வாழைக்காய் பொடித்தூவல்.
ஏப்ரல் 8, 2013 at 9:40 முப 20 பின்னூட்டங்கள்
வாழைக்காய் பொடித்தூவல்ன்னு பேர். ஆனால் எந்தப்
பொடியும் தூவாமல் செய்ததுதான் இது.
தேங்காய் சேர்த்து செய்வதுதான் இதன் விசேஷம். இதை
வெறும் ஒரு வாழைக்காயில் செய்தேன்.
ப்ளாகையும் பார்த்துவிட்டு வரட்டுமே என்று ஒரு
போட்டோ.!!!!!!!!! பாருங்கள் நீங்களும்.
வேண்டிய ஸாமான்கள்.
நல்ல முற்றிய மொந்தன் வாழைக்காய்.—1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
பச்சைமிளகாய்—-2 பொடியாக நறுக்கவும்
உப்பு–ருசிக்கு
இஞ்சி சிறிது-தட்டிக் கொள்ளவும்.
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு. சிறிது
புளி –சிறிது. காய் கறுக்காமலிருப்பதர்கு
செய்முறை—–வாழைக்காயை, நடுவில் இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
புளியைக் கரைத்துவிட்டு மேலும் அதிக ஜலம் சேர்த்து-
கொதிக்க வைத்து அதில் நறுக்கிய இரண்டு துண்டு
வாழைக்காயைச் சேர்த்து வேக விடவும். தோலுடன்தான்.
காய் முக்கால்பதம் வந்தவுடன் , காயை வடிக்கட்டி எடுத்து
விடவும் காய் ஆ றியவுடன்,பழம் உரிப்பது போல தோலை
உரிக்கவும்.
சுலபமாக வந்து விடும்.
காயை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு பருப்பு
வகைகளைத் தாளித்துக் கொட்டி, நறுக்கிய மிளகாய்
இஞ்சியை வதக்கி உதிர்த்த வாழைக்காயை உப்பு சேர்த்து
வதக்கவும்.
தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேண்டியவர்கள் சிறிது எலுமிச்சைத் துளிகளைச்
சேர்க்கலாம்.
நல்ல ருசியாக இருக்கும். இது ஒருவகை. தேங்காய்
எண்ணெயிலும். தாளிக்கலாம்.
கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.சிலர் வெந்த பருப்பையும்
பிழிந்து போடுவார்கள். உங்களுக்குப் பிடித்ததைச்
செய்யலாம்.
Entry filed under: கறி வகைகள்.
20 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 9:44 முப இல் ஏப்ரல் 8, 2013
வாழைக்காய் பொடித்தூவல். மிகவும் ருசியோ ருசியாக உள்ளது. அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நமஸ்காரங்கள். அன்புடன் கோபு.
2.
chollukireen | 12:24 பிப இல் ஏப்ரல் 8, 2013
பார்த்தாலே ஓரளவு யூகிக்க முடிகிரதா., உடனுக்குடனான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடனும், ஆசிகளுடனும்
3.
ranjani135 | 12:43 பிப இல் ஏப்ரல் 8, 2013
இந்த செய்முறையும் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல பொடி போடாமல், தேங்காய் போட்டு செய்வது புதிய ருசியைக் கொடுக்கும் இல்லையா?
4.
chollukireen | 5:50 முப இல் ஏப்ரல் 9, 2013
நிறைய வாழைக்காயிருந்தால் இப்படி செய்வது வழக்கம். பாலக்காட்டுக்காரர்கள், வாழைக்காயை திட்டமாக நறுக்கி வேகவைத்து, பச்சைமிளகாயையும்,
தேங்காயையும்,சிதைத்துப் போட்டு, தேங்காயெண்ணெயில் பொரித்துக் கொட்டணும் என்பார்கள். சிதைத்து,அம்மியில் ஒன்றிரண்டாக தேங்காய்த் துருவலை அறைப்பதைச் சொல்வது,பொரித்துக் கொட்டணும் என்பது தாளித்துக் கொட்டுவதை. இதுவும் நன்ராக இருக்கும். ஆமாம் ஒருநாள் செய்து பாருங்கள்.
