எங்கள் ஊர் நினைவுகள்.1
பிப்ரவரி 8, 2013 at 11:08 முப 39 பின்னூட்டங்கள்
இரவு நேரத்திற்கான சமையல் செய்து கொண்டே யோசனை. காஸில் ரஸம் கொதிக்கிரது. மைக்ரோவேவிலிருந்து எடுத்த காலிபிளவரும் உருளைக்கிழங்கும் எண்ணெயில் வதங்குகிரது. எழுதரதை விட்டு விட்டாயா என்று உள் மனம் கேட்கிரது. காரணம் எதுவானா என்ன? எழுத நினைத்தால் எழுதணும். காரணம் தேடாதே!!! நம்மஊர்,நம்ம ஊர் என்று மனதால் நினைக்கும் ஊரைப் பற்றி எழுது. வளவனூர். தமிழ் நாட்டில் விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி போகும் வழியில் 5 மைல்களைக் கடந்தால் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. ரயில்,பேருந்து, என எல்லா வசதிகளுமுடைய ஊர். ஊரைப் பற்றி ஆரம்ப கால கதைகள் சொல்லக் கேட்டிருக்கிரேன். சோழ மன்னர்களின் ஆட்சியில் ஏற்பட்ட ஊர் ஆகையால் வளவன் என்றால் அவர்களைக் குறிக்கும் காரணப் பெயர் கொண்டு வளவனூர் என்ற பெயருக்குக் காரணம் சொல்வார்கள். பச்சைப் பசுமையாக நில,புலன்களுடன்,ஆராவாரமில்லாத, அமைதியான ஊர். ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷன் எதிரே ப்ரமாண்டமான ஏரி. பெண்ணை நதியினின்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து. ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால் சற்று இரண்டுநடை போட்டால் அழகான குளம். குளத்தைச் சுற்றி மாமரங்கள். வேம்பு,அரசு,இருவாக்ஷி, ஸரகொன்றை,கொன்றை போன்ற மரங்கள், பவழமல்லி, அரளி மற்றும் பூந்தோட்டம், தோட்டத்தைக் காக்க,வேலை செய்ய,நம்பகமான ஆட்கள், இப்படி. ஊரில் ஸ்டேஷனின்றும் வரும்போதே உள் நுழைந்தால் அக்ரஹாரம். என்னை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போ என்று சொல்வதுபோல் ஒரு சிறிய வரப்ரஸாதியான ஸ்ரீ ஹனுமார் ஸன்னதி.பெருமாள் கோயில். இதே பஸ்மூலம் வருபவர்களுக்கு கடைத்தெரு, பிள்ளையார்,ஈசுவரன் கோயில்கள்,ஸ்கூல், ஹையர் எலிமென்டிரிஸ்கூல் என இருந்தது ஹைஸ்கூல்கள் காலேஜ் எனவும் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறது தற்போது. ஆரம்ப காலத்தில் கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வசதிகளைக் கொடுத்து பெருமாள்கோயில் தெரு பூரவும் அமர்த்தியிருக்கிறார்கள். இப்படிபாரத்வாஜ கோத்திரம்,கௌசிக கோத்ரம்,ஹரித கோத்ரம், நைத்ர காசியப கோத்ரம், இப்படி பலவித கோத்திரக்காரர்கள், வேத விற்பன்னர்கள் குடிபுகுந்த ஒரு வேத கோஷம் ஒலிக்கும் ஒரு பவித்ரமான ஸ்தலமாக இருந்தது. மற்றும் மூன்று தெருவுகள் வசதி படைத்த, வியாபாரங்கள் செய்யுமளவிற்கு வசதி உள்ளவர்களாலும் நிரம்பப் பெற்று, ஒருவர்க்கொருவர் உதவி செய்தும், கொண்டு கொடுத்து, விவாக ஸம்பந்தங்கள் மூலம் பின்னிப் பிணைந்து இருந்தனர். கட்டுப்பாட்டுடன் எல்லா நிகழ்வுகளிலும் யாவரும் பங்கு பெற்று ஒரு அமைதியான கிராமமாக இருந்தது. எங்கள் ஊர் ஏரியைச் சுற்றி ப் பதினெட்டு கிராமங்கள் இருந்தன.