வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி
மார்ச் 12, 2013 at 11:37 முப 27 பின்னூட்டங்கள்
பாலக் பன்னீர், மட்டர்பன்னீர்,மாதிரி, இதுவும் காப்ஸிகம் சேர்த்த
பன்னீர்க்கறி. இதுவும் மிக்க ருசியுடனிருக்கும். ரொட்டி, சாதம்
முதலானவைகளுடன் தொட்டுக்கொள்ள மிகவும் உபயோகமாக
இருக்கும். அவஸரமாக காய்கள் ஒன்றுமில்லாவிட்டால் இதை
உடனே செய்து விட முடிகிரது. பன்னீர் உடம்பிற்கும் நல்ல ஊட்டம்
கொடுக்கும் பொருள். செய்வோமா? வேண்டிய ஸாமான்கள்.
வேண்டியவைகள்.
பன்னீர்——250 கிராம்
கேப்ஸிகம்—-பெரியதாக ஒன்று
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—ஒன்று.
வெங்காயம்—-பெரியதாக ஒன்று.
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு.
–இஞ்சி, கொத்தமல்லி இலை, வேண்டியருசியில் துளி மஸாலா
செய்முறை
பன்னீரைக் கையினால் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
கேப்ஸிகம்,வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்ரையும்
தனித்தனியே சிறியவைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியிலோ, நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெய்
விட்டுக் காயவைத்து முதலில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
காப்ஸிகம்,மிளகாயையும் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து
வதக்கவும்.உப்பு,சேர்த்து சுருள வதக்கி, உதிர்த்த பன்னீரைச் சேர்த்து
அடிக்கடி கிளறிக் கொடுக்கவும். கொத்தமல்லி தூவவும்.
முதலிற் சற்று சேர்ந்தாற்போல யிருந்தாலும் நிதான தீயில்,வதக்க
வதக்க ஸரியாகும்.
ஜீரா ,தனியாப் பொடியோ, அல்லது பிடித்த அதாவது மஸாலாப்
பொடியோ ஒரு துளி சேர்க்கலாம்.
நல்ல ருசியான கறி இது.
எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துச் சாப்பிடலாம்.
Entry filed under: கறி வகைகள்.
27 பின்னூட்டங்கள் Add your own
நெல்லைத்தமிழன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 11:41 முப இல் மார்ச் 12, 2013
படங்களும் செய்முறை விளக்கங்களும் அழகோ அழகு. ருசியோ ருசிதான். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 11:46 முப இல் மார்ச் 12, 2013
எப்படி இவ்வளவு சுருக்க அதிலும் முன்னோட்டமான பின்னூட்டம். ரொம்பவே தேங்ஸ். பிரஸுரமாச்சா,இல்லையா
பாக்கரதுக்குள்ளே பின்னூட்டம். நல்ல வேகம். நன்றிகளு ஆசிகளும். அன்புடன்
3.
ranjani135 | 1:54 பிப இல் மார்ச் 12, 2013
தினமும் செய்யும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்று பெரிய குழப்பம். நாளை ரொம்ப யோசிக்காமல் நீங்கள் சொல்லியிருக்கும், வெஜிடபிள் பனீர் கறியை செய்துவிடுகிறேன்.
நீங்களும் வந்துவிடுங்கள், காலை சிற்றுண்டிக்கு!
4.
chollukireen | 2:05 பிப இல் மார்ச் 12, 2013
டிக்கெட் புக் செய்துவிட்டேன். காரம் கொஞ்சம் ஜாஸ்தி போடுங்கோ. இல்லாவிட்டால் தீர்ந்து விடும். கட்டாயம் மீதி வைக்கவும். அன்புடன்
5.
MahiArun | 2:20 பிப இல் மார்ச் 12, 2013
Simple n delicious curry, thanks for the recipe-ma!
