பஜனை நினைவுகள்.
ஒக்ரோபர் 5, 2012 at 12:04 பிப 24 பின்னூட்டங்கள்
வயதானவர்களுக்கு பக்தி ஸம்பந்தப்பட்ட நினைவுகளும்,பாராட்டுகளும்
அன்பின் மூலம் கிடைத்ததையும், எல்லோருக்கும் வேண்டியவர்களாக
ஒரு சிநேகக் கூட்டம் கிடைத்ததையும், ஒரு கனவாக எண்ணமிடும்
அளவிற்கு காலங்கள் கடந்து ஓடிவிட்டாலும் பசுமையான
நினைவுகளை
உங்களுடன் அசை போடுவதில் ஒரு மன நிறைவு ஏற்படும் என்ற
எண்ணத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.கேளுங்கள்
பக்தி வலையிற் படுவோன் காண்க.
ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம
நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா
கோபிகா ஜீவன ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா
வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.
சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி
ஆரம்பமாகிவிட்டது பஜனை.
மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமரகர்ண விளம்பிதசூத்ரா
வாமனரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே
ஜயஜானகீ ரமண ஜய விபீஷண சரண ஜயஸரோருஹ சரண
ஜயதீன கருணா ஜயஜய
தொடர்ந்து
சரணு சரணு ஸுரேந்திர ஸன்னுத சரணு ச்ரீஸதி வல்லபா தேவ
சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயகா
ஸ்வாமி ச்ரீ ரகு நாயகா சரணு சரணு ஹரே
தோடய மங்களங்கள் காதில் ஒலிக்கிறது.
அடிக்கடி நாமாவளிகள்
மனது பறக்கிறது.
கோல்க்கத்தாவை அடுத்த பாரக்பூர். 24 பர்கானாவில் ஒன்று.
பூரா H.A.L. இல் வேலை செய்யும் பஜனைக்கு வரும் பக்தர்களின்
கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன், குடும்பத்தை விட்டு கருமமே
கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள், இளைஞர்கள், என
எல்லோரும் கலந்த பக்தராகிப் போனவர்கள் ஒவ்வொருவராக
மெல்ல கூட்டம் களைகட்டும் நேரம். H.A.L. இல் வேலை பார்ப்பவர்
என் வீட்டுக்காரர். மண்டலியின் அடுத்த போர்ஷனில் எங்கள்
குடும்பம். எங்களைப்போல் 5,6 குடும்பத்தினர்.
ஆறு மணிவாக்கில் மாமி வேலையெல்லாம் ஆச்சா? ஏதாவது
செய்யணுமா? ஒவ்வொருவரின் விசாரணை.
பஜனை அறை கோலத்துடன் காட்சி அளித்தது பூமாலை. ஊதுவத்தி
மணம், கல்பூர தீப ஏர்பாடு, ப்ரஸாதத்திற்கு பெரிது பெரிதாக வாழை
இலை நறுக்குதல்,நடுவே மிளகு,கல்கண்டுதட்டு, என பரபரவென்று
ஆளுக்கொன்றாய் அவரவர்கள் பரபரப்பாய் ஏற்பாடு செய்ய
பஜனை மண்டலி களை கட்டுகிறது.
வெளித்தாழ்வாரத்தில் பாய்,ஜமக்காளங்கள் விரிக்கத் தயாராகிரது.
மாமி ஈவத்து ப்ரஸாத ஏனு? இப்போதே வாஸனை வந்துண்டே இருக்கே,
என்னையும் கொஞ்சம் கவனிச்சுங்கோங்கோ.
எதுவும் சமையல் செய்துவிட்டு வரலே. இம்மாதிறி தனியாயிருக்கிறவர்
எல்லோரும் வைக்கும் அன்பு கோரிக்கைகள்.
எல்லோரும் அட்வான்ஸ் நோட்டீஸ். இன்னிக்கு யார்து பஜனை?
நன்நே ஸொல்ப சன்னாஹி நோட்கோப்பா. அவரிடம் தனிப்பட்ட
கோரிக்கை.
என்ன ப்ரஸாதம்ன்னு கேட்காது சொல்ல வைக்கும் கேள்வி.
ஹெச் ஏ எல் நிர்வாகி ப்ரான்ச்சை நடத்துபவர் திரு.விச்வநாதன்
மாமி ஜெயலக்ஷ்மி. இருவரின் பக்திப்ரவாகம்.
