ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும் 4
திசெம்பர் 10, 2012 at 6:20 முப 18 பின்னூட்டங்கள்
முக்திநாத் போனவர்கள் நல்ல முறையிலேயே வழியைக் கடந்து
நல்ல குளிர் உள்ள போதும் ஸரியான ஸமயத்தில் கோவிலில்
தரிசனம் செய்து கொண்டு அவ்விடம் தாராக்களில் வரும், தண்ணீரில்
குளித்தார்களா, அப்படியே தண்ணீரை ப்ரோக்ஷணம், செய்து
கொண்டோ எப்படியோ கையில் ப்ரஸாதங்களையும் வாங்கிக்கொண்டு
முக்கியமாக அவ்விடம் தெரிந்த நபர் பெற்றுக் கொடுத்த,சாளக்ராமங்கள்
கொஞ்சமாக இல்லை!!! வாரிக் கொடுத்து வழியனுப்பினர்.
நிறைய பைகள் கொள்ளாது ஒவ்வொருவருக்கும், நாமா சுமக்கப்
போகிறோம். நம்முடன் வரும் குதிரை சுமக்கப் போகிறது என்று
சொல்லிக் கொண்டே யாவரும் மிக்க ஆனந்தத்துடன் வரும் வழியில்
கூட துணைக்கு வந்தவர்கள் காட்டிய இடங்களில் கண்டகி நதியில்
சாளக்ராமங்களையும பொருக்கிக் கொண்டு, ஜன்ம சாபல்யம் அடைந்தோம். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இடம்.
முக்திநாத் பெயர் தெரியுமே தவிர அவர் விஷ்ணுவா, சிவனா என்று
கூட தெரியாது. அதிருஷ்டம் இருந்து இவ்விடம் வந்து போகிறோம்
என்று நினைத்துப் பேசியதை, பிறகு சொன்னதை இந்த வரிஎழுதும்போதுஞாபகப் படுத்திக் கொள்கிறேன்.
இங்கே காட்மாண்டுவில் ஒரு பழைய விங்கை செங்குத்தாக
ஹெலிகாப்டரில் தொங்கும் படியாக பொருத்திக்கொண்டு
கன்ட்ரோலரின் ப்ளைட் மேலே,மேலே போய்க்கொண்டிருக்கிறது.
ஹெலிகாப்டரிலிருந்து ஆபத்துக் காலங்களில் கீழே உள்ளவர்களைக்
காப்பாற்றுவதை எல்லாம் பார்த்திருப்பீர்களே!!
எந்த ஒரு பொருளையும் நான்கு புறமும் ஸபோர்ட் செய்து
ஊஞ்சல் மாதிரியோ, தராசு மாதிரியோ கட்டித் தூக்கினால்தான்
அலைக்கழியாது இருக்கும். ஒத்தையாக இருந்தால் மனம் போன போக்கில் ஊசலாடுமே தவிர ஒத்து வராது. இதை நான் உங்களுக்குப் புரியும்படி
எழுதியுள்ளேனா?படிக்கும் உங்களுக்குத்தான் தெரியும்.
இதை எழுதும்படியான அவசியம் இதுவும்தான்.
இந்தப் பதிவைப் பற்றி, இவரைப் பற்றி பாருங்கள்
தற்போது இவர் 15 மாதங்களாக ஞாபக மறதி நோய்க்காளாகி
இந்தியாவில் இருக்கிறோம்.
டிப்ரெஷனுக்கு மருந்து சாப்பிட்டு அது இந்த அளவில் இருக்கிறது.
காட்மாண்டு,ராயல்ஃப்ளைட்,S.N.S.B.S, அந்த ஞாபகங்கள் மனதைவிட்டகலவில்லை இவருக்கு.
அதனுடைய வெளிப்பாடாக இந்தப் பதிவுகளைக் கொள்ளலாம்.
