நேபாளத்தில் தீபாவளி

நவம்பர் 10, 2012 at 5:41 பிப 35 பின்னூட்டங்கள்

பசுபதிநாதர் கோயில்

குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள்

பலவித பெயர்களைச் சொல்லிக் கொண்டாடுவார்கள்.நேபாளத்தில்

கடவுள் பக்தி அதிகம்.   முன்பு  அரசாட்சியாக இருந்த போது,  நவராத்திரி

தொடங்கி,    தீபாவளி முடிந்து  நான்கந்து நாட்கள்   வரை அதாவது ஒரு

மாதத்திற்கதிகமாக   ஸ்கூலிற்கு  விடுமுறை  விட்டுவிடுவார்கள்.

எல்லா பண்டிகைகளின் போதும்  டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம்

ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும்  ரக்ஷையை  நெற்றியிலிட்டுக் கொள்வது

அவர்களாகவே  நெற்றியிலிட்டு  ஆசீர்வதிப்பது   முக்கியமான நிகழ்ச்சியாகும்.

டீக்கா என்பது  சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன்  செந்தூர்க்

குங்குமம் சேர்த்து   கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக

ஒட்டிக்கொண்டு பளிச்சென்று  பார்வையாக இருக்கும்.

ஒரு ரூபாயளவிற்கு   இதை நெற்றியிலிட்டு  வயதில்ப் பெறியவர்கள்

சிறியவர்களுக்கு   ஆசி வழங்குவார்கள்.    தசராவில் இந்த ஆசியை

வாங்க  எங்கிருந்தாலும்   வீட்டுப் பெறியவர்களிடம்   வந்து சேர்ந்து

விடுவார்கள்.   திஹார் என்றால்  நேபாலியில்  பண்டிகை என்று அர்த்தம்.

தீபாவளியை   ஐப்பசி அமாவாஸையன்று  கொண்டாடுகிறார்கள்.

அன்று  தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள்,  அன்றே காய் பூஜாஅதாவது

பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.

அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில்  முதல் நாள்

கௌவா பூஜா.   காக்கையை கவுரவித்து அன்னமிட்டு  பூஜை.

சுற்றுப்புற சூழலுக்கு   நன்மை செய்வதைப் போற்றி  நடக்கிறது.

மறுநாள் குகுர்   அதாவது   வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக்

கவுரவித்து,  பைரவர் எனப்போற்றி    நாய்க்கு மாலை அணிவித்து,

திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு  அதைக் கவுரவிக்கிறார்கள்.

லக்ஷ்மி பூஜை பெறிய அளவில்  வீட்டைத் தூய்மை செய்து வண்ண

விளக்குகளாலும்,  பச்சைத் தோரணங்களும்  மஞ்சள்ப் புஷ்பங்களாலும்

அலங்கரித்து, பலவித  புஷ்பங்களும்,  பழங்களும்,   இனிப்புகளும்

லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணித்து   சாயங்காலம்  தேவிக்கு அமோகமான

பூஜை   மிகவும் சிரத்தையுடன் அர்ப்பணிப்பார்கள். பூஜை அரையிலிருந்து

செம்மண்ணால்   வாயில் வரை லக்ஷ்மியை வரவேற்க பளிச்சென்று

மெழுகி வைத்து  வரவேற்பார்கள்.

மண் அகலில்  எண்ணெய்,திரி போட்ட   விளக்குகளை ஏற்றி

ஒவ்வொரு வீடும் ஜெகஜ்ஜோதியாய் ஜொலிக்கச் செய்வார்கள்.

இடித்த அரிசிமாவில்,பால்,நெய், வாழைப்பழம்,சர்க்கரை

சேர்த்துக் கறைத்து  பெறிய,பெறிய  டோநட்டுகள் போல ஒரு

இனிப்புப் பண்டம் பெயர்,   ஸேல்என்று சொல்வார்கள்.

அந்த இனிப்புப் பண்டத்தை எண்ணெயிலோ,நெய்யிலோ,

பொறித்து எடுப்பார்கள். ஸேல் ரோடி என்ற  அந்த  இனிப்பு

நம்முடைய  அப்பம் போன்ற  சற்று இனிப்புள்ளதாக இருக்கும்.

அது இல்லாத திஹார் இல்லை. நாம் எந்தத் தின்பண்டங்கள்

கொடுத்தாலும் அதன் பெயருடன் ரோடி என்பதை இணைக்காது

இருக்க மாட்டார்கள்.

