மசூர்டால் பகோடா.
ஏப்ரல் 2, 2013 at 8:10 முப 18 பின்னூட்டங்கள்
இந்தடால் பார்ப்பதற்கு அழகாயிருப்பது போலவே
பகோடாவும் அழகாக இருக்கிறது.
அஸ்ஸாம் சமையல் வகையில் நம் வடைபோல முக்கிய
இடத்தை இது வகிக்கிறது.
செய்வதும் சுலபம். அதிக நேரமும் தேவையில்லை.
வேண்டியவைகள்.
மசூர்டால்——அரைகப்
முழுதாக வேக வைத்த உருளைக்கிழங்கு—ஒன்று.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
ருசிக்கு—உப்பு
சட்னிக்கு—ஒரு வெங்காயம்,ஒரு காரம் உள்ள பச்சைமிளகாய்
ஒரு பிடி புதினா, உப்பு
ஒரு தக்காளிப்பழம்.
வதக்க எண்ணெய்.
வாணலியில் 2 ஸ்பூன், எண்ணெயைக்
காயவைத்து,வெங்காயம், மிளகாய்,புதினாவை வதக்கி
கடைசியில் தக்காளியையும் சேர்த்து வதக்கி, உப்பைச்
சேர்த்து ஆரியபின் மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து
சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சட்னி தயார்.
மசூர் டாலைக் களைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒட்ட தண்ணீரை வடித்து விடவும்.
பருப்பை, மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
சிறிது தண்ணீர் தெளிக்கவும். சும்மா, நான்கு சுற்றிலேயே
ஒன்றிரண்டாக வரும்.
அரைத்த விழுதுடன், வெந்த உருளைக் கிழங்கை சிறு
துண்டங்களாக உதிர்த்துக் கலக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கலந்த மாவை
மெது பகோடாக்களாக, பொரித்தெடுக்கவும்.
நன்றாக திருப்பி விட்டு சிவந்ததும் எடுத்து வடிக்கட்டி
கரைத்த புதினா சட்னியுடன் கொடுத்தால், மிகவும்
ருசியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும்.
கரகரப்பாகவும், அதே நேரம் ஸாப்டாகவும் இருக்கும்.
சுலபம்தான். சாப்பிடவும்
Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.
18 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:12 முப இல் ஏப்ரல் 2, 2013
சுவையான கரகரப்பான ருசியான பக்கோடா.
அருமையான செய்முறை விளக்கம்.
நாக்கில் நீர் ஊற நீர் [நீங்கள்] செய்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள்.
2.
chollukireen | 9:06 முப இல் ஏப்ரல் 3, 2013
jருசியாக இருக்கும் என்று மனதில் நினைத்தால் கூட
நாக்கில் நீர் சுரக்கத்தான் செய்யும். எழுதியவர்களுக்கு மனதில் நன்றியும் தோன்றச்செய்யும்.முதல்பாராட்டுகளுக்கு அன்புடனும், ஆசிகளுடனும்
3.
chollukireen | 9:32 முப இல் ஏப்ரல் 3, 2013
ருசியான பொருள் என்று மனதில் நினைத்தாலும் நாவில் நீர் ஊறுவது இயற்கை. அந்தவகையில்
உங்களுக்கு என் விசேஷ நன்றிகள்.ஸாதாரணமாக வீட்டில் செய்ததை பதிவாக்கினேன். அன்புடனும் ஆசிகளுடனும்
4.
திண்டுக்கல் தனபாலன் | 11:03 முப இல் ஏப்ரல் 2, 2013
உடனே செய்து பார்த்து விடுவோம்… நன்றி…
5.
chollukireen | 9:07 முப இல் ஏப்ரல் 3, 2013
நன்றி உங்களுக்கு. அன்புடன்
6.
chollukireen | 9:33 முப இல் ஏப்ரல் 3, 2013
ஸந்தோஷமான நன்றிகள். அன்புடன்
7.
chitrasundar5 | 10:57 பிப இல் ஏப்ரல் 2, 2013
காமாக்ஷிமா,
ஆரஞ்சு நிறத்தில் இருக்குமே,அதுதானே மசூர் டால்.நான் வாங்கியதில்லை. உருளைக்கிழங்குடன் எது சேர்ந்தாலும் சுவைக்கு பஞ்சமிருக்காது.எளிய செய்முறை.இனி எனக்கும் ஒரு அஸ்ஸாம் மாநில ஸ்நாக்ஸ் செய்யத் தெரியும் என தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். ம்ம்… கலக்குங்கமா. அன்புடன் சித்ரா.
8.
chollukireen | 9:41 முப இல் ஏப்ரல் 3, 2013
ஆமாம். அதுவேதான். இந்த பருப்பில், டால் செய்தாலும் ரொட்டியுடன் ஒத்துப் போகிறது. சீக்கிரம் வேகக் கூடியது.அடையிலும் சேர்ப்பேன்.