விருப்பத்திற்கும், பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.
அரைப்பது,
5.
இளமதி | 3:59 பிப இல் ஏப்ரல் 8, 2013
வாழைக்காய் பொடித்தூவல் படமே சுவை என்னன்னு சொல்லுதே அம்மா…
கொண்டைக்கடலை சுண்டல்போலே இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனா சுவை வேறுதான்.
எனக்கும் வாழைக்காயில் என்னவென்னாலும் அத்தனையும் ரொம்ம்பவே இஷ்டம். அடுத்தமுரை வாங்கி செய்துடணும்.
நல்ல நல்ல குறிப்புகள் அம்மா. ரொம்ப நன்றி!
ஹாஆ.. சொல்ல மறந்திட பார்த்தேன். மைசூர்டால் பகோடா செய்து பார்த்தேன். நீங்க சொன்னது போலவே வெளியில் கரகரப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருந்திச்சு அம்மா.
சூப்பர்ன்னு சொல்லி செஞ்சு அரைமணி நேரத்தில தட்டை காலி பண்ணீட்டாங்க என் வீட்டில்…:)
நான் காரத்திற்கு கொஞ்சம் அருவல்நொருவலான காரமிளகாய்பொடி சேர்த்தேன். சுவை சொல்லமுடியாது. அபாரம்.
ரொம்ப நன்றிம்மா… .
நேரமிருந்தா என் பக்கம் எட்டிப்பருங்கம்மா..
http://ilayanila16.blogspot.de/2013/04/blog-post.html
6.
chollukireen | 5:59 முப இல் ஏப்ரல் 9, 2013
பெண்ணே அருவல்,நொருவல் என்றால் ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகாய்ப்பொடியா?
நீ செய்து பார்த்துவிட்டு மசூர்டால் பகோடாவைப் பாராட்டியது ஸந்தோஷமாயிருக்கு. மற்றவர்கள் செய்வதற்கு ஆசைப்படுவார்கள். ரொம்ப அழகாகவே எழுதுகிறாய் ஸுலபமாக இருக்கு இல்லையா?
வழைக்காயையும்ஒருநாள் செய்து பார். அன்புடன்
7.
இளமதி | 6:31 முப இல் ஏப்ரல் 9, 2013
அம்மா.. அருவல் நொருவல்ன்னு ஈழத்தில் – இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழிலில் சொல்வது வழமை. நான் ஒரு ஈழத்தமிழச்சி… 🙂 சரளமாக பேசுவதை இங்கு எழுதிவிட்டேன்.
வாழைக்காய் வாங்கியதும் செய்து பார்த்துவிட்டு சொல்லுகிறேனில்… 🙂 சொல்லுவேன்.
அங்குவந்து கருத்திட்டுச் சிறபித்தமைக்கும் என் நன்றிகள் அம்மா…
8.
திண்டுக்கல் தனபாலன் | 4:08 பிப இல் ஏப்ரல் 8, 2013
சுவையான வாழைக்காய் பொடித்தூவல்…. செய்முறைக்கு நன்றி…
9.
chollukireen | 6:01 முப இல் ஏப்ரல் 9, 2013
சுவையான பதில். உங்களுக்கு மிகவும் நன்றி.
10.
மகிஅருண் | 7:45 பிப இல் ஏப்ரல் 9, 2013
வாழைக்காயைப் பொடித்து செய்வதால் பொடித்தூவல்! 🙂 நல்லா இருக்கும்மா! நான் இதனுடன் வெங்காயம் சேர்த்து செய்வதே வழக்கம். ஒரு முறை இப்படியும் செஞ்சு பார்க்கிறேன்.