உதாரணம். இட்லி.டல்லோ டல்லோ ரோடி  இட்லி.  டல்லோ என்றால் பெரிசு

தோசை.பத்லோ ரோடி தோசா.   மெல்லிசாம்.  பத்லோ

பழங்கள் ஹல்வாபேர்,பொகட்டே.ஸும்தலா,அம்பா,கேலா,அனார்.

இவைகள் நிவேதநத்ததிர்கு   முக்கியமானவை.

இவைகள் முடிந்து பெறியவர்கள்   எல்லோருக்கும் டீக்கா கொடுத்து

ஆசிகள் அளிப்பார்கள்.

இரவு   பெண் குழந்தைகள் ஒன்று சேர்ந்து    அருகிலுள்ள வீடுகளுக்குச்

சென்று வாழ்த்துக் கூறும் பாட்டுகளைப் பாடி   அன்பளிப்புக் கேட்பார்கள்.

மாதிரிக்கு இரண்டுவரி பார்ப்போமா?

ஹே அவுசி பாரே  காய ஆயர பைலோ.இந்த  அமாவாஸையில்பாட

வேண்டி வந்திருக்கோம்.

ஹே அவுசிபாரே   லக்ஷ்மி பூஜா கரேகோ,லக்ஷ்மி பூஜா செய்த நாளில்

ஹே அவுசிபாரே  லக்ஷ்மி ஆயர பொஸேகோ,லக்ஷ்மி  எப்பவும் வந்து இருக்க

இப்படி வீட்டு வெளியில் பாடி   அன்பளிப்பு எதுவானாலும் பெறுவார்கள்

இதே ஆண்கள்  பெறியவர்கள்,  சிறியவர்கள்,  கும்பல்,கும்பலாக

வாத்தியங்களுடன் வந்து, பாடி,  ஆடி சாப்பிட்டு,  கொஞ்சம் குடித்து

என்ஜாய் பண்ணிவிட்டு பெறிய தொகையாய் வாங்கிக் கொண்டு

பல வீடுகளுக்கும் போய் கலெக்க்ஷன் செய்து பங்கிட்டுக் கொள்வார்கள்.

இதில்,படித்து உத்தியோகம் செய்யும் செல்வந்தர்களும் அடக்கம்.

இவர்கள் ஆசீர்வதிக்கும் பாட்டின் இரண்டு வரியும் பார்க்கலாமே?

ஹே பனபன  பைகோ டவ்சீரே  சொல்ரோம்சொல்ரோம் வாழ்த்துகள்

ஹே ஆயகோ ஹாமி டௌசீரே நாங்கள்  வந்திருப்பது அதற்குதான்.

ஹே தின்சன் தின்சன் டௌசீரே.கொடுப்பார்கள் கொடுப்பார்கள்

வாழ்த்துக்கு

ஹேகர் கொஸ்தோ டௌசீரே , இந்த வீடு எப்படி வாழ்த்துவதற்கு

ஸிங்கதர்பார் ஜஸ்தோ  டௌசீரே.பார்லிமென்ட் மாதிறி வாழ்த்த

டூலோ மஹால் ஜஸ்தோ, பெறிய பங்களா மாதிறி,

இப்படி பலதினுஸில்   இட்டுக் கட்டிப் புகழ்ந்து பாடி வேண்டிய

முக்கியமான இடங்களில் பாடி மகிழ்ந்தவர்களின் ஞாபகம்

வந்தது.  பசுபதிநாதர் எல்லோரையும் வாழ வைக்கும் தெய்வம்.

இன்று இதை எழுதும்படியான  ஒரு  நிலையைக் கொடுத்த

எல்லாம்வல்ல  பசுபதி நாதரை வணங்கி எல்லோருக்கும்

நன்மையைக் கொடுக்கும்படி பணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

இனிமையான  நினைவுகளில்    சகோதர பூஜை நாளை பாய் டீக்கா

அடுத்து எழுதுகிறேன்.  தீபாவளி வாழ்த்துகள்.பட்டாசுகள் படபடக்கின்றன.

நானும் இப்பதிவைப் போஸ்ட் செய்கிறேன்.

தீபங்கள்

தீபாவளி வாணங்கள்

Entry filed under: சில நினைவுகள்.

