தை பிறந்தால்–1
ஜனவரி 12, 2013 at 10:37 முப 52 பின்னூட்டங்கள்
ஏர் போர்ட், டிக்கெட் கவுண்டர்.
அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.
ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ் ஃபுல் மேடம்.
நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்
என்று சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட் எதற்குத் தருகிறீர்கள்?
எங்கே உங்கள் ஆஃபீஸர். நான் பேசுகிறேன்.
ஸாரிமேடம்.
நோநோ. ஸாரி,யெல்லாம் வேண்டாம். கொடுத்த வார்த்தையை
காப்பாத்தணும். வயஸானவங்க, வீல்ச்சேர்.
போன் செய்து விவரம் போக ஆஃபீஸரே வருகிரார்.
ஒரு முறைகூட இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.
உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?
வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.
எப்படியோ பத்து நிமிஷம் கொடுங்கள், பார்க்கிறேன்.
வேண்டாமே இ ப்படியே அட்ஜஸ்ட் பண்ணலாமே.
என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது. டிக்கட் வாங்க
முடியாதா என்ன?
வாதம் பலித்து. கார்டை வாங்கி ஸரி பார்த்து அப்க்ரேட் செய்து
மூன்று போர்டிங்பாஸ்.
சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு இருக்கை.
கடைசியில் ஒரு இருக்கை.
ஸாரி. இப்படிதான் கொடுக்க முடிந்தது. ரொம்ப சிரமப்பட்டுதான்
செஞ்ஜோம்.
இவ்வளவு சண்டை போட்டால்தான் காரியம் நடக்கும்.
வீல்சேர். முன்னைடியே போய்ச் சேரணும்.
நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.
மத்ததை நான் பாத்துக்கறேன்.
வீல்சேர், பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து
கொண்டிருக்கும் போதே டோரில் காத்துக் கிடக்கும்.
அதிகம் பாஸஞ்சரிருந்தால் இன்னும் சீக்கிரமே சுவர்க
வாசல்தான். உள்ளே போக அனுமதிக்கு .
தெறியாமல் பணத்தை , வீல் சேரைத் தள்ளிக் கொண்டு
வருபவர்களுக்குக் கொடுக்கவும்,நன்றியைக்
கொடுத்து வாங்கவும் உதவிதானே. யாரும் கொடுக்க
யோசிப்பதில்லை வீல்சேர்
லேட் ஆனதால் பிஸினஸ் க்ளாஸானாலும் அப்படியே!
சுத்தம்,முடிந்து உள்ளே வர அனுமதி கொடுத்தாகி விட்டது.
ஒருவாராக போய் உட்கார்ந்தும் ஆகிவிட்டது.
எல்லா பாஸஞ்ஜரும் பிஸினஸ் க்ளாஸைத் தாண்டிப்
போயாக வேண்டும்.
பாஸஞ்ஜர்கள் அணிவகுப்பு தொடருகிறது.
யார்யார், எந்தமாதிரி உடையில், எவ்வெப்படி
வருகிரார்கள்,
என்று, அது வொரு பொழுது போக்காய் , பேப்பரை
கையில்
எடுத்துக் கொண்டு ஒரு லேசான நோட்டம். வீல்சேரில் முன்னாடி
வந்தவர்களுக்கு பொழுது போக்கு.
ஏ.ஸி குளிருக்கு பயந்து சாலை ஸரிவர போட்டுக்
செய்து கொள்ளும் போது,
இதுதான் என் ஸீட் வின்டோ பக்கம் சொல்லிக்கொண்டே ஒரு
நவநாகரீகப் பெண்ணும், அவள் தங்கை என்று சொல்லும்படியான
தோற்றத்தில், மூக்கும்,விழியும் லக்ஷணமுமான இன்னொரு
பெண்ணும், நுணி நாக்கு இங்லீஷில், ஃபாரின் ஸ்டைலில்
மெள்ளக்.கடந்தனர்.
ஓஹோ! இவர்களின் டிக்கட்தான் நமக்காக மாற்றி விட்டார்களோ
என்ற ஐயம். ஸரியாக பேச்சைக் கவனிக்லே என்ற எண்ணம்.
ஏர் ஹோஸ்டஸ் ஜில்லுனு ஆரஞ்ஜுஜூஸ் நிரம்பிய க்ளாஸை நாப்கினைப் போட்டு
பக்கத்தில் வைத்துவிட்டாள்
முதல் ஸீட்டிலேயே எனக்கு வேண்டியதையும்
சொல்லி விட்டனர் போலும்!
ஒரே ஏ.ஸி.ஜில்லிப்பு. குளிர் பானம் குடிக்கத் தோன்றுமா?
பக்கத்து ஸீட் வின்டோ ஆள் இந்னும் வரலே. அவர்கள் வந்தால்
எழுந்து வழி விடணும்.
எழுந்திருக்கத் தயார் நிலையில் ஸீட் முன்னாடி பட்டும் படாமலும்
ஓட்டத்துக்குத் தயாராவதுபோல ரெடியான போஸில் தயார்.பின் பக்கத்திலிருந்து குரல்.
பெரியம்மா, கொஞ்ஜம் வழி விடுங்கம்மா. நான் அந்த ஸீட்.
ஓ!!அந்த அக்காகாரிப் பெண் தான். நல்ல தமிழில்.
இரும்மா,தோ. முதல்ஸீட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு
எழுந்திருக்க
பாவம் பெரிம்மா, கஷ்டம் கொடுத்திட்டேன். இனிமே கொடுக்க
மாட்டேம்மா. ஸாரிம்மா!!
பரவாயில்லே, இதென்ன பிரமாதம்?
ஸரியா நல்லா சாஞ்சு உட்காருங்கம்மா.
ஏதோ ரொம்ப நாள் பழகியமாதிரி சால் கீழே விழாது ஸரிவர மேலே
போட்டு ஸரிசெய்தபடி
ஜூஸ் குடிங்கம்மா. நான் தொந்திரவு கொடுத்திட்டேன்.
வேண்டாம்மா, ஜில்லுனு.
ஸரி பெரிம்மா,ஐஸ் போடாம உங்களுக்குச் சொல்றேன்.
நீங்க வேண்டுமானால் எடுத்துக்கோங்க,
சொல்லலாமோ,சொல்லக் கூடாதோ, தயக்கத்துடன் மெல்லச்
சொல்ல, தேங்ஸ்மான்னு ஜூஸை எடுத்துக் கொண்டு,
தனியா போறிங்களா, சென்னையிலே எங்கிருக்கீங்க?
ரொம்ப ஸ்வாதீனத்துடன் பேச ஆரம்பித்து விட்டாள்.
பேப்பரை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பேசறது தெரியாமல்
பதில் சொல்ல
பிரயாணிகள் நிரம்பி வழிய முகப்பு வாயில் மூடி ப்ளேன்
டேக்ஃஆப்பும் அறிவித்து ஓரளவு வானில் சீராகப் பறக்கவும்
ஆரம்பித்தாகிவிட்டது.
மெனு கார்டும் வந்தாகிவிட்டது.
உங்களுக்கு என்னம்மா வேணும்?
முன்னாடி எம்மருமக சொல்லியிருப்பா. எனக்கு அந்த
வேலையெல்லாம் வைக்கமாட்டாங்க.
ஆமாம், என்னம்மா உன்பேரு, அடிக்கொரு அம்மா சொல்ரியே,
ஆமாம்மா, நானே சொல்லியிருக்கணும், உஷா என்பேரு.
பாஸ்தா வந்திருக்குநல்லாவேயில்லை. மெனு கார்ட்தான்ப்ரமாதம்.
என்ன பாஸ்தாவெல்லாம் செய்வியா?
அத்தெயேன் கேக்கறீங்க, எனக்கு ஸாம்பார் ரஸம் வேணும்,
எம்மகளுக்கு, பிட்ஸா பாஸ்தா.
எங்க வெளிநாட்லே வேலையா உங்க வீட்டுக்காரருக்கு? எங்கே
இருக்கே, வாய் கேட்டுவிட்டதே தவிர, மனதில்
அதிகப்படி ஒண்ணும் கேட்காதே, வெளிநாட்லே எப்படி இருக்கே,
நன்றாயிருக்கேன். தேங்யூ. அவ்வளவுதான். அது போதும்.
அதிகப்படி நோ. சான்ஸ்.என்பது ஞாபகத்திற்கு வந்தது.
ஆமாம்மா. வெளிநாடுதான். வாஷிங்டன். நான்தாம்மா
வேலையில் இருக்கேன். வீட்டுக்காரர் உ,யிருடன் இல்லை.
ஐயோ,ஸாரிம்மா. நான் கேட்டிருக்கவே கூடாது போலிருக்கு.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு ஒரே ஒரு பெண்தான்.
கூட வந்தாளே அவள்தானே?
ஆமாம்மா, அவளும் காலேஜ் சேர்ந்து விட்டாள்னா நான்
தனியாள்தான்.
வருத்தம் லேசாக கண் கலங்குகிறது.
ஏம்மா அப்படி நினைக்கணும்?
இல்லேம்மா, சிலதெல்லாம் ரொம்பவே யோசிக்கும்படி ஆயிடுச்சு
என்ன பதில் சொல்லுவது யோசித்துக் கொண்டே ஏம்மா வெளி
நாட்டிலே வாழறவங்களைப் பார்க்கலியாநீ?
எப்படி எப்படியோ இருக்காங்கோ!
ஸரியா சொன்னைங்கோ அம்மா.நீங்க அதுதானம்மா ப்ரசினையாக
வந்து இருக்கு.
ஏம்மா ப்ரசினைன்னு சொல்றேன். அது என்னன்னு கேட்கமாட்டிங்களா .?
யாராவது பேசரதை கவனித்துடப்போறா, வம்பு மாதிரி ஆகிடும்.
மெள்ள பேசினாலும் ஸரிம்மா ,என்ன சொல்றே நீ.
பெரிம்மா,தப்பாக யோசிச்சுடாதிங்கோ. சிலது நான் சொல்றேன்.
கேளுங்க. இஷ்டமிருந்தால் பதில் சொல்லுங்க. அது போதும்.
உஷார் படுத்திக்கொண்டு, சொல்லம்மா சொல்லு,
என்ன கதையோ?
பெரிம்மா எங்க வீட்டுக்காரரு போய்ச் சேர்நது பன்னண்டு வருஷம்
ஆகுது. நாலு வருஷம் வாழ்வு. நல்ல மனுஷரு. லங்ஸ் கேன்ஸர்.
வியாதியே தெரியாமல், தெறிந்து ஒரு வருஷம் போராடி
பிரயோஜனப்படவில்லை.
கையில் ஒரு குழந்தை. நல்ல படிப்பு இருந்ததாலே மாமியார் வீட்டு
உறவுக்காறங்க உதவியால் வெளிநாட்லே வேலை.
அப்பா இஷ்டப் படலே. மாமியார் வீட்டுக்காரங்க ஸப்போர்ட்டா
இருந்தாங்க. குழந்தையை ஒருவருஷம் பாத்துக்கிட்டாங்க.பிறகு
குழந்தையும் என்னிடமே வந்து எல்லாம் பழகிடுச்சு.
மாமியார் வந்து போக இருந்தாங்க. அவங்க எல்லாம் துபாய்
போய்ட்டாங்க.
அப்பா அம்மாவையும், வந்து, வந்து இருந்து பாத்துகிட்டேன்.
ஒரு இரண்டு மூன்று வருஷமா என்னிடம் ஒரு மாறுதல்.
என்ன யாரிடமாவது ஏமாந்துட்டாளோ, மனது அதற்குள்
யோசிக்கிரது.
பெண்ணும் பெரிசாகி மேல்படிப்புக்கு போய் ஹாஸ்டல்லே சேர்ந்து
விட்டால், அப்படியே,படிப்பு, வேலை,ஸம்பாத்யம்,காதல் அது இது
எல்லாம் அவள் ஸெட்டிலாகி விடுவாள்.
மாமியார் எல்லாம் வயஸாச்சு. நான் ஒரு நாலு வருஷ,வாழ்க்கை
மறந்து போன வாழ்க்கையை நினைத்துக் கொண்டு
காலந்தள்ளணுமா என்ற கேள்வி பெரிசா மனதில் வர ஆரம்பிச்சது.
ஓ, இதுதான் கதை திருப்பம் என்று மனது சொல்லியதெனக்கு.
திரும்பப் பார்க்கலாம். ஸரியா?
Entry filed under: கதைகள்.
52 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 11:32 முப இல் ஜனவரி 12, 2013
கற்பனைக் கதையை விட ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே!
சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதிடுங்கோ. இல்லை ராத்திரி போன் பண்ணிக் கேட்டுக்கட்டுமா?
உங்க மனசு எத்தனை வேகமா வேலை செய்யறது! விமானத்தைவிட – வாயு வேகம் மனோ வேகம் இதுதானோ?
இந்தக் கதையை சொல்றதுக்குத்தான் இந்த இடைவெளியா?
2.
chollukireen | 12:57 பிப இல் ஜனவரி 12, 2013
இல்லை. எழுதி முடிச்சுடறேன். அப்புரமே படித்தால் போதும். இடைவெளி எல்லாம் இல்லை. இது மனஸுலே கிடந்தது. நீங்கதான் ரொம்ப ஸ்பீடுலே இருக்கிங்கோ. பால் போளியை பண்ணுங்கோ. சாப்பிட நானும் வரேன். ரொம்பவே நன்றி. அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 1:08 பிப இல் ஜனவரி 12, 2013
மாமி நமஸ்காரங்கள்.
அழகா சுவாரஸ்யமாக் கதை சொல்லுகிறீர்கள். திடீரென்று முடிவு சொல்லாமல் கதையை பாதியிலேயே, அதுவும் சுவாரஸ்யமான கட்டத்தில் போய் நிறுத்திட்டேளே! எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல இருக்குது.
பாராட்டுக்கள் மாமி. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்
4.
chollukireen | 12:26 பிப இல் ஜனவரி 13, 2013
இனிய பொங்கல்ப் பண்டிகையின் நல் ஆசீர்வாதங்கள், உங்களுக்கும், உங்கள்,குடும்பத்தினருக்கும்.கதை நீண்டு
போய்விட்டது. தையும்,பிறக்கட்டும். இன்னும் எழுதினால் அதிகமாகிவிடும் என்று தோன்றியது. அதான் காரணம்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் ஸந்தோஷப்படுகிறேன். பாராட்டுகளுக்கும் சேர்த்தே! அன்புடன்
5.
adhiVenkat | 2:47 பிப இல் ஜனவரி 12, 2013
கதையின் தொடர்ச்சியை படிக்க ஆவலுடன் உள்ளேன்.
பொங்கல் வாழ்த்துகள்.
6.
chollukireen | 12:41 பிப இல் ஜனவரி 13, 2013
ஆதி ஆசிகள.னேகம். பொங்கல் காரியங்களில் பிஸியாக இருப்பாய். உன் வாழ்த்துக்களுக்கு நன்றி. சீக்கிரமே எழுதிவிடுகிறேன். அன்புடன்
7.
T S JAYANTHI | 4:27 பிப இல் ஜனவரி 12, 2013
காமாட்சி அம்மா, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
கதை தொடருதா. ஜமாயுங்கோ. ஆவலுடன் காத்திருக்கிறோம்.
8.
chollukireen | 1:23 பிப இல் ஜனவரி 13, 2013
ஜயந்தி உன் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். லயா என்ன செய்கிராள் ? ஆசிகள். அடுத்து
எழுதிவிடுகிறேன். அன்புடன்
9.
chitrasundar5 | 4:48 பிப இல் ஜனவரி 12, 2013
காமாஷிமா,
என்னதிது!”மடை திறந்த வெள்ளம்”போல.உங்க வேகத்துக்கு என்னால ஓடிவர முடியல,மூச்சு வாங்குது.இடைவெளி விட்டதால் தப்பித்தேன். ஆனாலும் கதையின் திருப்பத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டுட்டீங்க.தொடர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
பொங்கல் ஸ்பெஷல்(தை பிறந்தால்_1)சர்க்கரைப் பொங்கலைவிட இனிப்பா இருக்கு.அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 11:49 முப இல் ஜனவரி 13, 2013
அன்புள்ள சித்ரா ஆசிகள் . நிதானமா வா. அவஸரமில்லை. சொல்லி முடிச்சுடலாம். உன்னுடைய ரிப்ளை தளதளன்னு சர்க்கரைப் பொங்கல் மாதிரி இருக்கு. இனிமையான பொங்கல்
வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்
11.
angelin | 11:07 பிப இல் ஜனவரி 12, 2013
அம்மா எதிர்பாராத திருப்பத்தில் நிறுத்தி இருக்கீங்க
விமான பயணம் அப்படியே எங்களையும் ப்லேனுக்குள்ள கொண்டு போயிருச்சு உங்க எழுது நடை
அடுத்த பகுதிக்கு காத்திருக்கேன்
12.
chollukireen | 12:01 பிப இல் ஜனவரி 13, 2013
அஞ்சு ஆசிகள். உன்னைக் காணோமே என்று நினைத்தேன். நீயும் ப்ளேன்லதான் இருக்கிறாயா?
உன்,குடும்பத்தினருக்கும்,உனக்கும், இனிய பொங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும்.அன்புடன்
13.
angelin | 11:08 பிப இல் ஜனவரி 12, 2013
இனிய இனிக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் உங்க குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும்
14.
chollukireen | 12:03 பிப இல் ஜனவரி 13, 2013
வாழ்த்துகள். வாழ்த்துகளுக்கு நன்றி. அன்புடன்
15.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 2:40 முப இல் ஜனவரி 13, 2013
வணக்கம்
காமாட்சி(அம்மா)
கதை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பு நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
16.
chollukireen | 12:14 பிப இல் ஜனவரி 13, 2013
ஆசிகள் ரூபன்.உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்துக்களுக்கு நன்றி. பாராட்டு இனிக்கிறது. அன்புடன்
17.
venkat | 4:16 முப இல் ஜனவரி 13, 2013
ஸ்வாரஸ்யமா ஆரம்பம் ஆகியிருக்கு….. தொடருங்கள் சீக்கிரமே….
18.
chollukireen | 12:11 பிப இல் ஜனவரி 13, 2013
அப்படியா? உங்கள் வார்த்தைகள் ஸந்தோஷமாயிருக்கு. உங்கள் குடும்பத்தினருக்கு அன்பார்ந்த,இனிய பொங்கல் வாழ்த்துகள். என் பின்னூட்டங்கள் உங்கள் ப்ளாகில் போகாமல் இருக்கு.
மன்னிக்கவும். அன்புடன்
19.
chollukireen | 12:47 பிப இல் ஜனவரி 13, 2013
அப்படியா? மகிழ்ச்சி. உங்களுக்கு எழுதும் பின்னூட்டங்கள் ஏனோ உங்கள் ப்ளாகில் போவதில்லை. என்ன தவறு யோசிக்கிரேன். வாழ்த்துகள் . அன்புடன்
20.
Gnanaguru | 1:39 முப இல் ஜனவரி 14, 2013
அருமையான தொடக்கம். கதையில் பெண்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பதால் சுவாரசியமாய் இருக்கிறதோ எனக்கு. தை பிறந்தால் அருமையான தலைப்பு. உங்கள் கதையில் அப் பெண்ணிற்கு வழி பிறக்கும் என எண்ணுகிறேன்.நன்றி
21.
chollukireen | 12:13 பிப இல் ஜனவரி 22, 2013
உங்கள் வரவிற்கு நன்றி கூறுகிறேன். சற்று தாமதம். பதில் எழுதிவிட்டதாக நினைத்தேனோ என்னவோ
ஆமாம் ,பெண்கள் பேசினால், ஸ்வாரஸ்யமும்,கொஞ்சம், மற்ற விஷயங்களும், கலந்திருக்கும் என்று நினைக்கலாம் அல்லவா? அது ஸரியானதும் கூட. தை பிறந்ததும், வழியும் பிறந்ததைப் படித்திருப்பீர்கள். உங்கள் கமென்ட் எதிர் பார்க்கிறேன். அன்புடன்
22.
Gnanaguru | 4:43 முப இல் ஜனவரி 26, 2013
தங்கள் பதிலுரைக்கு நன்றி அம்மா. உங்கள் கதையின் இரண்டாம் பாகத்தை படித்திவிட்டேன். எதிர்பார்த்த நல்ல முடிவு. உண்மையான நிகழ்வு என்பது மகிழ்ச்சி. தம்பதியினர்க்கு எனது வாழ்த்துக்கள்.
23.
Mahi | 9:11 பிப இல் ஜனவரி 14, 2013
Interesting post ma..is it a real story? Hope that lady had a good life.
Iniya pongal vazhthukkal!
24.
chollukireen | 6:56 முப இல் ஜனவரி 15, 2013
அன்புள்ளமஹி பொங்கல் ஆசிகளும், இனிய வாழ்த்துகளும். உன் வாழ்த்திற்கும், கமென்ட்டிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வா.
அன்புடன்
25.
gardenerat60 | 10:03 முப இல் ஜனவரி 16, 2013
தத்ருபம் ! அருமை அம்மா! சொற்கள் இயற்கையாக பிரவாகம்!
26.
chollukireen | 12:13 பிப இல் ஜனவரி 16, 2013
மீதியை எழுதி முடிக்கும்போது உங்ககமென்ட் வந்தது. கதை நீண்டு போச்சு. ஆனால் முடித்து விட்டேன். உங்கள் அபிப்ராயத்திற்கு நன்றி. அன்புடன்
27.
gardenerat60 | 7:58 முப இல் ஜனவரி 17, 2013
அடுத்த பாகத்தையும் படிச்சாச்சு.
அருமை. டச்சிங்க்.
28.
chollukireen | 6:49 முப இல் ஜனவரி 18, 2013
உங்கள் ஒரு வார்த்தை டச்சிங் மனதில் பதிகிறது. கொஞ்சம் நம்ம
பழக்க பாஷையிலிருந்து மற்றவர்கள் பேசும் நடையையும், கலந்து
எழுத முயற்சி இந்த இரண்டு பதிவுகளும். ஓரளவு ஸரிதான் இல்லையா? நீங்கள் விரும்பிப் படித்ததால் விருப்பம் கேட்டிருக்கிறேன். அன்பிற்கு நன்றி. அன்புடன் உன் பதில் பார்த்து ஸந்தோஷம். ஸாதாரணமாக ப்ராம்மண பாஷை உபயோகமாகும்போது ஒரு குறிப்பிட்ட சாராரை எழுதுவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்து விடுகிறது. அதற்காகத்தான் பொதுவான வழக்கு பாஷை இது ஸரிவரும் என்று தோன்றியது. பார்ப்போம். இன்னும் அழகாக எழுத. உன் அபிப்ராயம் மிகவும் ஸரி அன்புடன்
29.
gardenerat60 | 1:34 பிப இல் ஜனவரி 18, 2013
படிக்கிறவர்களுக்கு புரிந்து மகிழ்ந்தால் எந்த பாஷையும் , சரியே! இப்போது நாம் பேச்சு வழக்கில் எழுதுவது, சாதாரணமாகி விட்டது. சுலபமாகவும் இருக்கிறது.
அன்பும் , நெகிழ்ச்சியும் கலந்து , எழுதும் உங்கள் பதிவுகளை படித்து, புரிந்து கொள்ள, பாஷையை விட அதே வேவ்லெங்க்த் தான் அவசியம்..
நாம் ஒன்றும் இலக்கியம் படைக்கும் வரிசையில் இடம் தேட முயற்சிக்கவில்லையே!
பேச்சிலக்கித்திலே கூட அழகான படைப்புகள் உருவாக்க முடியும். உங்கள் கதை அதற்கு உதாரணம் அம்மா!
ஒரு சின்ன வேண்டுகோள் – என்னை ‘ நீ’ என்று விளித்தால் , உங்கள் மனதில் நான் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்தால் போல மகிழ்ச்சி கொள்வேன்.
30.
Mahi | 6:44 பிப இல் ஜனவரி 17, 2013
Amma, I read part-2. It’s a real good feeling to read a happy ending story! My best wishes to Usha & her new family!
Super-a ezhuthieengamma! 🙂
31.
chollukireen | 8:25 முப இல் ஜனவரி 18, 2013
மனதில் நல்ல உணர்வை கதை ஏற்படுத்தியது என்றால் அது எனக்குப் பெருமைதான். அதைவிட வாழ்த்துக்களுக்கும், அதான் உஷா, கீர்த்திவாஸன் குடும்பத்திற்கு சொல்லியதற்கு. நன்றாக எழுதுகிறேனா? இதுவும் மிகவும் அன்பான செய்தி. ஸந்தோஷம். அன்புடன்
32.
chitrasundar5 | 4:02 பிப இல் ஜனவரி 18, 2013
காமாஷிமா,
தலைப்புக்கேற்ற கதை.கதையை அழகா கொண்டுபோய்,சுபமா முடிச்சிருக்கீங்க.அதிலும் உஷாவிற்கு நீங்க சொன்ன மறுமண அட்வைஸ் அற்புதம்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்.
கதை மனதிலேயே நின்றுவிட்டது.ஆடம்பரமில்லாத வார்த்தைகள், யதார்த்தமான நடை,தெளிவான கதையோட்டம்,பெண்கள் விரும்பத்தக்க முடிவு, மொத்தத்தில் பின்னி எடுத்திட்டிங்க.அடுத்த கதையுடன் வரும்வரை ஆவலுடன் காத்திருக்கிறேன்.அன்புடன் சித்ரா.
33.
chollukireen | 6:37 முப இல் ஜனவரி 21, 2013
உஷா,கீர்த்திவாஸனுக்கு அனுப்பிய வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் புகழ்ச்சி மொழிகள், பாராட்டுகள் இவைகளெல்லாம் எங்கேயோ மனதைக் கொண்டுபோய் விடுகிரது.. பின்னி எடுத்திங்க. கதையைத்தானே!. ஆமாம். கதை சற்று பின்னியதுதான்.. அடிக்கடி ஸந்திக்கணும். பார்க்கலாம்..
அன்புடன்.
34.
Rajarajeswari jaghamani | 11:55 முப இல் பிப்ரவரி 14, 2013
விமானத்தில் கதை நடப்பதாலோ என்ன்வோ வேககமாக பயணிக்கிறது ..அருமை ..!
35.
chollukireen | 5:50 முப இல் பிப்ரவரி 15, 2013
மெட்ராஸ் டு மும்பை இல்லையா. 2 மணிநேர பயணம். டேகஆஃப்,லேண்டிங்
எல்லாம் போக கிடைக்கிர நேர கதையில்லையா? நான் கூட படித்துப் பார்த்தேன். ஆமாம். உண்மைதான். உங்களின் பின்னூட்டவும் ரஸித்தேன்.
கதையை திரும்பப் படித்தேன். நன்றி.
36.
Rajarajeswari jaghamani | 12:05 பிப இல் பிப்ரவரி 14, 2013
சொல்லிக் கொடுக்கும் வார்த்தையும்,கட்டிக்கொடுக்கிர சாப்பாடும் எத்தனை நாள் வரும்?
அருமையான சுப முடிவு இனிமை…பாராட்டுக்கள்..
37.
chollukireen | 5:55 முப இல் பிப்ரவரி 15, 2013
ஆனால் இம்மாதிரி மறு மொழிகள் மனதிற்கு வெகு ஸந்தோஷத்தைக் கொடுக்கிரதென்பதோ உண்மை. அன்புடன் நன்றியும்.
38.
ezhil.v | 7:33 முப இல் திசெம்பர் 12, 2013
வலைச்சரத்தின் மூலம் உங்கள் பதிவிற்கு வந்துள்ளேன்… அருமையான கதை..இன்னமும் அதில் கற்பனை கலந்துள்ளது என்பதை ஏற்காத என் மனம்… நன்றிம்மா…இந்த மாதிரியான ஒரு படைப்பிற்கு…
39.
chollukireen | 12:12 பிப இல் திசெம்பர் 14, 2013
உங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறேன்.
உங்களின் பின்னூட்டம் மிகவும் ஊக்கம் கொடுக்கும். நன்றி அன்புடன்
40.
chollukireen | 11:23 முப இல் பிப்ரவரி 2, 2016
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.
41.
Geetha Sambasivam | 11:45 முப இல் பிப்ரவரி 2, 2016
அருமையான இயல்பான சம்பாஷணை. முடிவுப் பகுதியையும் தேடிப் பிடிச்சுப் படிக்கிறேன். இது வரை படித்தது இல்லை.
42.
chollukireen | 11:19 முப இல் பிப்ரவரி 5, 2016
உங்களுக்கு உடம்பு ஸரியில்லை. இல்லாவிட்டால் பதில் இரண்டாவதற்கும் கொடுத்திருப்பீர்கள். மறுமொழி ஒரு உந்துதல் அல்லவா? பரவாயில்லை ரஸித்தும் இருப்பீர்கள். நன்றி. நலம் பெறுங்கள். அன்புடன்
43.
chollukireen | 12:58 பிப இல் பிப்ரவரி 2, 2016
சுடச்சுட பதில். மீதியும் படிச்சுட்டுச் சொல்லுங்கோ. அன்புடன்
44.
Jayanthi Sridharan | 6:39 முப இல் பிப்ரவரி 3, 2016
Dear Mami, Another dimension of your talent and your modern and practical thinking is revealed via this short story. I wish you to write as much as you can. Thank you for the repost.
45.
chollukireen | 11:23 முப இல் பிப்ரவரி 5, 2016
ஜயந்தி மாமியை அன்புடன் மனதால் நேசிப்பதுபோல என் கதையையும் ரஸித்திருக்கிராய். பெரிய அன்பு வட்டம் இல்லாவிட்டாலும் இருக்கும் எழுதும் சிலரானாலும் உண்மையான அன்பைத் தருபவர்கள். மிக்கப் பெருமிதம் அடைகிறேன். மிக்கநன்றி உன் பின்னூட்டத்திற்கு. அன்புடன்
46.
JAYANTHI RAMANI | 1:12 பிப இல் பிப்ரவரி 3, 2016
மீனாட்சி அம்மா.
கதை அருமை. அடுத்த பகுதி இருக்கா.
என்னுடைய ஒரு யோசனை. கதையை எழுதி விட்டு ஒரு 50, 60 முறை படித்துப் பாருங்கள். உங்கள் எழுத்தை உங்களால் இன்னும் அருமையாக செதுக்க முடியும்.
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
47.
chollukireen | 11:30 முப இல் பிப்ரவரி 5, 2016
எப்படி செதுக்கலாம்,உளி உடையாமல் அதைச் சொல்லு. ரகஸியமாக வைத்துக் கொள்கிறேன் அடுத்த பகுதியும் ரிபிளாக் செய்து விட்டேன். யோசனைகளைச்சொல். ஒருதரம் எழுதுவேன். படிப்பேன். போஸ்ட் பண்ணிவிடுவேன். உன்னுடைய ஆத்மார்த்தமான பதிலுக்கு மிகவும் ஸந்தோஷமும், நன்றியும் ஆசிகளும். அன்புடன்
48.
Revathi Narasimhan | 1:08 பிப இல் பிப்ரவரி 7, 2016
மிக ஸ்வாரஸ்யம் .அடுத்த பகுதியும் படிக்கிறேன். மிக நன்றி காமாக்ஷ்மி மா.
49.
chollukireen | 10:28 முப இல் பிப்ரவரி 10, 2016
உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்வைத் தந்தது. அடுத்த பகுதியும் பார்த்திருப்பீர்கள். அந்த ஸ்வாரஸ்யம் எப்படி இருந்தது. தெரிந்துகொள்ள ஆவல். பாதிக்குமேல் கற்பனைதான். நீங்களெல்லாம் பாராட்டினால் அதுவும் ஒரு அலாதி திருப்தி. நன்றி. அன்புடன்
50.
Geetha Sambasivam | 10:38 முப இல் பிப்ரவரி 10, 2016
தை பிறந்தால்–2 ஆம் பகுதியும் படித்தேன் ஆனால் அங்கே கருத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல முடிவு, தைரியமான, சுதந்திரமான முடிவும் கூட. குழந்தைகளின் ஆமோதிப்பு மனதுக்கு நிம்மதியைத் தருகிறது.
51.
chollukireen | 11:01 முப இல் பிப்ரவரி 10, 2016
விவரமான பெண், பிள்ளைகள் இஷ்டமில்லாவிட்டால் அவர்களை உயிருடன் பிரிந்துவிட நேர்ந்துவிடும். அயல்நாட்டில் வளர்ந்தவர்கள் இதை தப்பாகப் பார்க்கப் பழகியதில்லை. இப்படி மனம் யோசித்தே இந்த முடிவு எடுத்தேன். உங்கள் உடல்நலம் தேவலையா? பின்னூட்டம் மன நிறைவைத் தந்தது. அன்புடன்
52.
Geetha Sambasivam | 11:05 முப இல் பிப்ரவரி 10, 2016
இப்போது பரவாயில்லை அம்மா. என்னுடைய வலைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (7ஆம் தேதி) அன்று நடந்த சந்திப்பைப் பகிர்ந்திருக்கிறேன் இயன்றபோது பார்க்கவும். வெங்கட்டும் பகிர்ந்திருக்கிறார் படங்களோடு!