என்ன பிரஸாதம்?எப்படி?
ஒக்ரோபர் 10, 2012 at 5:54 பிப 35 பின்னூட்டங்கள்
லக்ஷ்மி பூஜை படமிருந்தது. நீங்களும் தரிசியுங்கள்.
பஜனைக்கு வரவர்கள் சாயங்காலமே புறப்பட்டுவந்து லேட்டாக
போவதை உத்தேசித்து எல்லோருமேகொஞ்சம் வயிறு
நிறையும்படி ப்ரஸாதம் செய்து வினியோகிக்க விரும்புவார்கள்.
மேலும் வெளியூர் படியாக பணம் கூட கிடைத்ததால் யாருமே
இதனை ஒரு பெறிய சிலவாக யோசிப்பதில்லை என்பது அங்கு
யாவரின் அபிப்ராயமாக இருந்தது.
பூண்டு, வெங்காயமில்லாத, ஏதாவது ஒரு பாத், டால்டா
கலப்பில்லாத ஒரு இனிப்பு , ஒரு சுண்டல். இருக்கவே இருக்கும்
நிவேதனமான வாழைப்பழங்கள்.
ஹூக்லி கரையோரம் பாரக்பூர். அக்கரைக்கு படகில் போனால்
சுராபுளி என்ற இடம். வாழைப்பழங்கள், வாழைஇலை,
காய்கறிகள் என எல்லாம் மலிவாகக் கிடைக்கும். யாராவது
போவார்கள். நிறைய வாங்கி வந்து எல்லோரும் பாகம் போட்டு
வாங்கிக் கொள்வார்கள். கேட்கணுமா?
மண்டலிக்கென்று சில பெறிய அலுமினியப் பாத்திரங்கள் உண்டு.
அடுப்புதான் சற்று கேள்விக்குறி? காஸ்,மைக்ரோவேவ்,அவன்
இதெல்லாம் வரவுமில்லை. தெறியவும் தெறியாது.
நான்தான் எப்பவும் செய்து கொண்டிருந்தேனா?
அதுவும்தான் இல்லை. யார்வீட்டிலாவது செய்து எடுத்து
வருவார்களாகத்தானிருக்கும்.
முதலில் இரண்டு முறை பாரக்பூர் அவுட் ஸ்டேஷன் போன
போது நான் பஜனைக்குப் போனதில்லை. கொஞ்சம் துலைவு.
ஆனால் போனவர்கள் ப்ரஸாதம் கொண்டு வருவதில்
கொடுப்பார்கள்.
எப்படியோ மூன்றாவது முறை அதே ஊர் வந்தபோது இருக்க
ஒரு போர்ஷன் பஜனைமண்டலியின் பக்கத்திலேயே கிடைத்தது.
நாங்களும் ஒருநாள் பஜனைச் சிலவை செய்ய உத்தேசித்து
ப்ரஸாதமும் நாங்களே செய்தோம்.
அப்புறம் பக்கத்தில் போர்ஷன். எதற்கும் சுலபம், அப்படி, இப்படி,
அவர்களும், ஒத்தாசைக்கு வந்து விட்டு அலைச்சலில்லாமற்
போகும் இப்படியாக அதே ஒரு கைங்கர்யமாஆகிவிட்டதென்றே
நினைக்கத் தோன்றியது. கூடவே மற்ற குடும்பங்களின்
ஒத்தாசை. சனிக்கிழமை எங்களுடைய ஒர்க் ஷாப் என்றே
சொல்லிக் கொள்ளலாம்.
முதற் காரியம் என்ன செய்தேன் தெரியுமா? அடுப்புபோட்டேன்.
விறகடுப்பா, இல்லை கொயிலா போட்டேறியும் மண் குமட்டி.
ஹூக்லி நதிக்கறையில் களிமண்ணுக்கா பஞ்சம்? சாயங்கால
நடை குழந்தைகளுடன் போகும் போது களிமண்ணைக் கட்டி
சைக்கிள் ரிக்க்ஷாவில் கொண்டு வந்து ஊற வைச்சும் ஆச்சு.
