வடு மாங்கா,அல்லது மாவடு
மார்ச் 8, 2013 at 12:02 பிப 22 பின்னூட்டங்கள்
இவ்வளவு சிறிய வடு கிடைத்து மாவடு போட்டதாக ஞாபகமே
இல்லை.அவ்வளவு வருஷங்கள் கிடைக்காத இடத்தில்தான்
இருந்திருக்கிறேன்.
கடையில் பார்த்து உங்களுக்கு வேண்டுமா என்று மருமகள்
கேட்டவுடன் வாங்கி வரும்படி ஸந்தோஷமாகக் கூறினேன்.
அதுவும் மேலே கொடுத்த குட்டி மாங்காய்கள்.
திட்டமாக காம்பை விட்டு மிகுதியை எடுத்து விடவும்
இனி மா வடு தயாரிக்கலாம். அதாவது நன்ராக அலம்பித் துடைத்த
மாங்காய்களை ஒரு உலர்ந்த பாத்திரத்திலோ கண்ணாடி
கிண்ணத்திலோ போடவும்.
எவ்வளவென்று சொல்லவேயில்லையே நான். ஒரு கிலோ மாங்காயில்
ஒரு லிட்டர் தான் கிடைத்தது.
ஸரி, நீங்கள் ஒரு பெரிய டம்ளரினால் அளந்து 4 டம்ளர் மாவடுவை
எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் நல்ல உயர்தரமான உப்புப் பொடி வேண்டும்.
கால்கப் சின்ன சைஸ் கடுகு, விதை நீக்கிய 8 மிளகாய், வெய்யிலில்
நன்ராக காயவைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து மிக்ஸியிள் பொடிசெய்யவும்.
ஸாதாரணமாக எண்ணெய் விளக்கெண்ணை அரை டீஸ்பூன்
உபயோகிப்பதுண்டு. நான் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு
அரைத்த பொடியைக் கலந்து மாங்காயைக் கிளறி, உப்பு சேர்த்து
சற்று கொள்ளளவு பெரியதாக உள்ள பாட்டிலில் போட்டு குலுக்கி,
அழுத்தமான மூடியினால் காற்று புகாவண்ணம், மூடி வைத்தேன்.
தினமும் அடிக்கடி நன்றாகக் குலுக்கி விட்டேன்.
நிறைய ஜலம் விட்டுக் கொண்டு மாவடு சாப்பிட ரெடியாகி விட்டது.
புளிப்புள்ள குண்டு வடுவானால் காரம் அதிகப் படுத்தலாம்.
இது அதிக காரமில்லைமல் போட்ட வடுமாங்காய்.
எல்லா சாப்பாட்டுடனும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
ஈரமில்லாத கரண்டிகளை, அதுவும், மரக் கரண்டியானால் மிகவும்
நல்லது.
அதிகம் போடுவதானால் உப்பை சிறிது தண்ணீர் விட்டுக் காய்ச்சியும்
போடுவதுண்டு.
இது ஸிம்பிளான முறை.
பொடி ஸரியாக ஆகாவிட்டால், துளி உப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் ஜலம் விட்டு
அரைத்துக் கலக்கவும்.
வெளிச்சம் படும்படியான இடத்தில் வைத்து அடிக்கடி குலுக்கவும்.
தயிர் சாதமும், வடுமாங்காயும், வெயில் காலத்தில் சுவையோ,சுவை.
யாவருக்கும், மகளிர்தின நல் வாழ்த்துகள். வேண்டுமானவர்கள் எடுத்து
ருசியுங்கள்!!!!!!!
Entry filed under: ஊறுகாய் வகைகள்.
22 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:18 பிப இல் மார்ச் 8, 2013
படத்தில் வடுமாங்காய்களையும், நன்கு ஊறிய மாவடுகளையும் பார்த்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது.
இதைப்படிக்கும் எல்லோருமே மஸக்கைக்காரி போல அவதிப்படப்போவது நிச்சயம்.
நல்லவேளையாக நான் நேற்று தான் வடுமாங்காய்கள் வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி உப்புப்போட்டு, கடுகு தாளித்து மோர் சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன்.