சில ஸந்தேகங்கள் எப்போதாகிலும் கேட்பேன். அவருக்கு ஸதா
காட்மாண்டு ஞாபகம் பசுமரத்தாணியாக இருக்கிரது.
இப்போது நீங்களாக மற்றதை யூகித்துக் கொள்ளுங்கள், ஸரி
இப்படி ஒரு பதிவு போடலாம் என்று தோன்றியது.
இதில், உங்களுக்கு முக்திநாத்தைப் பற்றிய ஸமாசாரங்கள்
அதிகம் நான் எழுதவில்லை. காலங்கள் அதிகம் முன்னோக்கி வந்திருக்கிறோம். வசதிகள் பெருகியிருக்கிறது. இது ஒரு கனாக்கால
நிகழ்வு.
ராயல்ஃப்ளைட்டையும்,சாளக்ராம வினியோகமும்தான் தலைப்பு.
அப்படிதான் விவரங்களும் போய்க் கொண்டிருக்கிறது.
மேலேமேலே காப்டர் பறக்கிறது. விங் வேகமாக
இப்படியும்,அப்படியும் அலைக்கழிக்கிறது. வேகத்தைக் குறைத்து
காப்டர் தரையிரங்க முயற்சிக்கிரது.
அத்தப் பழைய விங் வேகமாகப் ப்ரொபல்லரைப் பதம் பார்த்து
இப்படியும்,அப்படியுமாக மோதுகிறதா,பதம்பார்க்கிரதா??
எதைச் சொல்ல,என்ன சொல்ல காப்டரை கன்ட்ரோல் செய்ய
பெரும் முயற்சி. கண் இமைக்கும் நேரத்தில் என்ன ஆகிரது
பார்ப்பவர் தவிக்க காட்மாண்டு ஏர்போர்ட்
ஏரியா தாண்டி ராயல்ஃப்ளைட்டின் மூன்றாவது பயங்கரம்.
இதுதான் சஸ்பென்ஸா??
போச்சு யாவும். கன்ட்ரோலரும், காப்டரும்,கீழே விழ
எந்தவித அநுதாபம், யாருக்கு,எப்படி, சொல்ல வார்த்தையில்லை.
எங்கு போய்எங்கு வந்திருக்கிறேன், எழுத்தில்தான்.
சொல்லி,சொல்லி, பார்த்தவர்கள் மாய்ந்து போக,இந்த இழப்பு
அந்தக் காலத்தில் பெரிய பயங்கரம்.
கத்துக்குட்டியோ, அனுபவமில்லாத பைலட்டோ இல்லை.
பிறகு எதைப் பற்றி யார் பேசியும்,எதுவும் லாபமில்லை.
பிறகு ப்ளேன்கள் வந்தது. ராயல்ஃப்ளைட் இருந்தது.
பின்னர் ஆர்மியில் வாயுஸேவாவாக இணைக்கப்பட்டது.
இதெல்லாம் ராயல்ஃப்ளைட் ஸமாசாரங்கள்.
இப்போது நாம் ஜும்ஸும்,நபர்களும்,சாலக்ராமங்களும்என்ன
ஆயிற்றென்று பார்ப்போம்.
ஜும்ஸும்மிலிருந்து இவர்கள் வரவிருந்த ஒரு வசதியும்
முடங்கிவிட்டது.
போனவர்கள் வந்துதானே ஆக வேண்டும்?
போக்ரா வரையில் நடத்து வந்து, பிறகு காட்மாண்டுவர வழி சொல்லப்பட்டு, முக்திநாத் போக ஏற்பாடு செய்த மாதிரி
மட்டக்குதிரைகளும்,வழி காட்டிகளும், ஸெக்யூரிடிகளுக்கு ஆட்களும்
ஏற்பாடு செய்யப் பட்டு சாளக்ராமங்கள் வழி நடையாக
ராஜ ஸவாரி மாதிரியில் இவர்களுடன் பாதுகாப்புடன் போக்ரா
வந்து சேர்ந்தது.