சமையல் ரூம் என்ன பெறிய இடமா? புகை வெளியேபோக
நிறைய வசதியுடன் ஒரு 12 பேர் உட்கார்ந்து சாப்பிடும்டைனிங்
டேபிள் மாதிறி. பக்கத்தில் பாய்லர் வைக்க,தண்ணிகொட்ட,
நிரப்ப என சேர்ந்தாற் போல இடம். அது ரொம்ப உதவியாக
இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
உள்ளேயே ஒரு மூலையில் செங்கல்லை அடுக்கி அழுத்தமா
மண்ணைப் பிசைந்து பூசி நடுவில் நல்ல கெட்டியான இரும்புக்
கம்பிகளை இடம் வைத்து இருகோடுகளாக 4,5 கோடுகள்
அமைத்து மேலே சுற்றிலும் சுவரமைத்து , மேலே
கொம்மைகளமைத்து அழகான பெறிய சைஸ் மண் குமட்டி
தயார். அது உலரஉலர களி மண்ணைக் கறைத்துப் பூசி மழமழ
என்று எக்ஸிபிஷனில் வைக்காத குறைதான். ஒரு அடுப்புக்கு
இவ்வளவு வர்ணனை தேவையா? எங்களுக்கெல்லாம் ஒரு வீடு
கட்டிய பெருமை!!!!!!!!!!!!!!!!!!!!!!இருக்காதா பின்னே?
ஸாதாரணமாக சின்ன பக்கெட்டில் இம்மாதிறி அடுப்புகள்
விற்கும். கொயிலான்னா நிலக்கரி. அதை வாங்கி ஹாமர்
வைத்து கறி உடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பக்கெட் அடுப்பில் ஒரு வறட்டியை பிச்சுப்போட்டு மேலே
கறியைப்போட்டு , கீழ் பாகத்திலே வறட்டியிலே கிரஸின்
துளி விட்டு பத்த வைத்து பால்டியை வெளியில் வைத்துவிட
வேண்டும். புகையை கக்கி வரட்டி கனன்று கொயிலா தகதக
என்று தீப்பிடிக்கும்.. பால்டி சமயலறையில் வந்து பக்குவம்
செய்ய த் தயாராகிவிடும். நீண்டநேரம் எறியும். ரயில் இன்ஜின்
மாதிரிதான்.
பிரஸாதம் தயார் செய்ய ரவை வெஜிடபிள் பாத். கிச்சடிதான்.
என்ன உறித்த பட்டாணியே ஸீஸன் என்றால் 2 கிலோ.
கோஸ்,காலிஃப்ளவர் 2 கிலோ, கொஞ்சம் கேரட்
கடுகு,உ.பருப்பு, நிறையமுந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை பச்சை
மிளகாய், எ.பழம், 2கிலோ ரவை.
நெய், எண்ணெய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி
கறிகாயெல்லாம் நறுக்கி எண்ணெயில் தனியா வதக்கறது.
பெறிய பாத்திரத்தில் விடற நெய்யை விட்டுகாயவைத்து
இறக்கி ரவையைக் கொட்டி வறுத்து, ஏற்கெனவே கொதிக்க
வைத்த ஜலத்தை உப்பு போட்டு அதில் விட்டுக் கிளறி
நிதானமா அடுப்பில் வைத்துக் கிளறி மூடி இறக்கினா பாத்தோட
மெயின் ஐட்டம் தயார். அழகாய் சிறிக்கிறமாதிறி வெந்து
இருக்கும்.
தாளித்து வதக்கின காய்களுடன் ஸரிவர ரவைக்கலவையைச்
சேர்த்து, முந்திரி சேர்த்துப் பக்குவமாகக் கிளறி எலுமிச்சம்பழம்
பிழிந்து ஒரு ப்ரஸாதம் தயார். சற்று சூடு படுத்தினால் சுடச்சுட
சும்மா ஒரு ஸேம்பிளுக்கு எழுதினேன் .காரமெல்லாம்
போட்டுதான். தனித்தனியா செய்து கலந்தாதான் கையிலே
ஒட்டாம இலையிலும் ஒட்டாம நன்றாக இருக்கும்.