இருக்கின்றன. எங்கும் பயிர் பச்சை, எல்லோரிடமும்,நில புலன்கள். மாடு கன்றுகள். எங்களூரில் கூடும் சந்தை பெயர் பெற்றது. கரும்பு,கடலைக்கொட்டை, நெல் போன்றவை நிறைய விளையும். பக்கத்து கிராமங்களினின்றும் வரும் காய்கறிகள் பெயர் பெற்றவை. இப்படிகுடுமாங்குப்பத்து கத்தரிக்காய்,மடுக்கரை நாரத்தங்காய், மற்றும் சில ஊர்களின், காய்கறிகள், புதுப்பாளையம் தயிர் பால். ஆலயம்பாளைய தோட்டத்து வாழைக்காய், என பெயர் பெற்ற ஸாமான்களுண்டு. மிளகாய் தோட்டத்துக் கீரை மிகவும் ருசியாக இருக்கும். உப்பு,வெல்லம்,சவுக்கு விறகு, பண்ணுருட்டி முந்திரிப் பருப்பு,பலாப்பழம் அடுப்பெறிக்கும் கறி முதலானவைகள் பெரிய கூண்டு வண்டிகளில், கட்டை வண்டிகளில் மலிந்த விலையில் விற்பனைக்கு வரும். அக்காலத்தில் போக்கு வரத்து வசதிகள் குறைவாக இருந்தாலும். பண்டங்கள் யாவும் வீட்டு வாயிலில் வாங்கும்படியான வியாபாரங்கள் இருந்தது. பலவித கடைகளும் இருந்தது. ஊரைச்சுற்றி, பல குடியிருப்பான இடங்கள், குமார குப்பம் என்று ஒரு பெரிய அடுத்தபடியான வசதியான ஒரு ஊரும் இணைக்கப்பட்ட வளவனூராக இருந்தது. போஸ்டாபீஸ், போலீஸ்டேஷன்,ரிஜிஸ்டாராபீஸ், பஞ்சாயத்துபோர்ட் ஆஸ்ப்பத்திரி, பேங்குகள் எலக்டிரிக் ஆபீஸ் என எல்லா வசதியும் இருந்தது. புண்யகாலங்கள், துலாஸ்நானம், மாகஸ்நானம், கிரஹணபுண்யகாலங்கள், தினப்படி குளிப்பது என எல்லாம் குளத்தில்தான். நல்ல, அல்ல பிற விஷயங்களுக்கு, அங்குதான் ஏற்ற இடமாகவும் இருக்கும். குளக்கரையில், நந்த வனத்திலென, ஊரில் ஸன்னியாஸம் வாங்கிக்கொண்டு முக்தியடைந்த ஸன்னியாசிகளின் அதிஷ்டானமும் இருக்கும். ஸன்னியாசிகளை எரிப்பதில்லை. என்னுடைய பாட்டியின் தகப்பனார் ஸன்னியாஸம் வாங்கிக் கொண்டவர். அவருடைய ஸமாதி, அதுதான் அதிஷ்டானமென்று சொல்லுவார்கள். எங்களூர் நந்த வனத்தின் ஒரு பக்கத்தில் ஒரு இருவாக்ஷி மரத்தடியில் இருந்தது.பிருந்தாவனமாக துளசி மடம் மாதிரி அமைப்பதும் உண்டு. இவருக்கு பிரமாதமாக எதுவும் கட்டவில்லை. உயரமான ஒரு கல்லை நட்டு அடையாளம் குறிப்பிட்டிருந்தனர். பிருந்தாவனம் எழுப்ப நினைத்தும் அவரது வாரிசுகள் ஒருவர்பின் ஒருவராக காலஞ் சென்று விட்டனர். அவருடைய பெண்ணான எங்கள், தாய்வழிப்பாட்டி எங்களுடனே இருந்தார். அவர் குளத்திற்கு போகும் போதெல்லாம், அந்த அதிஷ்டானத்திற்குப்போய் ஸ்நானம் செய்வித்து மலரஞ்சலி செய்து விட்டு வருவார். ஸ்வாமிகள் தாத்தா இங்குதான் இருக்கிறார் என்று சொல்லுவார். அவருடைய