ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.3
திசெம்பர் 4, 2012 at 10:59 முப 21 பின்னூட்டங்கள்
நமக்கு ஜும்ஸும் போனவர்கள் திரும்ப வந்தால்ப் போதுமென்றாகி
விட்டது. ராயல் ஃப்ளைட் கன்ட்ரோலருக்கோ அவ்விட விபத்துக்கு
ஆளான விமான பாகங்களைக் கொண்டு வரவேண்டும். அதற்காக
பின்னும் பட்ஜெட் போடாமல் இருப்பவர்களை அங்கேயே மேலும்
சில நாட்கள் தங்கவைத்து, மராமத்துப் பணிகளுக்கு அவர்களை உபயோகித்து
காப்டரை பாதுகாத்து மேலும் சில ட்ரிப்புகள் செய்து ராயல் ஃப்ளைட்டுக்கு
ஆதாயம் கொடுக்க தீர்மானம் செய்து விட்டார்.
ஸரி யாருக்கு முக்திநாத் போகவேண்டுமோ நான் ஏற்பாடு செய்கிறேன்.
போய்வாருங்கள் என்று சொல்லி விட்டார்.
குஷிக்கு கேட்க வேண்டுமா?
அப்பொழுதெல்லாம், குதிரையோ,இல்லை,இல்லை கோவேரி கழுதைன்னு,மட்டக் குதிரை என்று
தான் சொல்ல வேண்டும். அதனுடன் ஒரு ஆள் வருவான். சில இடங்களில்
அதன்மேல் உட்கார வைத்தும், கூட துணையாகவும் வந்து எல்லா இடங்களுக்கும் அழைத்துப் போய் திரும்ப மாலை வந்து சேர்ந்து விடுவார்கள்.
இப்படிக்,கும்பல்,கும்பலாக ஆட்கள் முக்திநாத் சென்று வருவார்களாம்.
அந்தக் கூட்டத்துடன் பாலஸில் வேலை செய்பவர்கள் என்ற விசேஷ
மரியாதைக்குரியவர்களாக இவர்களுக்கு வேண்டியதெல்லாம் வசதி
கொடுத்து, சாளக்ராமங்கள் அவ்விடம் சேகரித்திருந்தால் அதையும் சேர்த்து
கொடுத்தனுப்பும் படி விசேஷ V.I.P.ஆக 4,5 பேருக்கு போவதற்கு ஏற்பாடு
ஆகி விட்டது. விஷயங்களும் எங்களுக்கு சொல்லியனுப்பினார்கள்.
ஆக முக்திநாத் போய் சாளக்ராமம் வரப்போகிறது.
அப்படி என்ன ஸந்தோஷமா?
என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர்.
ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக
பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி
யாவும் நடைபெறும்,
வயதான காலத்தில் எப்போதும்,ராமாயண பாராயணம் செய்து கொண்டு
பக்கத்தில்,சிக்கு பலகை,ராமாயண க்ரன்த புத்தகம், கூடவே சாளக்ராமம்
அடங்கிய பூஜை ஸம்படம் என எல்லாம் அவர் பக்கத்தில்யே இருக்க வேண்டும்.
தள்ளாமை இருந்தது.
ஸூரியனுக்காக ஸ்படிகமும்,
அம்பாளுக்காக ஸ்வர்ணரேகாவும்,
விஷணுவிற்காக சாளக்ராமமும்.
பிள்ளையாருக்காக சோணபத்ரமும்,
சிவனுக்காக பாண லிங்கமும்
எனக்கூறியதைக் கேட்டதுண்டு.
சிவனுக்காக அடிப்பாகம் வெள்ளியில் செய்த பீடமும் ,2கிராம் தங்கத்தில்
செய்த வில்வ தளம் கோர்த்த வெள்ளிச் சங்கிலியால் இணைத்த
நாக பீடமும் அதிலுண்டு.