பொடி இடித்தும் போடுவோம்.
மற்றபடி, புளியஞ்சாதம், எள், எலுமிச்சை, தேங்காய் என
சித்ரான்னங்களும் அவ்வப்போது உண்டு.
புளி அவல், வெல்ல அவல்,வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல்
ரவா கேஸரி, பாயஸங்கள் இப்படி ஸீஸனுக்கேற்ப வகைகள்
மாறும். சுண்டல் வகைகள் மாமூல்.
இப்போது நினைத்தாலும் இரண்டொரு படங்கள் கூட எடுத்து
வைக்கவில்லையே என்று தோன்றுகிறது.
ரேடியோ,எலக்டிரிகல், இன்ஜின்,என பெறிய, சிறிய
உத்தியோகத்துக் கணவர்களின் திருமதிகள் எல்லோரும்
பஜனையின் வெகுமதிகள்தான். அவ்வளவு நெருக்கம்.
ஸுசீலம்மா,ஸரஸ்வத்தம்மா,மைதிலம்மா,வேதம்மா,
மீனாம்மா,,சூடாமணி,ஜெயம்மா, விமலாம்மா,ஸீதாம்மா இப்படி
எத்தனை பெயர்கள்? பத்மாம்மா விட்டுப்போச்சா?
நவராத்ரி ஆரம்பமாகப்போகிறது. என்னுடைய சமையல்
குறிப்புகளில் தேவையானதை எடுத்து உபயோகியுங்கள்.
எ ல்லோருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் என் ஆசிகள்..
ப்ரஸாதமெல்லாம் எல்லாரும் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம்
இலையில் மடித்து நியூஸ் பேப்பரில் சுற்றியும் கொடுத்தாச்சு.
பாலிதீன் பை எல்லாம் கிடையாது.
கொஞ்சம் விமர்சனமும் பண்ணிவிட்டு புதுப்பாட்டு யாராவது
பாடினால் அந்தப் பாட்டின் வரியை நினைச்சுண்டு, மனம் நிறைய
ஸந்தோஷத்தை சுமந்துகொண்டு அடுத்தவார பஜனையை
எதிர்பாத்துண்டு என்ன அழகான நினைவுகள் என்று லயித்துப்
போகிறேன். நிஜம்தானே?
Entry filed under: சில நினைவுகள்.
35 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 6:39 பிப இல் ஒக்ரோபர் 10, 2012
//மற்றபடி, புளியஞ்சாதம், எள், எலுமிச்சை, தேங்காய் என சித்ரான்னங்களும் அவ்வப்போது உண்டு.
புளி அவல், வெல்ல அவல்,வெண் பொங்கல், சக்கரைப்பொங்கல், ரவா கேஸரி, பாயஸங்கள் இப்படி ஸீஸனுக்கேற்ப வகைகள் மாறும். சுண்டல் வகைகள் மாமூல்.//
பிரஸாத வகைகள் நாக்கில் நீர் ஊறவைக்கின்றன,
2.