எப்படியிருக்கு.? வாழ்த்துகள்

35 பின்னூட்டங்கள் Add your own

 • 1. angelin  |  8:06 பிப இல் நவம்பர் 10, 2012

  அருமையான நினைவுகளை மற்றும் அறிந்திராத பல தகவல்களை குறிப்பா பைரவரை கவுரவித்து,மரியாதை செலுத்துவதுபோன்ற விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிம்மா .இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

  மறுமொழி
  • 2. chollukireen  |  6:21 முப இல் நவம்பர் 11, 2012

   இன்னும் கூட விஷயங்கள் இருக்கலாம். திடீரெனத் தோன்றிய சிலவைகள் தான் இவைகள் . உடனுக்குடன் பின்னூட்ட சிலாகிப்புக்கு மிகவும் நன்றி.
   அஞ்சு உனக்கும், உன் குடும்பத்தினனைவருக்கும்,
   எங்கள் குடும்பத்தினரின் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன்.

   மறுமொழி
 • 3. VAI. GOPALAKRISHNAN  |  10:20 பிப இல் நவம்பர் 10, 2012

  பசுபதி நாதர் கோயில், தீபங்கள், தீபாவளி வாணங்கள் ஆகிய படங்கள் அருமை.

  >>>>>>>

  மறுமொழி
  • 4. chollukireen  |  6:29 முப இல் நவம்பர் 11, 2012

   உங்கள் பதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிகளுடன்
   தீபாவளி வாழ்த்துக்களும் உங்கள் யாவருக்கும் சொல்லுகிறேன். அன்புடன்

   மறுமொழி
 • 5. VAI. GOPALAKRISHNAN  |  10:22 பிப இல் நவம்பர் 10, 2012

  நேபாளத்தில் தீபாவளி பற்றிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  >>>>>>>>

  மறுமொழி
  • 6. chollukireen  |  6:32 முப இல் நவம்பர் 11, 2012

   பாராட்டுகள் மீண்டும் எழுதுவதற்கு உற்சாகத்தைக்
   கொடுக்கிற..தென்பதில் ஸந்தேகமே இல்லை.நன்றிகள்.
   அன்புடன்

   மறுமொழி
 • 7. VAI. GOPALAKRISHNAN  |  10:30 பிப இல் நவம்பர் 10, 2012

  //இனிமையான நினைவுகளில் சகோதர பூஜை நாளை பாய் டீக்கா அடுத்து எழுதுகிறேன். தீபாவளி வாழ்த்துகள்.பட்டாசுகள் படபடக்கின்றன.
  நானும் இப்பதிவைப் போஸ்ட் செய்கிறேன்.//

  ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  ”ஸ்வீட் சிக்ஸ்டீன்” என்ற தலைப்பில் கோமாதா பற்றிய ஆன்மிகப்பதிவு படிக்க வாங்கோ மாமி. இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

  தீபாவளி நமஸ்காரங்களுடன்,
  கோபாலகிருஷ்ணன்

  மறுமொழி
  • 8. chollukireen  |  6:35 முப இல் நவம்பர் 11, 2012

   தீபாவளி விசேஷ ஆசிகள். உங்கள் தளத்தைப் போய்ப் படிக்கிறேன். வந்து கொண்டே இருக்கிறேன்.

   மறுமொழி
 • 9. இளமதி  |  10:37 பிப இல் நவம்பர் 10, 2012

  அந்த பகவான் உங்களுக்கும் எந்தவித குறைவுமிலாமல் எல்லா நன்மைகளையும் தந்தருள ப்ரார்த்தித்து உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன் அம்மா!

  அருமையான நினைவும் பகிர்தலும்.. எத்தனை விதமான வழிபாடுகள். அதுவும் இயற்கையுடன் இணைந்து….

  ஒவ்வொரு ஜீவனிலும் கடவுள் இருக்கிறார் என்பதை நேபாள மக்கள் அருமையாக உணர்ந்து நடப்பதை அறிந்து மகிழ்வாயிருக்கிறது.

