எப்படியிருக்கு.?
நவம்பர் 3, 2012 at 5:44 பிப 19 பின்னூட்டங்கள்
எங்கே அனில் வந்தாச்சா?
அவன் வந்து பத்து நிமிஷத்துக்கு மேலே ஆச்சே!
என்ன பண்ரான் பாரு. ஃபேன் பலமா சுத்தறது. சாப்டப்றம்
தூக்கம்தான் வரும். தடார்னு ஓசை கேக்கறதே.
ஓடிப் போய்ப் பார்த்தால் நான் ஓடலே. வேலை செய்யும்
மாதவி பார்க்கிறாள்.
அம்மா, அம்மா அந்த அனில்தான் மோடாவோட கீழே
விழுந்துட்டான். தூக்கக் கலக்கம்போல!
விழுந்தவனுக்கு ஒரு உணர்ச்சியுமில்லை.
ஸந்தேகப்பட்டது ஸரியாப் போச்சு. மத்தியானத்திலேயே
ஏதோ குடிச்சிருக்கான்.
ஏஜன்ஸி,ஏஜன்ஸி. எதுக்கெடுத்தாலும் ஏஜன்ஸி.
நல்லவனா அனுப்பு. நல்லவனாகத்தான் கிடைத்திருக்கிறான்
நம்பிக்கையோடு பணம் கட்டி, நல்லவனா நினைத்தவன்
விழுந்து கிடக்கிறான்.
அவன் ஒரு பிஹாரைச் சேர்ந்தவன். ஆறு குழந்தைகள்
அவனுக்கு. வயதானவரைப் பார்த்துக் கொள்ள வந்தவன்.
ஸந்தேகம் ஸரியாக இருக்கு. அவன் இப்படி, இவன் இப்படின்னு
சொன்னால் ஆள் கிடைக்குமா? மனதில் தோன்றியது ஸரி
ஆக இருக்கு. நடு ராத்ரியில் எட்டிப் பாத்தா ஸெல்லெ தாளமாக்கி
அதுவும் பாடரது, இவனும் படுத்துண்டே பாடறான். வெளியில்
யாரோ பாடரதா நினைச்சுண்டு.
இரண்டு வார்த்தை ஜோரா ஹிந்தியிலே கோவமா சொன்ன பிறகு
பேசாத இருந்தான்.
ராத்ரி பத்து மணிக்கு வரச்சே வாயிலே பான் அது இது , கேட்டா
குச் நஹி, தோடா சுபாரி, வாஸனை மறைக்க பாக்காம்.
இன்று ப்ரத்யக்ஷ்க்ஷமாக கண் காட்சி.
ஸரி வேற ஆள் ஏஜன்ஸி அனுப்புவதாக, எல்லாம் ஒண்ணோட
ஒண்ணு கண்ணான கண்ணாக இப்படி.
தேர்வுக்கு வந்தான் ராஜேஷ் கன்னாவோட இருந்த ஆள்.
பேர் பிரமோத். நிறைய கதை சொன்னான்.
ஸரி இருந்துட்டு போகட்டும், வைச்சா அவனுக்கு வந்தது
வைரல் ஜுரம். தங்கி இருக்கும் அறைக்குப் போய்விட்டு ஜுரம்
ஸரியானதும் வரேனென்று போனான். போர்வையோடு போனவன்
கிராமத்துக்குப் போய்விட்டதாகவும் ஒரு மாதம் கழித்து
வருவதாகவும். ஏஜன்ஸி திரும்பவும் ஆள். இன்டர்வியூ.
ஸிகரெட், குடி,பான் ஏதாவது பழக்கம் இல்லாத ஆள், நிறைய
ஆட்கள் வந்தனர். ஏதாவது பழக்கம், இது கூட இல்லாமலாகுமா?
எதிர் கேள்வி, எதுக்கு ஸம்பாதிக்கிறோம்.?
வந்தானொருவன்.
அனில் இல்லை ஸுனில். 25, 26 வயது . யூபி ஆஸாமி.
எந்த பழக்கமும் இல்லை. கல்யாணம் ஆகி, குழந்தை ஒண்ணு
இருக்கு. கிராமத்து ஆள். நான் ஸரியாக இருப்பேன் என்றான்.
பையனைப் பார்த்தால் நம்ம பேரன் மாதிறி இருக்கான்.
ஆமாம்!!!!!!!! ப்ரகாஷ் மாதிறியே இருக்கான்.
களை சொட்றது. நல்ல மாதிறி தோன்றது.