நினைவு நாளன்று, விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து விட்டு வந்து பிருந்தாவன ஸமாராதனை என்று சொல்லி, வகையாக சமைத்து உறவினர்களுடன் , உணவளித்து மகிழ்வார். என் அப்பாவும் பாட்டியின் உறவுமுறையில் ஸகோதரர் ஆகும். நான் பாட்டியிடம் அது எப்படி, இது எபபடி என்று கேள்விகளெல்லாம் கேட்பேன். அதனால் சில பழைய, பழக்க வழக்கங்கள்,எப்படி அந்தக் காலம் இருந்தது என்பதெல்லாம் ஏறக் குறைய தெரியும். அடுத்த தலை முறைக்கு சொன்னால் கூட தெரியாது. சொல்வதற்கு இம்மாதிரி கதைகளும் இருக்காது. நந்த வனத்தின் மாமரங்கள் காய்த்தால் அதில் சில குடும்பங்களுக்கு பங்கு உண்டு. நிலத்திற்கு பட்டா கிடையாது. மரத்திற்கு உண்டு என்பார்கள். காவல் கார்ப்பவர்கள் மாங்காய்களைப் பரித்துக் கோணியில் மூட்டைகளாகக் கட்டி எடுத்து வருவார்கள். பரித்த காய்களை விகிதாசாரமாகக் கொடுத்து விட்டு இரண்டு பங்கு காய்கள் அவர்களுக்காக எடுத்துப் போவார்கள். அவர்கள் பங்கையும் அவ்விடமே வேண்டுபவர்களுக்கு விற்று விட்டு பணமாக்கி விடுவார்கள். கால ஓட்டத்தில் மரங்களுமில்லை. நந்த வனங்களுமில்லை. பங்குதாரர்களுமில்லை. பராமரிக்கவும் இல்லை. குளத்தின் உபயோகங்களும் குறைந்து கொண்டே வர ஊரின் புராதன மக்களின் வாரிசுகள் நகர வாஸங்களில் வேலைக்குப்போக பழமை மறந்து புதுமை புகுந்து, நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற, எல்லாமே மறந்த ஒன்றாக எப்பொழுதோ ஆகிவிட்டது. இன்னமும் சில குடும்ப வாரிசுகளின் மூன்றாம்,நான்காம் தலை முறைகள் உறவு சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். கோயிலின் உத்ஸவங்கள் கூட ஒவ்வொரு குடும்பத்தினரே செய்ய வேண்டுமென்ற விதிமுறையும் உண்டு. அது மாத்திரம் வாரிசுதாரர்கள் எங்கிருந்தாலும் வந்து,அல்லது உறவினர்களைக் கொண்டோ நடத்தும் பழக்கம் இன்றும் நடைபெறுகிரது. நாங்கள் சிறு வயதில் அதுவும், பெண் பசங்கள், மாசிநிலா, ஊரைச் சுற்றி ஒவ்வொரு வீட்டின், வாசலிலும் பாட்டுகள் பாடி கும்மியடித்து, கூடை,கூடையாக நெல்லை வாங்கிக்கொண்டு, மூன்று நாட்கள் அதாவது மாசிமாத பௌர்ணமியின் முதல் மூன்று நாட்கள் இரவில் நிலவின் தண்மையான வெளிச்சத்தில் கூடிக் களித்ததை, பகிர்ந்துகொள்ளலாமென்ற எண்ணம் எங்கிருந்தோ வந்து விட்டது. படியுங்கள் நீங்களும்!!!!!!!!! வருகிறேன்.
Entry filed under: சிலநினைவுகள். Tags: எங்கள் ஊர் நினைவுகள் 1.
39 பின்னூட்டங்கள் Add your own
chollukireen க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
gowri chandrasekar | 2:12 பிப இல் பிப்ரவரி 8, 2013
Dear Kamatchi,
Valavanur patri epozhu dhan naan therinthu konden muzhumyaga.
Romba nandraga irundhathu.
Gowri
2.
chollukireen | 1:08 பிப இல் பிப்ரவரி 11, 2013
அன்புள்ள கௌரி, உன் அம்மா வழி, அப்பாவழி தாத்தா,பாட்டிகள் என வம்சபரம்பரை ஊரல்லவா?
படிக்க நன்றாகத்தானிருக்கும். வருகைக்கு ஸந்தோஷம். அன்புடன்
3.
ranjani135 | 2:47 பிப இல் பிப்ரவரி 8, 2013
உங்கள் ஊர் நினைவுகள் படிப்பவர்களை உங்கள் ஊருக்கே அழைத்துப் போகின்றன. நீங்கள் வர்ணித்திருக்கும் சர கொன்றை மரங்கள், அக்ராஹாரம், ஹனுமார் கோவில், குளம், அதிஷ்டானம் எல்லாமே கண் முன்னால், காட்சிகளாக விரிகின்றன.
ஒரு தேர்ந்த ஓவியனின் வண்ணத் தூரிகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சித்திரம் போல உங்கள் எழுத்துக்கள் உயிர் பெற்று மனதில் உலவுகிறது.
தங்கு தடங்கலில்லாத எழுத்து நடை அசத்தல்!
4.
mahalakshmivijayan | 10:49 முப இல் பிப்ரவரி 9, 2013
‘ஒரு தேர்ந்த ஓவியனின் வண்ணத் தூரிகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சித்திரம் போல உங்கள் எழுத்துக்கள் உயிர் பெற்று மனதில் உலவுகிறது.’
ஆஹா எவ்வளவு அழகான கமெண்ட், உங்க கிட்ட தானம்மா படிக்கணும் இப்படி எழுதுவதற்கு!
5.
chollukireen | 1:35 பிப இல் பிப்ரவரி 11, 2013
மஹாலக்ஷ்மி, கமென்ட் எவ்வளவு அழகு?ரஸித்தாயா?அன்புடன்
6.
chollukireen | 1:33 பிப இல் பிப்ரவரி 11, 2013
எனக்குக்கூட இந்த காட்சிகள், இன்னும் பசுமையாக மனதில் இருக்கிரது.. கோவில் புனருத்தாரணம் செய்யப்படுகிறது.. அது என்னவோ எங்கள் தெரு பெருமாள் கோயில் எங்களுடயதென்ற நினைப்பே
அத்தெரு வாசியாகிய எங்களுக்கு. எங்கள் லக்ஷ்மி நாராயணப்பெருமாள், எங்கள் வேதவல்லித் தாயார்.,
எங்கள் ஊர், ஆஞ்சநேயர், என அலாதிப் பற்று.
முடிந்ததை எல்லோரும் கொடுத்திருக்கிரார்கள்.
;சொத்து,சுதந்திரம் இல்லாவிட்டாலும் நமக்கு
நம்முடைய கோவில்ப் பணியாகிலும் வேண்டாமா?
நீங்கள் கருத்து மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
என்னுடைய மனத்தின் உண்மையான பிம்பங்களது.
உங்கள் மறு மொழிக்கு மிகவும் நன்றி.
ஊர் இருக்கிறது. நான் எப்போதாவது போவதுண்டு.
கோவில்களைஎல்லாம் ஒழுங்கு படுத்தி, பலவிதங்களில் முன்னுக்கு கொண்டுவர ஒரு கூட்டமைப்பு மும்முரமாகப் பாடுபடுகிறது. வாழ்க
அந்த அமைப்பினர். வாழ்க வளவனூர் வாசிகள்.
வந்தாரை வாழ வைக்கும் வளவனூர் என்று
ஒரு வாக்கியம் எங்களூரில் உண்டு.
7.
chollukireen | 5:17 பிப இல் பிப்ரவரி 11, 2013
ஆறாவது நம்பரிட்ட பின்னூட்டம் திருமதி ரஞ்ஜனி நாராயணுக்கான பின்னூட்டத்திற்கு பதிலாக எழுதியது.
8.
Rajarajeswari jaghamani | 3:27 பிப இல் பிப்ரவரி 8, 2013
மாசிமாத பௌர்ணமியின் முதல் மூன்று நாட்கள் இரவில்
நிலவின் தண்மையான வெளிச்சத்தில் கூடிக் களித்ததை,
பகிர்ந்துகொள்ளலாமென்ற எண்ணம் எங்கிருந்தோ வந்து விட்டது.//
தண் நிலவாக ஒளிர்ந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
9.
chollukireen | 8:05 முப இல் பிப்ரவரி 12, 2013
ராஜராஜேச்வரி உங்கள் வருகைக்கு மிகவும் ஸந்தோஷத்துடன் வாருங்கள் என்று வரவேற்கிறேன்.
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள். எவ்வெப்போதும் வருகை தாருங்கள். அன்புடன்
10.
VAI. GOPALAKRISHNAN | 3:34 பிப இல் பிப்ரவரி 8, 2013
உங்கள் ஊரைப்பற்றிய வர்ணனைகளை மிகப்பிரமாதமாக எழுதியுள்ளீர்கள். சந்தோஷமாக முழுவதும் படித்து மகிழ்ந்தேன். கால மாற்றங்களால் எவ்வளவோ நடைபெறுகின்றன. காட்சிகள் மாறிப்போகின்றன. இருப்பினும் நம் நினைவலைகள் என்றும் மாறவே மாறாது தான்.
தங்களின் இந்த எழுத்துக்கள் உங்கள் ஊரைப்பற்றிய ஓர் வரலாற்று பொக்கிஷமாகும்.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்
11.
chollukireen | 1:47 பிப இல் பிப்ரவரி 11, 2013
மிகவும் அழகாக, இயற்கை வளங்களுடன் இருந்த ஊர்.
அந்த அழகெல்லாம், பம்ப்ஸெட்,மோட்டர், என்று நிலத்தடி நீர் குறைந்த பின் உருவமே மாறிவிட்டது.
எங்கள் கோவில் கிணற்றுநீர் அருமையானது.
இன்றும் போனால் கிணற்றை எட்டிப் பார்த்து
விட்டாவது வருகிறோம்.. ஊரைச் சேர்ந்தவர்கள் உனக்கு எப்படி இதெல்லாம் ஞாபகம் வருகிரது என்று
கேட்கிரார்கள்.பூர்வ ஜென்மத்து பந்தம் ஏதாவது இருக்கும்..
உங்களின் கருத்து நூறு பங்கு உண்மை. மிகவும் நன்றி.இன்னும் ஊரைப்பற்றிய எண்ணங்கள் ஓய்ந்தபாடில்லை. அன்புடன்
12.
chitrasundar5 | 7:45 பிப இல் பிப்ரவரி 8, 2013
உங்க ஊர் நினைவுகள் என்றதும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. அந்தக்கால,உங்க ஊருக்கு, உங்களுடனே பயணிமாகி வந்த ஒரு உணர்வு. வர்ணனையின் மூலம் அந்தக்கால வளவனூர் எப்படி இருந்திருக்கும் என கண்முன்னே கொண்டுவந்திட்டிங்க.
உங்க ஊரின் முன்னேற்றத்தை அவ்வப்போது விசாரித்துத் தெரிந்துகொள்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.வளவனூர் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள ஊர்கள்,அங்கிருந்து என்னென்ன கிடைக்கும் என்பதையும் நினைவில் வைத்து எழுதுவது ஆச்சரியமா இருக்கு.இன்னும் எழுதுங்கமா,வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.அன்புடன் சித்ரா.
[‘இருவாக்ஷி’__துவையல் சாப்பிட்டிருக்கீங்களா?நல்ல வாசனையுடன் இருக்கும்.லேஸில் மசியாது, அம்மியில்தான் அரைக்க முடியும்]
13.
chollukireen | 3:17 பிப இல் பிப்ரவரி 11, 2013
சித்ரா இருவாக்ஷி என்பதை மந்தாரை என்றும் சொல்வதுண்டு. மஞ்சள் கலரில் பூக்கும் மரத்தின் கொழுந்து இலையை வதக்கி, உப்பு புளி,காரம் சேர்த்து பருப்புகளுடன் துவையல் செய்வதுண்டு. பித்தத்திர்கு மிகவும் நல்லது. பூ கூம்பின மாதிரி இருக்கும்..
உனக்கும் வளவனூர் பார்த்த ஊரென்றாலும், நான்
இன்னும் பின்னோக்கிப் பயணித்து வந்த வளவனூர்
எப்படியிருக்கும் தெரியுமா/? கிராமத்துச் சுவையுடன்,
பழக்க வழக்க, மாறுபட்ட, ஒரு இயற்கையான சுபாவத்துடன் அன்பான கட்டுப்பட்ட கிராமத்தை
அகக் கண்ணால் பார்த்து மகிழ்வதின் காரணம் வயோதிகம். பக்கத்து வீட்டிலேயே இருவாக்ஷி மரம் இருந்தது.. மிக்ஸி ஏது. அம்மியில் அரைத்த துவையல்தான்!!!!!
மாறுபட்ட
14.
4 பெண்கள் | 6:35 முப இல் பிப்ரவரி 9, 2013
சுவாரஸ்மான நாவலின் முதல் அத்தியாயத்தைப் படிப்பது போல் இருக்கிறது நீங்கள் எழுதுவது. வாழ்த்துக்கள் தொடருங்கள்…
15.
chollukireen | 4:45 பிப இல் பிப்ரவரி 11, 2013
உங்களின் முதல் வரவை வருக,வருக என்று வரவேற்கிறேன். தொடர்ந்து பின்னூட்டங்களைத் தொடருங்கள். அன்புடன்
16.
chollukireen | 6:04 முப இல் பிப்ரவரி 12, 2013
உங்கள் முதல் வரவுக்கு நன்றி. தொடர்த்து வந்து ரஸிக்கவும்.
17.
chollukireen | 8:09 முப இல் ஏப்ரல் 29, 2015
அப்படியா நீங்களும் தொடரலாமே. அன்புடன்
18.
mahalakshmivijayan | 10:45 முப இல் பிப்ரவரி 9, 2013
மிகவும் நன்றா இருந்தது அம்மா! உங்க ஊரை பார்க்க வேண்டும்ன்னு ஆசையே வந்துடுச்சு!
19.
chollukireen | 4:48 பிப இல் பிப்ரவரி 11, 2013
பார்த்தால் போகிறது. பிரமாதம் ஒன்றுமில்லை!!நீயும் வா,நானும் வருகிறேன். அன்புடன்
20.
இளமதி | 10:47 முப இல் பிப்ரவரி 9, 2013
வணக்கம் அம்மா.. நலமாக இருக்கின்றீங்களா? நெடுநாளாக தொடர்பில்லாத ஒரு உணர்வு…
அருமையாக உங்கள் ஊரைப்பற்றி எழுதி பகிர்ந்துள்ளீங்கள். நாமும் உங்களுடன் அந்த நினைவுகளில் கூடவே வந்த ஒரு உணர்வினை அற்புதமான எழுத்து நடையில் தந்தீர்கள். ரசிக்க வைத்தீர்கள். அருமை.
இயந்திரகதி வாழ்க்கையில் இளைய தலைமுறையினர் பலருக்கு பல விஷயங்கள் இப்படி உங்களைப்போன்றோர் எழுதி அதை வாசித்துப் பார்த்தால்தான் தெரிய வரும் நிலை இன்று.
அழகிய நல்ல பதிவு அம்மா.
21.
chollukireen | 5:21 பிப இல் பிப்ரவரி 11, 2013
23ஆவது நம்பரில் இளமதிக்கான பின்னூட்ட பதில்.
எல்லாம் தாறுமாறு. அன்புடன்
22.
Pattu | 1:19 பிப இல் பிப்ரவரி 9, 2013
நடுவிலே கொஞ்சம் பிஸியாக இருந்ததால், படிக்க வரவில்லை.
