பேபி பொடேடோ வதக்கல்.
மார்ச் 25, 2013 at 12:44 பிப 21 பின்னூட்டங்கள்
இன்று இந்த வதக்கல் செய்தேன். ஸரி நம் ப்ளாகைப் பார்க்கிறவர்களும்
ருசிக்கட்டுமே என்று தோன்றியது.4 நாட்கள் முன்பு செய்தது, இது.
வேண்டியவைகள் ஒன்றும் பிரமாதமில்லை. வேண்டிய அளவு
குட்டி உருளைக் கிழங்கு
எண்ணெய் தாராளமாகவே விடுங்கள்.
தாளித்துக் கொட்ட —சிறிது கடுகு.
மஞ்சள்பொடி—சிறிது
மிளகாய்ப் பொடி—காரம் வேண்டிய அளவு.
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—சிறிது
ஒரு டீஸ்பூன்—கடலைமாவு
கறிவேப்பிலை—-சிறிது. 2 இதழ் உரித்த பூண்டு
செய்முறை–
உருளைக்கிழங்கை அலம்பி ,அது அமிழத் தண்ணீர் வைத்து
குக்கரிலோ,அல்லது பாத்திரத்திலோ வேக வைத்து வடிக்கட்டவும்.
முக்கால் வேக்காடு போதும். ஆறினவுடன் தோலை உரிக்கவும்.
உரித்த கிழங்குடன்,உப்பு, மிளகாய், மஞ்சள், பெருங்காயம் சீரகப்
பொடிகளுடன் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
சற்று ஊறிய பிறகு, அடி கனமான வாணலியைச் சூடாக்கி
எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க விடவும்.
பிசறி வைத்துள்ள பேபி பொடேடோவை, அதான் குட்டி உருளைக்
கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.
ஸிம்மில் எரிவாயுவை வைக்கவும்.
நிதானமாகக் கிளறிவிட்டு வதக்கவும்.
ம னதுக்கு போதும் என்று தோன்றும் வரை வதக்கலாம்.
இஞ்சி சேர்த்து வதக்கலாம்.
பூண்டு சேர்த்து வதக்கலாம்.
வெங்காயம் சேர்த்து வதக்கலாம்.
மஸாலா, பெருஞ்சீரகம், எது வேண்டுமானாலும் சேருங்கள்.
ஏதாவதொன்று சேர்த்து வதக்கி கடைசியில் கடலை மாவைப் பரவலாகத்
தூவிப் பிரட்டி வதக்கி இரக்கவும். சிறிது எண்ணெய் அதிகமிருந்தாலும்
மாவு அதை ஸரியாக்கிவிடும். கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.
வித்தியாஸமான வாஸனையில் பேபி பொடேடோ ரெடி.
இன்று ரெடியான என்னையும் பார் என்கிறது இன்னொரு வதக்கல்.
Entry filed under: கறி வகைகள், Uncategorized.
21 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 1:26 பிப இல் மார்ச் 25, 2013
படங்களும், பகிர்வும் தாங்கள் சொல்லும் செய்முறையும் அசத்தலாக ஜோராக பார்க்கவே திவ்யமாக உள்ளது. பாராட்டுக்க்ள்.
என் புதிய பதிவுக்கு இன்னும் நீங்க வரவில்லை போலிருக்கு.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/03/3.html:
முடிந்தபோது வந்து எட்டிப்பாருங்கோ.
நமஸ்காரங்களுடன்
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 11:15 முப இல் மார்ச் 26, 2013
lதிவ்யமாக இருக்கிரது என்ற. வார்த்தை எங்களம்மா அடிக்கடி உபயோகிக்கும் பதம். ஸந்தோஷத்திலும் வரும், சில ஸமயம் பார்க்க திவ்யமாத்தான் இருக்கு, அதற்கப்புரம் என்ன சொல்ல நினைப்பார்களோ என்ற
ஐயம் எழுந்து விடும். நீங்கள் மனப்பூர்வமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். எனக்கு என் அம்மாவின் ஞாபகமும் வந்தது. உங்க பதிவை எட்டிப்பார்த்து வந்து விட முடியாது. படிக்கணும், அந்த
பின்னூட்டங்களையும் படிக்காமல் வர முடியாது.
வந்த வேலை மறந்து மணியைப்பார்த்து
எழுந்திருக்கும்படி ஆகிவிடுகிரது. அன்புடன்
3.
Venkat | 2:38 பிப இல் மார்ச் 25, 2013
பார்க்கவே அசத்தலா இருக்கு!