இந்த வயதில் கல்யாணம், குழந்தை, வேலை, 10 கிளாஸ்
படித்தேனென்று வேறெ சொன்ன பிறகு ஐயோபாவம்,மனது
அவனையே சுற்றி வந்தது. யாருடைய துணிகள் இவனுக்கு
ஸரியாக இருக்கும்? எப்படியெல்லாம் இவனுக்கு ஒத்தாசை
செய்யணும்? எதைப் பண்ணாலும் இவனுக்குக் கொடுத்து
இவன் குழந்தைக்கும், மனைவிக்கும் கூட துணி, மணிகள்
நல்லதா கொடுக்கணும். நாட்டுப் பெண்ணுக்குச் சொல்லிஊரிலிருந்து
வரும்போது எதெல்லாம் கொடுக்க முடியுமோ கொண்டுவரச்
சொல்லணும். அவனை ஒரு பேரனாகவே கற்பன செய்து
கொண்டு அவனை புனருத்தாரணம் செய்ய மனது கற்பனையில்
கனன்றும், தெளிந்தும்,பெறிய மனக்கோட்டைகளைக் கட்ட
ஆரம்பித்தது.
கார்த்தாலே பத்து மணிக்கு வந்தான் ஸுனில். சும்மா காலேஜ்
ஸ்டூடன்ட் கணக்கா பெரளப்பெரள பேன்டூம், காலில் ஷூவும்.
பேகெல்லாம் காட்டு, 2பேன்டும், 2ஷர்டும், பனியன் ஸாக்ஸ்
வகையரா. ஸரி பெரியவரோட ஒரு கேம் கேரம் விளையாடு.
கார்த்தாலே சாப்பிட்டானா கேளு. மணி 11 ஆரது. என்ன கேள்வி?
சும்மா இருங்கம்மா. சாப்பிடதான் பணம் கொடுக்கப் போகிறோமே?
நாட்டுப் பெண் சொல்கிறாள். ஒரு வார்த்தை, கேட்டால் என்ன தப்பு?
மனதில் தான் நினைக்க முடிந்தது.
பணம் எவ்வளவு இருக்கு?
வரச்சே பணம் பஸ்ஸிலே திருடுபோச்சு.மனது பாவமாக இருந்தது.
காலையில் குளிக்கலே. பாத்ரூம் எங்கே? ஸுனிலின் கேள்வி.
மாதவி பக்கெட்டைக் கொடுத்து க்ரவுன்ட் ஃபோர்லே காமன்
பாத்ரூமைக் காட்டுகிறாள்.
வந்தவுடன் 500 ரூபாயைக் கொடுத்து சாப்பாட்டுக்கு வைத்துக்
கொள். பணம் கைமாறுகிறது.
சாப்ட்டாயா?
பூரி சாப்பிட்டு வந்தேன். சாயங்காலம் சாப்பாடு சாப்பிடறேன்.
துணியெல்லாம் நினைத்துப் போடறேன். காலுக்கு ஒரு செருப்பு
வாங்கிவரேன்னு போனான். வருவான், வருவான்னு பாத்ததுதான்
மிச்சம்.
அவனைக் காணோம். தெறியலியே!!!!!!!!!!
வெளியில் போய்விட்டு வந்த நாட்டுப் பெண்ணுக்கு செய்தி
அஞ்சல் ஆகிறது.
மளமளவென்று ஸெல்போனைத் ஓசையில்லாமல்த் தட்டுகிறாள்.
அதுவும் ஓசையில்லை. ஒண்ணறை நாழி டூப்லிகேட் பேரனும்
ஓசையில்லை.
ஸ்விச்ஆஃப் வறது.
எங்கே போயிருப்பான்?
வரச்சேயே அப்பா பேண்டை மடிச்சு விட்டுக்கோ!!! ரொம்ப பெரளறது.
அப்படீன்னு சொன்னா. மூஞ்சியே வேறமாதிறி போச்சு.
அப்பவே நினைச்சுண்டேன்.
பணத்தை வேறு கொடுத்திங்களா?
நீதானே கொடுக்கச் சொன்னே. சொல்ல முடியுமா?
ஏஜன்ஸிக்கு போன் பரக்கிறது.
ஸுனில் -போன் ஆஃப். அவன் இப்படிதான் இரண்டொரு இடத்தில்
செய்திருக்கான். ஏஜன்ஸியின் ஒரு பெண் முணுமுணுக்கிறாள்.
வேறெ நல்ல ஆளா அனுப்பறோம். ஏஜன்ஸியின் போன் வருகிறது.
வெல்லம் போட்ட ஆளா அனுப்பட்டும். உறக்கவே சொல்ல முடிகிறது.
