கதம்பக் கறி.
மார்ச் 18, 2013 at 12:28 பிப 14 பின்னூட்டங்கள்
பல வித காய்கறிகளைச் சேர்த்துச் செய்வதால் இதைக் கதம்பக்
கறி என்று நான் சொல்லுகிறேன். மிக்ஸ் வெஜிடபில்ஸ்.
உருளைக் கிழங்குடன், பல காய்கள் சேர்க்கலாம்.
சுலபமாகச் செய்து விடலாம். இருப்பதைப் போட்டு செய்யலாம்
வாருங்கள்.
வேண்டியவைகள்.
உருளைக் கிழங்கு—–4 திட்டமான சைஸ்
பீன்ஸ்—-ஒரு பிடித்தபடி அளவு
கேரட்—1
காலிஃப்ளவர்—நறுக்கிய பூக்கள்—–2கப் அளவு.
எண்ணெய்—–4 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு
கடுகு—அரை டீஸ்பூன்
காரத்திற்கு—-உங்கள் விருப்பம் போல, கறிப்பொடி,அல்லது,மஸாலாப் பொடி.
மிளகாய்,ஜீரகப்பொடி. எதுவோ வேண்டிய அளவு.
இஞ்சி தட்டியது–சிறிது.
தோல் சீவவேண்டியவைகளைத் தோல் சீவியும், ஆய்ந்து நறுக்க
வேண்டியவைகளை ஆய்ந்தும், எல்லாவற்றையும் சிறியதாக நறுக்கித்
தண்ணீரில் அலசி வடிக்கட்டும் பாத்திரத்தில் போட்டு ஒட்ட ஜலத்தை
வடிக்கட்டவும்.
காய்களை மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு, ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெயை அதில் விட்டுக் கலந்து ஏழு நிமிஷங்கள் ஹை பவரில்
மைக்ரோவேவ் செய்து எடுக்கவும்.
சற்றுக் கனமான வாணலியில் மிகுதி எண்ணெயை விட்டுக் காய்ந்ததும்
கடுகை வெடிக்க விட்டு, வெந்த காய்களைச் சேர்க்கவும்.தட்டின இஞ்சி
உப்பு,காரமும் சேர்க்கவும். சட்டுவத்தினால் அடிக்கடி கிளறிவிட்டு
வதக்கவும்.
தீ ஸிம்மிலிருந்தால் போதும். சற்று உலர்ந்த மாதிரி பதத்தில் இறக்கி
வைத்து உபயோகிக்கவும்.
மைக்ரோவேவ் உபயோகிக்காவிட்டால், நிதான தீயில் சிறிது தண்ணீரில்
காய்களைப் போட்டு மூடி கிளறிவிட்டு முக்கால் பதத்தில் வேக வைத்து
எண்ணெயில் வதக்கவும். காயில் தண்ணீர் வடிக்கட்டும்படி இருக்கக் கூடாது.
ஸிம்பிளான, ருசியான, கறிதான்.
பூண்டு,வெங்காயம் அவரவர்கள் இஷ்டம்.
ருசித்து, ரஸிக்கவும்.
Entry filed under: கறி வகைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:35 பிப இல் மார்ச் 18, 2013
செய்முறையைப்படித்தாலே, படங்களைப்பார்த்தாலே, கதம்பக்க்றி ருசியாக இருக்கும் போலத்தெரிகிறது.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நமஸ்காரங்கள், அன்புடன்,
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 1:20 பிப இல் மார்ச் 18, 2013
முதல் வரவு,பாராட்டுகள், இதைவிட வேறு என்ன வேண்டும். 81 வயதில் இப்படி ஒரு ப்ரகிருதி. நன்றியும்
மகிழ்வும். ருசிக்க டைம் எடுக்கும்.. ஆசிகளும் ,அன்பும்
3.
ranjani135 | 1:00 பிப இல் மார்ச் 18, 2013
சிலசமயங்களில் என்ன செய்வது என்றே தெரியாது. நீங்கள் சொல்வதுபோல செய்தால் எல்லாவற்றின் ருசியும் சேர்ந்து நன்றாகத்தான் இருக்கும்.
சப்பாத்திக்கு இதைப் போல செய்வேன். ரொம்பவும் உதிர் உதிராக இருந்தால் கொஞ்சம் கடலை மாவை நீர்க்க கரைத்து ஊற்றி கொஞ்சம் தளரப் பண்ணிவிடுவேன்.
எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட் தான்!
4.
chollukireen | 1:25 பிப இல் மார்ச் 18, 2013
ஆமாம். சிலவற்றுக்கு குறிப்பிட்ட ரிஸிபி கிடையாது. நமக்கே வியப்பளிக்கும் அளவுக்கு ருசி கொடுக்கும்.