chollukireen | 8:25 முப இல் ஒக்ரோபர் 12, 2012
பேர் சொன்னாலே நாக்கில் ஜலம் ஊறவைக்கும் ப்ரஸாத வகைகள் ஸ்வாமி பேரைச் சொல்லிக்கொண்டு கூட்டாஞ்சோறுன்னு சொல்லும் விதம் பகிர்ந்து கொண்டது மறக்க முடியாதவொன்று.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 6:51 பிப இல் ஒக்ரோபர் 10, 2012
//விறகடுப்பா, இல்லை கொயிலா போட்டேறியும் மண் குமட்டி.//
// இருகோடுகளாக 4,5 கோடுகள்
அமைத்து மேலே சுற்றிலும் சுவரமைத்து , மேலே
கொம்மைகளமைத்து அழகான பெறிய சைஸ் மண் குமட்டி தயார். அது உலரஉலர களி மண்ணைக் கறைத்துப் பூசி மழமழ என்று எக்ஸிபிஷனில் வைக்காத குறைதான். ஒரு அடுப்புக்கு இவ்வளவு வர்ணனை தேவையா? எங்களுக்கெல்லாம் ஒரு வீடு
கட்டிய பெருமை!!!!!!!!!!!!!!!!!!!!!!இருக்காதா பின்னே?//
என் தாயார் இதுபோல பல அடுப்புகள், கோட்டை அடுப்புகள், ரம்பத்தூள் அடுப்புகள், குமுட்டிகள் முதலியவற்றிடன் வெகு காலம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
இதுபற்றி கூட என் “உணவே வா உயிரே போ” என்ற பதிவினில் எழுதியுள்ளேன், மாமி. செளகர்யப்பட்டால் படித்துப்பாருங்கோ. சிரமப்பட வேண்டாம்.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html
எல்லாமே அழகாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
4.
chollukireen | 8:41 முப இல் ஒக்ரோபர் 12, 2012
சிரமமொன்றுமில்லை. படித்துப் பார்த்தேன். மிகவும் அருமையாக எதார்த்தத்தை எழுதியிருக்கிறீர்கள்.
அடுப்புக் கஷ்டம் என்பது எல்லா விதத்திலும்.
எனக்கு அனுபவமிருக்கிறது. அந்த ஸமயத்தில் அதெல்லாம் பாந்தமாகவே இருந்தது. அவ்வப்போது
அதது வந்து போய்க்கொண்டிருக்கிரது. மிகவும்
சாப்பாட்டு விஷயத்தில் அனுபவித்து ரஸித்து,சாப்பிட்டு, முறை தெறிந்தவர்களால்தான் உங்களைப்போல எழுத முடியும். உங்கள் பதிவைப்
பலமுறை படித்தேன். பதிலெழுதும்போது பல தடங்கல்கள். அருமையான பதிவு நீங்கள் எழுதியிருப்பது. தவிர உங்கள் பாராட்டுதல்களுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
,மு
5.
Angelin | 6:53 பிப இல் ஒக்ரோபர் 10, 2012
மிக அருமையான பகிர்வு அம்மா ..குமட்டி அடுப்பு எங்க பாட்டி வீட்டில் பார்த்திருக்கேன் …வெந்நீர் electric ஹீட்டரில் சுடுதண்ணி வந்து குளித்தாலும்
பாய்லரில் கரி அடுப்பில் வெந்நீர் வைத்து குளிப்பது எவ்ளோ சுகம் ..
..ரவா வெஜ் பாத் வாழை இலையில் நெய்யோடு கண்முன்னே தெரிகிறது .:))
அருமையா எழுதிருக்கீங்க .
அழகான நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா .
6.
chollukireen | 10:38 முப இல் ஒக்ரோபர் 12, 2012
அஞ்சு அழகான நினைவுகள். பகிர்ந்து கொண்டதில் ஸுகம். ரவா வெஜ்பாத் செய்துவிட்டு உன் காகிதப்பூக்களில் பகிர்ந்து விடேன்!!!!!!!!!!!!!!!உன் பின்னூட்டம் ரொம்பப் பிடிச்சிருக்கு.அன்புடன்
7.
இளமதி | 6:00 முப இல் ஒக்ரோபர் 11, 2012
அம்மா! உங்க பூஜை அறை. வரலக்ஷ்மி மற்றும் படங்கள்
வீழ்ந்து வணங்க வைக்கிறது. வரலஷ்மி நோன்புப் பூஜைப் படமோ அது. நோன்புச்சரடும் தட்டில் இருக்கே.
நீங்கள் சொல்லியுள்ள அடுப்புவகையில் உமி அடுப்பு, மரத்தூள் அடுப்புன்னு நான் ஊரைவிட்டு வெளியே வாரவரைக்கும் எங்க வீட்லேயும் இருந்திச்சு. அதை எரிய வைக்கிரதுக்குள்ளே புகைமண்டலத்தால் கண்கரிச்சு படுற அவஸ்தை:’( அது ஒரு அனுபவம்!