அபிஷேகம் முடிந்தவுடன், துடைத்து, மடியாக அரைத்த சந்தனத்தை இட்டு
சிவனை பீடத்திலிருத்தி சந்தன காப்பின் மேல் வில்வத்தைப் பொருத்தி
எல்லா வற்றையும் ஸம்படத்தில் வைத்து அர்ச்சனைகள் செய்து புஷ்பத்துடன்
இறுதியில் மூடிவைத்தால் மறுநாள் பூஜைக்கு திரும்ப எடுக்கும்போது
அன்றலர்ந்த புஷ்பத்துடன் இருக்கும் மாதிரி பூஜை இருக்கும்.
நல்ல வாஸனையுடன் புஷ்பங்களும். அநேகமாக நித்ய மல்லி இருக்கும்.
இம்மாதிரியான மனிதரிடமும் யாருக்கோ,திருட மனம் வந்தது.
அப்பா உயிருடன் இருக்கும்போதே யாரோ எடுத்துப் போய்விட்டனர்.
அதன் பாதிப்பு அவரிடம் இருந்தது.
வழி, வழியாக தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்த நிதி
போய்விட்டதென புலம்பிக்கொண்டிருப்பார்.
என்னவோ அதன் நினைவுகளாக சாளக்ராம ஆசை எனக்கு வந்திருந்தது.
என்ன ஒரு ஏழு, எட்டு, பத்து, சாளக்ராமம் கொண்டு வருவார்கள்.
அவ்வளவுதான். இல்லையா?
மடி, ஆசாரம்,பூஜை,புனஸ்காரம், இதெல்லாம் என்னதென்றே தெரியாத
உத்தியோகம்.
காலையில் ஃப்ளைட் கிளம்புவதற்கு மிகவும் முன்னதாக போய்
-ப்ளைட் லேண்டான பிறகும் வெகு நேரம் கழித்து வருவதானால்
இதற்கெல்லாம் நேரம்,காலம் வேண்டாமா?
அவரவர்கள் சூழ்நிலை,வளர்ப்பு, எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர
வேண்டாமா?
திரும்பி நல்லபடியாக வரவேண்டுமே என்ற விசாரம் போய் சாளக்ராம
பூஜையைப் பற்றி எதுவும்,தெரியாதவர்களாயிற்றே/?
என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று மூளை அனாவசியமாக
வேலை செய்யத் துவங்கியது.
அந்த கால கட்டத்தில் இன்டியன் எம்பஸியிலும், இன்டியன் கோவபரேடிவ்
மிஷனிலும், வேலை செய்யும் இந்தியர்கள், தமிழர்கள், ஆந்திராவைச்
சேர்ந்தவர்கள், U.N இல் வேலை செய்பவர்கள் என பல குடும்பங்கள்
அறிமுகமாயிருந்தனர்.
கன்ட்ரோலரின் ட்ரிப்புகளும் நடந்து கொண்டு இருந்தது.
ஜும் ஸும்மிலிருந்து கடைசியாக இரண்டு விங்குகள் பாக்கி.
அது வந்துவிட்டால் பிறகு யாவரும் திரும்பி விடுவார்கள் என்ற
செய்தியும் வந்து சேர்ந்தது.
மறுநாள் காட்மாண்டுவிலேயே விங்குகளை{இரக்கைகளை} எப்படிக்
கொண்டு வருவது என்ற முயற்சிக்கு பழைய விங்குகளைக் கட்டி
பரீக்ஷார்த்தமாக முயற்சியை ஆரம்பித்தார்.கன்ட்ரோலர் ஓட்ட
ஹெலிகாப்டர் நிதானமாகப் பறக்கத் துவங்கியது.
பதிவு பதங்கள் 400 ரை நெருங்குகிறது
மிகவும் நீளமாகப் போய்விட்டால் படிப்பதற்கு கஷ்டம்.
அடுத்துப் பார்ப்போமா?
Entry filed under: சில நினைவுகள்.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 11:48 முப இல் திசெம்பர் 4, 2012
//என்தகப்பனார் பஞ்ஜாயதன பூஜை செய்பவர்.