உன் வயதுக்கு பேரனா தோன்றுவான். அவன் வயதுக்கு நீ பாட்டியோ,
தாத்தாவோயில்லை. அன்புக்கு அளவுகோல் வேறெ வேண்டும்
போலிருக்கு. இது தோல்வியில்லை. உலகம் எப்படி இருக்கு?
Entry filed under: நடப்பு.
19 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 8:06 பிப இல் நவம்பர் 3, 2012
அன்புக்கு அளவுகோல் வேறெ வேண்டும்
போலிருக்கு. இது தோல்வியில்லை. உலகம் எப்படி இருக்கு?//
இப்படிபட்ட விஷயங்கள் மனதுக்கு வருத்தமாக இருக்கும் ..
நமது நம்பிக்கையை இவர்கள் கெடுத்து விடுகிறார்கள் ..
நானும் நிறைய ஏமாந்திருக்கேன் பாவம் பரிதாபப்பட்டு ….ஆனா நாம் நாமாகவே இருப்போம் ..அவங்க மனசு உறுத்தி ஒரு நாள் திருந்துவாங்க
2.
chollukireen | 11:03 முப இல் நவம்பர் 4, 2012
இப்படி மனிதர்கள் இருந்தால்தான், நாம் பக்குவப் பட்டிடுவோம். ஆம். நாம், நாமாகத்தான் இருக்க வேண்டும். நன்றாக இருக்கு உன் பின்னூட்டம். அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 8:42 பிப இல் நவம்பர் 3, 2012
//வேற நல்ல ஆளா அனுப்பறோம். ஏஜன்ஸியின் போன் வருகிறது.
வெல்லம் போட்ட ஆளா அனுப்பட்டும்.
உறக்கவே சொல்ல முடிகிறது.
உன் வயதுக்கு பேரனா தோன்றுவான்.
அவன் வயதுக்கு நீ பாட்டியோ,
தாத்தாவோயில்லை.
அன்புக்கு அளவுகோல் வேறு வேண்டும் போலிருக்கு.
இது தோல்வியில்லை.
உலகம் எப்படி இருக்கு?//
நல்லா அனுபவித்து எழுதியிருக்கீங்க மாமி.
நிறைய இளைஞர்கள் இப்படித்தான் உள்ளார்கள்.
நாம் என்ன செய்வது?
எல்லோருமே நல்லவர்களாக அமைவது இல்லை.
சொன்னாலும் திருந்துவது இல்லை.
உலகம் பலவிதம் தான்.
ஒரு சிலர் நம் அன்புக்குக் கட்டுப்படலாம்.
நல்லதொரு படைப்புக்குப் பாராட்டுக்கள்.
என் பதிவுக்கு வந்து ஆசீர்வதித்து இரண்டு வரிகள் எழுதிட்டுப்போங்கோ மாமி.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2012/11/blog-post_3.html?showComment=1351974289990#c2434878066671317492
அன்புடன்
கோபு
4.
chollukireen | 10:59 முப இல் நவம்பர் 4, 2012
உங்கள் பதிவுக்குப் போனேன். முன்னாடி என் விகடனைப் பார்க்கணும் என்று தோன்றியது. ஆன் லைனில் தானே? உடனே ஓடினேன். ஒரு பின்னூட்டத்தையும் என் விகடனில் போட்டுவிட்டு
வந்தேன். திரும்பவும் உங்கள் தளத்திற்கு வரேன்.
ப்ளாக்ஸ்பாட்லே பின்னூட்டம் போகும்,போகாது, இதுதான் கார்த்தாலேயும் ஆயிற்று. பதிவுலக ஜாம்பவானா இருக்கிங்கோ நீங்கள். அன்புடன் ஆசிகள்
5.
Venkat | 1:54 முப இல் நவம்பர் 4, 2012
இங்கே தில்லியிலும் இது போல பல நிறுவனங்கள் இருக்கின்றன. வீட்டு வேலை செய்யவும், நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் பணியாட்களை அனுப்புவதும் செய்வார்கள். பெரும்பாலான ஆட்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்…. எனது கீழ் வீட்டில் இப்படி வந்த ஒரு பெண்மணி நிறைய படுத்தினார்…. பிறிதொரு சமயத்தில் எனது பக்கத்தில் அது பற்றி எழுதுகிறேன்….
6.
chollukireen | 11:07 முப இல் நவம்பர் 4, 2012
நிறைய அனுபவங்கள். நல்லதும்,கெட்டதும் கலந்த உலகம்தானே. உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் ஸந்தோஷம். அடிக்கடி வாருங்கள். அன்புடன்
7.
ranjani135 | 3:05 முப இல் நவம்பர் 4, 2012
உங்களையும் என்னையும் இந்த வார வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
இணைப்பு இதோ:
91, 92
http://blogintamil.blogspot.in/2012/11/8.html
8.
chollukireen | 11:14 முப இல் நவம்பர் 4, 2012
ரஞ்ஜனி போகும் இடமெல்லாம் என்னையும் அழைச்சுண்டு போறே. உன்னோட பேச நினைக்கிறேன்.