நீங்களும் அந்தவகை அடுப்பையே தயாரிச்சிருக்கீங்களே. பெருமைப்பட்டுத்தான் ஆகணும்:)
8.
chollukireen | 10:32 முப இல் ஒக்ரோபர் 12, 2012
ஆமாம்மா.. அது இந்தவருஷ வரலக்ஷ்மி நோம்புப் படம். ஸரியா கண்டு பிடிச்சூட்டே! படித்து பின்னூட்டம் போட்டதற்கு மிகவும் நன்றி.உனக்கும் அடுப்புகள் பார்த்த அனுபவம்.ஸரியாகச் சொல்கிறாய்.இளமதி.
அழகான பெயர். ஆசிகளும் அன்பும்.
9.
இளமதி | 6:01 முப இல் ஒக்ரோபர் 11, 2012
அம்மா உங்க திறமையே திறமை.
அனுபவப் பகிர்வோடு பிரஸாதக்குறிப்பும் தந்துட்டீங்க.
//எ ல்லோருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் என் ஆசிகள்..//
உங்க ஆசிகள் கிடைக்க எங்களுக்கும் ப்ராப்தம் இருந்திருக்கு.
அம்மா! உங்க கையால செஞ்ச ப்ரஸாதப் பொட்டலம் ஒன்னு எனக்கும் தந்துடுங்க:)
பகிர்வுக்கு ரொம்ப சந்தோஷம் + நன்றிகள்!!!
10.
chollukireen | 10:20 முப இல் ஒக்ரோபர் 12, 2012
வாவா. எவ்வளவு வேண்டும்? எடுத்துக்கொள். ஒன்றென்ன,இரண்டாக எடுத்துக்கொள். உன்னுடைய
அன்பிற்கு நன்றிகள். அடிக்கடி வாம்மா! அன்புடன் சொல்லுகிறேன்.
11.
adhi venkat | 7:23 முப இல் ஒக்ரோபர் 11, 2012
குமுட்டி அடுப்பு நானும் என் அத்தையும், பாட்டியும் உபயோகித்து பார்த்திருக்கிறேன். நீங்க சொல்ற விதத்திலேயே பசிக்க ஆரம்பித்து விட்டது. ரவா பாத்…..ஆஹா…
12.
chollukireen | 10:16 முப இல் ஒக்ரோபர் 12, 2012
பசித்தவுடனே சாப்பிடவேண்டியதுதானே? உன் முதல்வருகை. ஸந்தோஷம். கோவைடூ டெல்லியின்
மிஸஸ். ஸரிதானே நல்வரவு.
13.
Sheela | 10:49 முப இல் ஒக்ரோபர் 11, 2012
Mami,
super, ippidi nirayia ezuthungo, padikka kathu konde irukkom.
india vil irundal navarathri il kandippaga vongo.
Namaskarams.
14.
chollukireen | 6:15 முப இல் ஒக்ரோபர் 12, 2012
ஷீலா உன்னைப் பார்க்க முடியலியேன்னு நினைத்து ஏதோ என்னுடைய பதில் விட்டுப் போயிருக்கும் என்று நினைத்தேன். ரஞ்சனிஅவர்களின் பதிவில் பார்த்தேன் உன்னை.
சீக்கிரமே உன் பதிவுகளும் வரும் என்றுஎதிர் பார்க்க ஸந்தோஷமாக இருக்கிறது. நான்
மும்பையில்தான் இருக்கிறேன். மாமாவும்
அப்படியே இருக்கிறார். நவராத்திரிக்கு மானஸீகமாக அங்கெல்லாம் வந்துவிட்டுதான்
வருவேன். உன் பதிலுக்கு நன்றி. ஆசிகள்.
அன்புடன்
15.
chitrasundar5 | 3:15 பிப இல் ஒக்ரோபர் 11, 2012
காமாட்சிமா,
“லக்ஷ்மி பூஜை படமிருந்தது.நீங்களும் தரிசியுங்கள்”,_ தரிசித்துக்கொண்டோம்.நன்றிமா.