  மிக அருமையாக வர்ணனைகளுடன் உங்கள் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா……

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி
  • 10. chollukireen  |  6:41 முப இல் நவம்பர் 11, 2012

   இள மதி ஆசிகள். நீ படிப்பதுடன் நில்லாமல், உணர்ந்து பதிலெழுதுகிறாயம்மா. எனக்கு உன்னுடைய
   பின்னூட்டங்கள் மிகமிக பிடித்திருக்கிறது. எல்லோரையும் நேரில் ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. மிகையில்லை.
   உனக்கும், உன் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். அன்புடன்

   மறுமொழி
   • 11. இளமதி  |  8:04 முப இல் நவம்பர் 11, 2012

    அம்மா!… உங்கள் மறுமொழி கண்டு உள்ளம் சிலிர்த்துவிட்டதம்மா.. என் பெற்றோர் என்னுடன் இல்லை. ரொம்ம்..ம்பத்தூரத்தில் இருக்கிறார்கள். உங்களை ”அம்மா” என்று கூப்பிடும் ஒவ்வொரு தடவையும் என் அன்னை அருகில் நான் இருப்பதாய் ஓர் உணர்வு.
    உங்கள் அன்பில் தோய்ந்து போகின்றேன்.
    கடவுள் அனுக்ரகம் எமக்கிருந்தால் நாம் காணும் சந்தற்பம் கிட்டலாம்.

    ஹாஆ… அம்மா.. எனக்கு உங்களை அறிமுகப்படுத்தியது அஞ்சு என்றளைக்கப்படும் angelin தான்.
    அறிமுகப்டுத்தினதுடன் விட்டுவிடாமல் அவங்க எப்பவும் உங்களின் புதுப் பதிவு வெளிவந்தவுடன் அம்மாவின் புதுபதிவு வந்துட்டுதுன்னு அறிவித்திடுவார். உடனுக்குடன் அறிவிக்கும் அந்த மனோபாவம் எல்லோருக்கும் இருப்பதில்லை.

    அன்புக்கினிய உங்களின் வலையுலகை வலம்வர உதவிய அன்பு மனம் கொண்ட அஞ்சுவுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்!…..

   • 12. chollukireen  |  1:21 பிப இல் நவம்பர் 12, 2012

    உன் பதிலுக்கு பின்னால் பதில் எழுதுகிறேன். அடுத்த பின்னூட்டத்தின் பதிலிது. அஞ்சுவிற்கும் எழுதுகிறேன்
    அன்புடன்

 • 13. திண்டுக்கல் தனபாலன்  |  2:07 முப இல் நவம்பர் 11, 2012

  அறியாத தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி…

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…

  மறுமொழி
  • 14. chollukireen  |  6:44 முப இல் நவம்பர் 11, 2012

   வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும், உங்களுக்கும் உன்னதமான தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லுகிறேன். அன்புடன்

   மறுமொழி
 • 15. பத்மாசூரி.  |  2:18 முப இல் நவம்பர் 11, 2012

  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி
  • 16. chollukireen  |  6:48 முப இல் நவம்பர் 11, 2012

   மனமார்ந்த விசேஷ ஆசிகளுடன் கூடிய தீபாவளி வாழ்த்துக்களை உங்கள் யாவருக்கும் அன்புடன் சொல்லுகிறேன். நன்றி பத்மாசூரி அவர்களே.

   மறுமொழி
 • 17. ranjani135  |  9:43 முப இல் நவம்பர் 11, 2012

  இத்தனை வருடம் கழித்தும் எப்படி நேபாளி மொழியை நினைவில் வைத்துக் கொண்டு பாடல்களையெல்லாம் எழுதுகிறீகள்?
  வியப்பாக இருக்கிறது.

  நேபால் மாமி என்ற பெயர் பொருத்தம் அமோகம்!

  இந்த வருட தீபாவளி எப்படி என்று எழுதுங்கள்.

  பல ஊர்களில் தீபாவளி கொண்டாடியிருப்பீர்கள்.

  எல்லாவற்றையும் எழுதுங்கள். பல புது தகவல்களை எழுதி இருக்கிறீர்கள் சுவைபட!
  facebook – இல் பகிர்ந்து இருக்கிறேன் இந்த அற்புதமான தீபாவளியை.

  அன்புடன்,
  ரஞ்ஜனி

  மறுமொழி
  • 18. chollukireen  |  1:13 பிப இல் நவம்பர் 12, 2012

   என்னுடைய பெறிய பிள்ளை காட்மாண்டுவில்
   வீடுவாசலோடு அங்கே இருக்கிறான். இன்னும் நிறைய எழுதலாம். எதையும் நினைவில்க் கொண்டுவர முடியாத அளவுக்கு சூழ்நிலை.ஃபேஸ்புக்கில் மேலோடு பார்த்தேன். தீபாவளி வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

   மறுமொழி
 • 19. Maniraj  |  5:21 முப இல் நவம்பர் 12, 2012

  நேபாளம் ஒரே இந்து தேசம் ஆயிற்றே !