ஆதித்யம்அம்பிகாம் விஷ்ணும், கணநாதம், மஹேச்வரம் என்று,அபிஷேக பூஜை,ஆராதனை,நிவேதனம், தீர்த்தம் கொடுத்தல், என முறைப்படி யாவும் நடைபெறும்,
வயதான காலத்தில் எப்போதும்,ராமாயண பாராயணம் செய்து கொண்டு பக்கத்தில்,சிக்கு பலகை,ராமாயண க்ரந்த புத்தகம், கூடவே சாளக்ராமம் அடங்கிய பூஜை ஸம்படம் என எல்லாம் அவர் பக்கத்தில்யே இருக்க வேண்டும்.
தள்ளாமை இருந்தது.
ஸூரியனுக்காக ஸ்படிகமும்,
அம்பாளுக்காக ஸ்வர்ணரேகாவும்,
விஷணுவிற்காக சாளக்ராமமும்.
பிள்ளையாருக்காக சோணபத்ரமும்,
சிவனுக்காக பாண லிங்கமும்
எனக்கூறியதைக் கேட்டதுண்டு.
சிவனுக்காக அடிப்பாகம் வெள்ளியில் செய்த பீடமும் 2 கிராம் தங்கத்தில் செய்த வில்வ தளம் கோர்த்த வெள்ளிச் சங்கிலியால் இணைத்த நாக பீடமும் அதிலுண்டு.
அபிஷேகம் முடிந்தவுடன், துடைத்து, மடியாக அரைத்த சந்தனத்தை இட்டு சிவனை பீடத்திலிருத்தி சந்தன காப்பின் மேல் வில்வத்தைப் பொருத்தி எல்லா வற்றையும் ஸம்படத்தில் வைத்து அர்ச்சனைகள் செய்து புஷ்பத்துடன்
இறுதியில் மூடிவைத்தால் மறுநாள் பூஜைக்கு திரும்ப எடுக்கும்போது அன்றலர்ந்த புஷ்பத்துடன் இருக்கும் மாதிரி பூஜை இருக்கும்.
நல்ல வாஸனையுடன் புஷ்பங்களும். அநேகமாக நித்ய மல்லி இருக்கும்//
படித்ததும் எனக்கு என் தகப்பனார் ஞாபகம் வந்தது. அப்படியே அழுது விட்டேன். அவரும் இதே போல டிட்டோவாகவே மிகவும் சிரத்தையாக தினப்படி பூஜை செய்தவர். இன்று அதே பூஜையை என் பெரிய அண்ணா பிள்ளை [வேதம் படித்தவர்] செய்து வருகிறார்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 12:13 பிப இல் திசெம்பர் 4, 2012
இந்த பூஜையைப்பற்றி எழுதும் போது நானும் பத்து நிமிஷங்கள் சிலையாக இருந்துவிட்டு, சுருக்கி
எழுதினேன். உங்களின் உணர்ச்சி அதை நேரில் பார்த்து அனுபவித்தவர்களுக்கு கட்டாயம் இருக்கும்.
உங்கள் உணர்ச்சிகளுக்கு நானும் கண்ணீர்த்துளிகளுடன் அனுபவத்தைப்பகிர்ந்து கொள்கிறேன்.நன்றிகள் பல.
உங்களின் சாப்பாட்டு விருப்பத்தைப் பற்றிய பதிவுக்கு
பின்னூட்டம் எழுத நினைத்தும் அதை எனக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஏதோ எழுதுகிறேன். சில விஷயங்கள் சட்டென்று கண்டு.
பிடிக்க தெரிவதில்லை. நாலட்ஜ் அவ்வளவுதான்.
நீங்கள் உடனுக்குடன் ஆதரித்து எழுதுவது
மிக்க மகிழ்ச்சிகரமான விஷயம்.நன்றிகளும், ஆசிகளும். அன்புடன்
3.
chitrasundar5 | 8:14 பிப இல் திசெம்பர் 4, 2012
காமாஷிமா,
பதிவின் தலைப்பைவிட அப்பாவின் நினைவுகள்தான் அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது.
