அதிரஸம்.
ஒக்ரோபர் 2, 2012 at 2:52 பிப 29 பின்னூட்டங்கள்
பழையகாலம் தொட்டு இக்காலம்வரை சுப காரியங்களில்
கட்டாயம் செய்யப்படும் ஒரு வெல்லம் சேர்த்த இனிப்புப் பண்டம்.
வேண்டியவைகள்—-
பச்சரிசி—கால்கிலோ
வெல்லம்—–200 கிராம்
ஏலக்காய்——6
நல்லெண்ணை—-1குழிக்கரண்டி
அதிரஸம் வேகவைக்க வேண்டிய எண்ணெய்.
செய்முறை.
அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரில் ஊறவைக்கவும்.
குறைந்தது 2,3 மணிநேரம் ஊறட்டும். பிறகு
தண்ணீரை ஒட்ட வடிக்கட்டியினால் வடிக்கட்டி ஒரு
சுத்தமான துணியில் பரத்தலாக சிறிது நேரம் பரத்தி
வைக்கவும்.
சற்று நேரத்தில் மிக்ஸியிலிட்டு நன்றாகப் பொடித்து
மெல்லிய கண் உள்ள சல்லடையால் மாவைச் சலித்து
எடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு
வெல்லம் பூரா நினையும்படி தண்ணீரைவிட்டுக் கிளறி அடுப்பில்
வைத்துக் காய்ச்சவும். கரண்டியால் கிளறிவிட்டபடி நிதான தீயில்
வைக்கவும். தண்ணீர்ப்பதம் குறைந்து பாகாக மாறும்போது
ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் பாகை
துளி விட்டுப் பார்க்கவும். பாகு கறையக்கூடாது. பாகு திரண்டு
கையில் ஒட்டாது எடுக்க வரும் பதம் ஸரியாக இருக்கும்.
ரொம்ப கெட்டியாகவும் கூடாது. நல்லெண் ணெயை பாகில்
சேர்த்து தீயை மிகவும் நிதானமாக்கி சலித்து வைத்திருக்கும்
ஈர மாவைப் பாகில் கொட்டிக் கிளறவும்.
சற்று நெகிழ்ந்து பின் மாவு வெந்து இறுக ஆரம்பிக்கும்.
தீயை அணைத்து விடவும்.
நன்றாகக் கிளறி ஏலப்பொடி சேர்த்து ஆறினவுடன் வேறு
பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
மாவு ஊறஊர அதிரஸம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள்.
வேண்டும்போது மாவை நன்றாகப் பிசைந்து திட்டமான
உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியபடி ஒரு பருமனான பாலிதீன் பேப்பரின் மேல்
உருண்டையை எண்ணெயில் தொட்டுவைத்து வட்டமாகவும்
அகலமாகவும் அதிரஸங்களைக் கையினால் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மிதமான சூட்டில்
ஒவ்வொன்றாக அதிரஸத்தைப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
அதிரஸம் நன்றாக எண்ணெயை உறிஞ்சும் வஸ்து. அதனால் எடுக்கும்போதே
அதிரஸத்தை சட்டுவத்தில் வைத்தபடி ஒரு தட்டையான கரண்டியால்
அழுத்தி எண்ணெயைப் பிழிந்தாற்போல் எடுப்பது வழக்கம்.
சற்றுப் பருமனாகவும் தட்டலாம். பதமாக ஜாக்கிரதையாகச் செய்யவும்.
ஆற ஆற அதிரஸமும் நன்றாக இருக்கும். எண்ணெய்ப் பண்டம்.
வேண்டியவர்கள் எடுத்துச் சாப்பிடுங்கள்.
அதிரஸத்தை விரும்பிக்கேட்டjayasri,padhma ஆகிய இருவருக்கும் என் ஆசிகளும் அன்பும்.
Entry filed under: இனிப்பு வகைகள்.
29 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
shanumughavadhana | 2:55 பிப இல் ஒக்ரோபர் 2, 2012
before deepavali itself trying out athirasam. Thank you mami
2.
chollukireen | 11:48 முப இல் ஒக்ரோபர் 4, 2012
ஷண்முக வதனா எவ்வளவு அழகான தமிழ்ப்பெயர். அதிரஸம் முயற்சி செய்து பார். பிரமாதமொன்றுமில்லை. கொஞ்சம் கையெல்லாம் எண்ணெய். உன் முதல் வரவுக்கு நன்றி. அடிக்கடிவா. அன்புடன்
3.
JAYASHREE SATHYAMURTHY. | 11:51 முப இல் ஒக்ரோபர் 8, 2012
anbulla amma,naan ketta adhirasam seidhu kattiyadharku mikka nandri.naan seidhu parthuvittu reply tharugeraen.mikka,mikka nandri.
