ஹலோ, ஹலோ,ஹலோ
பிப்ரவரி 27, 2013 at 10:40 முப 17 பின்னூட்டங்கள்
ட்ரிங்-ங் ட்ரிங், ட்ரிங்
யாரா இருக்கும்
வீட்லே யாரும் இல்லே, எடுத்துதான் ஆகணும். ஹலோ
ஓ நீங்ளா. எப்போ போன் செய்தாலும் ஏதோ காரியமா,இருக்கிங்கோ
சித்த நாழி கழித்து போன் பண்ணுங்கோன்னு பதில் சொல்ரா,
என்ன தான் பண்றெங்கோ?
பண்றதென்ன இருக்கு? மேலேர்ந்து வந்து சொல்லணும்.
அவர்கள் பிஸி. என்னையும், பிஸியாக்கிரா, அவ்வளவுதான்.
எப்படி இருக்கே, என்ன ஸமாசாரம்.
ரொம்ப நாளுக்கு முன்னே பேசினதுடந் ஸரி. ரொம்பவே பேசணும்.
யாரிடமாவது மனதிலிருப்பதை கொட்டினா தேவலை போல இருக்கு.
என்னத்தை கொட்டணும்?
எதையும் கொட்டினா கஷ்டம். வார முடியாதே.
ஆமாம், நீங்கள் இப்படி சொல்லியே இருந்திண்டிருக்கெங்கோ
என்னால் இப்படி இருக்க முடியலே.
இந்த வார்த்தை கேட்டு கேட்டே இருந்திருக்கேநா, ஸரி,அப்புரமா பேசலாம்.
ஒத்தரும் இல்லாத வேளையா சொல்லுங்கோ.
ஸரி. அப்படியே ஆகட்டும்.
லக்ஷ்மி, ரொம்ப நாளா விட்டுப்போன நட்பு, ஒரே இடத்தில்குடியிருந்தநட்பு.
வித்தியாஸமில்லாமல் மனது விட்டு பேசி, அன்றாடும் நடக்கும்
நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும்படியான நட்பு. விட்டுப் போய்
வெகு வருஷங்களுக்குப்பிறகு, அவளைப் பார்த்து, மறுபடியும் நட்பு
ஆரம்பித்ததே எதிர் பாராத விதத்தில்.
பிள்ளை கல்கத்தாவிலிருக்கும்போது, குருவாயூரப்பன் கோவிலுக்கு
தரிசனம் செய்யப் போகும் போது ராஜம்மா என்று கையைப்பிடித்துக்
கொண்டாள்.
நீ எங்கிருந்து வந்தாய், நிஜமாதானா, இல்லே நான் தப்பா லக்ஷ்மி.
இல்லேஇல்லே,நான்தான் ராஜம்மா.
யாரோட வந்திருக்கே, பொண்ணு இங்கிருக்கா, இப்படி ஸமாசாரங்கள்
அடுத்து எப்போதாவது போன் வரும்.
எல்லாருக்கும், மாற்றல் அது இது என்று போனும் குறைந்து போனது.
திரும்பவும் இப்போது போன் அடிக்கடி வர ஆரபித்து விட்டது.
என்ன காரணம்? குறைகளை யாரிடமாவது சொல்லிக்க வேண்டுமே.
வேண்டாம்மா, எங்கேயும் இப்படிதான் இருக்கும். சொல்லிண்டா
பிரயோசனமில்லை.
உனக்கு நான் பதில் சொன்னால் கேட்பவர்களுக்கு அது என்னவாகப் புரியும்
தெரியுமா?
நான் ஏதோ வம்பு பேசுவதாகத்தான் நினைப்பார்கள். முதலில் இதைப் புரிஞ்சுகோ!
எல்லாம் புரிஞ்சும்டதெல்லாம் போரும்.
என்ன கேட்டா சொல்லுங்கோ, பாவம், லக்ஷ்மி கஷ்டப் படரா , கஷ்டம்
சொல்லிண்டான்னு சொல்லுங்கோ.
ஸரி, ரொம்பவே லக்ஷ்மி சராசரி பெண்ணுதான். கஷ்டப்பட்டு முன்னுக்கு
வந்தவள்தான். புருஷனுக்குப் பிறகு பெண்ணோடு தங்கி விட்டாள்.