ஏதோ குறையாக இருந்தது. இப்போது , பதிவை படித்தால், நிறைவாக உள்ளது. எங்களுக்கு, வளமையான கிராமத்தை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல் அம்மா. அதே சமயத்தில், அந்த வாழ்க்கை முறைகளை இழந்த வருத்தமும் மனதில் இழையோடுகிறது.
இன்னும் படிக்க காத்திருக்கிறோம்!
23.
chollukireen | 5:25 பிப இல் பிப்ரவரி 11, 2013
நீங்கள் எப்போது படித்தாலும் ஸரி. உங்கள் அன்பான பதில் மனதிற்கு நிறைவைத் தருகிறது. அன்புக்கு நெகிழும் அன்புடன். பதில்களெல்லாம் முன்னுக்குப் பின்னாக வருகிரது. பார்த்துப் படியுங்கள்
24.
chollukireen | 4:59 பிப இல் பிப்ரவரி 11, 2013
ஒரு பழைய நினைவின் உந்துதல், மனப்பதிவு.ரஸித்து வாசித்ததற்கு என் அன்பான ஆசிகள். கிராமங்கள் இருக்கிறது. பழைய வாஸனை இல்லை. பாட்டிலில் அடைத்த மணம். இருந்தாலும், பிடித்த,மணத்தின்
மணம் சிறிதேனும் இருக்கிரது.. உன் பின்னூட்டங்கள்
மனதை நிறைக்கிரது.
நினைத்து அசைபோட வைக்கிரது. அன்புடன்
25.
Mahi | 11:35 பிப இல் பிப்ரவரி 11, 2013
காமாட்சிம்மா, உங்களுடன் வளவனூருக்கு வந்து பார்த்துவிட்டு வந்தமாதிரியே இருக்கிறதும்மா! ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க.
ஒருசில நினைவுகள் அப்படியே நம் நெஞ்சில் உறைந்துபோய்விடும். சிலபல வருஷங்கள் கழித்து அதே இடத்திற்கு போய் நம் மனதில் பதிந்த காட்சியைத் தேடுவோம்! ஊர் மாறிப்போயிருக்கும், வீடு மாறிப்போயிருக்கும், மனிதர்களும் மாறிப் போயிருப்பார்கள். இருந்தாலும் நம் மனதில் உள்ள காட்சிகள் மாறாமல் அப்படியேதான் இருக்கும். அவ்வப்போது சிறுவயதில் நான் வளர்ந்த வீடு, அதே தோரணையுடன் இப்பொழுது கனவில் வரும். 🙂
உங்க மனப்பேழையில் இருந்து பொக்கிஷமான நினைவுகளைக் கோர்வையாக எழுதிருக்கீங்க,,படிக்க நல்லா இருக்கிறது. வளவனூர் மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்!
26.
chollukireen | 5:49 முப இல் பிப்ரவரி 12, 2013
அன்புள்ள மஹி நீ எழுதியிருக்கும் பின்னூட்டம் நூறு பர்ஸென்ட் கரெக்ட்.
ஒருமுறை பதிவான அழகிய காட்சிகள் எந்தக்காரணத்தைக் கொண்டும் மாறுவதில்லை. மாற்றத்தை பதிவு செய்வதுமில்லை. சிரஞ்ஜீவியான பதிவுகளாக மாறிப்போய் விடுகிறது. உன் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.
அடிக்கடி உன்னை எதிர் பார்க்கிரேன். அன்புடன்
27.
venugopal | 5:47 பிப இல் செப்ரெம்பர் 26, 2013
இந்த வளவனூர் வழியாகத்தான் பூவரசன் குப்பம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு சென்று வந்தேன்…
28.
