நேபாலின் பாய் டீக்கா
நவம்பர் 14, 2012 at 12:48 பிப 23 பின்னூட்டங்கள்
இது உடன் பிறந்த ஸகோதரர்களுக்காக அவர்களின் நீண்ட
ஆயுளைக்கோரி ஸகோதரிகள், அனுஸரிக்கும் ஒரு சடங்கு,
அல்லது, கொண்டாட்டம் கலந்த அன்பு முறை, நேபாலில் இதை
அனுஸரிக்கிறார்கள். அந்த ஸமயம் நெற்றியில் டீக்கா
வைத்தும் கவுரவிக்கிறார்கள். இது ஸகோதரர்கள் இல்லாவிட்டாலும்
ஆரம்ப முதலே உறவு முறையிலோ, சினேகித முறையிலோ
சகோதரியாக ஒருவரை வரித்து , அவர் மூலமாகவோ இந்த
ஸ்தானத்தைப் பெறுகிரார்கள். ஆக மொத்தம் ஸகோதரி ஒருவளாவது
அவசியமாகிறது.
முன்கூட்டியே நிமித்தாதினி என்று கூப்பிடுவதற்குச் சொல்கிறார்கள்.
தீபாவளி அமாவாஸை கழித்த இரண்டாம் நாள் ப்ராத்ருத்விதியை.
அன்று நேரம் காலம் எல்லாம் பண்டிதர்களால் அறிவிக்கப் படுகிறது.
மன்னராட்சியில் அந்தநேரம் குண்டுகள் முழங்கப் பட்டுக்கொண்டிருந்தது.
ராஜா,ராணி,பெண்கள், பிள்ளைகளென அவரவர்கள் அந்த நேரத்தில்
இப்பூஜையை,வழங்கியும், ஏற்றுக்கொண்டும் ,இதே நேரத்தில்
ப்ரஜைகளும் இதை அனுஸரித்துக் கொண்டுமிருந்தனர்.
மாற்று நல்ல நேரங்களும் உண்டு. இரவு வரை ஸவுகரியங்களை
அனுஸரித்து இதைக் கொண்டாடுவார்கள்.
வான வில்லை ஒத்தக் கலர்ப் பொடிகளால் மண்டபமைக்கிறார்கள்.
கொடுகளால் சதுரக் கோலம்மாதிறி வரைந்தால் அதுவே மண்டபம்.
அதன் நடுவே உடன் பிறந்தவர்களை உட்கார வைத்து கழுத்தில்
அருகம் புல்லாலன மாலையை அணிவிக்கிறார்கள். வாடாமல்லிப்பூ
கோர்த்த மாலை மிகவும் முக்கியமாக அணிவிக்கிறார்கள்.
வாடாத பூ அல்லவா? இது முக்கியமாகக் கருதப்படுகிறது.
நான்கைந்து கலர்களில் சிந்தூர்த்திலகமிட்டு டீக்கா வைக்கப் படுகிறது.
சுபசகுனமாக வாயில் வாழைப்பழம் கொடுக்கிறார்கள். சுபமாக
ஏதேதோ பூஜைகள் செய்துவிட்டு மண்டபத்தைச் சுற்றி ஒரு கிண்டியிலிருந்து
லேசாக தண்ணீரைத் தெளித்துச் சுற்றி வருகிறார்கள்.சிலர் எண்ணெய் கூட
லேசாகத் தெளிப்பார்கள். கழுத்தில் சிவப்பு நிற ரிப்பன் போன்ற துணியினால்
மாலை அணிவித்து பரிசுகலளித்து,கொப்பரை,ட்ரைஃப்ரூட்ஸ், இனிப்புகள்,
பழங்கள்.ஸேல் ரோடி முதலானவைகளைப் பெரும் அளவில்க் கொடுத்து
விருந்தளித்து விடையளிக்கிறார்கள்.
உடன் பிறந்தவர்களும் அவர்களுக்கு மனமுவந்த பரிசுகளை சக்திக்கேற்ப
அளிக்கிறார்கள்
.இந்த பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிரதாம்.
கதையொன்றும் சொல்கின்றனர்.
