ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.2
நவம்பர் 27, 2012 at 7:08 முப 23 பின்னூட்டங்கள்
ஸாதாரணமாக அரசர் வெளியே போய் நேபாலிலேயே மற்ற பகுதிகளில்
தங்கி இரண்டொரு மாதம் அவ்விட முன்னேற்றங்களை மனதில் வைத்து
ஒழுங்கு செய்து விட்டு வருவது வழக்கம். அம்மாதிறி ராஜ ஸவாரிகளின்
போது ஒரு சிறிய காட்மாண்டுவே இடம் பெயர்ந்தாற்போல இருக்கும்.
இம்மாதிரி, ஸவாரிகளின் போதும், அயல் நாட்டுக்குப் பிரயாணம்
செய்யும் போதும் அவர்களுக்கு ஸ்ரீ.பாஞ்ச்,மஹாராஜாதிராஜ் ஸர்கார்
வருகிறார், அல்லது போகிரார் என்று முன் கூட்டி அறிவித்து விடுவார்கள்.
காட்மாண்டுவிலும், நேபாலில் எவ்விடம் போனாலும்
வழியின் நெடுகிலும், யாவர் வீட்டு வாயிலிலும் பெறிய, பெறிய குடங்களில்
காக்ரிஎன்று சொல்லுவார்கள் நீரை நிரப்பி குங்கும, பூக்கள் என
அலங்காரம் செய்து பூரண கும்ப வரவேற்பு, அல்லது வழியனுப்புதல்
கட்டாயமாக கடை பிடிக்கப்படும். மக்கள்
உடலை வளைத்து இரு கைகளினாலும் கையைத் தட்டி ஓசையுடன்
வணக்கம் செய்யும் நிலையில் ஸந்தோஷமாக, வழியனுப்புதலும்,
வரவேற்பும் கொடுப்பார்கள். இப்படியே எந்த வொரு கூட்டங்களுக்குப்
போனாலும், கோவிலுக்குப் போனால் கூட உடல் வளைத்து
கைகூப்பித் தட்டி ராஜாவுக்கு ராஜ மறியாதை.
இப்படிப்பட்ட ராஜாவின் வாயுவிமானம் கூட டாக்ஸி மாதிரி ,கூட்ஸ்
வண்டி மாதிரியும் உபயோகப் படுத்தப் பட்டது.
முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி பேசுகிறேன்.
ராயல்ஃப்ளைட்டே பெயரில்லாமல் ஆர்மியில் இணைக்கப்பட்டு,
S.N.S.B.S என்று பெயர் மாறியதும் நடந்தது.
ஷாஹி,நேபாலி,ஸைனிக், பிமான ஸேவா என்று பெயர் மாறிய
ஆர்மியிலும் ஸிவிலியனாக இவர் வேலை செய்வதும் தொடர்ந்தது.
எங்கு திரும்ப வருகிறேனென்றேன். ?? அவ்விடமே போவோம்.
ஜும்ஸும்மிற்கு இரண்டாவது முறையாகச் சென்ற’ ட்வின் ஹாட்டரில்
இரண்டு இன்ஜினீயர்களுடன் இவரும் போயிருந்தார்.
கூடுமான வரை முடிந்த ஸாமான்களை ஒரு ட்ரிப் அடித்து விட்டு
அடுத்த முறை ஸ்டாப் மெம்பர்கள் என்று தீர்மானிக்கப் பட்டது.
அந்த கால கட்டத்தில் இவ்விடமிருந்து நாம் பேசவேண்டுமானால்
ஆகாச்வாணி என்று ஒரு முறை டெலிகிராஃப் ஆபீஸுக்குப் போய்
பேச வேண்டும். இதை நான் ஸரியாகச் சொல்கிறேனா இல்லையா?
தெரியவில்லை.
ஸாதாரணமாக வெளியூர் போனால் சொன்னபடி வருவார்கள். இல்லை
என்றால் யாரிடமாவது தகவல் வரும்.
ஸமீபத்தில் விபத்து அது இது என்பதால் மனதில் அச்சம்.
2, 3,நாட்களாகுமென்றால் தெரிவிக்கும்படி சொல்லியிருந்தோம்.
போன மறுநாளே கொஞ்சம் உருப்படிகள் வந்து சேர்ந்தது.
அதற்கும் மறுநாள் சில சாமான்களுடன் பரீக்ஷார்த்தமாக பைலட்
ஸோம்நாத் உடானை டேக்ஆஃப் செய்யும் போது, பரந்த விமானம்
மோதியது அருகில் விமானம் நிலை குலைந்தது.
விமானி தப்பினார். விமானம் உடைந்ததா? இல்லை
தீப்பற்றவில்லையா? ஆராய்வுக்குழு என்ன சொல்லியதோ/???????
ஒரு விமானக்குழு சிப்பந்திகளா, இன்ஜினீயர்களா,ஹெல்பர்களா
எல்லோரும் காட்மாண்டு திரும்ப வேண்டும். வேறு விமான ஸேவைகள் எதுவும்
இல்லை.
நல்லபடி திரும்ப வேண்டுமே என குடும்பத்தினரின் கவலைகள்.கெட்டவித
கற்பனைகள் இப்படி 5, 6 குடும்பங்கள் அல்லலில்.
எப்படி திரும்புவார்கள்? அவரவர்களுக்குத் தெறிந்த பழைய விபத்துக்கள்
பற்றி எங்கு என்ன பேசுகிறோமென்ற அறியாத நிலையில் பேச்சுகள்.
புளி கறைக்கும் மாதிரி நிலையில்லை. ஜ்வாலா முகிதான் மனதில்
யாரும் பயப்படவேண்டாம். ராயல் ஃப்ளைட் கண்ட்ரோலரே நேரில்
போகிரார். என்ற பேச்சு சொல்லியனுப்பப் பட்டது.
ஓரளவுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள், நல்லபடி வரவேண்டுமே.
எங்கும் ப்ரார்த்தனை மயமாகத்தானிருந்தது.
இல்லை.
எத்தனை முறை ஜும் ஸும் போனபோது இப்டி எல்லாம் விசாரப் பட்டோமா?
சாளிக்ராமம் கொண்டு வரலியா, எங்கும் போக முடியலியா என்ற
கேள்விகள்தான் கேட்டுப் பழக்கம். ஜும்ஸும்,அதைவிட மோசமான லுக்லா
முதலிய இடங்களுக்குப் போய் வரும்போது அவ்விடத்திய உருளைக்கிழங்கு,
நல்ல பெறிய அகலமான ஸோயாபீன்ஸ் கொட்டைகள் என வாங்கி வருவது
வழக்கம். நிமிஷத்தில் வேகக் கூடியவைகள்.
தரான் தன்குடா போனால் எலுமிச்சை, ஆரஞ்சுப் பழங்கள் எனக் கூடை
கூடையாய் வாங்கிவந்து பகிர்ந்து கொள்வது, தன்கடி போனால் நல்ல
வெல்லம் ஒரு கட்டி 4 அல்லது 5 கிலோ இருக்கும், இப்படி ஆப்பிள் முதல்
பூசணிக்காய், தக்காளிவரை, எங்கு எது கிடைக்குமோ வாங்கி வருபவர்கள்
உருப்படியாக ஆள் வந்து சேர்ந்தாலே போதும் என அலரலடித்து இருந்தோம்.
சில நாட்கள் கழித்து கண்ட்ரோலர் போயிருக்கிறார். அவரும் எல்லாவற்றையும்
பார்வையிட்டுவிட்டு
இரண்டொரு நாளில் நல்லபடி திரும்புவார் என்ற நல்ல செய்தி
வந்தது. நல்லதுதானே?திரும்பவும் வருகிறேன்.
பின் குறிப்பு.
படஉதவி—-கூகல்தான். வியாபாரத்துக்கோ,லாபத்திற்கோ உபயேகப்படுத்தவில்லை.
ஒரு தற்போதைய அடையாளக் குறிப்பிற்கு உபயோகம். நன்றி.
Entry filed under: சில நினைவுகள்.
23 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 7:29 முப இல் நவம்பர் 27, 2012
//வெல்லம் ஒரு கட்டி 4 அல்லது 5 கிலோ இருக்கும்,//
வெல்லக்கட்டியாக இனிக்கும் இந்தப்பதிவு அருமையோ அருமை. கடைசியில் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டீர்கள்.
அடுத்தபகுதி நல்ல இனிய செய்தியினைக் கொண்டு வரட்டும்.
அழகாக நன்கு இடைவெளி கொடுத்து பகிர்வினை வெளியிட்டுள்ளது படிப்பதற்கு சுலபமாக உள்ளது.
இதே போலவே இனியும் இடைவெளி கொடுத்து எழுதுங்கோ.
அநேக நமஸ்காரங்களுடன்,
அன்புள்ள
கோபாலகிருஷ்ணன
2.
chollukireen | 5:10 பிப இல் நவம்பர் 28, 2012
உங்களின், ஊக்கமளிக்கும், அன்பான பின்னூட்டங்களுக்கு எந்தவிதமாக நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. யோசனைகளெல்லாம் தேவையாக இருக்கிறது. உபயோகமாகவும் இருக்கிறது. அதிகம் மற்ற பிலாகுகளுக்குப் போகமுடிவதில்லை. இன்னும் எவ்வளவோ தெரிந்து கொள்ள அவசியம் இருக்கிறது.
உங்கள் எல்லோருக்கும் என் ஆசிகள். அன்புடன்
3.
chollukireen | 5:11 பிப இல் நவம்பர் 28, 2012
மறுமொழிக்கு மிகவும் வந்தனம். அன்புடன்
4.
chollukireen | 5:30 பிப இல் நவம்பர் 28, 2012
தன்கடி வெல்லம் மிகவும் பெயர்போனது.
5.
ranjani135 | 11:29 முப இல் நவம்பர் 27, 2012
திருவனந்தபுரத்திலும் கூட ராஜ குடும்பத்தினருக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
ஒரு திகில் கதை படிக்கும் அனுபவம்.
சாளகிராம விநியோகம் எப்போது என்று காத்திருக்கிறேன்!
6.
chollukireen | 5:22 பிப இல் நவம்பர் 28, 2012
நிஜமாகவேவா? ;சாளக்ராம வினியோகம் அடுத்து செய்து விடட்டுமா? முக்திநாத் போய் கொண்டுவரவேண்டாமா? சுருக்கவே செய்துவிடுகிறேன். உங்களையெல்லாம் கார்க்க வைத்தால் கொண்டுவந்ததை யாரிடம் கொடுப்பது.
அன்பான வரவிற்கு நன்றி. அன்புடன்
7.
rajalakshmiparamasivam | 1:05 பிப இல் நவம்பர் 27, 2012
பத்திரிக்கையில் ஒரு தொடர் கதை படிப்பது மாதிரியே இருக்கிறது.அருமை.
ராஜி.
8.
chollukireen | 5:24 பிப இல் நவம்பர் 28, 2012
ஆமாம். தொடர்கதையாக மனதில்ப் பதிந்து போன ஒன்றல்லவா?பாராட்டிற்கு மிக்க மகிழ்ச்சி. அன்புடன்
9.
adhiVenkat | 1:47 பிப இல் நவம்பர் 27, 2012
இனிப்பான செய்தி வந்தது குறித்து மகிழ்ச்சி. தொடருங்கள்.
10.
chollukireen | 5:27 பிப இல் நவம்பர் 28, 2012
மிகவும் ஈடுபாட்டுடன் படிக்கிறீர்களென்றுஅறிய ஸந்தோஷம். தொடர்ந்து வரவும். அன்புடனும் ஆசிகளுடனும்
11.
இளமதி | 6:53 பிப இல் நவம்பர் 27, 2012
அம்மா…பொதுவாவே நா ரொம்ப பயந்த சுபாவம். அதாவது இது கதை, இது திரைப்படம் அதில ச்சும்மா திரிலுக்காக இப்படி காட்டுவாங்க என்று தெரிஞ்சுகொண்டு படிப்பேன், பார்ப்பேன். ஆனா… வாழ்க்கையில் வரும் திரில்களை எதிர்நோக்கும் சக்தி என்னிடம் இல்லவே இல்லை.
உங்க டயலாக், எழுத்து ரொம்பவே இன்ரஸ்டிங்கா இருக்கு. ஆனாலும், இது உண்மைக்கதை என்றுவேறு தெரிந்தபின் அடுத்து என்ன வரப்போகிறதோன்னு மனசு அடிச்சுக்கிறது…:(
12.
chollukireen | 2:39 பிப இல் நவம்பர் 28, 2012
இப்பவும் நாங்கள் நல்லபடியாக இருக்கிறோம். தெறியாதா உனக்கு. பயப்படாமல் படி. எல்லாம் நடந்து போன நிகழ்வுகள்தான். நான்கூட திகீர்க் கதைகள் படிப்பது குறைவுதான். எழுதறேன். தானாக எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எப்படியோ கோர்வையாக வந்துவிடுகிறது போல உள்ளது. அன்புடன்
13.
chitrasundar5 | 12:09 முப இல் நவம்பர் 28, 2012
காமாஷிமா,
வரலாற்றுப் புத்தகத்தில்தான் ராஜாவைப்பற்றிப் படித்திருக்கிறோம்.அதை நேரில் அனுபவித்தவரே எழுதும்போது சுவாரஸியமாக உள்ளது.
“மக்கள் உடலை வளைத்து இரு கைகளினாலும் கையைத் தட்டி ஓசையுடன் வணக்கம் செய்யும் நிலையில்”___ மனிதனை மனிதனே வணங்குவதுதான் இடிக்கிறது.
“இரண்டொரு நாளில் நல்லபடி திரும்புவார் என்ற நல்ல செய்தி வந்தது”___ அப்பாடா நிம்மதியாச்சு.ம்ம்,மேலே சொல்லுங்க.அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 2:33 பிப இல் நவம்பர் 28, 2012
அரசரை மஹாவிஷ்ணுவாக பாவித்து மனப்பூர்வமாக பக்தி செய்தவர்கள். பின்புதான் யாவும் மாறிவிட்டதே!கட்டாயமென்று எதுவுமில்லை. நான் பார்த்த நிகழ்ச்சிகளவை. அவ்வளவுதான். உன் பின்னூட்டத்திற்கு முதலில் பதிலெழுதியிருக்கிறேன். அன்புடன்
15.
Mahi | 2:42 முப இல் நவம்பர் 29, 2012
நேபாளில் நடந்த நிகழ்வுகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. நல்லபடியாக வந்துவிடுவார்கள் என்று செய்தி வந்தாலும், சென்ற ஆட்கள் திரும்பி வரும்வரை பக்-பக் என்றுதான் இருந்திருக்கும்! 🙂
பெரீய்ய வெல்லம், கிழங்கு, பூசணிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு..ஆஹா! நினைக்கவே இனிக்கிறதே! சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்கம்மா!
16.
chollukireen | 5:36 முப இல் திசெம்பர் 3, 2012
ஒருதரம் பதிலெழுதி ஓடியே போய்விட்டது. இப்போ கூட சிந்தனை செய்தால் எவ்வளவு ஒரு மோசமான சூழ் நிலையிலிருந்து
மீண்டு வந்தோம் கடவுளின் செயலென்று ஒன்று இருக்கிறது என்பது இதுதான். உன் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மஹி.
அன்புடன்
17.
Sheela | 7:10 முப இல் நவம்பர் 30, 2012
Mami,
ithanai kathaigal irukiratha/ theirayave illai. Aavaludan kathu irukirom.
Regds
18.
chollukireen | 6:15 முப இல் திசெம்பர் 3, 2012
ஷீலா வேறு கதைகளெல்லாம் இருந்திருக்கும். இதைப் பற்றி பேச சான்ஸே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். ஸரிதானே?
}ஞாபகங்கள் வரும்போது எழுத ப்ரமயம் கிடைக்கிறது. அவ்வளவுதான். ஞாபகம் வைத்து பின்னூட்டம் போடுகிறாயே!அது எவ்வளவு
பெரிய காரியம் தெரியுமாஅன்புடனும், ஆசிகளுடனும், நன்றி
19.
chollukireen | 11:55 முப இல் ஜனவரி 24, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நேபாளத்தின் முடியாட்சியில் நடந்த சூழ்நிலைச் சம்பவங்கள். படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். என்னவரின் ஞாபகார்த்தப் பதிவு இது. அன்புடன்
20.
ஸ்ரீராம். | 2:15 பிப இல் ஜனவரி 24, 2022
//முடியாட்சியே இல்லை.காமாட்சி அதைப்பற்றி பேசுகிறேன்.//
ஹா.. ஹா.. ஹா…
திகிலான அனுபவங்கள், சுவாரஸ்யம்.
21.
chollukireen | 8:01 பிப இல் ஜனவரி 25, 2022
சுவாரசியம் அது போதும் எனக்கு இப்பொழுதைய காட்மாண்டு மிகவும் மாறி இருக்கிறது ஏராளமான ஆகாய விமான போக்குவரத்து ஏற்பட்டு இருக்கிறதா விமானங்களும் ஏராளமாக வகைவகையாக இருக்கிறது சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கு ஏராளமான சவுகரியங்கள் உண்டாம் அன்புடன்
22.
நெல்லைத்தமிழன் | 11:15 பிப இல் ஜனவரி 25, 2022
Very interesting. முன்பே படித்த நினைவும் இருக்கிறது.
நேபாள மன்னராட்சி தொலைந்ததில் நிரம்பவே வருத்தம.
23.
chollukireen | 11:56 முப இல் ஜனவரி 26, 2022
அப்படியா ஸந்தோஷம். மன்னராட்சியில் பிரஜைகளுக்கு ஏதும் செய்துவிடவில்லை. ராணாக்களின் ஆட்சியாக இருந்தது. டால்,சாவல்,தர்காரி—பாக்கி ஸப் ஸர்காரி என்று வசனம் சொல்லுவார்கள்.வரவிற்கு மிகவும் நன்றி. அன்புடன்