‘கொயிலா போட்டேறியும் மண் குமட்டி’_முதலில் புரியவில்லை. ‘கொயிலான்னா நிலக்கரி’_இப்போது புரிந்துவிட்டது.
‘எங்களுக்கெல்லாம் ஒரு வீடுகட்டிய பெருமை!!!!!!!!!!!!!!!!!!!!!! இருக்காதா பின்னே?’_உண்மைதான் அம்மா. செய்தவர்களுக்குத்தானே தெரியும் அதன் அருமை!
16.
chollukireen | 7:18 முப இல் ஒக்ரோபர் 12, 2012
குமட்டி தணலெல்லாம் எடுத்துவிட்டு ப்ரஸாத பாத்திரத்தை அதன்மேல் வைத்து விட்டால்
ஆறிப்போகாது. அடுப்பெல்லாம் வாங்கினதே கிடையாது. போட்டுப்போட்டு பழக்கம்.நன்றி சித்ரா அன்புடன்
17.
chitrasundar5 | 3:16 பிப இல் ஒக்ரோபர் 11, 2012
‘ரவை வெஜிடபிள் பாத்.அழகாய் சிறிக்கிறமாதிறி வெந்து இருக்கும்’_ஏதோ நேரிலிருந்து சுவைப்பதுபோலவே உள்ளது.
“இப்போது நினைத்தாலும் இரண்டொரு படங்கள் கூட எடுத்து வைக்கவில்லையே என்று தோன்றுகிறது”_நீங்க சொல்வதே பார்த்தமாதிரிதான் இருக்கு.
‘பத்மாம்மா விட்டுப்போச்சா?’_அந்த பத்மாம்மா நீங்கதானே!
18.
chollukireen | 7:14 முப இல் ஒக்ரோபர் 12, 2012
நிஜமாவே நெய்யிலே வறுத்து அந்த சூட்டில்யே கொதிக்கிரதண்ணியைக் கொட்டிக் கிளறி
2 நிம்ஷம் மூடிட்டு திறக்கும் போது அது வெந்து மலர்ந்திருப்பது எனக்கு சிறிக்கிரமாதிறிதான்
தோன்றும். 2கிலோரவை பெறியஅளவு இல்லையா!!!!!!! நான் பத்மாம்மா இல்லை.
எனக்கு இம்மாதிறி அம்மா பட்டமில்லை. ஸமவயதானாலும் மாமி ன்னுடுவா. நீயும்
ரஸித்திருக்கிராய். ஸந்தோஷம். அன்புடன்
19.
chitrasundar5 | 3:21 பிப இல் ஒக்ரோபர் 11, 2012
மஞ்சள் குங்குமத்துடன் உங்க ஆசிகளை வாங்கிக்கொண்டு,பிரஸாதத்தை சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு,மனம் நிறைய சந்தோஷத்துடன்,வீட்டிற்கு நாங்களும் கிளம்பிவிட்டோம், அடுத்த பஜனையை எதிர்பார்த்துக்கொண்டு.உங்களுடன் நாங்களும் பயணமாவது போலவே உள்ளது.
எவ்வளவு பெரிய பதிவு,விரல்களையும் கொஞ்சம் பாத்துக்கோங்க. சொல்லச்சொல்ல யாராவது தட்டினால் நன்றாக இருக்கும்.அடுத்த பஜனைக்கு இப்போதே வெயிட்டிங்.நன்றிமா.
20.
chollukireen | 6:24 முப இல் ஒக்ரோபர் 12, 2012
யாருக்கு தெறியும் தமிழ்? ரொம்பநீளமாகப்போயிடுமேன்னு கொஞ்ஜம்
குறைத்துத்தான் எழுதினேன். எழுதினதைப் படித்துக் காட்டுவேன்.பரவாயில்லேம்மா.
நன்றாயிருக்கு என்று சொல்வார்கள் பிள்ளைகள்.உன்னைப்போல பதிவுலகத்து
என் பெண்கள் பாராட்டுவதே எனக்கு முதன்மையாகத் தோன்றுகிறது.