இப்போ திருச்சியில் வடுமாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது/
பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 10:06 முப இல் மார்ச் 9, 2013
மும்பையில் இவ்வளவு அழகாக கிடைக்கிரது. சாப்பிடவும் கிடைத்து எழுதவும் கிடைத்ததில் பரம ஸந்தோஷம். உங்கள் பின்னூட்டம் பார்த்து அதைவிட ஸந்தோஷம். மசக்கைகாரிகளுக்கு கிடைக்காத ஊறுகாய்களே இல்லை. தங்கம் ஊறுகாயில் பாலக்காட்டு கார மாவடு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. நன்றி .அன்புடன்
3.
venkat | 1:29 பிப இல் மார்ச் 8, 2013
என் அத்தைப் பாட்டி மாவடு போட அதை ருசித்து உண்டது நினைவில்….. இப்போதெல்லாம் தில்லியில் இருப்பதால், நல்ல மாவடு பற்றி கனவு காணவேண்டியது தான்
4.
chollukireen | 10:14 முப இல் மார்ச் 9, 2013
உங்கள் பின்னூட்டம் எனக்கும்,டெல்லியை ஞாபகப்படுத்தியது. ஏதோ ஒரு புளிப்பு காய் பாத்தூட்டு வடுமாங்காய் என்று நினைத்து பார்த்து ஏமாந்ததுண்டு. அதற்கு அம்டகாய் என்று பேர் சொல்லுவார்கள். எனக்கும் கண்டேன் சீதையைதான் மாவடு. பாருங்க அத்தை பாட்டி நினைவு வரவைத்துவிட்டேன். உங்கள் வரவு மிகவும் ஸந்தோஷம்.எனக்குதான்.
5.
இளமதி | 1:49 பிப இல் மார்ச் 8, 2013
மாவடு… பார்க்கும்போதே வாயில் ஜலம் ஊறுகிறதே…
நமக்கு இங்கே கடையில் வாங்கினால்தான் உண்டு. அதுவும் எப்பவும் கிடைக்காது.
அருமையா செஞ்சு காட்டி இருக்கீங்கம்மா. இதை சாப்பிடும்போது என்னை நினைச்சு 2 மாவடு மேலதிகமாக போட்டு சாப்பிட்டுகோங்கமா சரியா…:)
6.
chollukireen | 10:20 முப இல் மார்ச் 9, 2013
இளமதி கிடைக்கும்போது வாங்கி வைத்துக்கொள். சும்மா குறிப்பு ஞாபகம் வைத்துக்கொள். போதுமானது. நிச்சயமாக உன் ஞாபகம்
மாவடு சாப்பிடும் போதெல்லாம் வரும். இது செய்யமுடியும் இல்லையா? அன்புடன்
7.
ranjani135 | 3:29 பிப இல் மார்ச் 8, 2013
இந்த ஊரில் இதைப்போல மாவடு கிடைப்பதில்லை. சென்னையிலிருக்கும் என் அக்கா, அல்லது சம்மந்தி தான் போட்டுக் கொடுக்கிறார்கள்.
ஊறிய மாவடு உடனே சாப்பிடத் தோன்றுகிறது.
8.
chollukireen | 10:23 முப இல் மார்ச் 9, 2013
காரியம் கம்மியா மாவடு கிடைச்சூடரது., சம்மந்தி வீட்டு ஊறுகாய்,அக்கா போட்ட ஊறுகாய் என்று இரட்டைபங்கு. ஜமாயுங்கோ!!!!!
9.
Prabu | 4:20 பிப இல் மார்ச் 8, 2013
மாமி,
ரெண்டு பாட்டில் USA பார்சல்! எனக்கொன்னு , சுபாஷுக்கொன்னு!
-பிரபு
10.
chollukireen | 10:28 முப இல் மார்ச் 9, 2013
அதுக்கென்ன இரண்டு பாட்டில்? நாலு பாட்டிலா அனுப்பிச்சூடறேன். வாங்கிக் கொள். இப்படியாவது தலையை காட்டறியே!!!!!!!ஸந்தோஷம். அன்புடன்
11.
mahalakshmivijayan | 4:15 முப இல் மார்ச் 9, 2013
அழகான போட்டோஸ்! பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது 🙂
12.
chollukireen | 10:29 முப இல் மார்ச் 9, 2013
ரொம்பவே நன்றி. ருசித்து சாப்பிடலாம் வா! அன்புடன்
13.
chitrasundar5 | 3:26 பிப இல் மார்ச் 9, 2013
காமாக்ஷிமா,
இதுதான் மாவடுவா!நான் சாப்பிட்டதில்லை.பார்க்கவே சூப்பராயிருக்கு. வடுமாங்காய் கிடைப்பதற்கு சான்ஸே இல்லை.கிடைக்க நேர்ந்தால் வெறுமனே சாப்பிட்டது போக மீதியை மாவடு செய்ய இந்தப் பக்கத்திற்கு வருவேன்.அன்புடன் சித்ரா.