வீட்லே ஏதோ முடியலே..பிஸின்னு சொல்லலாமா?
ஏதோ வேலை. ஸரியாயிருக்கு. புரிந்து கொள்வாய்.
அன்புடன்
9.
இளமதி | 7:32 முப இல் நவம்பர் 4, 2012
அம்மா…ஏஜென்ஸி மூலமா வீட்டுக்கு ஒத்தாசைக்கு ஆள் எடுக்கிற விஷயமே எனக்கு இப்போதான் உங்க கதையை படிச்சு புரிஞ்சுகிட்டேன்.
ஐயோ!… வாரவங்க இப்பிடி எல்லாமா பண்ணுவாங்க…:(
கதை நல்லா இருக்கு. எழுதியிருக்கிறவிதமே அருமை.
இன்னும் இப்படி சின்ன சின்னக் கதைகளை முடியும்போது தொடர்ந்து தாருங்கள் அம்மா.
10.
chollukireen | 11:16 முப இல் நவம்பர் 4, 2012
இது கதை இல்லை. காதை. அப்படின்னா நிகழ்கால
ஸம்பவங்கள். அருமையா எழுதியிருக்கேனா?
இதுதான் ஸந்தோஷம். அன்புடன்
11.
chitrasundar5 | 7:30 பிப இல் நவம்பர் 5, 2012
காமாட்சிமா,
ஒருநாள் வேலைக்கு வந்து, ஓடிப்போன (ஏமாற்றிவிட்டு) ஆளைப்பற்றி,நடந்தது நடந்தவாறே,அழகான கதையா வடிச்சிருக்கீங்க.படிக்க விறுவிறுப்பா இருக்கு.
“ஒரு வார்த்தை,கேட்டால் என்ன தப்பு?,வெல்லம் போட்ட ஆளா அனுப்பட்டும்,அன்புக்கு அளவுகோல் வேறெ வேண்டும் போலிருக்கு,” __கதை போகும்போக்கில் சில வரிகள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 5:32 முப இல் நவம்பர் 6, 2012
ஆசிகள் சித்ரா. நீயாகத்தானிருக்கும் என்று நினைத்துக்
கொண்டே பார்த்தேன். நீயேதான். விறு விறுப்பா இருந்தா
நல்லது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். ஊக்கம்
கொடுத்ததற்கு காமாட்சிமாவின் விசேஷ நன்றிகள்.
அன்புடன்
13.
Sheela | 9:20 முப இல் நவம்பர் 7, 2012
Mami, SUPER… vera onrum ezutha theriya villai enakku.
14.
chollukireen | 10:41 முப இல் நவம்பர் 7, 2012
இதைவிட என்ன எழுதணும்?ஒரு வார்த்தை எழுதினாலும் சூப்பர்தான். அன்புடன்
15.
Geetha Sambasivam | 2:47 முப இல் நவம்பர் 4, 2016
யாரையும் நம்ப முடியவில்லை. எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்! 😦 பணத்தாசை பிடித்து ஆட்டுகிறது! 😦
16.
chollukireen | 9:27 முப இல் நவம்பர் 5, 2016
உண்மை.அவநம்பிக்கையுடனே ஆட்களையும் வைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயம். கதைகள் நீண்டு கொண்டேதான் போகும். இதுவும் ஒரு வாழ்க்கை முறை. நன்றி அன்புடன்
17.
chollukireen | 12:00 பிப இல் ஓகஸ்ட் 30, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
யாவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
மீள் பதிவு செய்ய பத்து வருஷங்களாகத் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் கதைகளில் இது முதல் அனுபவம். எவ்வளவு உஷாராக இருந்தாலும் அனுபவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.பத்து வருஷங்களாக. அன்புடன்
18.
ஸ்ரீராம் | 12:15 பிப இல் ஓகஸ்ட் 30, 2021
நமஸ்காரம் அம்மா. கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
தங்க முட்டை இடும் வாத்தின் வயிற்றை அறுத்த கதையாக அல்லவா இருக்கிறது…
19.
chollukireen | 12:19 பிப இல் ஓகஸ்ட் 30, 2021
ஆசிகள். இப்போதைய அனுபவங்கள் இரட்டிப்பு. இப்படித்தான் இருக்கும். வயோதிகம். நன்றி. அன்புடன்