  பசுபதிநாதர் ஆலயம் சென்றுவந்த இனிய மலரும் நினைவுகள் மலரவைத்த அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  மறுமொழி
  • 20. chollukireen  |  1:15 பிப இல் நவம்பர் 12, 2012

   உங்கள் வரவுக்கும்,அன்புப் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். தீபாவளி வாழ்த்துகள் அன்புடன்

   மறுமொழி
 • 21. s.anandakrishnn  |  9:23 முப இல் நவம்பர் 12, 2012

  பசுபதி நாதனருளால் ஒருதொலை தொடர்பு.மதியம் நேபாள் சென்று பசுபதிநாதர் தர்ஷனம் செய்யவேண்டும் என்று நான்பேசியதற்கு பதில் போல் தீபாவளி இருந்தது.மனசு பத் லா ஆயிடுச்சு.திஹார் மகிழ்ச்சி. திஹார் தில்லி வேறு.நேபாள திஹார் வேறு. பத்லா =ஒல்லி.तमिल में पतला,बदला இரண்டும் ஒரேமாதிரி எழுதுகிறோம்.badla =மாற்றம்,பழிக்குப்பழி .पतला बदला मोटा;बदला बदला न्याय ஒரு புதிய சிந்தனை. गाय,காய் ஒரு சிந்தனை,திஹார் சிறைநினைவு அது பண்டிகை .பல எண்ணங்கள் தங்கள் கன்னித்தமிழ் ,
  கனி மொழியில்(கருணா நிதி வேறு ) கற்பனை. என் எண்ணங்கள் தமிழ்.ஹிந்தி கலப்பால் கலகப்பானது. நன்றி. தீபாவளி திகார் வாழ்த்துக்கள். மனம் திஹாரிலிருந்து
  நேபாள திஹாரா க் கியதற்கு நன்றி.
  அனைவருக்கும் தீபாவளி திஹார் வாழ்த்துக்கள்.

  மறுமொழி
 • 22. s.anandakrishnn  |  9:27 முப இல் நவம்பர் 12, 2012

  தமிழ்.ஹிந்தி கலப்பால் கலகலப்பானது.

  மறுமொழி
  • 23. chollukireen  |  1:28 பிப இல் நவம்பர் 12, 2012

   தமிழ்,ஹிந்தி மட்டுமல்ல நேபாலியும் உடன் வந்துள்ளது. ஸ்வாரஸ்யமாக பின்னூட்டம். உங்கள் வரவிற்கு நன்றி. தீபாவளி வாழ்த்துகள். அன்புடன்

   மறுமொழி
 • 24. gardenerat60  |  9:49 முப இல் நவம்பர் 12, 2012

  ஜம்முனு இருக்குமா!. வீட்டில் பண்டிகைக்கு முதல் யாள் அமர்க்களத்தில் , சுவைத்து படிக்க முடியவில்லை. இன்னு பத்து நாட்கள் பிரயாணம் வேறு.
  திரும்பி வந்தவுடன், மறுபடு படித்து , அனுபவிக்க எண்ணம்.

  நமஸ்காரம்.

  மறுமொழி
  • 25. chollukireen  |  1:17 பிப இல் நவம்பர் 12, 2012

   ஆசிகள். ஜம்முனு ஒருவார்த்தை போதுமே. தீபாவளி
   வாழ்த்துகள். அன்புடன்

   மறுமொழி
 • 26. chitrasundar5  |  10:00 பிப இல் நவம்பர் 12, 2012

  காமாட்சிமா,

  தீபாவளி வாழ்த்துக்கள்.நேபாள தீபாவளியைப் பற்றித் தெரிந்துகொண்டோம். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பாடல்களை நினைவுகூர்ந்து எழுதியது ஆச்சரியம்.நாளை பாய்டீக்கா பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆவல். ‘பசுபதிநாதர்’ தமிழ் பெயர்போல் தெரிகிறதே. கோவில் அமைப்பு வித்தியாசமாக,அழகாக‌ உள்ளது.

  இங்கு நான்கூட public channel ல் நேபாளிகளின் வாழ்க்கைமுறை, திருவிழாக்கள் பற்றி பார்த்திருக்கிறேன்.அப்போது உங்களைத்தான் நினைத்துக்கொண்டேன்.இன்னும் நிறைய எழுதும்படியான நிலையைக் கொடுக்க அந்த பசுபதிநாதரையே வேண்டிக்கொள்கிறோம். நன்றிமா. அன்புடன் சித்ரா.