அவரது பூஜை சாமான்களை எடுக்க யாருக்கு மனம் வரும்!அதிலும் வயதானவரின்!
தொடர்ந்து எழுதுங்க.படிக்க ஆவலோடு இருக்கிறோம். அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 10:13 முப இல் திசெம்பர் 5, 2012
சீக்கிரமே முடிச்சுடறேன். நானே இவ்வளவுதூரம் எதிர்பார்க்கலே!
பூஜை விதரணை எல்லாம் சங்கராச்சாரியார் மாதிரி இருக்கும். ஒரு கூடை பாத்திரம் தேய்க்கவேண்டி வரும்.அவருக்கப்புரம் எங்கள் வீட்டில் அம்மாதிரி
பூஜை செய்ய அண்ணா,தம்பி யாரும் கிடையாது.
ஞாபகம் மட்டும் வருகிரது. உங்களுடைய அனுதாப வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.
5.
ranjani135 | 12:45 முப இல் திசெம்பர் 5, 2012
அன்புள்ள காமாட்சி அம்மாவிற்கு,
உங்களின் தகப்பனாரின் பூஜை பற்றிய வர்ணனைகள் மனதை தொட்டன.
நீங்கள் முக்திநாத் சென்று சாளகிராமம் கொண்டு வந்தீர்களா அல்லது வேறு யாராவது கொண்டு வந்தார்களா என்பது இன்னும் சஸ்பென்ஸ்லயே இருக்கே!
நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது உங்களது இந்தப் பதிவிலிருந்து.
அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
ரஞ்சனி
6.
chollukireen | 10:30 முப இல் திசெம்பர் 5, 2012
இந்தப் பதிவில் முக்தி நாத் போயுள்ளவர்களில்
மட்டக்குதிரை,ஆஸாமிகளுடன் இவரும் போயுள்ளாரே!
நான் பசங்கள் வளர்ப்பதிலும், வீட்டை பார்த்துக் கொள்வதிலும்,அவர்களைக் கண்காணிப்திலும்,ஒரு வேலைக்காரிகூட வைத்துக் கொள்ளாமல் அவ்வளவு
பொருப்பையும் ஏற்று கருமமே கண்ணாயினார் என்று
இருந்திருக்கிறேன்.அனுபவங்கள் எல்லாம் என்னுடையது தானே? அன்புடன்
7.
ranjani135 | 6:58 முப இல் திசெம்பர் 6, 2012
அடடா! இப்போது சஸ்பென்ஸ் இன்னும் அதிகமாகிறதே!
அந்த வயதில் கருமமே கண்ணாயினார் என்று இருந்த நீங்கள் இன்னமும் அதே போல இருக்கிறீர்களே!
மாமாவின் அனுபவங்களையும் உங்கள் மூலமாகத் தெரிந்து கொள்வது தனி தான்!
நீங்கள் சொல்ல சொல்ல ‘உம்’ கொட்டிக் கொண்டே (தூங்காமல்) கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
8.
chollukireen | 3:26 பிப இல் திசெம்பர் 7, 2012
இதிலே விசாரம், கஷ்டம் பொறுப்பு எல்லாம் பெண்களுக்குதான். வேலைக்குப் போனவர்கள் என்ன
நாங்கள் வேலைக்குத்தானே போனோம் என்பார்கள்.
விளைவுகள் குறித்த கற்பனைகள் இருக்கிரதே அது பயங்கரம். சஸ்பென்ஸ் இல்லை. நிஜமாகவே
ஒவ்வொரு வரியும் அப்படியே வருகிரது. நிஜமாக
என்னை இதில் பார்க்கிறீர்கள். அன்புடன்
9.
