வெங்காய ஓலன்
செப்ரெம்பர் 27, 2012 at 6:26 முப 9 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக ஓலன் தேங்காய்ப்பால் சேர்த்துச்
செய்வது தெறியும். வெங்காயமும் சேர்த்துச் செய்யும்
புது முறையைச் சொல்லக் கேட்டேன். இது என்ன நாமே
மாற்றி சொல்வது போல இருக்குமே என்ற எண்ணம் வேறு
குறுக்கே. தேங்காய் உடைத்தது இருந்தது.
அதைத் துருவிக் கொடுக்கச் சொல்லி, சிறிது ஜலம் சேர்த்து
அறைத்து ஒட்டப் பிழிந்து எடுத்தேன்.
திரும்பவும் சிறிது வென்னீர் விட்டு அறைத்துப் பிழிந்து
பெறிய கண்ணுள்ள சல்லடையில் வடிக்கட்டினேன்.
ஃப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு மறுநாள் பூசணிக்காயும்,
காராமணிக்காயும் வாங்கி பண்ணினேன் அந்த வெங்காய
ஓலனை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தெறியாது.
ருசிகள்பலவிதம்,அதிலே இது ஒரு விதமாக இருக்கட்டுமே
என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?
வேண்டியவைகள்
பெறியவெங்காயம்—-2
ஸாம்பார் வெங்காயம்—7அல்லது8
வெள்ளை பூசணிக்காய்—கால்கிலோ
காராமணிக்காய்—கால்கிலோ. குறைவாகவும் இருக்கலாம்.
பச்சைமிளகாய்—3அல்லது4
இஞ்சி—ஒரு துண்டு
ருசிக்கு உப்பு
தேங்காய்ப்பால்—–பெறிய தேங்காயானால் ஒரு மூடி போதும்.
ஒண்ணரைகப் பாலாவது வேண்டும்.
தேங்காயெண்ணெய்–ஒரு டீஸ்பூன்
வாஸனைக்கு கறிவேப்பிலை.
வெங்காயத்தைத் தோல் உறித்து நறுக்கிக் கொள்ளவும்.
பூசணிக்காயை சுத்தப்படுத்தித் சற்று திட்டமான துண்டுகளாக
நறுக்கிக் கொண்டு காராமணிக்காயையும் ,நீளமான
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய்களை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
இஞ்ஜியை நசுக்கிக் கொள்ளவும்.
செய்முறை
செய்வது மிகவும் சுலபம். கொஞ்சம் தண்ணீருடன் சிறிது
தேங்காய்ப்பாலைச் சேர்த்து அதில் வெங்காயமுதலான
எல்லாவற்றையும் சேர்த்து வேகவைக்கவும்.மிளகாய் உட்பட.
கிளறிக்கொடுத்து நன்றாக வேகவிடவும். உப்பு ,இஞ்சியைச்
சேர்க்கவும். நன்றாகக் கிளறி தேங்காய்ப்பாலைச் சேர்த்து
ஒரு கொதிவிட்டு இறக்கி , கறிவேப்பிலை,
தேங்காயெண்ணையைச் சேர்த்துக் கலக்கவும்.
வெங்காய,தேங்காய் ருசியுடன் ஓலன் தயார்.
தேங்காய்ப்பாலில் தண்ணீர் ஒரு வேளை அதிகமாகிவிட்டால்
இரண்டாம் பேருக்குத் தெறியாமல் ஒருஸ்பூன் பாலில் துளி
அரிசிமாவைக் கறைத்து கொதிக்கும் போதே
கலந்துஇறக்கவும்.
சாதத்தோடு கலந்து சாப்பிடவும்,தோசை,ரொட்டியுடன்
இணைத்துச் சாப்பிடவும் வெங்காயப் பிரியர்களுக்கு
நல்லதொரு ஜோடி.
வேக வைக்கும்போது தண்ணீர் அதிகமாகாமல் பார்த்துக்
கொள்ளவும். அல்லது தண்ணீரை இறுத்துவிட்டு பாலைச்
சேர்க்கவும்.