14.
chollukireen | 6:01 முப இல் மார்ச் 10, 2013
உன் அம்மாவிற்குச் சொல். இது சீஸன்தானே. வாங்கி போட்டு வைப்பார்கள். கீழே விழுந்த மாங்காய் பிஞ்சுகள்
கூடாது. மரத்திலிருந்து பறித்தவைகளாக இருக்கவேண்டும்.
ருசியாந ஸிம்பிளான ஊறுகாய். எங்கள் ஊரில் கல்யாணங்களில் இந்த ஊறுகாய் பறிமார வேண்டுமென்று
சேகரித்து வைக்கும் வழக்கமும் இருந்தது. வேப்பிலைக்கட்டி,
வடுமாங்காய், அரிசி அப்பளாம் என எளிய பொருள்கள் பெருமையாகப் பேசப்படும். நன்றி சித்ரா
15.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 4:11 பிப இல் மார்ச் 9, 2013
வணக்கம்
மாவடு சமைப்பதுபற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பதிவை படிக்கும் போது நாவில் எச்சி ஊறுகிறது,,,,, அருமையான பதிவு அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
16.
chollukireen | 6:03 முப இல் மார்ச் 10, 2013
வாங்கோ. உங்களுக்கும்,ஊறுகாயில் பங்கு தருகிறேன். நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு. அன்புடன்
17.
adhiVenkat | 6:46 முப இல் மார்ச் 11, 2013
மாவடுவை பார்த்ததும் என் அம்மா ஞாபகம் வந்து விட்டது….பார்க்கவே நாவில் ஜலம் ஊறுகிறது….
18.
chollukireen | 8:31 முப இல் மார்ச் 11, 2013
அருமையாக அம்மா பண்ணுவார்கள். அதனால், ருசியும்,,நினைவுகளும் போட்டி போட்டுக்கொண்டு வருகிரதல்லவா? மும்பையில் கிடைப்பது டெல்லியிலில்லை. கரோல் பாகிலும் கிடைக்காதா?
கமென்டிற்கு நன்றி. அடிக்கடி வாம்மா.
19.
Mahi | 6:47 பிப இல் மார்ச் 11, 2013
நான் இதுவரை மாவடு சாப்பிட்டதே இல்லைம்மா! குட்டி குட்டியா அழகா இருக்கு. பாத்துட்டே இருக்கலாம் போல! 🙂 இதையெல்லாம் பார்த்து ரசிக்கும்படி படங்களுடன் பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிகள்!
20.
chollukireen | 6:13 முப இல் மார்ச் 12, 2013
கோயம்புத்தூர்,அருகில் பாலக்காடு வடுமாங்காய் மிகவும் பிரஸித்தமான ஒன்று. பாலக்காட்டு வடுமாங்காய் ஊறுகாய்
நல்ல காரஸாரமாக இருக்கும். தெற்கே மாயவரம்,தஞ்சை,
திருச்சி முதலான மாவட்டங்களில் வெய்யில் காலத்தில்
இரவு சாப்பாடு, ஜலம் கொட்டி வைத்த சாதத்தில் தயிர் சாதமும், தொட்டுக்கொள்ள மாவடுவும் பிரஸித்தமானது.
உங்கம்மாவிற்கு எழுது. வாங்கி வைப்பார்கள். ஊறுகாய் வருஷமானாலும் கெடாது. நன்றி மஹி, அன்புடன்
21.
chollukireen | 11:13 முப இல் மார்ச் 2, 2014
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
வடுமாங்காய் ஸீஸன் வருகிறதே. போன வருஷம் போட்டது இதுவரை இருந்தது. கடையில் விசாரியுங்கள்.வாங்கிப் போடுங்கள். அதற்காகவே மறுபதிவிட்டிருக்கிறேன்.அன்புடன்
22.
yarlpavanan | 3:19 பிப இல் மார்ச் 3, 2014
“வடுமாங்காய்” எனத் திரைப்பாடல் ஒன்று
கேள்விப்பட்டேன்…
அது பற்றிய
தங்கள் பதிவு சிறந்த பகிர்வாக
எனக்குத் தென்படுகிறது.