செஞ்சுட சொல்லிட வேண்டியது தான்! 🙂
4.
chollukireen | 11:18 முப இல் மார்ச் 26, 2013
இந்த பதில் ரொம்ப பிடித்திருக்கு. ருசியுங்கள். நான் ரெகமண்ட் செய்கிறேன். அன்புடன்
5.
திண்டுக்கல் தனபாலன் | 4:01 பிப இல் மார்ச் 25, 2013
அப்படியே சாப்பிடலாம் போலே…
செய்முறைக்கு நன்றி…
6.
chollukireen | 11:19 முப இல் மார்ச் 26, 2013
ஆமாம். கூட ஒன்றும் வேண்டாம். அன்புடன்
7.
chitrasundar5 | 4:17 பிப இல் மார்ச் 25, 2013
காமாக்ஷிமா,
ரெண்டாவது படம் பொரித்த கறிவேப்பிலையுடன், எண்ணெய் வழிந்துகொண்டு,சுண்டி இழுக்குது.எத்தனை முறை படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை.பொடேடோ வதக்கல் மனக் கண்ணிலேயே நின்றுவிட்டது.தெளிவான நடையுடன் வதக்கல் சூப்பர்.அன்புடன் சித்ரா.
நானும் பேபி பொடேடோ வாங்குவதுடன் சரி.முழுசா போட்டா இவர்கள் சாப்பிடுவதில்லை.இத்தனைக்கும் ஃபோர்க்கால் எல்லா இடங்களிலும் குத்திவிட்டுத்தான் குருமா,பொரியல் செய்வேன்.அதனால சாதாரண முறையிலேயே செய்துவிடுவேன்.
8.
chollukireen | 11:29 முப இல் மார்ச் 26, 2013
கறிவேப்பிலையை முதல்லே பொரித்து எடுத்துக்கொண்டு, கடைசியில் போட்டோவுக்காக
கொஞ்சம் ரிஸர்வ் பண்ணி போட்டேன். அதான் பளபளாவோ என்னவோ? பாரு காமாக்ஷிம்மா கூட
கொஞ்சம் தெரிஞ்சிண்டு இருக்கேன். இங்கே இப்படி செய்தால்தான் பிடிக்கும். ஸண்டே ஸ்பெஷல்.
சுடச்சுட நன்றாக இருக்கும். யார் யாருக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வதுதான் ஸரி. நல்ல அருமையான பதில். நன்றி, அன்புடன்
9.
rajalakshmiparamasivam | 5:46 பிப இல் மார்ச் 25, 2013
உங்களுடைய பேபி பொடேடோ வதக்கல் என்னை சாப்பிடத்தூண்டுகிறது . எண்ணெய் மினுமினுக்க ஒவ்வொரு உ. கிழங்கும் என்னை சாப்பிடு . என்று சொல்வது போல் உள்ளது மாமி.இந்த வாரம் செய்து விட
வேண்டியது தான்.
உங்களுக்கு நேரம் இருந்தால் என் தளத்திற்கு
வாங்களேன். வந்தால் மகிழ்வேன்.
10.
chollukireen | 11:19 முப இல் மார்ச் 27, 2013
உங்களுக்கு எழுதின பதில் என்னவாயிற்று? உங்கள் தளத்திற்கும் போய் வந்தேன். லிங்க் இருந்தால் சட்டென்று வந்துவிட முடியும். படிச்சுடரேன்.
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நாமெல்லாம் அடிக்கடி
செய்வதுதான். இல்லையா? அன்புடன்
11.
ranjani135 | 7:30 முப இல் மார்ச் 26, 2013
பேபி பொடேடோ வதக்கல் அசத்தல் செய்முறை. நான் எதுவுமே சேர்க்காமல் (வெங்காயம், பூண்டு), உப்பு, காரபொடி, பெருங்காயம், மஞ்சள் பொடி மட்டும் சேர்த்து வதக்குவேன்
பொடேடோவில் எது செய்தாலும், எப்படி செய்தாலும் நன்றாக இருக்கும், இல்லையா?
12.
chollukireen | 11:29 முப இல் மார்ச் 27, 2013
போட்ட பதில் காணவில்லை. வெங்காயம், பூண்டெல்லாம் இப்போது மாதிரி முன்பு உபயோகித்தது இல்லை. உப்பும்,காரமும் போட்டு வதக்கினாலே ருசிதான். பல அவதாரம், அதில் இது ஒன்று. அன்புடன்
13.
இளமதி | 9:49 முப இல் மார்ச் 26, 2013
அம்மா… வாயூறவைக்கும் பொடேடோ வதக்கல்…
உடனேயே செய்யத்தூண்டும் அழகான படத்துடன் அசத்தல் சைட்டிஷ்!