யமராஜின் ஸகோதரி யமுனா. அவர் பூஜை செய்யும்போது யமராஜிடம்
வேண்டிக் கொண்டாளாம்.
இந்தபூஜை செய்து ஸகோதரனுக்கு நீண்ட ஆயுளை வேண்டுபவர்களுக்கு
நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.
வாடாமல்லிமாலை எப்போதும் வாடாமலிருக்கும். அதற்காக
அடையாளமான மாலை உபயோகிப்போம். அக்ரூட்,தமிழ்ப் பெயர்
தெறியலே!!!!!!!!!!!!!!!! அதன் மேல் ஓடு உள்ப்பருப்பை காப்பதுபோல
உடன் பிறந்தவர்கள் உயிர் கார்க்கப் படவேணும் என்று யமுனா
தர்ம ராஜனிடம் வேண்டிக் கொண்டாளாம்.
அந்த வகையாகவே இது கடைபிடிக்கப்படுகிறது என்று கதை.
வேறு கதைகளும் உண்டு. நான் கேட்டறிந்த கதை இது.
நாங்கள் காட்மாண்டு போன புதிதில் ராயல் ஃப்ளைட்டில்
வேலை செய்யும் இளம் வாலிபர். காதல் கல்யாணம் செய்து கொண்ட
மனைவிக்கு , பூஜை செய்ய அண்ணனோ,தம்பியோ வேண்டும்.
வீட்டினருக்கெதிராக மணம் புரிந்து கொண்ட பெண்.
எங்கள் வீட்டுப் பிள்ளகளை அனுப்பி வைக்கும்படி கேட்க நாங்கள்
அனுப்பி வைத்தோம். காலக் கிரமத்தில் அசல் உடன் பிறந்தவர்கள்
வரபோக ஆரம்பித்த பின்னும் நாங்கள் அவ்விடம் இருக்கும் வரை
அவர்கள் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. பரஸ்பரம் சக்திக்குத்
தகுந்ததை நாங்களும் செய்தோம்.
இரண்டாவதாக ராயல் ஃப்ளைட்டிலிருந்து கொலம்பு ப்ளானில்
ஏரோநாடிகல் இன்ஜிநீயரிங் படிக்க மூன்று பேர்கள் சென்னை வந்தனர்.
அவர்களுக்கு உதவி செய்ய எங்கள் மாப்பிள்ளைக்கு அறிமுகப்படுத்தி
இருந்தோம்.
அவ்விடம் உள்ள நான்கு வருடங்களும் என் பெண்ணை ஸகோதரியாக
நினைத்து பரிசுகளளித்து அங்கே சாப்பிட்டு ஆசிகள் வாங்குவதை
வழக்கமாக வைத்திருந்தனர்.பாய்டீக்கா சென்னையில்.
ஜ்வை என்றால் மாப்பிள்ளை. இன்றும் அவர்களுக்கு
எங்கள் மாப்பிள்ளை ஜ்வை தான்.வேண்டிய எல்லா ஒத்தாசைகளும்
அவர் செய்து கொடுத்தார். என் பெண் ஸுதா தீதி உறவு.
பொதுவில் யாவரையும், தீதி,பஹினி,அதாவது அக்கா, தங்கை
முறையில்தான் சொல்வார்கள்.
தாயி,பாயி அண்ணா, தம்பி முறை.
ஹிந்து கலாசாரம் என்று நேபாலிகள் அதிகம் கொண்டாடுவது
அதிகம். கதைகளெல்லாம் காலக்கிரமத்தில் உரு மாறி விடுகிறது.
அதையெல்லாம் கேள்வி கேட்டுப் பிரயோஜனமில்லை.
உறவுகள் தொடரப்படுகிரது.
பகைகள் மன்னிக்கப் படுகிறது. ஒரு தாய் மக்கள்.
நேசம் சீரமைக்கப் படுகிரது. நாளை பாய்டீக்கா.
அங்குள்ள எனது பிள்ளைக்கும், பேரனுக்கும் இப்படி
பாய்டீக்கா கொடுக்க ஸகோதரி உண்டு.
எல்லோரும் நன்றாக இருக்க பாய் டீக்கா தினமான
நாளை ஸகோதரர்கள் தினமாக நேபாலிகள் கொண்டாடுகின்றனர்.
ஸகோதரர்கள் வாழ்க என்று நாமும் கடவுளை வேண்டுவோம்.
Entry filed under: சில நினைவுகள்.
23 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 3:48 பிப இல் நவம்பர் 14, 2012
அன்புள்ள மாமி,
நமஸ்காரங்கள்.
இந்தப்படைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள்.
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
2.
chollukireen | 12:07 பிப இல் நவம்பர் 16, 2012
ஆசிகள். உங்கள் பின்னூட்டம் மனதிற்கு இதமளிக்கிறது. நன்றி. அன்புடன்
3.
ranjani135 | 3:55 பிப இல் நவம்பர் 14, 2012
மிகச் சரியாகச் சொன்னீர்கள், பண்டிகைகளினால் பகைகள் மன்னிக்கப் படுகின்றன. நேசம் சீரமைக்கப் படுகின்றது.
நாளை நாமும் நம் சகோதரர்களுக்காக வேண்டுவோம்.
நம்மூரில் கனு பண்டிகை உடன் பிறந்தவர்களுக்காகத் தானே!
4.
chollukireen | 12:19 பிப இல் நவம்பர் 16, 2012
கனு பண்டிகையைக் குறித்தும் எழுதியது சேமிக்காததால் வரவில்லை. காக்கை,கால்நடைகள்,எல்லாவற்றையும்தான் கவுரவிக்கிறோம். தவிர காணும் பொங்கல் என்று
உற்றார், உறவினர்களை ஸந்திக்கும் நிகழ்ச்சியும்
தமிழ் நாட்டில் பரவலாக இருக்கிறது. காலங்கள் மாறுபாட்டுடன் நல்ல வழக்கங்கள் எல்லோரிடமும் இருக்கிறது. உன்வரவு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 3:58 பிப இல் நவம்பர் 14, 2012
//.இந்த பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறதாம்.
கதையொன்றும் சொல்கின்றனர்.
யமராஜின் ஸகோதரி யமுனா. அவர் பூஜை செய்யும் போது யமராஜிடம் வேண்டிக் கொண்டாளாம்.//
ஆமாம் மாமி, நானும் இந்தக்கதையினை விரிவாகப் படித்தேன்.
அதாவது 15.11.2012 வியாழக்கிழமை “யம த்விதீயா” என்னும் நல்ல நாள். சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமையை வளர்க்கும் நன்நாள்.
>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>
6.
chollukireen | 12:29 பிப இல் நவம்பர் 16, 2012
அதனால்தான் தெரிந்தவரை எழுதினேன். திரும்பவும்
கதையைப் பற்றி முன்னாடி ஸரி என்று கேட்டரிந்துதான் எழுதினேன். தகவல்கள் ஸரியில்லாவிட்டால் எழுதாமலிருந்து விடுவதுதான்
நல்லதல்லவா? நீங்களும் விரிவாகப் படித்திருப்பதாக எழுதினது மிகவும் நல்லதாக ஆயிற்று.ஸந்தோஷம் .அன்புடன்
7.
VAI. GOPALAKRISHNAN | 4:05 பிப இல் நவம்பர் 14, 2012
இதைப்பற்றி தனிப்பதிவே தரலாமா என யோசித்தேன்.
இதன் பின்னனியில் நிறைய நல்ல நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளன.
மேலே திருமதி. ரஞ்சும்மா தனது பின்னூட்டத்தில் சொன்னதுபோலவே இங்கு நாம் மகர சங்கராந்திக்கு மறுநாள் கணு [கணுப்பொங்கல்] என்று பெண்கள் கொண்டாடுகிறார்களே! அதுவும் உடன் பிறந்த சகோதரர்களுக்காகவே செய்யப்படுவதாகும்.
இந்த யம த்விதீயாவும் அதே போலத்தான். ஆனால் அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இதில் சொல்லப்பட்டுள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
8.
chollukireen | 12:55 பிப இல் நவம்பர் 16, 2012
இன்னும் பல நல்ல விஷயங்கள் விட்டுப் போயிருக்கும். நீங்களும் பதிவிடுங்கள். ஒரே விஷயங்களைப் பல கோணங்களில் படிப்பதனால்
விஷயங்கள் நன்றாக விளங்கும். உங்கள் பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி. பாராட்டுதல்களெல்லாம் மனதுக்கு ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன்
9.
angelin | 5:05 பிப இல் நவம்பர் 14, 2012
அக்ரூட்,//=walnut
வால்நட் என்று ஆங்கிலத்தில சொல்வதுதான் ஹிந்தில மற்றும் தமிழிலும் அக்ருட் என்கிறார்கள்
10.
chollukireen | 1:00 பிப இல் நவம்பர் 16, 2012
தமிழ்லேயும் ஏதாவது பெயர் இருக்குமோ என்ற ஸந்தேகம்.அக்ரூட் என்றே சொல்லிவிட்டேன். பரிக்ஷை என்றால் மார்க் போய்விடும். மகிழ்ச்சி அஞ்சு.
அன்புடன்
11.
angelin | 5:16 பிப இல் நவம்பர் 14, 2012
//பாய் டீக்கா//
அறிந்திரா பல விஷயங்களை பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன் இந்த பாய் டிக்கா கொஞ்சம் ரக்க்ஷா பந்தன் போலவே இருக்கு. அழகாய் எழுதி பகிர்ந்ததற்கு நன்றிம்மா .
12.
chollukireen | 1:04 பிப இல் நவம்பர் 16, 2012
ரக்க்ஷா பந்தனும் ஸகோதரர்களுக்கான பண்டிகைதான். தினம் மாறுபடுகிறது. அழகாய் எழுதியுள்ளேனா? நன்றி பெண்ணே!அன்புடன்
13.
chitrasundar5 | 7:07 பிப இல் நவம்பர் 14, 2012
காமாட்சிமா,
பாய் டீக்கா பற்றியும்,அதன் அவசியத்தையும் தெரிந்துகொண்டோம். சகோதர,சகோதரி உறவு விடுபட்டு போகக்கூடாது என்றெண்ணித்தான் இந்த விசேஷங்களை எல்லாம் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாம்தான் பழசு,அதுஇதுனு சொல்லி செய்ய மறுக்கிறோம் அல்லது மறந்துவிடுகிறோம்.
வாடாமல்லி__ஊரில் இருந்தபோது எங்க வீட்டுத் தோட்டத்தில் இதை வளர்த்திருக்கிறேன்.வயலட் நிறத்தில் இருக்கும்,கதம்பத்தில் வைத்து கட்டுவாங்க. பூவின் உள்ளே இருக்கும் கருப்பு நிறத்தினாலான சிறுசிறு விதைகளைக்கூட எடுத்து சேர்த்து வைப்பேன்.
உறவைப்பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 1:09 பிப இல் நவம்பர் 16, 2012
ஆமாம். வாடாமல்லியை நேபாலிமொழியில் மக்மலி
பூல் என்கிறார்கள். அதை எழுத மறந்து விட்டேன். உன்னுடைய பதில்களும் உணர்ந்து ரஸித்ததைக் காட்டுகிறது.ஸந்தோஷமாக இருக்கிறது. அன்புடன்
15.
Venkat | 4:08 முப இல் நவம்பர் 15, 2012
இதே பண்டிகை வடக்கிலும் கொண்டாடப் படுகிறது. பாய் தூஜ் என்ற பெயரில்.
நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
16.
chollukireen | 1:17 பிப இல் நவம்பர் 16, 2012
ஆமாம். இங்கும் கூட ஏக அமர்க்களமாய்க் கொண்டாடுவார்களாம். பால்தாக்கரே அவர்கள் உடல் நிலை மோசத்தினால் கடையடைப்பு இருந்ததால்சற்று உற்சாகம் குறைவு என்று நாளிதழில் பார்த்தேன்.
பலவித நாட்களில் ஸகோதரர்களுக்கான கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. உங்கள் அன்பான
மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
17.