Mahi | 3:49 முப இல் திசெம்பர் 7, 2012
நன்றாக இருக்கிறதும்மா மலரும் நினைவுகள்..இந்தப் பதிவு என்னைப் பொறுத்தவரை நீளம் குறைவுதான், இன்னுங்கொஞ்சம் எழுதியிருக்கலாம்! சஸ்பென்ஸ் வச்சு நிறுத்தியிருக்கீங்களோ? 😉
சாளக்ராமம் கேள்விப்பட்டிருக்கிறேன், உங்க பதிவுகள் பார்த்ததும்தான் கூகுளில் போய் படங்கள் பார்த்தேன். 🙂
புது விஷயங்களைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. சீக்கிரம் தொடருங்க!
10.
chollukireen | 3:35 பிப இல் திசெம்பர் 7, 2012
மஹி சாளக்ராமம் பற்றி இப்போது நிறைய தெரிந்து
கொண்டிருப்பாய். சின்னதாகப் பதிவு போடுங்கள்.படிக்க சுலபமாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் சட்டென்று மனம் கணக்குப் போட்டு விடுகிரது. அவ்வளவுதான். நீ எழுதியிருப்பதையும் மனதில் வைத்துக் கொள்கிறேன். உன் பின்னூட்டம் எனக்கு சுருசுருப்பைத் தரும். எனக்கு அது வேண்டியதாக இருக்கிரது. அன்புடன்
11.
Sheela | 11:49 முப இல் திசெம்பர் 7, 2012
மாமி, நமஸ்காரம். ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தொடர் கதை வாசிக்கும் பீலிங் வருகிறது. (offlate எதுவும் வாசிப்பதே இல்லை.) அடுத்த இதழ் எப்போது வரும் என ஆவலாக உள்ளது.suspense super.
Regds
12.
chollukireen | 3:43 பிப இல் திசெம்பர் 7, 2012
ஷீலா உன் கமென்ட் மாமிக்கு நல்ல தெம்பைத் தருகிரது. உன் பிஸி வேலைகளுக்கிடையே இதையும் சேர்த்திருப்பதை அன்புடன் வரவேற்கிறேன். அன்புடன்
13.
இளமதி | 8:05 முப இல் திசெம்பர் 8, 2012
அம்மா…
இடையில் பல சோலிகள்..வரத்தாமதமாகிவிட்டது… இம்முறையும் உங்கள் அனுபவத்தை படிக்கும்போது இப்படியுமா எண்று ஆச்சரியப்பட வைக்கிறீர்கள்.
பஞ்சாயதன பூஜை, சாளக்ராமமும் தெரியுமம்மா… உங்கள் தந்தையின் நினைவுகளுடன் என் மனத்திலும் பல நினைவுகள் கோர்வையாய்…..
தொடருங்கள்…தொடருகிறேன்..
14.
chollukireen | 10:55 முப இல் திசெம்பர் 8, 2012
இளமதி, நீ,அஞ்சு ஒருவரையும் காணோமே என்று நினைத்துக் கொண்டேன். நீங்களெல்லாம் வந்துவிட்டால்
மனது திருப்தியாகிவிடுகிரது. அம்மாதிரி ஒரு அன்பைக்கொடுத்து இவ்விடம் தேடும்படியான ஒரு
மனநிலையை உண்டாக்கியிருக்கிறீர்களென்று ஸந்தோஷமாய்க் கூறுகிறேன். உனக்கும் பல நினைவுகளை
உண்டாக்கியது நல்லபடியாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். தொடரும் அன்புகளுக்கு நன்றி. அன்புடன்
15.
இளமதி | 3:32 பிப இல் திசெம்பர் 8, 2012
அம்மா… அஞ்சுவுக்கு கணனி மற்றும் நெட் போன்றவற்றில் ஏதோ பிரச்சனையாம் வரமுடியலைன்னு எங்களிடம் சொல்லியிருந்தா. எப்போ சரி ஆகும்னும் தெரியலை. நானும் அவங்களை ரொம்பவே மிஸ் பண்றேன். அவங்ககிட்ட நீங்க தேடியதா தகவல் சொல்லிடுறேன்.