பெண்,மாப்பிள்ளை குடும்பம் வெளிநாடு போய்விடவே, தனியாகவும் இருந்து
பல வருஷங்களை ஓட்டி விட்டு உடம்பு ஒத்துழைக்கவில்லை, பிள்ளை
நாட்டுப் பெண்ணுடன் இருப்பதுதான் நல்லது என்று எல்லோர் சொன்னதையும்
கேட்டு, தனக்கும் பட்டு தான் வந்திருப்பதாக ஒரு முறை சொன்னாள்.
என்ன கஷ்டம்?நாம குடுத்தனம் பண்ணியாச்சு.
அவர்கள் குடும்பம். அதிகம் வராது பெண்வீட்டிலே சுவாதீனமாக இருந்து_ விட்டு
என்னவோ?என்ன கஷ்டம் சொல்லப் போராளோ_
lதர்ம சங்கடமாக இருக்கிறதே, கேட்கத்தான் வேணும், சொல்லாதே என்று சொல்ல
நாம யாரு.
ஒருத்தரும் இல்லாத போது , நான் போன் பண்ணி கூப்பிடணுமா?
ரொம்ப அழகாயிருக்கும். ஏற்கெனவே பிறத்தியார் கஷ்டமெல்லாம் போதும்.
அதனாலே நம்ம நிம்மதியும் போறதோட ஏதாவது பொதுவாக வாவது பதில்
சொல்ல வேண்டி வருகிரது. அது எப்படி புரிந்து கொள்ளப்படுகிரது, அதுவே தெரியலே!
பாப்போம்.
ஆச்சு கொஞ்சநாள், வீட்லே யாருமே இல்லே. ட்ரிங்்ட்ரிங்,ட்ரிங்
ஹலோ,ஹலோ நான்தான் லக்ஷ்மி ராஜம்மாவா, என்ன அதிசயம்?
ஆமாம்ஆமாம்,நான்தான். ஸௌக்யமா?
கேக்காத என்ன பண்ணுவே. போன் பண்ணுங்கோ சொன்னேன்.
காதிலே போட்டுக்கலே போல இருக்கு.
இல்லே , அதைப்பத்தி எண்ணம் இருந்தது.
இப்ப என்ன பண்ணிண்டிருக்கேங்கோ
ஒண்ணுமில்லே.யாருமில்லே ஆத்திலே
ஒரு ஃபோன் பண்ணக்கூடாது. நான் ஏதாவது கொரை சொல்லுவேன்.
அதானே காரணம். இல்லே அப்டியெல்லாம்
நான் கேக்கறதுக்குள்ளே, நீயே கற்பனை பண்ணிண்டு, பேசினா
நான் எதை பதில் சொல்வது?
இல்லே,இல்லே, உங்களைமாதிரி எல்லாம், நானில்லை. அதனால்
அப்படியெல்லாம் இல்லை.
எல்லாரிடமும், எல்லாம் இருக்கு. ஒவ்வொண்ணு ஒவ்வொரு மாதிரி. அவ்வளவுதான்.
அதெல்லாம் விடு. எப்படி யிருக்கே என்ன ஸமாசாரம்.
அதைச் சொல்லதான் ஆள் தேடறேன். மனதிலேயே போட்டுக் குமுறிண்டு இருக்கு.
நான் இங்கே எப்படி இருக்கேன் தெரியுமா?
/யாரெல்லாம்எப்படி இருக்கணுண்நு கடவுள் விதித்திருக்கிரானோ?
அப்படிதானே இருக்க முடியும், இதைச் சொன்னால் இன்னும் வார்த்தைகள்
நீண்டு விடும். மனதில் நினைச்சிண்டு, ஆமாம் சொல்லு,சாப்பாடாச்சா?
சாப்பாடு,கூப்பாடு ‘எல்லாம் ஆச்சு
நிதாநமா பேசு. ஏதோ மனஸிலே நினைச்சிண்டு இப்படி படபடக்கறே.
உன் சுபாவம் இது இல்லே.
ஆமாம். சுபாவமெல்லாம் அததுவா மாறிப்போரது. என்ன பண்ணச் சொல்ரே.
ஸரி என்னவோ சொல்லணும்னெயே, அதைச் சொல்லு.
ஏன் இங்கே வந்தோம்னு இருக்கு. எப்படியெல்லாம் இருந்தோம்?
என்ன பண்ரதுன்னு தெறியலே. ஒங்கிட்டயானும் சொல்லித் தீர்ப்போம்.