அவர்கள் தலைமையில் பிரதி சனிக்கிழமை நடக்கும் பஜனை.
அப்படி ஒரு கட்டுப்பாடு.ஒழுங்கு ஒருமித்தல். அது எப்படிதான்
வருமோ?
நம்கெல்லா ஆகோதில்ல.. எப்படி இவ்வளவு பேருக்கு பண்ரா,
தைரியமா பண்ரா,
பஜனை பண்றவா எப்படி அக்கறை எடுத்து பண்றாளோ அதே
மாதிறி ப்ரஸாதமு நன்னா பண்ரா இப்படி கன்னடத்தில் புதுசா
வரவாளிடம் மற்றவர்கள் சொல்லும் விமரிசனங்கள்.
அதிகம் எழுதினால் சுய புராணமாகிவிடும்.
எனக்கு கன்னடம் அவ்வளவாக வராதுன்னு எண்ணம்.
நன்னா எனக்கு புறியறது. மாமிக்கே வெண்ணெய் வெச்சு
பேசரிங்களா? ஸக வயது. சிறிப்பும் குஷியுமாக பேச்சு.
பஜனைரூம் ஜெகஜ்ஜொலியாக ஜொலிக்கிறது.
மாலைகள் அலங்காரம்
பெரியமாமா மாமி வந்தாச்சு.
என்ன ஆரம்பிக்கலாமா? ஆரம்பிச்சாச்சு.
போதேந்ரம் ஜெகதாம்குருமாச்ரயே–
பஜேஸத்குரும்—-மருதாநல்லூர்
ச்ருதி,ச்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம். சங்கரர்
கலய யசோதே தவபாலம், க்ஷேமம் குரு கோபாலா தரங்கப்
பாடல்கள்.தொடர்ந்து நாமாவளி.
பாலயமாம் ச்ரீ பத்ராசல ராமதாஸர்
ஹரிநாராயண ஹரிநாராயண புரந்தரதாஸர்
கேலதிமம ஹ்ருதயே ஸதாசிவ ப்ரமேந்ராள்
ஆடாது அசங்காது வா ஊத்துக்காடு
கபீர்தாஸ் பாட்டு
மோரிலாகி லடககுரு சரண நஹி மீராபாய்
இன்னிக்கி எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் முடியரது.வீட்டுக்கு
சுருக்கப் போகலாம். இந்த நாள் வர இன்னும் ஒரு வாரம்
காக்கணும். ஒரு பெறிய போஸ்ட்லே இருக்கிற இவா நல்ல
காரியம் செஞ்சு மனுஷாளை எப்படி கட்டிப் போடரா பாருங்கோ.
ஒரு ஃபேக்டரி நடத்ரவர் பெண்டாட்டியோடு இவ்வளவு ச்ரத்தையா
நடத்ரது ரொம்ப அபூர்வம்.
திரு. விச்வநாதன் தம்பதிகளை நிரைய பாராட்டும் வார்த்தை
போன வாரம் பெறியவர் வீட்டிலே திவ்யநாமம் நடந்ததே
அப்பப்பா அந்த தீபத்தே யெடுத்திண்டு, பேகபாரோ,பேகபாரோ,
என்னமா உருக்கமா பாடிண்டு வந்தார் பார்தெங்களா?
பின்னாடி எல்லாரும் பாட கண்கொள்ளா காட்சி.
அது மட்டுமா ராமபத்ர ராரா ச்ரீ ராமச்சந்திர ராரா
நான் அப்படியே உருகி விட்டேன்னா பாத்துகோங்கோ.
சட்டென்று எல்லார் வீட்டு சின்ன பசங்களும் ஒரு பெறிய
ஹிமாலயாபொக்கே பவுடர் டப்பாவை வீட்டில் வைத்துக்
கொண்டு ஆடிப் பாடும் காட்சிகள் நினைவிற்கு வருகிரது.
மாமி குழந்தைங்களை இங்கே விடறேன். எழுந்தா
சொல்லுங்கோ. பெறிய தாழ்வாரம். நானும் இன்னிக்கு பாடப்
போறேன்னு முதலில் போய் உட்காரும் சுட்டிப் பெண்.
ஆச்சு அப்படி இப்படி என்று அஷ்டபதி வந்தாச்சு.