21.
chitrasundar5 | 12:49 முப இல் ஒக்ரோபர் 13, 2012
காமாட்சிமா,
நீளம்கருதி பதிவின் அளவையெல்லாம் குறைத்துவிட வேண்டாம் அம்மா.நீங்க இப்படி எழுதும்போதுதான் நேரில் பார்ப்பதுபோலவும்,படிக்க விறுவிறுப்பாகவும் உள்ளது.அடுத்த பதிவையும் எதிர்பார்க்கத்தோன்றுகிறது. தொடருங்கள். அன்புடன் சித்ரா.
22.
திண்டுக்கல் தனபாலன் | 4:08 பிப இல் ஒக்ரோபர் 11, 2012
படங்கள் அருமை…
பிரசாத வகைகள் சூப்பர்…
நன்றி அம்மா…
23.
chollukireen | 6:04 முப இல் ஒக்ரோபர் 12, 2012
வரலக்ஷ்மி பூஜை இவ்வருஷத்திய படம்.கடவுள்
படங்கள் பூஜைக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற நினைப்பு. ப்ரஸாதம் வேண்டியது எடுத்துக் கொள்ளவும். நன்றி தனபாலன்
24.
ranjani135 | 3:04 முப இல் ஒக்ரோபர் 13, 2012
எத்தனை அழகான பழைய நினைவுகள்?
நீங்கள் போட்ட அடுப்பையாவது ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
என் மாமியார் இருக்கும் வரை குமுட்டி அடுப்புதான். விறகில், கரியில் தளிகை செய்தது எல்லாம் நினைவுக்கு வரது.
என் மாமியார் அடுப்பு போடமாட்டார். சிமென்ட்டுல சொம்பு போடுவார். .அதில் கையை அலம்பிக்கொண்டுதான் தளிகை உள்ளில் நுழையமுடியும்.
ஒருமுறை அந்த சொம்பு கிணற்று சுவற்றில் பட்டு உடைந்துவிட…
அடுத்த பதிவுக்கு விஷயம் கிடைத்து விட்டது எனக்கு!
உங்கள் நடை மிகவும் நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் நாங்கள் ‘உம்..’
கொட்டுகிறோம். காதில் விழுகிறதா?
அன்புடன்,
ரஞ்ஜனி
25.
chollukireen | 6:21 முப இல் ஒக்ரோபர் 13, 2012
ரஞ்சனி உனக்கிருக்கும் வேலையில் இங்கும் வந்து
அழகாக அபிப்ராயம் கொடுத்திருக்கிறாய். ஆமாம் உன் மாமியாரின் ஸிமென்ட் சொம்பைப் பற்றிய பதிவு
போடணுமா? போட்டாச்சா? உம் கொட்டிக்கொண்டே
தூங்கலேதானே? எவ்வளவு போட்டோ வேண்டுமானாலும் பிடிக்கலாம். அடுப்பெல்லாம்
அழகாகப் போடலாம். இதெல்லாம் யாருக்கு வேணும்.வேலையத்த வேலைன்னு சொல்லும் வரை.அன்புடன்
.
26.
ranjani135 | 7:01 முப இல் ஒக்ரோபர் 13, 2012
நீங்க கதை சொல்ற அழகுல யாராவது முழு கதையையும் கேட்காம தூங்குவளா?
சிமென்ட் சொம்பு பதிவு இன்னும் போடலை…சீக்கிரம்.
சொல்ல மறந்துட்டேனே….
மூக்குத்தி பத்தி எழுதுங்கோன்னு திருப்பியும் கேட்டிருக்கா….
நல்ல தமாஷ்!