அப்புறம் புளிப்பொங்கல் செய்தேன், உங்க ரெசிப்பி உதவியுடன். நல்லா இருந்தது, பகிர்வுக்கு நன்றிம்மா. இன்று என் வலைப்பூவில் போட்டிருக்கிறேன், டைமிருந்தாப் பாருங்க.
11.
chollukireen | 6:33 முப இல் ஏப்ரல் 10, 2013
என்னுடைய ரிஸிபிகள் மஹி கையால் செய்து இன்னும் கொஞ்சம் ப்ரபலமாகிறது. எவ்வளவு ஸந்தோஷம் தெரியுமா? புளிப்பொங்கலையும்,ரஸித்து ருசித்து விட்டுதான் வந்தேன். இந்த எங்களவங்க ரிஸிபியிலே வெங்காயம் குறைவு. அதாந் விட்டுப்போய்விடுகிறது. நன்றி அன்புடன்
12.
chitrasundar5 | 11:07 பிப இல் ஏப்ரல் 9, 2013
காமாக்ஷிமா,
இன்று இந்த பொடித்தூவல்தான் செய்தேன். நல்லாருந்துச்சுமா. செய்முறையைப் பார்த்தால் வாழைக்காய் பொடிமாஸ் மாதிரியே இருக்கு.
நான் சாதாரண தண்ணீரில் வேக வைத்து செய்வேன். புளித்தண்ணீரில் வேக வைத்ததால் கண்ணுக்குத் தெரியாஆஆத ஒரு புளிப்பு சுவை தெரிந்தது. மறக்காம கறிவேப்பிலையையும் (எண்ணிஎண்ணி) போட்டேன். நல்லாவே இருந்துச்சு.
13.
chollukireen | 6:24 முப இல் ஏப்ரல் 10, 2013
வாழைக்காய் கலர் கருப்பாக ஆகாமலிருக்த்தான் துளி புளி சேர்ப்பது. செய்து பார்த்து கமென்ட் கொடுத்ததற்கு
மிக்க மகிழ்ச்சி. நல்லாவே செய்திருக்கிறாய். சித்ராவா,சும்மாவா?அன்புடன்
14.
adhi venkat | 3:10 பிப இல் ஏப்ரல் 10, 2013
பொடித்தூவல் பிரமாதமாக உள்ளது. ஏறக்குறைய பொடிமாஸ் தானோ…
15.
chollukireen | 5:52 பிப இல் ஏப்ரல் 10, 2013
`பொடிமாஸிற்கு பருப்புகள்,மிளகாய்,வறுத்துப் பொடித்து, வாழைக்காயை
சுட்டு உறித்து சேர்த்துப் பொடிப்பது ஒரு வழக்கம். அது வாழைக்காய்ப் பொடி.
எது வேண்டுமானாலும், பொடிமாஸ் . இது தேங்காய் சேர்ப்பதால்
பொடித்தூவல். என்னுடைய வியாக்யானம் இது. கொஞ்சம் வித்யாஸம்.
அவ்வளவுதான். உன் வருகை ரொம்பவும் த்ருப்தியாக இருக்கு. நன்றிம்மா. அன்புடன்
சொல்லுகிறேன்.
16.
chollukireen | 11:29 முப இல் மே 2, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் எப்போதோ போட்ட குறிப்புதான். தேங்காய் சேர்ப்பதால் எண்ணெய் இன்னும் கூட குறைத்து விடலாம். பொடிவேறு. பொடித்தூவல் வேறுதான். பாருங்கள் அன்புடன்
17.
நெல்லைத்தமிழன் | 2:08 பிப இல் மே 2, 2022
மிகுந்த ருசியாக இருக்கும்னு தோணுது. ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு ஒரு முறை செய்து பார்க்கணும்.
18.
chollukireen | 7:19 பிப இல் மே 3, 2022
நிதானமாக செய்து பாருங்கள் வாழைக்காய் கிடைக்காத சமாச்சாரம் இல்லை நீங்கள் வந்து கமெண்ட் கொடுப்பதே போதுமானது மிக்க சந்தோஷம் அன்புடன்