நான்கு நாட்களாகும், ஐந்து நாட்களாகும் என்ற வழி நடையை
நல்ல வழிகாட்டிகளோடு வந்ததால் சிறிது சீக்கிரமேமுடித்து, மூன்று நாட்களிலேயே போக்ராவையடைந்து, விஷயங்கள் எங்களுக்குத்
தெரிவிக்கப் பட்டது.
இதனிடையே விசாரங்கள், கவலைகளெள்லாம் எழுதவேண்டிய அவசியமில்லை. வழி நெடுக நல்ல தங்குமிடமும்,இருப்பதில்
நல்ல வசதியும் கொடுத்திருக்கிறார்கள்.
காட்மாண்டுவும் வந்தாகிவிட்டது. கூட போனவர்கள்,தங்களுக்கு
வேண்டிய சில சாளக்ராமத்தை எடுத்துக் கொண்டு, பூணூல் போட்ட
பாவுன் நீங்களே எல்லாவற்றையும் எடுத்துப்போய், எல்லாருக்கும்,
கொடுங்கள் என்று சொல்லிவிட்டனர். ஆதலால் எல்லா சாளக்ராமமும்
எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தது.
வந்தவர்களை வரவேற்பதா? சாளக்ராமத்துக்காக, ஸந்தோஷப் படுவதா
என்ன செய்வதென்று, திகைப்பும்,ஒரு மூலையில் மன நிம்மதியும்,
செயலற்று நின்றதும்தான் நினைவுக்கு வருகிறது!!!!!!!!
சாளக்ராமம் மட்டுமா, கொண்டு வந்தனர்? கூடவே அவ்விடத்திய
அழகான நாய்க்குட்டியும்!!!!!!!!!!!!!!
ஆளுக்கொன்றாக யாவரும் எடுத்து வந்ததாகப் பெருமையுடன்
சொல்ல பசங்களுக்கெல்லாம் பரம ஸந்தோஷம்.
ஸமீபத்தில் சீனாவினின்றும்,திருட்டுத்தனமாக முப்பது நாய்க்குட்டிகள்
ப்ளேனில் வந்ததாக ஒரு செய்தி வந்ததே!!!
அந்தக்குட்டி மாதிறி அசல் அச்சு, நான் ,நீ என்று போட்டிபோட்டுக்
கொண்டு, பசங்கள் கொஞ்ச, அதற்கு பால் கொண்டுவா என்று என்னைச்
சொல்ல எனக்குக் காரணம் தெரியாமல் ஒரு கோபம் வந்ததே
பார்க்க வேணும்?
போதும், பதினைந்து, பதினாரு வருஷங்களாக இந்தப் பசங்களுக்கு
எல்லாம் செய்தாயிற்று. இது வேறு என்ன சீர் வேண்டிக் கிடக்கிறது?
என்னால் எதுவும் செய்ய முடியாது. ஒரு ப்ரஸங்கமே செய்து விட்டேன்.
பசங்கள், நான்,தான் என்று குட்டிக்கு எல்லாம் செய்வதாக ஒப்புக்
கொண்டனர். பழுப்பும்,வெண்மையும் , கலந்த புஸுபுஸு திட்டமான
ரோமங்களுள்ள அழகான நாக்குட்டி. அதுவும் இவர்கள் யாவருடனும்
ஒட்டிக்கொண்டு என்னிடம் பயந்து கொண்டே இருந்தது. ரொம்ப அழகாக
யாவரும் பார்த்துக் கொண்டனர்.
எல்லாம் ஒருமாதமாகி விட்டது. அடுத்து வினியோகம்தான்.
அதையும் சொல்கிறேன். கட்டாயம் எல்லோரும் வந்து விடுங்கள்.
அடுத்த பதிவு சொல்லி முடிக்கிறேன்.
Entry filed under: சில நினைவுகள்.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 7:25 முப இல் திசெம்பர் 10, 2012
சாலிகிராமங்களுடன் கூட நாக்குட்டி இலவச இணைப்பா?