  மறுமொழி
 • 27. vijikumari  |  6:20 முப இல் நவம்பர் 13, 2012

  நெப்பாளத்தில் தீபாவளி ரொம்ப பிரமாதம் அறியாத தகவல்கள் படங்கள் ரொம்ப அருமை நெரில் பார்த்தமாதிரி இருந்தது

  மறுமொழி
 • 28. gardenerat60  |  3:48 முப இல் நவம்பர் 29, 2012

  நான் பல நாட்கள் கழித்து இந்த பதிவை பார்க்க முடிந்தது. தீபாவளிக்கு , பிள்ளை வீட்டிற்கு சென்று , பேத்தியுடன் கொண்டாடினோம்! உங்கள் பண்டிகையும் இனிதே நடந்தது என்று நம்புகிறேன்.

  சின்ன சின்ன தகவல்களையும், பார்த்து, அறிந்து, சிலாகித்து எழுதியது , வியப்பாக இருக்கிறது.

  இந்த தகவல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு, ஒரு ஸ்பெஷல் நமஸ்காரம்!

  மறுமொழி
  • 29. chollukireen  |  6:07 முப இல் திசெம்பர் 3, 2012

   பிள்ளை,நாட்டுப்பெண், பேத்தியோடு நீங்கள் தீபாவளி கொண்டாடியது ஸந்தோஷமானது. இந்த மறு மொழிக்கும் சேர்த்து பதில்

   இப்போதுதான் எழுதினேன் . ஸ்பெஷல் நமஸ்காரங்களுக்கு எண்ணிலடங்கா ஆசிகள் எல்லோருக்கும் வாழ்த்துகள். அன்புடன்

   மறுமொழி
   • 30. gardenerat60  |  9:23 முப இல் திசெம்பர் 3, 2012

    மறுபடியும் ஸ்பெஷல் நமஸ்காரங்கள்.;-)

   • 31. chollukireen  |  11:04 முப இல் திசெம்பர் 4, 2012

    நமஸ்காரங்களுக்கு அன்பு கலந்த ஆசிகளம்மா.அன்புடன்

 • 32. chollukireen  |  12:52 பிப இல் நவம்பர் 11, 2020

  Reblogged this on சொல்லுகிறேன் and commented:

  எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. தீபாவளி ஸமயத்தில் ஞாபகம் வந்தது . ஸேல் ரொட்டியின் தீபாவளி இது. அன்புடன்

  மறுமொழி
 • 33. ranjani135  |  10:34 பிப இல் நவம்பர் 11, 2020

  நேபாள தீபாவளி மீண்டும் படித்தேன். புதிதாக இருந்தது. பண்டிகை என்ற நினைவே புது உற்சாகத்தைக் கொடுக்கிறது. பேத்தி பிறந்ததிலிருந்து தீபாவளியும் அவளது பிறந்த நாளும் அடுத்தடுத்து வருகிறது. இன்று அவளது நட்சத்திரப் பிறந்த நாள். வரும் ஞாயிறு ஆங்கில பிறந்த நாள். 3வயது நிரம்புகிறது. தீபாவளி வாழ்த்துகள்.

  மறுமொழி
 • 34. chollukireen  |  11:37 முப இல் நவம்பர் 12, 2020

  உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. பேத்தி அனன்யாவுக்கு வாழ்த்துகளும் ஆசிகளும். இபபடி வந்து கொண்டே இருங்கள். அன்புடன்

  மறுமொழி
 • 35. Geetha Sambasivam  |  8:04 முப இல் நவம்பர் 13, 2020

  நேபாள தீபாவளி இப்போத் தான் புதுசாப் படிக்கிறேன். போன வருட தீபாவளி பேத்தியுடன் கொண்டாடினோம். இந்த வருடம் இங்கே தனியாக. பண்டிகையும் இல்லை! 😦 என்றாலும் அனைவரின் தீபாவளிக் கொண்டாட்டங்களும் அவற்றின் நினைவுகளும் மனதைக் கவர்கின்றன. உங்கள் நேபாள அனுபவங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. இன்று எங்கள் பிள்ளையின் நக்ஷத்திரப் பிறந்தநாள். தீபாவளி அன்று தான் பிறந்தான். நக்ஷத்திரம் இந்த வருஷம் இன்று வந்திருக்கிறது. ஆங்கிலத் தேதிப் பிறந்த நாள் முடிந்து விட்டது.

  மறுமொழி

chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நவம்பர் 2012
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

 • 547,548 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: