வாழ்த்துகள்
ஜனவரி 13, 2013 at 1:55 பிப 20 பின்னூட்டங்கள்
அன்பார்ந்த நெஞ்சங்களுடைய அன்புச் ஸகோதர,ஸகோதரி,மகள்,மகன்
என எங்கும் பரந்து வாழும் அன்பு மிக்கவர்களே ,உங்கள் யாவருடனும் என்
பொங்கல் வாழ்த்துகளைப் பரஸ்பரம் மனமாரப் பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன். உங்கள் யாவரின் அன்பு மொழிகளை மகிழ்ச்சியுடன்
வரவேற்கிறேன்.
பொங்கலோ பொங்கல். பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட வேண்டும்.
யாவரின் நன்மையைக் கோரி பணிவுடன் கடவுளை வேண்டுவோம்.
யாவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன். காமாட்சி
Entry filed under: வாழ்த்துகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 3:05 பிப இல் ஜனவரி 13, 2013
பிரியமுள்ள காமாக்ஷி மாமி,
பொங்கலுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.
இதோ உங்களுக்கும் ஓர் பொங்கல் வாழ்த்து:
========================================
2
=
ஸ்ரீராமஜயம்
============
செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,
சிந்துகின்ற புன்னகையால்
துன்பம் நீக்கி,
மதமதத்த வளையணிந்த
கைகள் வீசி,
மங்களாம்
“தை” என்னும்
மங்கை வருவாள்!
பொங்கியெழும்
புத்தின்ப உணர்ச்சி
தருவாள்!!
தங்களுக்கும் தங்கள் இல்லத்திலும்
உள்ளத்திலும் உள்ள அனைவருக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துகள்! 😉
அன்புடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 9:51 முப இல் ஜனவரி 16, 2013
அனேக ஆசிகள். என்னுடைய பின்னூட்டம், உங்கள் வாழ்த்துக்கு நன்றிகூறி எழுதினது, உங்களுக்குக் கிடைக்காததை
இன்று கவனித்தேன். எப்படி கிடைக்காமற் போகிறது? யோசித்து விடை கிடைப்பதில்லை.மிகவும் கிலேசமாக இருந்தது.
தயவுசெய்து மன்னிக்கவும். உங்கள் கவிதை மிகவும் அழகாகவும்,அர்த்தத்துடனும் இருந்தது. போனால்ப் போகிறது.
காணும் பொங்கலன்றாவது உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நல்லாசிகளைக் கூருகின்றேன். என்றும் உங்கள் நல்லாதரவை வேண்டும் அன்புடன் காமாட்சி மாமி.
3.
angelin | 4:37 பிப இல் ஜனவரி 13, 2013
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் .
4.
chitrasundar5 | 2:40 முப இல் ஜனவரி 14, 2013
காமாஷிமா,
உங்கள் வாழ்த்துக்களை மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டோம்,நன்றி.
உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அன்புடன் சித்ரா.
5.
chollukireen | 6:08 முப இல் ஜனவரி 14, 2013
வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா. அன்புடன்
6.
kalyani.M | 10:45 முப இல் ஜனவரி 14, 2013
nandri amma. ungalukkum ungal kudumbaththinarukkum enathu puththaandu mattrum pongal vaazhththukkal.
vaazhga vallamudan.
kalyani.M
7.
chollukireen | 7:03 முப இல் ஜனவரி 15, 2013
நன்றிஉங்கள் யாவருக்கும் வாழ்த்துகள்.அன்புடன்
8.
vijisathya | 2:10 பிப இல் ஜனவரி 14, 2013
காமக்ஷி அம்மா அவர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
9.
chollukireen | 7:01 முப இல் ஜனவரி 15, 2013
அன்புள்ள விஜி உன் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
உங்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள். அடிக்கடி ஸந்திக்கலாம்.அன்புடன்
10.
இளமதி | 7:14 பிப இல் ஜனவரி 14, 2013
அம்மா..உங்கள் ஆசி கிடைத்தது மிக்க சந்தோஷம்…
உங்களை வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்..
இருப்பினும் சம்பிரதாயத்திற்காக சொல்கிறேன்…
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்…
11.
chollukireen | 6:57 முப இல் ஜனவரி 15, 2013
மிகவும் ஸந்தோஷம் இளமதி. ஆசிகளும்,அன்பும்
12.
gowri chandrasekar | 2:09 முப இல் ஜனவரி 17, 2013
Thank you Kamatchi. Wish you all the same.
13.
chollukireen | 5:38 முப இல் ஜனவரி 17, 2013
அபூர்வமாக வந்திருக்கிராய் கௌரி. எல்லோருக்கும் என்அன்பு. அடிக்கடி வந்தாயானால் ஸந்தோஷமாக இருக்கும்.. அன்புடன்
14.
ranjani135 | 6:34 முப இல் ஜனவரி 17, 2013
உங்களது புதிய பதிவு ‘தை பிறந்தால் – 2’ படித்தேன். காமென்ட் பெட்டி காணலையே!
கற்பனைகள் அதிகமானாலும் நல்ல முடிவைக் கொடுத்திருக்கிறீர்கள். வெகு சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.
வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு வாழ்வு கிடைப்பது மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயம், இல்லையா?
கதா பாத்திரங்கள் எல்லோருமே பாசிடிவ் ஆக சிந்தித்தது ரொம்பவும் பிடித்திருந்தது.
மனநிறைவைக் கொடுத்த கதை!
பாராட்டுக்கள்!
15.
chollukireen | 11:01 முப இல் ஜனவரி 18, 2013
அன்புள்ள ரஞ்ஜனி நல்ல வேளை..கமென்ட் பெட்டி காணாவிட்டாலும் வாழ்த்துகளில் மறுமொழி கொடுத்திருந்தாய்.. மற்றவர்களும் அம்மாதிரியே கொடுத்திருந்தார்கள். நல்ல வேளை. நன்றி
உனக்குதான். கதை அடித்தளம் உண்மையாக கிடைத்ததில் , மனது கோட்டையாகக் கட்ட முடிந்தது.
உண்மையான நேசம். மறக்க முடியாத ஒன்று. மனது நல்லது நடப்பதைத்தான் விரும்புகிறது. இம் மாதிரி
ஆகாய விமான அனுபவங்கள் இருக்கே! வம்பாக இல்லை. அங்கு கூட அனுபவப் பரிமாற்றம் வீல் சேர்களுக்கு வேண்டியதாக இருக்கிரது.
ஏன் கமெண்ட் பெட்டி பிரசுரமாகவில்லை யென்று
உசாத்துணையாளரைக் கேட்கலாமா? இதையே அவர்
பார்க்க நேர்ந்தாலும் ஸரி.
உங்கள் கமென்ட் வழக்கம்போல எனக்கு ஊட்டச் சத்து.
மிகவும் நன்றி. அன்புடன்
16.
VAI. GOPALAKRISHNAN | 7:49 முப இல் ஜனவரி 17, 2013
நமஸ்காரம். தை பிறந்தால்-2 கற்பனைக்கதை நல்லா இருக்கு. படிச்சுட்டேன். அங்கு என்னால் கமெண்ட் போட முடியவில்லை. அதனால் இங்கு எழுதியுள்ளேன்.
என்னுடைய நிறைய கதைகளுக்கான லிங்க் இந்த லிங்கில் உள்ளது. இதை சேமித்து வைத்துக்கொண்டு, முடிந்தால் படித்துப்பாருங்கோ. அதுபோல முடிந்தால் கருத்துக் கூறுங்கோ.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
என் ஒரு கதையில் இதுபோல ஒரு பாட்டி+பேத்தி [உஷா] வருகிறாள். குட்டியூண்டு பரிசு பெற்ற கதை. அதற்கான லிங்க் இதோ:
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html
”என் உயிர்த்தோழி”
பிரியமுள்ள கோபாலகிருஷ்ணன்.