அம்மா….ஒரு வேண்டுகோள்…உங்களுக்கு நேரமிருந்தா என் வலைப்பூ பக்கமும் வந்து உங்க ஆசியை தரணும்னு வேண்டுகிறேன்மா. அவசரமென்று இல்லை. நிதானமா வந்தாலே போதும்…:)
என் வலைப்பூ : ilayanila16.blogspot.de
மிக்க நன்றிம்மா!
16.
chollukireen | 10:02 முப இல் திசெம்பர் 9, 2012
அன்புள்ள இளமதி ஆசிகள். உன் ப்ளாகிற்கும் சேர்த்து அன்பு்ள்ள அநேக ஆசிகள். ப்ளாக் பார்த்தேன்.படித்தேன். மிகவும் ஸந்தோஷமாக இருந்தது. என்னைப் பொருத்த வரையில் கூடுமான வரையில் கமென்ட்போட முயற்சித்தேன். உள்ளே நுழைய அந்த ஃபாரம் முயற்சித்தேன். ஸக்ஸஸ் ஆகலே. சுலபமா ஏதாவது வழி சொல்லு. அல்லது எப்படி ஃபாரம் எழுதுவது என்றாவது ஏதாவது வழி சொல்லவும். உன் பின்னூட்டம் ஸந்தோஷம் அஞ்சுவிற்கும் அன்பு. உன் ப்ளாக் மேன்மேலும் நன்றாக வளரவேண்டும். அன்புடன் காமாட்சிமா
17.
Rajalakshmi paramasivam | 6:41 பிப இல் திசெம்பர் 8, 2012
காமாக்ஷி அம்மா,
நீங்களும் முக்திநாத் சென்றீர்களா ?
அந்த பயனஅனுபவத்தையும் எழுதுங்கள்
படிக்க காத்திருக்கிறேன் .
ராஜி
18.
chollukireen | 5:57 முப இல் திசெம்பர் 9, 2012
இல்லையம்மா. போகவேண்டுமென்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. அடுத்து படித்த பின் போகாவிட்டாலென்ன உணர்ந்து எழுதியிருப்பதின்
காரணம் புரியும். உங்கள் வரவுக்கு நன்றி.அன்புடன்
19.
gardenerat60 | 9:50 முப இல் திசெம்பர் 10, 2012
இப்போதெல்லாம் முக்திநாத் போவது, மிக சுலபமாகிவிட்டது என்று நினைக்கிறேன், மந்தை மந்தையாக பக்தர்கள் சென்று மகிழ்வதாக பேச்சு.
இந்த சம்பவங்களை , கவனித்து(observation skills), நினைவு கூர்ந்து , அழகாக எழுதுவது , மெச்ச தக்கது.
மிகவும் பிடித்தது!.
//இதிலே விசாரம், கஷ்டம் பொறுப்பு எல்லாம் பெண்களுக்குதான். வேலைக்குப் போனவர்கள் என்ன
நாங்கள் வேலைக்குத்தானே போனோம் என்பார்கள்.
விளைவுகள் குறித்த கற்பனைகள் இருக்கிரதே அது பயங்கரம/
நமஸ்காரம்.
20.
chollukireen | 12:19 பிப இல் திசெம்பர் 12, 2012
வசதியாக முக்திநாத்வரை விமான வசதிகளும் இருக்கிதாம். அதனால் சுற்றுலா வசதிகளும் கிடைப்பதால் யாத்ரிகர்கள் அதிகம். இது பழைய
அனுபவத்தின் தொகுப்புதானே?இவ்வளவு அக்கரையாகப் படித்து பின்னூட்டமுமிட்டு மகிழ்வித்ததற்கு ஸந்தோஷத்தை ஸந்தோஷவுடன்
ஏற்றுக் கொள்கிறேன். அன்புடன்
21.
chollukireen | 12:16 பிப இல் ஜனவரி 31, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நிகழ்வுகள் எழுதுவது நான் இல்லையா!அந்த கால கட்டத்தில் என் எண்ணங்களின் போக்கும் கூடவே வருகிறது. பாருங்கள். படியுங்கள். வேறு நான் என்ன சொல்லப் போகிறேன். அன்புடன்