00 பிப இல் செப்ரெம்பர் 23, 2012
ப்ரியா ரொம்பவே மகிழ்ச்சி. சர்க்கரை கலந்த பூரணமும் வைத்து செய்வதுண்டு. வந்துண்டே இரு. அடிக்கடி பின்னூட்டமூலம் பேசலாமே. அன்புடனும் ஆசிகளுடனும் சொல்லுகிறேன்.
9.
Ambika | 6:19 பிப இல் செப்ரெம்பர் 26, 2012
இலட்சக்கெட்டை கீரை recipes kedaikuma?
10.
chollukireen | 12:04 பிப இல் ஒக்ரோபர் 1, 2012
இந்தக்கீரையைப் பற்றி அதிகம் தெறியாது. சின்ன வயதில் இந்தக்கீரையை பருப்புசிலி மாதிறி செய்வார்கள். அகலமான பெறிய இலைகள் என்று ஞாபகம். வாய்வுக் கோளாற்றிற்கு நல்லதென்று
கேள்விப்பட்டதாக ஞாபகம். உனக்கு விவரம் தெறியும் போது எனக்கும் தெறிவி. கிராமப் பழக்கம் இருந்தால்தான் கீரையையே தெறிந்து கொள்ள முடியும். நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.
11.
akila seetharaman, vellore | 8:52 முப இல் செப்ரெம்பர் 28, 2012
mami namaskaram. engal veetilum sarkarayil seyvom. athai vida vellam nallathu illaya! ithai seythu parkanum. romba nandri.
ungaludan ithai mattum than pagirnthu kolla mudiyuma? vayathil muthirntha, anubavam ullavar. atharkum mele niraya contacts ullavar athalal veru alosanaigalum ketkalam pol thondrugirathu. neengal enna ninaikirirgal mami. thappaga ninaika mattirgal endral en 2 akkavin 2 pillaigaluku, ungal contacts moolam varan amayuma parkalam endru thondrugirathu. neengal ok sonnal avargalai patriya details sollugiren. athai ithe blogspotil anupalama enbathayum theriya paduthavum. thayavu seythu thappaga ninaika vendam. kandippaga ungal vayathum, contactsum than ungalidam appadi ketka thondrugirathu. aasiyudan akila
12.
chollukireen | 12:32 பிப இல் ஒக்ரோபர் 1, 2012
அன்புள்ள அகிலா ஆசிகள். உன் கடிதம் ஸந்தோஷம். நான் 12 வருஷங்களாக வெளி நாட்டிலும், அதற்கு முன்னர் நேபாலிலுமாக தொண்ணூரு பர்ஸென்ட் இந்தியாவிற்கு வெளியிலுமாகவே வாழ்க்கை ஓடிவிட்டது. தற் சமயம் எங்கள் வீட்டுப் பெறியவர்
சவுகரியத்துக்காக மும்பையில் இருக்கிறோம்.
எங்கள் வீட்டுச் ஸம்பந்தமெல்லாம் நேஷனல்
இன்டிகிரேஷன்தான். அதிகம் நீ நினைத்தபடி உறவு,
ஸம்பந்தங்கள் கிடையாது. இப்போது யாவும் விளம்பரங்கள் மூலமே இந்தியாவில் நடக்கிறது.
உனக்கு எந்த விதத்தில் நான் உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறாய்?உன் அன்பு கடிதத்திற்கு மிகவும்
நன்றி. அடிக்கடி என்னுடன் தொடர்பு கொள். ஸந்தோஷ மாக இருக்கும்.என்றும் அன்புடன் மாமி
G
13.
akila, vellore | 8:15 முப இல் ஒக்ரோபர் 8, 2012
namaskaram mami. ungaloda blogspot la ella page um padithen mami. ennai pola ellarum padipargale, athil ethavathu amaigindratha unga contacts mulam nu than mami ungalidam pagirnthu kondan. Matrimonial sites ellam verum eye wash pol ullathu. nangalum athan mulam 4 varuzhamaga thedindu irukom. Age, community amaithal, merkondu jathagam vangi parkalam endral, 1500, 2000 pay panna vendum engindrargal.. porunthi irunthu varan amaithal parava illai. verumane ethanai jathagathuku pay pandrathu..Appadi vangi anupinalum pennathil irunthu oru replyum varuvathillai. Atahan therinthavar, arinthavar moolam parkalam endru thondriyathu…nangalum vellore. vadama than. Neengalum thirupathur endru ezhuthi irunthirgalae. Athan parthen try pannalam endru………. ok. god is there. parkalam