17.
chollukireen | 6:39 முப இல் ஜனவரி 18, 2013
ஆசிகள். நல்லாருக்கு படிச்சுட்டேன். கதையின் நடையில் பதில். ஸந்தோஷமாக இருந்தது. உங்களுடைய லிங்கிற்கும் போய் ஒரு கதையை படித்து விட்டு ,எழுதிவிட்டு வந்தேன்,ஒவ்வொன்றாகப் படிக்கிறேன். இம்மாதிரி லிங்க் மிகவும் உபயோகமாக உள்ளது.
நீங்கள் எழுதும் கதைகளுக்குக் கேட்கவே வேண்டாம்.அருமையாக இருக்கிறது. பின்னூட்ட இடம் இல்லாவிட்டாலும் மற்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஆதரவாக வார்த்தைகள் சொன்ன வகையில் மிகவும் நன்றி. அன்புடன்
18.
angelin | 6:22 பிப இல் ஜனவரி 17, 2013
அழகான நடையுடன் அற்புதமாக முடிச்சிருக்கீங்க// தை பிறந்தால் /
அங்கே பின்னூட்டம் இட முடியலைம்மா …எனக்கு எழுத்தாளர் லஷ்மி அவர்களின் நாவல்கள் ரொம்ப பிடிக்கும் .அவர் கதையில் வரும் பெயரைபோலவே கீர்த்திவாசன் ,..உஷா ஜெயந்தி என்ற பெயர்கள் .!!!!அம்மா நீங்க தொடர்ந்து எழுதுங்க ..உங்க எழுத்துக்களை வாசிக்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு .
19.
chollukireen | 6:58 முப இல் ஜனவரி 18, 2013
ப்ரிய அஞ்சு இங்கே வந்து பின்னூட்டமிட்டதற்கு ரொம்பரொம்ப
ஸந்தோஷம். முடிவு உனக்குப் பிடித்திருக்கிறது. இம்மாதிறி அமைந்தால்தான் கதையின் அர்த்தம் ஒத்துவரும். உன் பின்னூட்டங்கள் கூட அர்த்தமுள்ளதாக அமைகிறது. எழுதணும் என்கிற ஆசை இருக்கிரது. முயற்சிக்கிறேன். அன்புடன்
20.
இளமதி | 5:16 முப இல் ஜனவரி 18, 2013
அம்மா..என் வேலைப்பளு காரணமாக இக் கதையின் முதலாம் பகுதி படித்ததே இரண்டாம் பகுதியும் வந்த பின்பே. இரண்டையும் மூச்சு விடாம படிச்சிட்டு அங்கு கருத்தெழுதுவதற்கு பெட்டியை காணாமல் இங்கு வந்தெழுதுகிறேன்..
மிக மிக நன்றாக இருக்கிறது கதை. சில படங்களில் கதையை மட்டுமே ஒட்டி காட்சிகள் போய்க்கொண்டிருக்குமே – தேவையில்லாமல் பாட்டு, சண்டைக்காட்சி ,காமெடி இப்படி இல்லாமல் – அதுபோல உங்களின் இக்கதையும் மிக மிக அருமையாக கதையின் உட் கருத்தை செறிவாகக்கூறி நிற்கின்றது.
நல்ல கதை . நிறைவான முடிவு. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர். இங்கும் உஷா , கீர்த்திவாசன் அவர்களுக்கு இடையில் நல்ல ஒரு புரிந்துணர்வுடனான ஆரோக்கியமான மென்மையான அன்பு வரவேற்கக் கூடிதாக மகிழ்வைத்தை தருவதாக இருக்கிறது. இவர்கள் இருவரின் பிள்ளைகளும் மனதை நிறைக்கின்றார்கள்.
அருமையான முடிவு…சிறந்த கதை..உங்களின் கதை சொல்லும் நடை அதன் அழகும் அலாதிதான்…ரொம்பவே ரசித்தேன்…தொடரணும் இன்னும் பல கதைகள். காத்திருக்கிறேன்…