திண்டுக்கல் தனபாலன் | 7:46 முப இல் நவம்பர் 15, 2012
அறியாத சில தகவல்கள்… வித்தியாசமாக இருந்தது…
நன்றி…
18.
chollukireen | 1:19 பிப இல் நவம்பர் 16, 2012
பழக்க வழக்கம் வித்தியாஸத்தை வைத்துத்தான் மனதில் பதிவு உருவானது. மிகவும் நன்றி.அன்புடன்
19.
Mahi | 5:44 பிப இல் நவம்பர் 15, 2012
Nice to know these details Kamakshi-ma..one of my Maharastrian friend was saying some custom like this just yesterday..I think they also do the same pooja today!
Thanks for shaing!
20.
chollukireen | 1:24 பிப இல் நவம்பர் 16, 2012
வா,வா மஹி. கொண்டாட்டங்கள் வித்தியாஸப்பட்டாலும் முக்கிய கொள்கை. ஸகோதர நலன். அப்பாடா மஹியின் பின்னூட்டங்கள்
சொல்லுகிறேனில் தொடரும். ஸந்தோஷம். அன்புடன்
21.
gardenerat60 | 3:41 முப இல் நவம்பர் 29, 2012
நேபாளத்தை பற்றி அதிகமாக தெரியாது. இந்த அளவில் அழகாக அவர்களது , பண்டிகை கொண்டாட்டங்களை , எழுதி எங்களை மகிழ்வித்தீர்கள். பாய்துஜ் வடக்கே கொண்டாடுவது அறிவேன், ஆனால் இந்த உறவு முறைகளை நிலைப்படுத்திக் கொள்ளவே இவைகள் நளினமாக , குடும்பங்கள், கடைப்பிடிக்கின்றன என்பதை அறிய, மகிழ்ச்சி தருகிறது.
நாம் தெற்கே, கனு பண்டிகையின் போது சகோதரர்கள் நலனுக்கு பிரார்த்திக்கிறோம், மஞ்சளை ஒருவருக்கு ஒருவர் நெற்றியில் வைக்கிறோம், அதுதான் நினைவுக்கு வந்தது.
நமஸ்காரம் மாமி.
22.
chollukireen | 5:57 முப இல் திசெம்பர் 3, 2012
நானும் அவ்விடம் வெகு வருஷங்கள் இருந்ததால் சின்ன,சின்ன விஷயங்களெல்லாம் தெரியறது. இப்படி எல்லாம் எழுதுவோமென்று
நினைத்திருந்தால் எவ்வளவோ விஷயங்களை அறிந்திருக்கலாம். குடும்பம், பசங்களின் படிப்பு,சமையல்,சாப்பாடு,மற்றவர்களின் வசதி இப்படியே கவனித்து கவனித்து வருஷங்களையெல்லாம் ஓட்டிவிட்டேன்.ஆமாம். பொங்கலில், சூரியபூஜை,கால்நடைகளுக்கான கொண்டாட்டம், ஸகோதரர்களுக்கானவேண்டுதல்,காக்காபிடிசொல்லி வைக்கிறோம். கரிநாளான மறுநாள் காணும் பொங்கலென்று
உறவினர்கள் ஒன்று கூடும் திருவிழாவும் நடக்கிறதல்லவா? இப்படி காலங்கள் வேறு பட்டாலும் கொள்கைகள் ஒன்றோடொன்று
ஒத்துப் போவது போலத் தோன்றுகிரது நமக்கும், நேபாலிகளுக்கும். நீ அடிக்கடி பின்னூட்டமிட்டு கௌரவிப்பதற்கு சொல்லொணா மகிழ்ச்சிகள் ,என்றும் இப்படியே அன்பு நிலைக்க ஆசிகளுடனும், அன்புடனும் சொல்லுகிறேன்.
23.
gardenerat60 | 9:21 முப இல் திசெம்பர் 3, 2012
அம்மா, உங்கள் பதிவுகளை படிப்பது , எனக்கு , மிக மகிழ்ச்சி கொடுக்கிறது. கௌரவம் எனக்கல்லவா!
உங்கள் ஆசிகள் கிடைப்பது எனக்கு அதிர்ஷ்டம்!
என் மானசீக நமஸ்காரங்களா அம்மா!