ஜெனிவாவில் நவராத்திரி
ஒக்ரோபர் 20, 2012 at 1:27 பிப 17 பின்னூட்டங்கள்
புதியதாக ஒரு அயல் நாட்டிற்குப் போகும் போது
நம் பாஷை பேசுபவர்கள், நம் மானிலத்தவர்கள்
.யாராவது அங்கு இருப்பார்களா இப்படி எல்லாம்
யோசனை தோன்றுகிறதல்லவா? அம்மாதிரி எல்லா
எண்ணங்களும் எனக்கும் தோன்றியது. ஒரு ஏப்ரல்
மாதம் திடீரென்று முதல்நாள் வந்து விட்டுமறு நாள்
நீயும் நாளைக்கு என்னுடன் வருகிறாய், டாக்டர் செக்கப்
போய்விட்டு, காலுக்கு ஷூ,ஸாக்ஸ் எல்லாம் வாங்க
போகணும் என்ற போது, எனக்கு என்னவோபோலத்
தோன்றியதே தவிர குஷி வரவில்லை. அந்த ஊரில்
அதே வருஷத்திலேயே நவராத்திரி எப்படி எல்லாம்
கொண்டாடினோம் என்பதுதான் என்னுடைய பீடிகை.
ஜெனிவா போய் 7, 8 நாட்களில் அந்த ஏப்ரல் மாதத்திலும்
குளிரு,குளிரு என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.
இங்கே யாராவது நமக்குத் தெறிந்தவா கிடைப்பாளா என்ற
கேள்விதான் மனதில் வந்து கொண்டே இருந்தது.
பார் உனக்கு நிறைய தெறிந்தவர்களைக் கொண்டு வந்து
இருக்கிறேனென்று ஒரு அழகான சிறிய புத்தகத்தைக்
கொடுத்தான் என் பிள்ளை.
ஜெனிவா இந்தியர்களின் அஷோஸியேஷன் டைரி அது.
ஒரு டைரியைக் கொண்டு கொடுத்து இதைப் படித்து பாரு
இங்கேயும் எவ்வளவு இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று
ஓரளவுக்கு உனக்குத் தெறியலாம் என்றான்.
படித்தேன், படித்தேன், அப்படிப் படித்தேன்!! போங்களேன்.
பெயர்களைப் பார்த்தே பரவசம்.
நான்கு மாதங்களுக்கு முன்பே மருமகள் அங்கு போயாகி
விட்டதால் அவர்களுக்கு, அதுவும் வேலை செய்பவர்களுக்கு
இம்மாதிரி யெல்லாம் தோன்ற நேரம் கிடையாது.
பேரைப்பார்த்தே தமிழர்கள்,தெலுங்கு, கன்னடம்,இன்னும் பல
மனதில் வாஸ்கோடகாமா நன்நம்பிக்கை முனையைக் கண்ட
ஸந்தோஷம்போல வந்து விட்டது.
வசிக்கும் ஏறியா, போன்நம்பர் முதலானது இருந்தது.
கிட்ட வசிக்கும் வசிக்கும் ஒருவருக்கு போன் செய்து சுய
அறிமுகம் செய்து கொண்டதில் அவர்களே வீட்டுக்கு
வருவதாகச் சொல்லி வந்தார்கள். இன்னும் வேண்டும்
விவரமெல்லாம் சொன்னார்கள்
நவராத்திரி விசேஷமாகக் கொண்டாடும் விஷயத்தையும்
சொன்னார்கள். எங்களிடம் கொலு பொம்மைகள் ஏதும்
இல்லாவிட்டாலும் வழக்கமாக குத்து விளக்கு பூசை செய்யும்
நவராத்ரி வெள்ளிக்கிழமையில் கூப்பிட்டு செய்யலாம் என
நாட்டுப்பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்.
ஆச்சு நவராத்ரியும் வந்தது. பேத்தி விலாஸினி
நாட்டுப்பெண் பெயர் ஸுமன். நாங்கள் ஜெனிவா வந்திருக்கும்
விஷயம், எல்லோரும் மஞ்சள்,குங்குமம் பெற்றுக்கொண்டு
ஸந்தோஷமாக பிரஸாதம் சாப்பிட்டுப் போகவேண்டுமென்று
ஃபோனிலும் கூப்பிட்டுச் சொல்லி, ஜிமெயிலில் விவரம்
கொடுத்தாள்.
கூப்பிட்ட அனைவரும் வந்தனர். சென்ற வருஷம் வீட்டில்
பெறியவருக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால் எதுவும்
செய்யவில்லை. இன்று எல்லோரையும் கூப்பிட்டிருப்பதாக
பேத்தியும்,நாட்டுப் பெண்ணும் ஃபோன் செய்திருந்தனர்.
எண்ணங்கள் ஜெனிவாவை நோக்கியது. ப்ளாக் படங்களில்
சில பகிர்வுக்குக் கிடைத்தது. 4 மணியிலிருந்து இரவு 9 மணி
வரையில் நேரம் குறித்தாலும் எல்லாம் முடிய 11 மணிக்கு
மேலேயேஆகிவிடும். வாருங்கள் யாவரும். மானஸீகமாக நான் ஜெனிவா
போகிறேன். பிரஸாதம் எடுத்துக் கொள்ள யாவரும் வாருங்கள்.
பிரஸாதங்களெல்லாம்தான் தெரியுமே! மாதிரிக்கு.
இன்னும் அனேகம் இன்னொரு நாள் வேண்டுமானால்
பார்க்கலாம். இட்லி, மிளகாய்ப்பொடி, சட்னிக்கெல்லாம்
போட்டோ வேண்டுமா என்ன?எல்லோருக்கும் வாழ்த்துகள்.
போட்டோக்கள் 2,3 வருஷங்களுக்கு முந்தையது.
Entry filed under: சில நினைவுகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
திண்டுக்கல் தனபாலன் | 2:02 பிப இல் ஒக்ரோபர் 20, 2012
ஜெனிவா பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்…
2.
VAI. GOPALAKRISHNAN | 4:06 பிப இல் ஒக்ரோபர் 20, 2012
மிகவும் நல்ல பதிவு. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
நாங்கள் 2004 நவராத்திரியின் போது துபாயில் இருந்தோம்.
அங்கும் இதுபோல மிகச்சிறப்பாகவே செய்கிறார்கள்.
ஆண்கள்,பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் ஒவ்வொருநாளும் காலையில் ஒரு வீடு, இரவு ஒருவீடு என பேசிவைத்துக்கொண்டு கூடி விடுவார்கள்.
லலிதா சஹஸ்ரநாமம் திவ்யமாகச் சொல்கிறார்கள்.
ஆளாளுக்கு டெலிஃபோனில் பேசிவைத்துக்கொண்டு, ஒவ்வொரு பிரஸாதமாக செய்துகொண்டு காரில் எடுத்து வந்துவிடுவார்கள். அனைவரும் நைவேத்யம் முடிந்ததும் அனைத்தையும் பகிர்ந்து சாப்பிடுவார்கள்.
அதைப்பற்றியே நான் ஓர் தனிப்பதிவு எழுதணும் என்று நினைத்திருந்தேன். ஏனோ கைவரவில்லை.
நம் ஊரைவிட சிறப்பாகவே பக்தி சிரத்தையுடனே எல்லாம் செய்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
நல்லதொரு பகிர்வு, பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
அங்குள்ள தமிழ்சங்க நிகழ்ச்சிகளில் நானும் என் மனைவியும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டோம்.
என் பேரன் பேத்திகளுக்கும் எங்கள் கையாலேயே பரிசு அளிக்க நேர்ந்தது, மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த இணைப்பில் பாருங்கோ:
http://gopu1949.blogspot.in/2011/07/5.html
துபாய்ப் பயணம்
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
3.
chollukireen | 12:18 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
மிகவும் நன்றி. உங்கள் எல்லோருக்கும்
அன்பான என்னுடைய வாழ்த்துகள். அன்புடன்
4.
chollukireen | 12:42 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
இணைப்பையும் பார்த்தேன். தாத்தா ஸ்தானம் மிகவும் மகிழ்ச்சியானதொன்று. ஆசிகளுடன் சொல்லுகிறேன்.
5.
Venkat | 3:03 முப இல் ஒக்ரோபர் 21, 2012
சிறப்பான பகிர்வு.
தயிர் வடை படம் சாப்பிடத் தூண்டுகிறது!
6.
chollukireen | 9:39 முப இல் ஒக்ரோபர் 22, 2012
வடை நன்றாக இருக்கும். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி. அன்புடன்
7.
இளமதி | 6:23 முப இல் ஒக்ரோபர் 21, 2012
அம்மா, ஜெனிவாவிற்கு சென்றபோது பெற்ற நவராத்திரி அனுபவங்கள் உங்கள் டயலாக்கில் நன்றாக இருக்கிறது:)
நீங்கள் கூறுவதுபோல இங்கு வீடுகளில் என்றில்லாமல் கோவில்கள் இருப்பதால் பெரும்பாலும் எல்லோரும் அங்கேகூடிப் பிரார்த்தித்து பிரஸாதம் பகிர்வதுண்டு.