திரும்ப கணேசத்யானம், கஜானனாஓம் கஜவதனா
முருகன் பேர்லே பாடுங்கோ. தமிழர்களுக்கு சான்ஸ்.
வாணி ஸரஸ்வதி வாழ்க என் தாயே வாழ்க வாழ்க உனதருளே.
கோஷ்டி கானம். தொடர்ந்து அம்பாள் பேர்லே பாடுங்கோ
ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி ஜெயாமாமி பாடரார்.
மகாவிஷ்ணு எஸுர்லே நீவுஹேளி..கன்நடஅன்பர்க்கு சான்ஸ்.
நாநேனுமாடிதெனோ வெங்கடரமணா பாட்டு
பாக்யத லக்ஷ்மி பாரம்மா தெறியாதவாளே இல்லை.
எல்லாம் எல்லாரும்பாட
எல்லா கடவுளையும் பாடி முடித்து ஆஞ்சநேயரையும் கூப்பிட்டு
மாருதிராயா பலபீமா பஜனேலாகே தேப்ரேமா.முடித்து
பாரோ முராரே பாலக சௌரே ஸதாவிசார ஸந்தோஷதீரா
ஊடக யேளோ மையல்ல தூளோ ஆடஸக யேளோ ச்ரி
கிருஷ்ம க்ருபாலோ . ஸாமிக்கு சாப்பாடு
மாமி நைவேத்ய கொட்ரீ கிருஷ்ண ராவ் எழுந்து வருவார்.
வயதில் மூத்தவர். ஹஜ்ஜி க்ருஷ்ணராவ்ன்னு கூப்பிடுவோம்.
பக்தர்களின் பழ வகைகள் தட்டில் அணிவகுக்கும்
ஜயஜயதேவாதி தேவவிபோஜய கோபால கிருஷ்ண க்ருபா
ஜலதே. சந்தனம்,தூபம்,தீபம், மாலைகள் எல்லாவற்றிற்குமாக
பாடிதீபாரதனையும் காட்டியாயிற்று.
வழி விடுங்கோ ஹஜ்ஜி வரார் . ப்ரஸாதம் கொண்டுவரார்.
சால்யான்னம் மது க்ருத ஸுபான்வித
சாக பாகவித ஸூ ஸம்ருத்தம்
சாரு பஞ்சபக்ஷ்ய பரமான்நம்ததி
ஸ்வீகுரு மாதவ மது ஸூதனா—-தேவா
பக்ஷணம்,பால் ,ப்ரஸாதம் எல்லாம்
நிவேதநமாகிறது.
பசங்களை எல்லோரும் எழுப்பி விடரா.
ஜயஜயஹாரதி பாடி மங்கள ஹாரதி எடுத்து ஸ்லோகங்கள்
சொல்லி நமஸ்கரித்து எல்லாம் விதரணையாக நடக்கிறது.
உச்சஸ்தாயியில் நாமாவளிகள்.
உபசாரமுலனுவும் ஆயிற்று.
பிரஸாதத்தை எடுத்துபோய் மொத்தத்தில் கலந்து வினியோகந்தான்.
ஒவ்வொருவாரம் ஒருவர் என்று பொட்டி போட்டுக்கொண்டு
பஜனை சிலவு. எல்லோரும் கலந்து கட்டி ஒத்தாசைகள்.
உப்பெல்லாம் ஸரியா பாத்தூட்டு கொடுங்கோ. இது நான்.
எல்லாம் ஸரியாயிருக்கு. யாருக்கு வேணுமோ கேட்டு வாங்கிப்
போங்கள். உபசாரம் செய்து 2பேர் வினியோகம்.
இன்னும் நிறைய சொல்லலாம். என்னெல்லாம் ப்ரஸாதம்,
எப்படி ரஸித்து சாப்பிட்டார்கள். ஒரு ஆன்மீக கெட்டுகெதர்.
எப்படி செய்தோம். எந்தமாதிறி வசதிகளக்காலத்தில்?
எல்லாம் எழுதட்டுமா? யாராவது பதில் கொடுங்கோ.
ஸந்தோஷமாக எழுதுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
இதெல்லாம் எப்பொழுது தெறியுமா? 1960 க்கு முன்னும்
பின்னுமாக இருக்கும். இப்பொழுது போல எனக்குத்
தோன்றுகிரது.
Entry filed under: சில நினைவுகள்.