4.
chollukireen | 10:48 முப இல் ஒக்ரோபர் 9, 2012
நிதாநமா செய்து ருசிக்கவும். அன்புடன்
5.
JAYASHREE SATHYAMURTHY. | 5:16 முப இல் ஒக்ரோபர் 11, 2012
amma adhirasam mikayum nandraga vandhadhu.amma andhra paruppupodi eppadi seivadhu?matrum porivilanga urundai seivadhupatrium sollitharayum.thanks.
6.
chollukireen | 10:46 முப இல் ஒக்ரோபர் 12, 2012
அதிரஸம் சாப்பிட நானும் வந்திருப்பேனே! நீ கேட்டதெல்லாம் நிதானமா எழுதறேன். அடிக்கடி வா.பின்னூட்டத்திற்கு நன்றிகள். அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 3:05 பிப இல் ஒக்ரோபர் 2, 2012
ஆஹா… அருமையா இருக்கு… இந்தப்பதம் ஏனோ வீட்டில் செய்தால் வருவதில்லை…
நன்றி அம்மா…
8.
chollukireen | 11:12 முப இல் ஒக்ரோபர் 4, 2012
அடிக்கடி செய்தால் பழகிவிடும். மிகவும்நன்றி தனபாலன். அன்புடன்
9.
Angelin | 3:19 பிப இல் ஒக்ரோபர் 2, 2012
மிக்க நன்றிம்மா ..நான் அதிரசம் செய்முறைதான் தேடிக்கொண்டிருந்தேன் …உங்க முறை எனக்கு எப்பவும் சுலபமா இருக்கு ..செய்து பார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறேன்
10.
chollukireen | 11:18 முப இல் ஒக்ரோபர் 4, 2012
அஞ்சு தேடினது கிடைத்துவிட்டது. அடுத்தது செய்துவிட்டு தெறிவிக்கிறாய். என எழுதியது மிக்கவே குஷியாக இருக்கு. சுலபமாயிருக்கு என் முறை.எழுதியதை சுலபமாக வரவேண்டும். நன்றி
பெண்ணே. அன்புடன்
11.
chitrasundar5 | 6:15 பிப இல் ஒக்ரோபர் 2, 2012
காமாட்சிமா,
தீபாவளிக்கு ரெடியாயிட்டீங்க போல. விளக்கப்படங்களுடன் அழகா கொடுத்திருக்கீங்க.எனக்கு அதிரசத்துடன் அந்த இனிப்பான மாவும் வேண்டும்.
எங்கம்மா பெரிய புது மண்சட்டி நிறைய மாவு கிண்டி வப்பாங்க,ரெண்டு நாள் கழிச்சு பார்த்தால் பாதிகூட இருக்காது.பச்சையாவே தின்னு தீத்துடுவோம்.
பயமில்லாம(அனுபவம் இருக்கே என்பது கேட்கிறது) வாணல் மேலே வச்சு பிழியரிங்க.விரும்பிக் கேட்டவர்களுக்கு அன்பு,ஆசியுடன் செய்தும் காட்டியாச்சு. அன்புடன் சித்ரா.
12.
priyaram | 10:46 முப இல் ஒக்ரோபர் 3, 2012
காமாட்சி அம்மா, எனக்கு ஸ்வீட் அவ்வளவாக பிடிக்காது…. ஆனால் அதிரசம் ரொம்ப புடிக்கும்.. உங்க அதிரசம் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு…. அந்த தட்டை அப்படியே இங்க அனுப்புங்க…
13.
chollukireen | 11:35 முப இல் ஒக்ரோபர் 4, 2012
சாப்பிடணும்போல இருக்கா. தட்டை அதிரஸத்தோடு எடுத்துக்கொள். இன்னும் வேண்டுமா? அதுக்கென்ன
பண்ணிக் கொடுத்தால்ப் போகிறது. ரொம்ப ஸந்தோஷமம்மா. அன்புடன்
14.
chollukireen | 11:28 முப இல் ஒக்ரோபர் 4, 2012
சித்ரா அதிரஸத்தைப் பார்த்ததும் பண்ணுருட்டிக்குப்
பறந்துபோய் அம்மா கிண்டும் அதிரஸமாவை அசை போட்டு வந்துவிட்டாய் அல்லவா? மாவுகூட தின்ன ஒரு ருசிதான். அதுவும் சின்ன வயதுகளில் இல்லையா? உன் பதிலும் ரஸிக்கும்படியாக இருக்கு. இந்தியா வரச்சே எல்லாரும் வாங்கோ. அதி ரஸமாக எல்லாவற்றையும் செய்யலாம். அன்புடன்
15.
பிரபுவின் | 12:44 பிப இல் ஒக்ரோபர் 3, 2012
அருமை.அற்புதம்.நன்றி அம்மா.