காலா மஸூர் என்று கருப்பு நிறத்திலும் கிடைக்கிரது.
நார்த் இந்தியன் மஸாலா சேர்த்தால் ரொட்டிக்கு ஜோடி.
எல்லாம் சேரும் ஸாமான்களின் வகையை ப் பொருத்து
ருசி அமைகிரது. உனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
அன்புடன்
9.
இளமதி | 7:13 பிப இல் ஏப்ரல் 3, 2013
அட அருமையான மசூர்டால் பக்கோடா… 🙂 ரொம்ம்ப ஈஸியாவும் இருக்கு உங்க குறிப்பு.
என்னோட சமையலில் துவரம்பருப்புக்கு சமனா இந்த மசூர்பருப்பும் இடம்பெறும். சட்டென்று வேகவைக்கவும் முடியும். அவசர சமையலுக்கும், யாரேணும் திடீர் விருந்தாளிகள் வந்தாலும் கைகொடுப்பது எனக்கு இந்த மசூர்டால்தான்,
உங்க ரெஸிப்பியும் உடனேயே செய்யக்கூடியதா இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அம்மா.
செஞ்சு பார்த்து வீட்டில என்ன சொல்றாங்கன்னு சொல்றேன்… 🙂
மிக்க நன்றிம்மா அருமையான குறிப்புக்கு…
10.
chollukireen | 6:44 முப இல் ஏப்ரல் 5, 2013
கட்டாயம் செய்துபார்த்து ருசித்து என்ன சொல்கிரார்கள் என்று எழுது. இவ்விடம் கூட டால் செய்வதானால் மசூர், பயத்தம் பருப்பு சேர்த்துதான் செய்கிரோம் லைட்டானது..உன் பதிலும், ருசிதான்.
நன்றி. அன்புடன்.
11.
MahiArun | 8:30 பிப இல் ஏப்ரல் 3, 2013
I have never bought masoor dal! 😉
Pakoda looks yum, n thanks for the combo recipe! 🙂
12.
chollukireen | 6:36 முப இல் ஏப்ரல் 5, 2013
மசூர்டால் உபயோகித்துப் பார்த்தால் அவஸரத்திற்கு,சுலபமாக இருக்கும். பல விதங்களில் உபயோகப் படுத்தலாம். நிமிஷமாக வெந்து விடும். அன்புடன்
13.
chollukireen | 11:39 முப இல் ஓகஸ்ட் 6, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதியதுதான். ஒரு மாறுபட்ட ருசி. பாருங்கள். அன்புடன்
14.
ஸ்ரீராம் | 2:33 பிப இல் ஓகஸ்ட் 6, 2021
ருசியின் எதிர்பார்ப்பை நாக்கு உணர்கிறது. செய்து பார்க்கும் ஆவல் கூடுகிறது!
15.
chollukireen | 11:45 முப இல் ஓகஸ்ட் 7, 2021
ஒரு ஸுலபமான பண்டம்தான். செய்து பாருங்கள் என்ற பெயரிலேயே ஒரு பத்திரிக்கைகூட இருந்தது. இங்கு அடிக்கடி செய்யப் படுகிறது. நான் கஞ்சி காமாட்சி. நன்றி. அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 4:15 பிப இல் ஓகஸ்ட் 6, 2021
படமும் அருமை, செய்முறை சுலபம். ஒரு நாள் நான், கடலைப்பருப்பில் இதுபோலச் செய்துபார்க்கப் போகிறேன். ஆனால் இது எப்படி கரகரன்னு இருக்கும்னுதான் தெரியலை.
பெங்களூரின் மழை, நல்ல காலநிலைக்கு இது சூப்பராகவே இருக்கும்.
17.
chollukireen | 12:03 பிப இல் ஓகஸ்ட் 7, 2021
மழை நாட்களுக்குச் சுடச்சுட எப்படி இருந்தாலும் ருசிதான். உங்களுக்கு ரிஸல்ட் எப்படி வருகிறது பார்க்க எனக்கும் ஆவல். நான் எதுவும் சாப்பிடுவதில்லை. மனதுக்கேற்ப மாறுதல்களைப் புகுத்தி சாப்பிடுங்கள். நன்றி. அன்புடன்
18.
Geetha Sambasivam | 12:34 பிப இல் ஓகஸ்ட் 9, 2021
மசூர் தால் எல்லாம் வடக்கே இருக்கும்போது பயன்படுத்தியது தான். இங்கே அதிகம் வாங்கலை. அம்பேரிக்கா போனால் அங்கே வாங்குவாங்க. உடம்பு சரியானதும் ஒரு நாள் செய்து பார்க்கணும். பார்ப்போம். 🙂