24 பின்னூட்டங்கள் Add your own
VAI. GOPALAKRISHNAN க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 12:43 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
அம்மா !! பழைய நினைவுகள் தாலாட்டியது ..ஆன்மீக கெட் டு கெதர் கிருஷ்ணா நீ பேகனே பாரோ // கிருஷ்ணஜெயந்தி சமயம் நடந்த பஜனையா அம்மா ..அருமையான நினைவுகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
2.
chollukireen | 1:09 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
இது மனஸாலே ஞாபகப்படுத்திண்டு திரும்பத்திரும்ப அசைபோடும் ரொம்ப பழையகால நினைவுகள். வாராவார நினைவுகள். தொடர்ந்து சில வருஷத்திய நினைவுகள். எல்லா பண்டிகைகளும், எல்லா விசேஷங்களும் எல்லாமே கூட்டாக நடந்த
ஒரு கடந்தகால நினைவு. தாலாட்டியதாக
எழுதி யிருந்தாய். அப்பாடல்களும் உண்டே.
எனக்கு உன் பதில் எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா?
3.
chollukireen | 1:33 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
வணக்கம்.ஒரு பதில் யாராவது கொடுத்தால்–
என்று எழுதினேன். அப்படியே அசரீரிபோல்
நீங்களும், அஞ்சுவும்,ரஞ்சனியும் பதில் கொடுத்ததும் அது எந்தவகை சந்தோஷமென்று புறியவில்லை. அப்படி இருந்தது. சமையலைவிட்டு ஸங்கீதம்
பாடியதை எழுதியிருக்கிறேன். ஆதரவுக்கு நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.
4.
VAI. GOPALAKRISHNAN | 12:44 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
//ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம
நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா
கோபிகா ஜீவன ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா
வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.
சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி
ஆரம்பமாகிவிட்டது பஜனை.//
ஆஹா, மாமி, அநேக நமஸ்காரங்கள்.
வெகு அழகான துவக்கத்துடன், பிள்ளையார் கிருஷ்ணர் படத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள்.
மிகவும் ரஸித்துப் படித்தேன்.
தொடர்ந்து தங்களின் அனுபவங்களை தயவுசெய்து எழுதுங்கோ,
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன் [திருச்சி] .
5.
chollukireen | 1:24 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
வணக்கம். ஒரு பதில் யாராவது கொடுத்தால் என்று எழுதினேன். அப்படியே அசரீரி மாதிறி
நீங்களும், அஞ்சுவும் பதில் கொடுத்தது எந்த வகை ஸந்தோஷம்னு சொல்ல முடியலே.
சமையல் எழுதிக்கொண்டிருந்தேன். மனதை மாத்தணும் சின்ன முயற்சி. ஆதரவுக்கு நன்றி.
6.
ranjani135 | 1:22 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
அற்புதம்! அபாரம்!
நாங்கள் எல்லாமும் கூட உங்களுடன் பஜனையில் கலந்துண்டோம்; கிருஷ்ணா ராவ் கையாலே பிரசாதம் வாங்கிண்டோம்;
இதைபோல நிறைய எழுதுங்கோ;
எப்படி இத்தனை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
நாங்களும் 1960- க்கே போயிட்டோம்.
சமையல் அறையிலிருந்து வெளியே வந்து நீங்கள் எழுதுங்கள் என்று சைபர் சிம்மன் கேட்டுக் கொண்டதை நிறைவேற்றுங்கள்.
இந்தப் புது மாதிரியான பதிவுக்கு நல்வரவு!
7.
chollukireen | 1:48 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
உன் கிட்டே சொல்லிவிட்டு பதிவு போடலாம்னு நினைத்தேன். பிறர் ரஸிப்பார்களா என்ற ஒரு ஐயம். இப்போ ஐ யை ஜ என்று மாத்த முடியுமா பார்க்கலாம்.
தைரியம் கடன் கேட்கலாமென்று பார்த்தேன். ப்ரஸாதம்
எப்படீன்னு அப்புரம் சொல்லலாம். நானும் திரு ஸைபர் ஸிம்ஹனை மனதில் நினைத்தே எழுதினேன்.
உனக்கு உன் குடும்பத்திற்கு என் அன்பான ஆசிகள்
அன்புடன்
8.