16.
chollukireen | 11:39 முப இல் ஒக்ரோபர் 4, 2012
இனிப்பு அல்லவா? உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஸந்தோஷமாக இருக்கிரது உங்கள்
பதில். அன்புடன்
17.
ranjani135 | 7:03 முப இல் ஒக்ரோபர் 5, 2012
அதிரசம் சாப்பிட நான் தான் தாமதமாக வந்து விட்டேன் போல இருக்கு.
கொஞ்சமாகப் போட்டு செய்து பார்க்கிறேன்.
படங்களைப் பார்த்தாலே வாயில் ஜாலம் ஊறுகிறது!
18.
chollukireen | 9:56 முப இல் ஒக்ரோபர் 5, 2012
அப்படியே எடுத்து சாப்பிடவேண்டியதுதானே? நான் கூட கேட்டவர்களுக்காகவே செய்தேன். மாற்றமாக எழுத நினைக்கிறேன். பார்க்கலாம். அன்புடன்
19.
sivaparkavi | 8:26 முப இல் ஒக்ரோபர் 5, 2012
அருமையான செயல்முறை.. எங்க வீட்ல மட்டும் அதிரசம் போட்டா விண்டுபோய் எண்ணெய் சட்டி முழுக்க பிய்ந்து போய்விடுதே ஏன். அம்மா…
சிவபார்க்கவி
20.
chollukireen | 9:46 முப இல் ஒக்ரோபர் 5, 2012
vநன்றி சிவபார்கவி. அப்போ அதிரஸம் பண்றேநீ.
மாவு கிளறும்போது பாகு முற்றிவிடாமல் தொய்யும் பதத்தில் மாவைத் தூவிக் கிளறி இறக்கி செய்துபார்.
இரண்டொருமுறை தவறுவது ஸகஜம். எல்லாம் ஸரியாக வரும். அன்புடன் சொல்லுகிறேன்.
21.
lakshmi | 3:00 முப இல் ஒக்ரோபர் 8, 2012
ஆஹா இவ்வளவு நாள் இந்த பக்கம் என் கண்களில் படாமல் எப்படி தப்பித்தது இப்ப வந்திட்டேன்
22.
chollukireen | 5:48 முப இல் ஒக்ரோபர் 8, 2012
பாத்திங்களா?இப்போ கண்ணுலே பட்டாச்சு. ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு. வாங்கோ அடிக்கடி. நானும் வரேன்.
மஹியுடைய ப்ளாகிலே நீங்கள் பின்னூட்டம் போடறதிலிருந்தே உங்களைத் தெறிந்துகொள்ள ஆசை.
அந்தேரி வெஸ்டில் மில்லட்நகர் எதிரில் வசிக்கிறோம்.
அடுத்து அடுத்து பரரஸ்பரம் தெறிந்து கொள்ளலாம்.தற்காலிகமாக ஒரு சின்ன பதில் கொடுத்திருக்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
23.
akila, vellore | 8:02 முப இல் ஒக்ரோபர் 8, 2012
namaskaram mami. athirasam sappida aasai. ithunal varai seyya theriyathu. palaridam kettum sollum patham puriya villai. ippo padathudan vilakkamum pottu puriyumbadi vilakki vittirgal. try pandren. seythu ,rusithu sollugiren.
akila, vellore
24.
ranjani135 | 5:52 பிப இல் ஒக்ரோபர் 8, 2012
அன்புள்ள காமாட்சி அம்மா,
உங்களைப் பற்றி நாளைய வலைச்சரத்தில் எழுதுகிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_8.html – இது என் இன்றைய அறிமுகம்.
blogintamil.blogspot.com
படித்துவிட்டு கருத்தும் சொல்லவும்.
25.
chollukireen | 10:40 முப இல் ஒக்ரோபர் 9, 2012
எனக்கு இன்றுதான் பார்க்கமுடிந்தது. எல்லாம் சற்று
தாமதம். மன்னிக்கவும்.
26.
karthik | 9:12 முப இல் ஜனவரி 23, 2013
இனிப்பு வகைகள், இனிப்பு வகைகளை தயாரிப்பது எப்படி, வட இந்திய இனிப்பு வகைகள், தென் இந்திய இனிப்பு வகைகள், இது போன்ற பல வகையான இனிப்பு வகைகளை தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/recipes_sweets
27.
chollukireen | 6:24 முப இல் ஜனவரி 25, 2013
உங்கள் வலைத்தளம் மிகுந்த ஸந்தோஷமாக இருக்கிறது.
28.
Meera Balaji | 10:09 முப இல் நவம்பர் 23, 2013
romba nalla iruku nanum saikeeran nantri
29.
chollukireen | 11:32 முப இல் நவம்பர் 23, 2013
உங்கள் வரவுக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நல்வரவு அம்மா. செய்து ருசியுங்கள்.அன்புடன்