ஸரிஸரி. நிதானிச்சுக்கோ. வயஸாச்சு. டென்ஷன் ஆகாதே!!!
என்ன பிரமாத டென்ஷன். இப்படி சொல்லி சொல்லியே டென்ஷனை
அதிகப்படுத்தரா.
என்ன பதில் சொல்ரது? நமக்கு மட்டும் இல்லையா, சொல்லி,சொல்லியே
அதிகப்படுத்தரா. ஸரியாகத்தான் சொல்ரா.
என்ன நடந்தாலும் உடம்புலே ஒரைக்காம ஒரு அஸமஞ்ஜமாக இருந்துட்டா விசாரமே இல்லை.
இரண்டுங் கெட்டானாக இளிச்சிண்டு நிக்கலாம்.
சமத்து எல்லாந் தெரிஞ்சவ என்ற பட்டத்தை வெச்சுண்டு என்ன பண்றது.
அகப்பட்டுண்டு முழிக்க வேண்டியதுதான்.
என்ன அதுக்குள்ளேயே மௌனிஆயிட்டே!
இல்லே, இல்லே, ஏதோ சத்தம் கேட்டாப்லெ இருந்தது. அதாங் கொஞ்சம்
பரவாயில்லே. நான் என்னவோ சொல்லாது விடப்போரதில்லே.
Entry filed under: கதைகள்.
17 பின்னூட்டங்கள் Add your own
ranjani135 க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 10:05 முப இல் மார்ச் 1, 2013
//என்ன நடந்தாலும் உடம்புலே ஒரைக்காம ஒரு அஸமஞ்ஜமாக இருந்துட்டா விசாரமே இல்லை.//
நல்லா எழுதியிருக்கீங்கோ. பாராட்டுக்கள்.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 5:34 முப இல் மார்ச் 2, 2013
அஸமஞ்ஜத்துக்கும், உள்ளுணர்வு இருக்கும். வகையாக சொல்லத் தெறியாத கேட்டகிரியாக இருக்கும்.இல்லையா? கதையின்
முதல் பாராட்டுக்கு நன்றி. அன்புடனும், ஆசிகளுடனும்
மாமி
3.
ranjani135 | 1:52 பிப இல் மார்ச் 1, 2013
இரண்டு தோழிகள் பேசுவது ரொம்பவும் யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு சிலருக்குத்தான் பட்ட வலிகளிலிருந்து பக்குவம் வருகிறது. பக்குவம் வந்துவிட்டால் நம் வாழ்க்கை இவ்வளவுதான் என்று வருவதை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.
பக்குவம் வராத பெண்ணாக லக்ஷ்மியை சித்தரித்தவிதம் நன்றாக இருக்கிறது.
பெண்கள் மட்டும்தான் இப்படி அல்லல் படுகிறார்கள் என்று தோன்றுகிறது. நல்லதோ கேட்டதோ நமக்கு யாரிடமாவது கொட்டிவிட வேண்டும்.
ஆனால் கொட்டினா வார முடியாதே!
சிறப்பான வார்த்தைகள் கட்டுரை முழுக்க!
//சமத்து, எல்லாம் தெரிஞ்சவ என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யறது?அகப்பட்டுக் கொண்டு முழிக்க வேண்டியதுதான்….//
இன்னும் நிறைய எழுதத் தோன்றுகிறது……
4.
chollukireen | 6:01 முப இல் மார்ச் 2, 2013
மொத்தத்தில் கொஞ்ஜம் ரஸிச்சிங்கோ. அதுதான் எனக்கு வேணும். இன்னும் லக்ஷ்மி சொல்ல ஆரம்பிக்கலேயே!!
இதுவே போதுமா, இன்னும் வேணுமா?சொல்லலியே!!!!!!!!!!!!!
இன்னும் கொஞ்ஜம் எழுதிட்டெ முடிக்கிறேன். அதையும் படித்து எழுதுங்கோ
அன்புடன்
5.
ranjani135 | 10:37 முப இல் மார்ச் 2, 2013
நிறையவே ரசிச்சேன்.
நிச்சயமாக இன்னும் நிறைய வேணும். இதுவும் தொடரா? ஜமாயுங்கள்!
கட்டாயம் படிக்கறேன்.