இந்த வார வல்லமையாளர்! | ranjani narayanan | 4:31 பிப இல் ஓகஸ்ட் 4, 2014
[…] பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள், […]
29.
chollukireen | 12:26 பிப இல் ஓகஸ்ட் 5, 2014
தேர்ந்தெடுத்த மாதிரி. நன்றி. அன்புடன்
30.
chollukireen | 12:55 பிப இல் ஓகஸ்ட் 5, 2014
ஊருக்குத் திரும்பவும் போயிருந்தேன். கோவில் பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்க முடியாமல், ஏதோ தகராருகள். கோவிலைச் சுற்றிவிட்டு வந்தேன். உன்னை நீயே ரக்ஷ்க்ஷித்துக் கொள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அன்புடன். யாரிடம்.பெருமாளிடம். அன்புடன்
31.
chollukireen | 12:35 பிப இல் நவம்பர் 14, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
நேற்று உறவுக்காரர் ஒருவர் எங்கள் ஊரைப்பற்றிய கட்டுரை ஒன்று வாட்ஸப்பில் ஊரைச்சுற்றுவதைப் படிக்கும்படி அனுப்பி இருந்தார். அது நான் இந்த வலைப்பூவில் நான் எழுதியதே.நீங்களும் படியுங்களேன். பெயரில்லாமல் இரள்டு வரிகள் மட்டுமே மாற்றம் அவர் எழுதியதில். ஸந்தோஷம்தான். அன்புடன்
32.
ஸ்ரீராம் | 2:45 பிப இல் நவம்பர் 14, 2022
விழுப்புரத்துக்கு அருகே இவ்வளவு அழகான ஊரா? வர்ணனை படிக்கும்போது ஆஹா என்றிருக்கிறது. நாம் அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்று ஏக்கம் வருகிறது.
33.
chollukireen | 12:26 பிப இல் நவம்பர் 15, 2022
அந்த அழகு இப்போது இல்லை.ஏக்கமெல்லாம் வேண்டாம்.நன்றி. அன்புடன்
34.
நெல்லைத்தமிழன் | 8:56 முப இல் நவம்பர் 16, 2022
விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் மற்றும் பெரும்பாக்கம் போன்ற கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். அந்த கிராமங்களும் மிக அழகாக, அருமையான கோவில்(களுடன்) இருக்கிறது.
ஆனால் அங்கிருந்தவர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். விசேஷங்களுக்கு மாத்திரம் ஊருக்கு வரும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்….எல்லாம் காலம் செய்த கோலம்
35.
chollukireen | 12:05 பிப இல் நவம்பர் 17, 2022
ஏராளமான கோவில்கள் இருக்கிறது. பெண்ணையாற்றங் கரையில் பூவரசங்குப்பம் என்ற நரஸிம்ம க்ஷேத்திரமும் அதில் ஒன்று. வளவனூரிலிருந்து 6 மைல் தூரம்தான். எல்லா இடத்திலும் மஹிமை மட்டும் இருக்கிறது. அன்புடன்
36.
Geetha Sambasivam | 3:19 முப இல் நவம்பர் 15, 2022
Super post. Sweet memories. Very interesting. Thank you amma. Namaskarangal.
37.
chollukireen | 12:29 பிப இல் நவம்பர் 15, 2022
ஆசிகள். ஆம் இனிய நினைவுகள்தான்.மிக்க நன்றி. அன்புடன்
38.
நெல்லைத்தமிழன் | 8:54 முப இல் நவம்பர் 16, 2022
ஆஹா…வளவனூர் புகழ் பாடிவிட்டீர்களே…
ஆனால் இப்போதைய நிலைமை நிச்சயம் மாறியிருக்கும். எந்த கிராமம்தான் கடந்த 30-40 ஆண்டுகளில் முழுமையாக மாறவில்லை.
இருந்தாலும் பழைய நினைவுகள் நம் மனதில் ஏக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது
39.
chollukireen | 11:56 முப இல் நவம்பர் 17, 2022
இது 60-70 ஆண்டுகளில் ஊரே மாறிய கதைதான். இரண்டொரு வரிகள் மாற்றிப் போட்டு வாட்ஸ்ஸப்பில் யாரோ போட்டிருந்தனர். அதன் எதிரொலிதான் இது. அடுத்தும் ஒரு பகுதி இருக்கிறது. அதையும் போட்டு விடுகிறேன். இப்படி அனேக கதைகள் மனதில் உலா வருகிறது. ஸரியாகச் சொன்னீர்கள். அன்புடன்