ரொட்டி வகைகளுக்கு சற்று தளரவே எல்லாரும் விரும்புவார்கள். உருளைக்கிழங்கு சேர்த்தால் இளம் வயதினருக்கு குஷி. அட்ஜஸ்ட்மென்ட் இல்லாத விஷயங்களே சோபிக்காது. நன்றி அன்புடன்
5.
இளமதி | 1:07 பிப இல் மார்ச் 18, 2013
அம்மா… அம்மோவ்வ்வ் … 🙂 இதே இதேதான்மா நானும் சாதாரணமாகச் செய்வது ஒரு எழுத்து முன்னைபின்னை இல்லாமல்….
என் பிள்ளைங்களுக்கு வெங்காயம் சேர்த்தாப் பிடிக்கும். எனக்கு நல்ல்ல காரப்பொடியுடன் உடன் துருவிய தேங்காய்ப்பூ சிறிதளவு இறக்கும்போது சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிவிட்டு அப்படியே சாப்பிடப்பிடிக்கும்.
அருமையான சைட் டிஷ்மா இது.
சூப்பர். பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா… 🙂
6.
chollukireen | 1:28 பிப இல் மார்ச் 18, 2013
மேற்கொண்டு சுவையளிக்க நல்ல டிப்ஸும் கொடுத்திருக்கிராய். பலருக்கு உதவும். பாராட்டுகள் கொடுத்து வருவதற்கு மிக்க நன்றி. அன்புடன்
7.
திண்டுக்கல் தனபாலன் | 3:04 பிப இல் மார்ச் 18, 2013
எல்லாம் போட்டு ஒரு கலக்கு கலக்கிட வேண்டியது தான்…
நன்றி…
8.
chollukireen | 9:53 முப இல் மார்ச் 19, 2013
ஆமாம், அப்போதுதான் ருசியாக இருக்கும். கலக்கலான கமென்டிற்கு நன்றி. அனபுடன்
9.
Mahi | 4:20 பிப இல் மார்ச் 18, 2013
சிம்பிளான கலர்ஃபுல் கறி! இது சப்பாத்தியை விட சாத வகைகளுக்கு நல்லா மேட்ச் ஆகும் என நினைக்கிறேன்! 😛
கேரட்-பீன்ஸ்-முட்டைக்கோஸ்-பட்டாணி இவையெல்லாம் சேர்த்து செய்திருக்கேன். உருளை-காலிஃப்ளவர் சேர்த்து செய்திருக்கேன், ஆனா இப்படி கதம்பமா எல்லாவற்றையும் சேர்த்து செய்ததில்லை. ட்ரை பண்ணி பார்க்கிறேன்மா! பகிர்வுக்கு நன்றி!
10.
chollukireen | 9:56 முப இல் மார்ச் 19, 2013
ஸரியாகச் சொன்னாய்,மஹி. சாப்பாட்டுடன், மிகவும் ஒத்துப் போகிறது. அன்புடன்
11.
chitrasundar5 | 11:12 பிப இல் மார்ச் 19, 2013
காமாக்ஷிமா,
கதம்ப கறி பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு.நானும்கூட கேரட்&பீன்ஸ்&உருளை சேர்த்து காங்கிரஸ் பொரியல்னு ஒன்னு செய்வேன்.அடுத்த தடவ செய்யும்போது காலிஃப்ளவர் இருந்தால் அதையும் போட்டு கதம்ப கறி செய்திட வேண்டியதுதான். அன்புடன் சித்ரா.
12.
chollukireen | 9:54 முப இல் மார்ச் 21, 2013
காங்ரஸ் பொரியல். பேர் அழகாக இருக்கிரது. இரண்டு தினுஸான கதம்பம். மருவு,தாழம்பூப் போல இரண்டு தினுஸு.
எது வேண்டுமோ செய்து கொள்ளலாம்.
13.
rajalakshmiparamasivam.blogspot.com | 7:16 முப இல் மார்ச் 23, 2013
அட , இந்த மிக்ஸ்ட் காய்கறி கறி பார்க்கவே சுவையூட்டுகிறதே.. சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்குமென்றே எண்ணுகிறேன். . இப்பொழுது தான் டாக்டர் உ.கிழங்கிற்கு தடா பொட்டு விட்டார்கள் . அதை மட்டும் விட்டு விட்டு செய்து பார்க்கிறேன்.
நன்றி பகிர்விற்கு.
14.
chollukireen | 11:26 முப இல் மார்ச் 25, 2013
எல்லா காய்களும் சேர்வதால்,ருசியும்,பார்க்கவும் நன்றாக இருக்கிரது. கார ஸாரமாக செய்தால் நன்றாகவே இருக்கும். உங்கள் வரவுக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள். ஸந்தோஷம்.அன்புடன்