6.
chollukireen | 11:26 முப இல் மார்ச் 13, 2013
உன் பின்னூட்டம் பார்த்து ஸந்தோஷமா இருந்தது. மஹிக்கு அவ்வளவாக பன்னீர் பிடிக்காது என்பதும் ஞாபகத்திற்கு வந்தது. சுலபமாக செய்ய முடிகிரது. அன்புடன்
7.
MahiArun | 8:03 பிப இல் மார்ச் 13, 2013
Paneer pidikkaathunnu illamma..ippa saappida pazhakitten! 😉 😛
8.
chollukireen | 2:28 பிப இல் மார்ச் 14, 2013
மிகவும் ஸந்தோஷமாக இருக்கு. நான் கூட அப்பிடிதான். பால்
வாஸனையே பிடிக்காது. பன்னீரும், வதக்காவட்டால் பிடிக்காது. என்னுடைய குறிப்புகளிலும் பன்னீர் வதங்கி விடுகிறது. அன்புடன்
9.
angelin | 2:40 பிப இல் மார்ச் 12, 2013
சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ் எங்க வீட்டில் மகளுக்கு தினமும் சப்பாத்தி அதனால் நான் விதவிதமா சைட் டிஷ் செய்வேன் ….நாளை செய்து விடுகிறேன் ..வண்ண நிறங்களோடு அழகாஅருமையா இருக்கு
10.
chollukireen | 11:29 முப இல் மார்ச் 13, 2013
இதையும் உன் ஸைட் டிஷ்ஷுடன் சேர்த்துவிடு.காப்ஸிகம்,டொமேடோ, பன்னீர் கலர் தானாகவே அமைந்து விடும். அஞ்சு உன் பதில் மிகவும் திருப்தியாக இருக்கு. அன்புடன்
11.
chitrasundar5 | 11:41 பிப இல் மார்ச் 12, 2013
காமாக்ஷிமா,
கலர்ஃபுல்லான பன்னீர்க்கறியைப் பார்த்ததுமே செய்யத் தூண்டுகிறது.இந்த வாரமே கலர் மிளகாய்கள் வாங்கி வந்து செய்துவிடுகிறேன்.என்ன ஒன்று, நான் மட்டுமே சாப்பிட வேண்டும்.
“காரம் கொஞ்சம் ஜாஸ்தி போடுங்கோ.இல்லாவிட்டால் தீர்ந்து விடும்”____ கேப்ஸிகம்,பன்னீர் இரண்டுமே வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதனால் திட்டமாகக் காரத்தைப்போட்டு எஞ்ஜாய் பண்ணப்போறேன். அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 11:32 முப இல் மார்ச் 13, 2013
நீ இன்னும், வயலெட், மஞ்சள் என கலர்கலராக கேப்ஸிகம் சேர்ப்பாய். இது தானாகவே அமைந்த கலர். அப்பா —ரொம்பவே ஸந்தோஷமாக இருக்கிரது உன் பதில். அன்புடன்
13.
mahalakshmivijayan | 8:35 முப இல் மார்ச் 13, 2013
புதிய ரெசிபி! செய்து பார்க்கிறேன் அம்மா! போட்டோஸ் சூப்பர் எப்பவும் போல 🙂
14.
chollukireen | 11:33 முப இல் மார்ச் 13, 2013
நல்லது. செய்து ருசித்து விட்டு எழுது. அன்புடன்
15.
திண்டுக்கல் தனபாலன் | 2:28 பிப இல் மார்ச் 13, 2013
இதுவரை செய்ததில்லை… நன்றி…
16.
chollukireen | 2:30 பிப இல் மார்ச் 14, 2013
முடிந்தால் முயற்சி செய்யும்படி சொல்லுங்கள். நன்றி. அன்புடன்
17.
இளமதி | 8:41 முப இல் மார்ச் 14, 2013
அம்மா… நான் இம்முறை ரொம்பவே லேட்டாகிட்டேன் இங்கின வாறதுக்கு… மன்னிச்சுக்கோங்கோ…:)
அருமையான சைட் டிஷ்! எனக்கு பனீர் ரொம்ம்ம்பப் பிடிக்கும். ஆனா என்ன இங்கே நாம இருக்கிற இடத்தில வாங்கமுடியாது. சோயா பனீர் கிடைக்கிறது. அதில் செஞ்சு பார்கலாமான்னு யோசிக்கிறேன்.