27.
chollukireen | 8:01 முப இல் ஒக்ரோபர் 13, 2012
எழுதுங்கோ, எழுதுங்கோ. கன்னிப்பெண்ணே உன் ஒய்யாரம்
கண்டு கண்ணை சிமிட்டற மூக்குத்தியாம். இந்த வலைச்சரம் மூலம் பெண்ணு, பிள்ளை ஜாதகம்கூட கிடைக்குமா என்றஒரு
எண்ணம் கூட எழுகிறது. நாளாகநாளாக இதெல்லாம் கூட முன்னேறும். நம்மாலே ஒத்தாசை செய்ய முடியலேயேன்னு இருக்கு. மூக்குத்தி எடுப்பாயிருக்கும் போலிருக்கு.
28.
gardenerat60 | 5:41 பிப இல் ஒக்ரோபர் 29, 2012
கும்முட்டி அடுப்பும் , ரவாபாத்தும்!. அந்த வீட்டில் எப்படி ஒரு அருமையான வாசனை இருந்திருக்கும் என்று, தெரிகிறதம்மா.
அப்போவெல்லாம், கும்முட்டி அடுப்ப, தினம் க்ளீன் பண்ற வேலயே நம்முது தானே.
இப்பவும் , ஒரு கும்முட்டி அடுப்பு, பரண்ல இருக்குது. என்னிக்காவது, யூஸ் பண்ண ஆசை.;-)
நமஸ்காரம்.
29.
chollukireen | 3:33 பிப இல் ஒக்ரோபர் 30, 2012
அதுவும் கொயிலா அடுப்பை தினமும் களிமண் கரைசலைப் பூசிதான் மெழுக வேண்டும். நீங்கள் வாஸனையைக்கூட
ரஸித்து விட்டீர்கள். அடுப்பிலும் எத்தனைவகை பார்த்தாகிவிட்டது? சுலபமா
காஸ் அடுப்பையும் துடைத்தாகிவிட்டது.
சமையல்களும் எழுதியாகிவிட்டது. பார்ப்போம்!!!!!
30.
gardenerat60 | 6:00 பிப இல் ஒக்ரோபர் 30, 2012
கடந்து வந்த கால வாழ்க்கை முறைகள், இப்போது நினைத்து பார்த்தால் இனிக்குது.
நீங்கள் எழுதிய சரளமான நடை , ரசிக்கும்படி இருக்குது.
நமஸ்காரம்.
31.
chollukireen | 12:05 பிப இல் பிப்ரவரி 10, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பிிரஸாதம் எப்படி இருக்கிறது. உங்களுக்கும் ஒரு ஸாம்பிளுக்குத்தான்.இதுவும் ஒரு மலரும் நினைவுகளில்தான் சேர்த்தி.ருசித்துச் சொல்லுங்கள். அன்புடன்
32.
ஸ்ரீராம் | 1:52 பிப இல் பிப்ரவரி 10, 2022
அழகான நினைவுகள்தான். அடுப்பை தயாரித்த விதம் எனக்கும் பழைய ஞாபகம் வந்ததது. தஞ்சையில் எங்கள் சமையலறையி இரு விறகடுப்பும், ஒரு கரியடுப்பும் பூசி தயார் செய்தது நினைவுக்கு வருகிறது.
33.
chollukireen | 11:57 முப இல் பிப்ரவரி 11, 2022
பரவாயில்லையே. அடுப்புகளும் தயார் செய்யத் தெரியும் உங்களுக்கு. மலரும் நினைவாக மாறிவிட்டது உங்களுக்கும். நன்றி.ஸந்தோஷமும். அன்புடன்
34.
நெல்லைத்தமிழன் | 11:02 பிப இல் பிப்ரவரி 10, 2022
மிக அழகிய நினைவு. நல்ல வர்ணனை. எனக்கும் பஹ்ரைன் சத்சங்க நினைவு வந்தது
35.
chollukireen | 12:03 பிப இல் பிப்ரவரி 11, 2022
நல்ல காரியங்கள் எப்போதும் ஞாபகம் வருவது நல்லதில்லையா? பஹ்ரைனிலும் இதே மாதிரி ஸத்ஸங்ம் இருந்தது பற்றி அறிய ஸந்தோஷமாக இருந்தது. எல்லா இடங்களிலும் கோவிந்தநாம ஸங்கீர்த்தனம்.நன்றி. அன்புடன்