6.
chollukireen | 10:46 முப இல் மார்ச் 3, 2013
பெரிய தொடரில்லை. இன்னும் கொஞ்ஜம் எழுதணும். ஊக்கம் வேண்டுமாக இருந்தது. கிடைச்சாச்சே. அன்புடன்
7.
chitrasundar5 | 2:05 முப இல் மார்ச் 3, 2013
காமாக்ஷிமா,
ராஜம்மாவும்,லக்ஷ்மியும் எங்களுடன் உரையாடுவது போலவே உள்ளது. லக்ஷ்மியின் மனவேதனையையும், ராஜம்மாவின் சங்கடத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க.மேலும் லக்ஷ்மி என்னதான் சொல்லியிருப்பாங்க___ தொடர்ச்சி ஆவலைத் தூண்டுகிறது. முற்றிலும் வித்தியாசமான நடையில் கதை சூப்பர்.நன்றிமா.
8.
chollukireen | 10:50 முப இல் மார்ச் 3, 2013
அப்படியா? ரொம்பவே மகிழ்ச்சி. லக்ஷ்மி சொல்லாதே என்று சொன்னால்கூட விடமாட்டாள் போல இருக்கிரது. உன் ரிப்ளை ஊக்கமளிக்கிரது. நன்றி சித்ரா. அன்புடன்
9.
Asiya Omar | 2:57 முப இல் ஜூன் 19, 2013
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.
10.
chollukireen | 6:03 முப இல் ஜூன் 19, 2013
அன்புள்ள ஆசியாஉமர் ஆசிகள். என் கதையையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாய் எனக்கு மெயிலும் அனுப்பியது மிகவும் ஸந்தோஷமாக உள்ளது.
மிக்க நன்றி. வார்த்தைகளில்லை சொல்வதற்கு. மதிப்பளித்ததற்கு இன்னுமொருமுறை நன்றி. அன்புடன் காமாட்சி. நானும் உங்களின் வலைச்சரத்தைப் படித்து ரலிப்பதுண்டு.
11.
chollukireen | 12:29 பிப இல் மார்ச் 7, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
திங்கட் கிழமைகளில் மீள் பதிவாக 1913 இல் எழுதிய கதை ஒன்றைப் பதிவு செய்கிறேன். இரண்டு பதிவுகளாக எழுதியது. முதல்ப் பதிவை இன்றும் வியாழனன்று அடுத்தப் பதிவையும் பதிவிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயம் என்ன சொல்லுங்கள்.
12.
chollukireen | 12:15 பிப இல் மார்ச் 8, 2022
2013 வருஷம் எழுதியது இது. தவறுதலாக 1913 இல் எழுதியது என்று குறிப்பிட்டு விட்டேன்.தவருதலுக்கு வருந்துகிறேன். அன்புடன்
13.
ஸ்ரீராம் | 1:51 பிப இல் மார்ச் 7, 2022
உரையாடல் ரொம்ப சுவாரஸ்யம் அம்மா. நீண்ட நாள் பிரிந்திருந்த தோழிகள் பேசுவது யதார்த்தம். 2013 என்று சொல்வதற்கு பதிலாக பின்னூட்டத்தில் 1913 என்று தட்டச்சி இருக்கிறீர்கள் அம்மா!
14.
chollukireen | 12:29 பிப இல் மார்ச் 8, 2022
நீங்கள் சொல்லிய பிறகுதான் கவனித்தேன். எனக்கே பின்னூட்டமிட்டு சொல்லி விட்டேன்.தவறுதல் என்று. ரஸித்தற்கு மிகவும் நன்றி.இப்படியே நான் ஒன்று நினைக்க வோறொன்றை தட்டச்சு செய்து விடுகிறேன். அன்புடன்
15.
Geetha Sambasivam | 1:29 முப இல் மார்ச் 8, 2022
ரொம்பவே சுவாரசியமான உரையாடல்கள். அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ தெரியலை. பெண் வீட்டிலும் எல்லோருக்கும் ஸ்வாதீனமாக இருக்க முடியறதில்லை. அவரவர் இடமே அவரவருக்கு சௌகரியம். ஶ்ரீராம் சொன்ன தவறை நானும் கவனிச்சேன். திருத்திடுங்க அம்மா, நேரம் கிடைக்கையில். நமஸ்காரங்கள்.
16.
chollukireen | 12:32 பிப இல் மார்ச் 8, 2022
ஆசிகள்.நம் உடலில் தெம்பு இருக்கும் வரை நம் வீடு சுவாதீனம்.பிறகு என்னென்னவோதான். பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்