மிக சுவாரஸ்யமாக இருக்கிறது இந்தத் தொடர்.
முடிக்காதீர்கள்…தொடருங்கள்.
2.
chollukireen | 12:40 பிப இல் திசெம்பர் 12, 2012
முதலில் வந்தவர்களுக்குதான் இலவசம். வேண்டுமா/?ஜோக் ரஸித்தேன். இலவச இணைப்பு இருந்தால் விற்கவந்த பொருள் சீக்கிரம் காலியாகி விடுமே? அதுதானே வேண்டும்? இப்படியே ஜோக் செய்து பின்னூட்டமிடுங்கள். மற்றவர்களும் ரஸித்துப் படிப்பார்கள். நிறைய நினைத்துக் கொள்கிறேன். எதை?உங்கள் ஜோக்கை. நாய்க்குட்டிகளை எங்கு தேடுவேன்? அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 7:40 முப இல் திசெம்பர் 10, 2012
தங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷங்கள், மன வருத்தங்கள், பல்வேறு அனுபவங்கள் எல்லாவற்றையும் பட்டும்படாமலும், பிறரை வருத்தமோ அனுதாபமோ படவைத்து தர்மசங்கடப்பட விடாமலும் கூறியிருப்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். தொடருங்கள்.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிர்ஷ்ணன்
4.
chollukireen | 11:51 முப இல் திசெம்பர் 12, 2012
அழகாக பின்னூட்டம் எழுதியிருக்கிறீர்கள். எதுவும் மூடி மறைத்து எழுதாமல் மேலோட்டமாக எழுதியிருப்பதாகப் படுகிரது அல்லவா.இதை எழுதும் போதே உணர்ச்சி வசப்பட்டு எழுதுகிறோமா என்ற
ஸந்தேகம் எனக்கிருந்தது. ஒழுங்காகத்தான் இருக்கிரது என்ற நம்பிக்கை உங்கள் பின்னூட்டத்தின்
மூலம் யூகிக்க முடிகிறது.. நன்றி. ஆசிகல் அன்புடன்
5.
இளமதி | 10:33 முப இல் திசெம்பர் 10, 2012
அம்மா..
சிறகுடைந்த காப்டர் பறவையினுள்ளே நாமும் இருப்பதுபோல ஒரு பீதி, பயங்கரம், மாமாவுக்கு மறதி நோய் மற்றும் மெடிஸின் இவை துக்கம், நல்லபடியா ஊர்வந்து எல்லோரும் சேர்ந்த மன அமைதி, அற்புதமான கிடத்தற்கரிய சாளக்ராமம் கிடைச்ச சந்தோஷம் ன்னு இம்முறை ஒரு உணர்ச்சிக் காவியமாக உங்களின் பதிவு…..
உங்களின் அந்தநாள் நினைவுகள் , அனுபவம் இப்படியெல்லாமா என்று வியந்துபோனேன்…..யாருக்கு எப்படியோ எனக்கு அத்தனையும் புதுமை.
தொடருங்கோ..வாறேன் பின்னாலையே…
6.
chollukireen | 12:27 பிப இல் திசெம்பர் 12, 2012
பெண்ணே எல்லாவற்றையும் கதை என்று முதலிலேயே நினைத்துக்கொண்டு படி. வாழ்க்கையில் வயதானவர்களுக்கு இதெல்லாம் ஒரு
ஏறும் படிக்கட்டுகள். இதுவும் ஒரு பகுதி. அவ்வளவுதான். உன்னுடைய பின்னூட்டங்களில்
அன்பைக் கலந்து விடுகிறாய். நன்றி பெண்ணே!!!!!!!!அன்புடன்
7.
chitrasundar5 | 9:37 பிப இல் திசெம்பர் 10, 2012
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.திக்திக் ராயல் ஃப்ளைட், சாளக்ராம சந்தோஷங்கள் இவற்றையெல்லாம் சொல்லும்விதம் நேரில் பார்ப்பதுபோலவே உள்ளாது.