இஞ்சி பூண்டுக்குப் பதில் மிளகு சீரகப்பொடி மட்டும் சேர்ப்பேன்.
தாளிக்கும்போது 3 பச்சைமிளகாய் நடிவில் கெத்திட்டு சேர்த்து வதக்கிவிடுவேன். வேறு காரப்பொடி இல்லாமல் அதன் காரத்துடனே ஸ்..பச்சைமிளகாய் வாசனையும் சேர அருமையாக இருக்கும்.
நான் உங்கள் முறையில் செய்ததில்லை. செய்து பார்த்துவிடுகிறேன்.
நல்ல குறிப்பு. மிக்க நன்றி அம்மா!…
14.
chollukireen | 12:08 பிப இல் மார்ச் 26, 2013
இளமதி, உன்னுடைய வர்ணனை அபாரம். நீ கொடுத்திருக்கும் முறையும் நன்றாக இருக்கிரது. பச்சைமிளகாய்,மிளகு சீரகம் இந்த காம்பினேஷனும் ருசியாகத்தானிருக்கும். இந்த உருளைக் கிழங்கு இருக்கிரதே
அது பல அவதாரங்கள் எடுக்கும். இளம் உருளைக்கிழங்கு
தோல் கூட உரிக்காமல் இரண்டாக வெட்டி அப்படியே
உப்பு போட்டு வதக்குபவர்களும் உண்டு. ருசியான உன் குறிப்புக்கும் நன்றி. விருப்பப் பட்டதை செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்கிரது. ஜமாய்ப்போம். அன்புடன்
15.
JAYANTHI RAMANI | 11:39 முப இல் மார்ச் 26, 2013
பேபி பொட்டேடோ சூப்பர்
நீங்களே ஒரு பேபிதான். ஆமாம் வயசானவாள்ளாம் குழந்தை தானே. என்னோட ப்ளாக்ல உங்க பின்னூட்டத்துக்கு பதில் கொடுத்திருக்கேன். முடிந்த போது வாங்கோ.
16.
chollukireen | 12:47 பிப இல் மார்ச் 26, 2013
ஜெயந்தி ரொம்ப ஸந்தோஷம். உன்னுடைய ப்ளாகிற்கு அப்போதே வந்து பார்த்து ஸந்தோஷப்பட்டேன். முடிந்த போது என்றில்லை.
அடிக்கடி வர ஆசைதான். லிங்க் இருந்தால் வந்துண்டே இருக்கலாம். அட்ரஸ் கொடுத்து உள் நுழைய தாமதம். அவ்வளவுதான்
அந்த குங்குமம் தோழிக்கும் போய் என்ன ஏது என்று பார்த்துவிட்டு வந்தேன். என்ன விவரம். ஸரியா தெரியலே! முடிந்தால் எழுது.
எல்லாம் தெரிந்து கொள்ள ஆசை. அன்புடன்
17.
visalatchi @ viji | 6:37 முப இல் ஏப்ரல் 1, 2013
நல்லது மாமி நான் செய்து பார்கிறேன். நீங்கள் எனக்கு கல்யாணத்தில் வைக்கும் கார குழம்பு செய்வது பற்றி குறுங்கள்
18.
chollukireen | 9:27 முப இல் ஏப்ரல் 3, 2013
மிகவும் ஸந்தோஷம். கார குழம்பு பதிவு போடுகிறேன். வரவுக்கு மிகவும் நன்றிம்மா. அன்புடன்
19.
MahiArun | 8:31 பிப இல் ஏப்ரல் 3, 2013
Aaha..looks super delicious Ma!
20.
chollukireen | 6:33 முப இல் ஏப்ரல் 5, 2013
வா மஹி, அழகாயிருக்கு இல்லையா? நன்றி. அன்புடன்
21.
chollukireen | 12:32 பிப இல் திசெம்பர் 18, 2015
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இன்று இவ்விடம் இதே கறிசெய்தது. அதிகம் நான் சமையல் பக்கம் போவதில்லை. என்னையாவது திரும்பிப்போடு என்று குட்டி உருளைக் கேட்டது.டிஸம்பர் ஆரம்பித்து எதுவும் பதிவிடவே இல்லை. படியுங்கள் நீங்கள் ருசிக்காதது எதுவுமில்லை. என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். பதிலும் கட்டாயம் முதலில் விட்டுப்போனவைகளுக்கும் சேர்த்து எழுதுகிறேன். காமாட்சிம்மா அன்புடனாக.