திண்டுக்கல் தனபாலன் | 2:45 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
மிகவும் நன்றாக ஆரம்பித்துள்ளீர்கள்…
தொடருங்கள்… அறிந்து கொள்கிறோம்…
மிக்க நன்றி அம்மா…
9.
chollukireen | 12:28 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
ஆரம்பம் நன்றாக உள்ளதாக எழுதியிருப்பதை
மனப்பூர்வமாக அன்புடன் வரவேற்கிறேன் தனபாலனவர்களே.
10.
chitrasundar5 | 3:04 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
காமாட்சிமா,
நான் முதலில் சமீபத்திய பஜனையைப்பற்றி என்றுதான் நினைத்தேன். முடிவில்தான் தெரிந்தது 1960 நினைவுகளென்று.அப்படியே நேற்று நடந்த மாதிரி எழுதியிருக்கீங்க.
“மாமிக்கே வெண்ணெய் வெச்சு பேசரிங்களா?”_ ரசிக்கும்படி இருக்கு.”அது மட்டுமா ராமபத்ர ராரா ச்ரீ ராமச்சந்திர ராரா நான் அப்படியே உருகி விட்டேன்னா பாத்துகோங்கோ”_படிக்கும்போதே தெரிகிறது.
முடியும்போது நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்க,நாங்க ரசித்துப் படிக்கிறோம்.அப்படியே உங்களுக்குப் பிடித்தமான நேபாள நினைவுகளையும் மறக்காம எழுதுங்க.அன்புடன் சித்ரா.
11.
chollukireen | 12:25 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
அன்புள்ள சித்ரா
மனதில் அடிக்கடி தோன்றும் அதுவும் இரவு படுத்தவுடன் அக்காலத்திற்கே சென்று அனுபவிக்கும் உணர்வுக் குவியல்கள் அவை.
நேற்று நடந்த மாதிறியேதான் இருக்கிறது. உனக்கெல்லாம் படிக்க உணற நன்றாக இருந்ததென்பது இன்னும் சிலாக்கியமாகிறது.
எல்லோருடைய ஆதரவு கிடைத்து எழுதுவது
இன்னும் வரவேற்கத் தக்கதாகிறது எனக்கு. தொடர்ந்து வரவேற்கும் அன்புடனும், ஆசியுடனும் சொல்லுகிறேன்.
12.
இளமதி | 10:02 பிப இல் ஒக்ரோபர் 5, 2012
வணக்கம் அம்மா! உங்களின் இவ் வலைப்பூவினை சகோதரி ஏஞ்சலின் மூலம் இன்றுதான் அறி்ந்துகொண்டேன்.
இங்கு வந்து பார்த்ததும் இன்றைய உங்கள் பக்திப் பரவசப் பதிவினை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது மிகுந்த மன மகிழ்ச்சியைத்தருகிறது.
ஆரம்பத்திலேயே நினைவுகளை அசைபோடுகிறேன் என சொல்லியிருந்தபோதும் முடிவில் இது நடந்தது 1960 க்கு முன்னும்
பின்னுமாக இருக்கும். என்றீர்களே. என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. அப்படி ஒரு ஞாபக சக்தி இந்த வயதிலும்.
அனுபவித்து எழுதியதை வாசித்து மனம் மிக மகிழ்ந்தேன்.
இன்னும் தொடர்ந்து தாருங்கள் உங்களின் அனுபவங்களை. நாமும் படித்து பயன்பெற காத்திருக்கிறோம்.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அம்மா!
13.
chollukireen | 12:13 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
அன்புள்ள இளமதி அஞ்சுவின் மூலம் அறிமுகம். மிக்க மகிழ்ச்சி. உன் பின்னூட்டம் பாராட்டும்படி இருக்கிறது. பக்தி எல்லோருக்கும்
மகிழ்வையும், நல்லதையும் கொடுக்கிறதல்லவா? அடிக்கடி இப்படி தொடர்புகொள்ளம்மா. அன்புடன் சொல்லுகிறேன்.
14.
JAYANTHI RAMANI | 7:54 முப இல் ஒக்ரோபர் 6, 2012
மாமி நமஸ்காரம்.
என்னை நினைவு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
படிக்கும்போதே உங்க கூட நாங்களும் பஜனையில் கலந்துண்ட மாதிரி இருக்கு.
ரொம்ப சுவாரசியமா இருக்கு. இன்னும் எழுதுங்க.