“போதும்,பதினைந்து,பதினாரு வருஷங்களாக இந்தப் பசங்களுக்கு எல்லாம் செய்தாயிற்று”__பெரும்பாலான அம்மாக்கள் சலித்துக்கொள்வதுபோல எதார்த்தமாக உள்ளது.
காமாஷிமா,உங்க முதல் பதிவைப் படித்ததும் ‘சாலிகிராமம்’தான் எழுத்துப் பிழையினால் ‘சாளக்ராமம்’ ஆகிவிட்டதென நினைத்தேன்.பிறகு எதற்கும் கூகுளில் பார்ப்போம் எனத் தேடினால் அதைப்பற்றி ஏராளமான விஷயங்கள். உங்க பதிவின் மூலம்தான் இதைப்பற்றி முதன்முதலில் கேள்விப்படுகிறேன். சாளக்ராமத்தைப் பார்க்கும்போது கொஞ்சம் பயம் வருகிறது.இது எனக்கு மட்டும்தானா!இல்லை மற்றவர்களுக்கும் அப்படித்தானா! தெரியவில்லை. அன்புடன் சித்ரா…
8.
chollukireen | 12:58 பிப இல் திசெம்பர் 12, 2012
மொத்தத்தில் நிறைய கூகலில் சாளக்ராமத்தைப் பற்றித் தெரிந்து கொண்டாய். ஸந்தோஷமாக இருக்கு.பார்த்தால் பயப்படும்படி ஒன்றும் இல்லை. நதியில் இருக்கும் வரை அது கல்தான். எடுத்து ஆவாகனம் செய்து பூஜையில் வைத்து வணங்கினால் அது கடவுளாக மதிக்கப் படுகிரது. நேமம்,நிஷ்டை எல்லாம் வழிவழியாக செய்து வந்ததைக்
குறிப்பிடுகிரது. எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்வது விஷய ஞானத்தை அதிகரிக்கிரது.
சலித்துக் கொள்வது என்பது, அலுத்துப் போனால் ஏற்படும் ஒருவித உணர்ச்சிதானே? நானும் ஸராஸரி ஒரு அம்மாதான். மிக்க ஸந்தோஷம். அன்புடன்
9.
Mahi | 11:48 பிப இல் திசெம்பர் 10, 2012
உங்க தமிழை முழுவதும் அனுபவித்துப் படிக்கத் தெரியவில்லை/முடியவில்லை?! ஆனால் முக்கிய விஷயங்கள் தெளிவாகப் புரிகிறதும்மா. எல்லாரும் நல்லபடியாக வந்து சேர்ந்தது மகிழ்ச்சி!
நாக்குட்டி– 🙂 உங்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறது.
சாளக்ராமம் படமும் பார்த்தாச்சு,..பதிவும் படிச்சாச்சு, இனி விநியோகம் எப்படின்னு சீக்கிரம் எழுதுங்க! 🙂
10.
chollukireen | 1:25 பிப இல் திசெம்பர் 12, 2012
மஹி எந்த இடம் என் தமிழ் புரியவில்லை. இந்த என்னுடைய பழகு பேசும் தமிழா? போகப்போக புரிந்து கொள்வாய்.
சிலதெல்லாம் உங்கள் யூகத்துக்கே விட்டுவிட்டேன். அது புரியவில்லையா? உண்மை விஷயம் புரிந்தது. அது போதும்.
வினியோகம் செய்துவிட்டால்தான் நிம்மதி. சீக்கிரமே வரேன். அன்புடன்
11.
rajalakshmiparamasivam | 3:03 பிப இல் திசெம்பர் 12, 2012
காமாஷி அம்மா,
சாளக் கிராம வினியோகம் பற்றிய பதிவை ஆவலுடன்
எதிர் பார்க்கிறேன்.
