நன்றி சொல்லுகிறேன்
ஜனவரி 7, 2013 at 11:57 முப 10 பின்னூட்டங்கள்
2012 அதாவது சென்ற வருஷத்தில் என் பதிவுகளைப்
படித்து,பின்னூட்டமிட்டவர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த
நன்றிகள்.மஹி,சித்ரா, ரஞ்ஜனி அவர்கள், திருகோபாலகிருஷ்ணன்
அவர்கள்,மற்றும் எல்லா பின்னூட்டங்களையுமிட்ட என்மேல்
விசேஷமான நட்பும்,அன்பும் கொண்ட யாவருக்கும் தனித்தனியே
என் அன்பை வெளிப்படுத்தக் கடமை பட்டிருந்தும் ,கால தாமதமாய்
எழுதுகின்றேன். காரணம் கணினிதான். அதுவும் சில ஸமயம்
வேலைநிறுத்தம் செய்து விடுகிறது.எல்லோருக்கும் என் அன்பு.
அன்புடன் சொல்லுகிறேன். இப்படியே யாவரும் அன்புடனிருக்க
கடவுள் எல்லா நலன்களையும் உங்கள் யாவருக்கும் அளிக்க
வேண்டுகிறேன். காமாட்சி
Entry filed under: நன்றி.
10 பின்னூட்டங்கள் Add your own
VAI. GOPALAKRISHNAN க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:01 பிப இல் ஜனவரி 7, 2013
நமஸ்காரம் மாமி. புத்தாண்டுக்கு வாழ்த்தி ஆசீர்வதித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 6:15 முப இல் ஜனவரி 8, 2013
உங்களின் ஸந்தோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஆசிகள். அன்புடன்
3.
venkat | 1:13 பிப இல் ஜனவரி 7, 2013
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…..
4.
chollukireen | 6:17 முப இல் ஜனவரி 8, 2013
மிக்க மகிழ்ச்சி. புக் மார்க்ஸில் உங்கள் பெயரை இணைத்திருக்கிறேன். தொடர்ந்து ஸந்திக்கலாம். அன்புடன்
5.
chitrasundar5 | 2:39 முப இல் ஜனவரி 8, 2013
காமாஷிமா,
கடவுள் எல்லா நலன்களையும் உங்களுக்கும் அளிக்க வேண்டிக்கொள்கிறேன்.அன்புடன் சித்ரா.
6.
chollukireen | 6:20 முப இல் ஜனவரி 8, 2013
கம்பியூட்டர் நன்றாக வேலை செய்யணும்னு கூடவே வேண்டிக் கொள்ளணும். உன்னுடைய அன்பு வேண்டுதலுக்கு ஸந்தோஷப்படறேன்.அன்புடன்
7.
ranjani135 | 7:19 முப இல் ஜனவரி 8, 2013
நேற்று ஒரு பின்னூட்டம் போட்டேனே! எங்கே போயிற்று?
உங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறதோ?
கம்ப்யுட்டர் நன்றாக வேலை செய்து, நீங்களும் ஆரோக்கியத்துடன் வரும் வருடத்தில் பதிவுலகில் கலக்க வேண்டும் என்று பெருமாளையும், தாயாரையும் பிரார்த்திக்கிறேன்.
8.
chollukireen | 9:55 முப இல் ஜனவரி 8, 2013
உங்கள் ப்ரார்த்தனைக்கு மிகவும் நன்றி. எதையும் ஸ்பேமிலும் இல்லை. உங்கள் பின்னூட்டமெல்லாம்
ஒப்புதல் எதுவும் கேட்டதில்லை. நிதானமாக வரதோ என்னவோ? பார்க்கலாம்.அன்புடன்
9.
இளமதி | 10:29 முப இல் ஜனவரி 11, 2013
அம்மா..ரொம்பவே தாமதமாக வந்து இதனை இப்பொழுதுதான் பார்க்கின்றேன்…அதிக வேலைகள்…விருந்தாளிகள் இப்படி..
நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லோணும்..இப்படி உஙகள் அனுபவப் பகிர்வுகள், சமையல், வாழ்க்கை அனுபவங்கள் என எத்தனையோ நமக்கும் அறியத்தாந்திருக்கிறீங்களே அதற்கு…
மிக்க நன்றி அம்மா உங்களுக்கு… தொடருங்கோ இன்னும்..
10.
chollukireen | 12:22 பிப இல் ஜனவரி 11, 2013
பிஸியாக இருக்கே. ஸந்தோஷம். ஓடிஓடிச் செய்ய வேண்டிய வயது. வருகிறவர்களும்,போகிறவர்களுமாய்
சுறுசுறுப்பாய் குடும்பத்தில் வளைய வருவது மிக்க வரவேற்கும் செய்தி. எப்போது வேண்டுமானாலும் ஸந்திக்கலாம். நன்றியை விட அன்புதான் பெறியது.
என்றும் அன்புடன்