தேங்காய்ப்பால் அதிகம் சேர்த்து காரத்தையும் கூட்டி
ருசித்துவிட்டுச் சொல்லுங்கள்.
Entry filed under: கிரேவி வகைகள்.
9 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 7:37 முப இல் செப்ரெம்பர் 27, 2012
வித்தியாசமான சமையல் குறிப்பு… மிக்க நன்றி அம்மா… வீட்டில் செய்ய சொல்வோம்..
2.
chollukireen | 9:33 முப இல் செப்ரெம்பர் 27, 2012
இங்கே நன்றாக இருக்கிறது என்று சாப்பிட்டார்கள். அதனால்தான் எழுதினேன். உங்களுக்கும் நன்றி.அன்புடன்
3.
ranjani135 | 10:14 முப இல் செப்ரெம்பர் 27, 2012
நீங்கள் எழுதியுள்ளதுபோல வீட்டில் தேங்காய் இருக்கிறது. வெங்காயம் இருக்கிறது. மற்ற பொருட்களை வாங்கி வந்து பண்ணிவிட வேண்டியதுதான்!
4.
chollukireen | 5:55 முப இல் செப்ரெம்பர் 28, 2012
பண்ணிப் பார்த்துவிட்டு சொல்லவும். ரொம்ப ஸிம்பிள் இல்லையா? இந்த பதிலே ஸந்தோஷமாயிருக்கு.
5.
chitrasundar5 | 3:20 பிப இல் செப்ரெம்பர் 27, 2012
காமாட்சிமா,
தேங்காய்ப்பால்,கறிவேப்பிலை வாசனையுடன் ஓலன் சூப்பரா இருக்கு.செய்ய எளிதாவே இருக்கும்போல.நான் இதுவரை செய்ததில்லை. பூசணி,காராமணி, தேங்காய் எல்லாமே இருக்கு.நாளையே செய்துவிடலாம்.
‘இரண்டாம் பேருக்குத் தெரியாமல்’_சொன்னவிதம் நல்லாருக்கு.அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 6:02 முப இல் செப்ரெம்பர் 28, 2012
உனக்குத் தெறிஞ்சுபோச்சு இல்லையா? என்ன உனக்கும், எனக்கும் ,ஒரே காராமணி ஸம்பந்தப் பட்ட குறிப்புகள். நினைத்துப் பார்த்தால் அதுவும் ஒரு ஒற்றுமையாகவேப் பட்டது. உன் வீட்டிலும் எல்லாம் இருக்கு. பண்ணிப்பார்.என்னிடம் அதைப்பற்றி சொல்லியும் பார். அன்புடன்
7.
பத்மாசூரி. | 5:08 முப இல் ஒக்ரோபர் 2, 2012
தென்தமிழகத்தில் தேங்காய்பால் சேர்த்து செய்வதை “சொதிக்குழம்பு” எனக்கூறுவர். மேல் அதிகத்தகவலுக்கு
பத்மாவின் தாமரை மதுரை [மாப்பிள்ளை படும் பாடுபார்க்கவும்.நன்றி.
8.
B Jaya | 4:10 பிப இல் ஒக்ரோபர் 26, 2012
அன்புள்ள அம்மா
உங்களுடய பதிவை படித்து கொண்டிருக்கிறேன். மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி. வெங்காய ஓலன் நன்றாக இருந்தது. நான் அடுத்த ரேசெபிகளையும் செய்து பார்த்து விட்டு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
9.
chollukireen | 10:21 முப இல் ஒக்ரோபர் 27, 2012
வெங்காய ஓலன் நன்றாக இருந்தது என்று செய்து ருசித்து ஒரு பின்னூட்டமும் கொடுத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றவைகளையும் பார்.
படித்து,சமைத்து, ருசித்து,பின்னூட்டமும் கொடுத்தால்
விருந்து சாப்பிட்ட மாதிரி இருக்கும். படித்துப்,பண்ணிக்கொண்டே கருத்தும் சொன்னால்
மற்றவர்களுக்கு மிகவும் ஊக்கம் கொடுப்பதாக வும்
இருக்கும்.பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்,
அன்புடன் சொல்லுகிறேன்.