அப்புறம் மாமி 23/09/2012 அன்று எனக்கு பேத்தி பிறந்திருக்கிறாள். ’லயா’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
உங்கள் பதிவுகளை படிக்கும் போது பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைப்பேன். வேலைப் பளு காரணமாக போட முடிவதில்லை.
அப்படியே என் ப்ளாகிற்கும் ‘manammanamviisum.blogspot.com’ வருகை தாருங்கள்
என்றும் அன்புடன்
ஜெயந்தி ரமணி
BSNL
15.
chollukireen | 12:05 பிப இல் ஒக்ரோபர் 7, 2012
ஆசிகள் ஜயந்தி. மிகவும் நன்றி. புதியதாக ப்ளாக் ஆரம்பித்திருப்பது தெறியாது. இரண்டொருதரம் வந்து ஏதாவது கதைகள்
எழுதியிருக்கிறாயோ என்று பார்த்தேன். ப்லாக் ஆரம்பித்திருப்பது ரொம்ப ஸந்தோஷம்.மைத்ர
முஹூர்த்தம் தேடினேன். பேத்தி லயாவின்
வரவு நல்லதாக அமைய நல் வாழ்த்துகள்.
சுருதி கூடினால் லயம் நன்றாகவே இருக்கும்.
உங்கள் எல்லோருக்கும் என் ஆசிகள். அடிக்கடி
வா. ஜெயந்தி ஜெயா மாறி இருந்தது. பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி. பாட்டி ஸ்தானம்
ப்ரமோஷன். அன்புடன் சொல்லுகிறேன்.
16.
JAYANTHI RAMANI | 10:33 முப இல் ஒக்ரோபர் 9, 2012
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி காமாட்சி அம்மா. எப்பவாவது சென்னைக்கு வந்தால் மறக்காம சொல்லுங்கோ.
உங்கள் மாதிரி நல்ல உள்ளங்கள் கிட்ட இருந்து பாராட்டுக்கள் வர வர இப்ப கவிதை(!) கூட எழுதறேன். அதுவும் ப்ளாக்ல போட்டிருக்கேன்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
17.
chollukireen | 10:47 முப இல் ஒக்ரோபர் 9, 2012
எல்லாத்தையும்விட இந்த பின்னூட்டங்கள் நேசத்தை வளர்க்கின்றது.அன்பும், ஆசிகளும்
18.
ranjani135 | 5:51 முப இல் ஒக்ரோபர் 9, 2012
இன்றைய வலைச்சரத்தில் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பாருங்கள்.
அப்படியே சின்னதாக ஓர் கருத்தும் ப்ளீஸ்!
இணைப்பு கீழே:
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_9.html
19.
chollukireen | 10:43 முப இல் ஒக்ரோபர் 9, 2012
பார்த்தேன். அந்த ஸமயத்தில் தோன்றியதை எழுதினேன். இன்னும் கூட எழுதியிருக்கலாம் என்று தோன்றியது.
20.
chollukireen | 12:39 பிப இல் பிப்ரவரி 4, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பாரக்பூரில் நடந்த 2012 வருஷத்திய ஒரு பதிவு இது. மலரும் நினைவுகள். நீங்களும் பங்கு கொள்ளுங்களேன் அன்புடன்
21.
நெல்லைத்தமிழன் | 1:11 முப இல் பிப்ரவரி 5, 2022
பஜனை நடக்கும் இடத்தில் அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்த நினைவு. எழுத்து சூப்பர்.
பஹ்ரைன் சத்சங்கை நினைவுபடுத்தியது.
அது சரி.. பிரசாத லிஸ்ட் எங்கே என்று தேட வைத்துவிட்டீர்களே
22.
chollukireen | 6:26 பிப இல் பிப்ரவரி 5, 2022
அந்தப் போஸ்ட் சீக்கிரமே வரும் மெய்மறந்து ரசித்ததற்கு மிகவும் நன்றி அன்புடன்
23.
ஸ்ரீராம் | 2:42 முப இல் பிப்ரவரி 5, 2022
பஜனை முடிந்ததும் பிரஸாதம் உண்டோல்லியோ…!
24.
chollukireen | 6:25 பிப இல் பிப்ரவரி 5, 2022
நன்றாக உண்டு வயிறு நிறையவே கிடைக்கும் கையில் எடுத்துப் போகலாம் அன்புடன்