எனக்கும் முக்திநாத்,அமர்நாத் எல்லாம் போக வேண்டும் என்று நெடு நாளாகவே ஆசை.உங்கள் சாளக்கிராம கலெக்ஷன் அந்த ஆசையை கூட்டுகிறது.
பகிர்வுக்கு நன்றி.
ராஜி.
12.
chollukireen | 6:36 முப இல் திசெம்பர் 14, 2012
ஆசைகள் பட்டால் நடக்காதது ஒன்றுமில்லை. இந்த நாட்களில் வசதிகளுக்கும் குறைவில்லை. பணம்
ஒன்று இருந்தால்ப் போதும். உங்கள் ஆசை நிறைவேறட்டும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அடிக்கடி தொடர்பு கொள்ள இம்மாதிறி பின்னூட்டங்கள் மிகவும் ஒத்தாசையாக இருக்கிறது. அன்புடன்
13.
gardenerat60 | 10:45 முப இல் திசெம்பர் 19, 2012
என்ன விறுவிறுப்பு! ஒரே சமயத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவல். அதுதான் இத்தனை நாட்கள் கழித்து வந்தேன்.
14.
chollukireen | 12:28 பிப இல் பிப்ரவரி 7, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று என் கணவரின், தமிழ்மாத காலண்டர்ப்ரகாரம் 5மாதங்கள் முடிவுறுகிறது. இந்தப் பதிவில் முக்தி நாத்திலிருந்து சாளிக்கிராமங்களுடன் வீடுவந்து சேர்ந்த விஷயமும் வருகிறது.நல்லது. அடுத்த பதிவில் பகிர்ந்துவிட்டு முடித்துவிடுகிறேன்.படியுங்கள் அன்புடன்
15.
ஸ்ரீராம் | 12:26 முப இல் பிப்ரவரி 8, 2022
ராயல் பிளைட் பயங்கரம் மனதில் நிற்கிறது. பயங்கரம். சாளக்கிராமம் வீட்டில் இருகால் ரொம்பவே கவனமாக இருக்கவேண்டும் என்பார்கள். எனக்கு அந்த ஜாக்கிரதை எல்லாம் வராது! நாய்க்குட்டி மகாதமியம் நன்று. குளிர்ப்ரதேசத்தில் உள்ள நாய்க்குட்டி நம்மூர் சீதோஷ்ணத்தில் சமாளிக்குமா?
16.
chollukireen | 12:54 பிப இல் பிப்ரவரி 9, 2022
சாளக்கிராமம் பூஜிக்க மடி,ஆசாரம்,பூஜிக்கபூக்கள், நிவேதனம் எல்லாம் அக்கரையுடன் செய்ய வேண்டும் என்பார்கள். அது உண்மைதான். நாய்க்குட்டி வளர்ந்தது காட்மாண்டுவில். அருமையான மறுமொழிக்கு மிகவும் நன்றி. அன்புடன்
17.
நெல்லைத்தமிழன் | 5:51 முப இல் பிப்ரவரி 8, 2022
தொடர் நன்றாக இருக்கிறது. ஏற்கனவே படித்திருக்கிறேன். எதுவுமே அளவுக்கு அதிகமாகக் கிடைத்தால் அதன் புனிதத்தன்மை போயிடும்னு தோணுது. நேபாள பயணம், சாளக்ராமம் வாங்கியது எல்லாம் நினைவுக்கு வருது. போலி சாளக்ராமம் விற்பதைப் பார்த்த நினைவும் வருது
18.
chollukireen | 11:46 முப இல் பிப்ரவரி 10, 2022
நிறையக் கிடைத்ததென்னவோ உண்மை.அபூர்வ பொருட்களை நாம் பிறருக்குக்குக்கொடுக்க முடிந்ததில் ஒரு ஸந்தோஷம். தேடிப்போகவில்லை. தானாக வந்து சேர்ந்தது. உங்களின் பயணம் ஞாபகம் வந்தது. அதுவும் தெரிந்ததில் ஸந்தோஷம். நன்றி. அன்புடன்