பார்க்கலாம் வாங்கி செஞ்சுட்டு சொல்லுகிறேன் உங்களிடம்… 🙂
நல்ல குறிப்பு. ரொம்ப நன்றிம்மா!
18.
chollukireen | 10:26 முப இல் மார்ச் 14, 2013
இளமதி, நீ எப்போது வந்தாலும் ஸந்தோஷமே.,பாலை நன்றாகக் காய்ச்சி அதில் எலுமிச்சை
ரஸம் பிழிந்து கொதிக்கவிட்டு பன்னீர் தயாரிக்கலாம். ஸோயா பன்னீர் அதன் ருசி
வேறு.
மிகவும் ஸுலபமானது. அன்புடன்
19.
padma | 7:53 முப இல் மார்ச் 15, 2013
amma, sila samayam panneer kasakkiradhu. eppadi nalla suvayaana paneer endru kandupidippadhu? indha maadhiri elimayaana samaikka vasadhiyaana kaaram kuraivaana veg recipes sollungo. engalai madhiri velaikku pogum pengalukku vasadhiyaaga irukkum. nandri. padma.
20.
chollukireen | 12:16 பிப இல் மார்ச் 15, 2013
பேக்கெட்டுகளில் ஸீல் பண்ணி வருவதில், தேதிகளிருக்கும். நாட் பட்டது
புளிப்பாகி விடும்.
விற்கமாட்டார்கள். கூடுமாள வரை வாங்கின உடனே உபயோகிக்கவும். ஃபிரிஜ்ஜில்
வைத்தால் கூட சீக்கிரம், உபயோகப் படுத்தவும். உன் வருகை மிக்க மகிழ்ச்சியைக்
கொடுக்கிறது. பத்மா மிகவும் நன்றி. தொடர்ந்து வரவும். பார்க்கலாம். அன்புடன்
21.
vijisathya | 11:55 முப இல் மார்ச் 16, 2013
வணக்கம். நிங்க எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது வலைபக்கம் வந்து.உங்க வலைபூவில் நல்ல கலர்புல் ஹெல்தி ரெசிப்பியை பார்த்ததும் ஒரே சந்தோஷமா இருக்கு. என் கனவருக்கும் என் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கு கேப்சிகம் என்றால் ரொம்ப பிடிக்கும் உடனே செய்து பார்க்கிறேன். அதுவும் உங்க ரெசிப்பி செய்ததும் படத்துடன் உங்களுக்கு அனுப்புகிறேன். நன்றி
22.
chollukireen | 12:00 பிப இல் மார்ச் 17, 2013
உன் பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு..எனக்கு ரெஸிபி செய்து படமெடுத்து, அனுப்புவதாக எழுதியுள்ளாய். நானும் எப்போ வரும் என்று கார்த்துக்கொண்டிருப்பேன். அன்புக்கு அன்புடன்
23.
adhi venkat | 1:56 பிப இல் ஏப்ரல் 4, 2013
அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.
24.
chollukireen | 6:31 முப இல் ஏப்ரல் 5, 2013
ஆதி,உன்னுடைய வரவிற்கு,ஸந்தோஷம். அடிக்கடி வரவும். நன்றி. அன்புடன்
25.
chollukireen | 11:22 முப இல் ஜூன் 13, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
மிகவும் எளிதாகக் செய்யக் கூடிய இதைச் செய்து பாருங்கள். வெஜிடபில் பன்னீர்க் கறி. இதுவும் மீள் பதிவுதான். அன்புடன்
26.
நெல்லைத்தமிழன் | 11:03 முப இல் ஜூன் 20, 2022
ரொம்ப எளிய செய்முறை. நன்றாக இருக்கிறது
27.
chollukireen | 11:25 முப இல் ஜூன் 20, 2022
மிக்க நன்றி. அன்புடன்