வேலை நாட்கள், நேரமாற்ற வேலைகாரணமாக வருவோர் எண்ணிக்கை கூடிக்குறையும்.
ஸரஸ்வதி பூஜை ஆரம்பம் தொடக்கம் விஜயதசமி வரையும் அதனைத்தொடர்ந்தும் கலை நிகச்சிகள் நடத்தி மகிழ்வார்கள்.
உங்கள் அனுபவம் + போட்டோக்கள் அருமை.
பிரஸாதம் எடுத்துக்கொண்டேன்.
மேலும் உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா!
8.
chollukireen | 12:24 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
அன்புள்ள இளமதி உன் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. என்னுடைய ஆசிகளும், வாழ்த்துக்களும் உங்கள் யாவருக்கும். அன்புடன்
9.
chitrasundar5 | 1:55 முப இல் ஒக்ரோபர் 22, 2012
காமாட்சிமா,
1960 களிலிருந்து இப்போ 2010 க்கு வந்தாச்சு. மானஸீகமாக நாங்களும் ஜெனிவா நவராத்திரி பூஜைக்குக் கிளம்பிட்டோம்.மறக்காமல் பிரசாதம் எடுத்துக்கொள்ள சொன்னதில் மகிழ்ச்சி.பிரசாதமெல்லாம் சூப்பரா இருக்கு.அதிலும் குத்து விளக்கு அலங்காரம் சூப்பரோ சூப்பர்.நீங்கள் செய்ததா?
“இட்லி,மிளகாய்ப்பொடி,சட்னிக்கெல்லாம் போட்டோ வேண்டுமா என்ன?”_ நீங்கமட்டும் படம் போடாமல் இருந்தால் நாங்க இவ்வளவு அழகான தயிர்வடையை மிஸ் பன்னியிருப்போம்.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 12:39 பிப இல் ஒக்ரோபர் 22, 2012
அன்புள்ள சித்ரா எண்ணங்கள் தாவிக்கொண்டே இருப்பது என்பது இதுதான். உன்னுடைய பின்னூட்டம்
ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது. உங்கள் எல்லோருக்கும் என் ஆசிகள். இவ்வருஷத்திய ஜெனிவா நவராத்ரி போட்டோக்கள் வந்திருக்கிறது.
எல்லோருக்கும் சுருக்கமான பதில்கள் எழுதியிருக்கிறேன். அன்புடன்
11.
gardenerat60 | 4:38 பிப இல் ஒக்ரோபர் 29, 2012
அழகான பதிவு அம்மா! உங்கள் உற்சாகம் எல்லாரையும் தொத்திக்கொண்டு, அருமையாக கொண்டாடியது , பற்றி , படிக்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது.
நமஸ்காரம்.
12.
chollukireen | 3:08 பிப இல் ஒக்ரோபர் 30, 2012
ஆசிகள்.உங்களுடைய பின்னூட்டம் அருமையாக இருக்கு. எழுதினால்ப் போதாது. கொண்டாடவும் மனுஷாள் வேணும். இந்த வயதிலே இப்படி ஒரு ஸந்தோஷம் உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டம் கண்டு. நான் ஜாஸ்தி வரேனோ,வல்லையோ நீங்களெல்லாம் வந்து கொண்டே இருங்கள். அன்புடன்
13.
Pattu | 2:08 பிப இல் ஒக்ரோபர் 31, 2012
கட்டாயமா, எழுதிண்டே இருங்கோ, நாங்க படித்து மகிழ காத்திருக்கோம்.
14.
chollukireen | 11:41 முப இல் நவம்பர் 3, 2012
எவ்வளவு அன்பாக எழுதுகிறாய். மகிழ்ச்சியம்மா. அன்புடன்
15.
B Jaya | 6:16 பிப இல் ஒக்ரோபர் 31, 2012
நீங்கள் எழுதிய ஜெனீவாவில் நவராத்தி கட்டுரையை படித்தேன். நன்றாக இருந்தது.
இதை படித்த போது என் சிறுவயது நவராத்திரி நினைவிற்கு வந்தது. அதற்கும் இப்போது இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என நினைத்தேன்.
தயர் வடையை சாப்பிட வேண்டும் போல இருந்தது. பிரசாதம் தருவீர்களா?
16.
chollukireen | 11:44 முப இல் நவம்பர் 3, 2012
சில பதிவுகளைப் படிக்கும்போது, நம் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளும் கண் முன்னே வரச்செய்யும். மலரும் நினைவுகளல்லவா? அன்புடன் சொல்லுகிறேன்.
17.
chollukireen | 11:47 முப இல் நவம்பர் 3, 2012
உன் வரவிற்கு மிகவும் நன்றியம்மா. அன்புடன்