நான்கு வயது முடிந்தது.
ஏப்ரல் 19, 2013 at 2:41 பிப 24 பின்னூட்டங்கள்
யாருக்கா? உங்கள் அபிமானத்தால் இதுவரை வளர்ந்து வரும்
சொல்லுகிறேன் வலைப்பூவிற்கு.
இன்று வரை கற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கும்
இந்த வலைப்பூவை ஆதரித்து, எனக்கு உற்சாகமளிக்கும்
உங்களுடன்,
வேர்ட்ப்ரஸ்காமின்ஆனிவர்ஸரி,வாழ்த்துக்களைப்
பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் எப்படி எழுதினால்
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதையும் அறிய
விரும்புகிறேன். சொல்லுகிறேனின் நன்றிகளும், அன்பு
மொழிகளும் எப்போதும் உங்களுக்கு.
அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.
Entry filed under: நன்றி.
24 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ranjani135 | 3:00 பிப இல் ஏப்ரல் 19, 2013
நான்கு வருடங்களாக போஷித்துப் போற்றி வரும் வலைப்பூ குழந்தைக்கு வாழ்த்துக்கள். வலைபூவிற்கு நான்கு வயதானாலும் அனுபவ பாடங்களுக்கும், கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பே இல்லை என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மேலும் மேலும் சிறக்க, எல்லோருக்கும் வழிகாட்ட வாழ்த்துக்கள்.
2.
chollukireen | 12:30 பிப இல் ஏப்ரல் 21, 2013
உங்கள் வாழ்த்துக்களை வலைப்பூ ஸந்தோஷமுடன் ஏற்றுக் கொள்கிரது. அதே ஸமயத்தில் எவ்வளவு மன அமைதிக்கு இந்த வலைப்பூ உபயோகமாக இருக்கிரது,
எவ்வளவு, நல்ல சினேகிதங்களை உருவாக்கியுள்ளது என்பதை நினைத்தால், அது எங்கேயோ போய்விடுகிரது. உங்களை, உங்கள் எழுத்துக்களைப்
பார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் படிக்காமல் போய்விட்டோமே, நமக்கு ஒன்றுமே தெரியவில்லை
என்று நினைக்கத் தோன்றுகிரது.
உப்பு,புளி,காரம் என்ற ஒரு வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது.
உங்கள் ஒத்தாசைக்கு மிகவும் நன்றி. என்னை ஏறு முகத்திலேயே பார்க்கிறீர்கள், பாராட்டுகிறீர்கள்.
இதெல்லாம் உங்களின் அபிமானத்தைக் காட்டுகிரது.
உங்களின் பாராட்டு, எனக்கு வைட்டமின் B12.
அன்புடனும், ஆசிகளுடனும்.
3.
இளமதி | 3:02 பிப இல் ஏப்ரல் 19, 2013
அம்மா… உங்க தளத்திற்கு நான்கு வயது முடிந்திருக்கின்றதா? ஆச்சரியம்… 🙂
மிகவும் சந்தோஷம்… 🙂
இன்னும் இன்னும் பல வருடங்களைக் கடந்து மேலும் பல பதிவுகளை நீங்கள் எமக்குத்தந்திட எல்லாம் வல்ல இறை அருளை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.
நீங்களும் நல்ல ஆயுள் ஆரோக்கியமுடன் எம்முடன் இருந்து இன்னும் பல சாதனைகளை செய்திட இறை அருள் தர ப்ரார்த்திக்கின்றேன்…
வணங்குகின்றேன் அம்மா…
4.
chollukireen | 12:12 பிப இல் ஏப்ரல் 21, 2013
இளமதி வாழ்த்துக்களுக்கும், வேண்டுதல்களுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. நான் நினைத்துக் கொண்டேன். இன்னும், இரண்டு, குழம்பு,ரஸம், கூட்டு,
கறி,பக்ஷணம் என்ற முறைதான் நமக்கு வரும்.
உன்னுடைய எழுத்துக்கள், எண்ணங்கள் யாவும்
நன்றாக இருப்பது கண்டு மிகவும் பெருமைப் படுகிறேன். ஆசிகள் உனக்கும், உன் குடும்பத்தினருக்கும். அன்புடன்
5.
VAI. GOPALAKRISHNAN | 3:12 பிப இல் ஏப்ரல் 19, 2013
நான்கு வயதுக்குழந்தைக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களால் முடிந்ததை, தங்களுக்குத் தோன்றுவதை, தங்கள் அனுபவங்களை சிறு சிறு பகுதிகளாக, அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ளாமல், பகிருங்கள், அதுவே போதும்.
அன்பு நமஸ்காரங்களுடன் கோபாலகிருஷ்ணன்
6.
chollukireen | 11:54 முப இல் ஏப்ரல் 21, 2013
உங்கள் வாழ்த்துக்கும், அருமையான யோசனைகளுக்கும், மிகவும் நன்றி சொல்லுகிறேன். வழித்துணை,மார்க்க ஸஹாயம் இன்றியமையாதது. அந்த வழியில் யோசிக்க வேண்டியது அவசியம்.
கேட்பது ப்ரமாதமில்லை. செயல் படுத்த வேண்டும். நல்ல யோசனைகளை பின்பற்ற
வேண்டும் என்ற எண்ணங்களும், அன்பு ஆசியுடனும்
7.
மகிஅருண் | 10:32 பிப இல் ஏப்ரல் 19, 2013
வாழ்த்துக்கள் காமாட்சிம்மா! இன்னும் பலவருடங்கள் உங்க குறிப்புகள், அறிவுரைகள் எங்களுக்கு வேண்டும். 🙂
8.
chollukireen | 11:46 முப இல் ஏப்ரல் 21, 2013
மகிழ்ச்சி மஹி உன் அன்பிற்கும் வாழ்த்திற்கும்.
மிக்க மகிழ்ச்சியான சிநேகம் உன்னுடையது.
என்றும் இப்படியே அன்பு நீடிக்க வேண்டும். அன்புடன்
9.
chitrasundar5 | 4:15 பிப இல் ஏப்ரல் 20, 2013
காமாக்ஷிமா,
இன்னும் பல வருடங்களுக்கு இதேபோல் உங்கள் எண்ணங்கள்,குறிப்புகள், ஆசீர்வாதங்கள் இவற்றையெல்லாம் வழங்குவதற்கு வேண்டிய திடனைக் கொடுக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நீங்க எது எழுதினாலும் அது சாதாரண பேச்சு நாடையில் ரசிக்கும்படிதான் இருக்கும்.அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 11:42 முப இல் ஏப்ரல் 21, 2013
எனக்காக நிரைய வேண்டுதல்கள் உனக்கு. கேட்கவே ஸந்தோஷமாக இருக்கிறது. உங்களோடெல்லாம், பழக, பேச,அன்பைக் கொடுத்து வாங்க இதெல்லாம் கொடுத்தது இந்த வலைப்பூதான். உங்கள் யாவரின் வலைப்பூக்கள் நல்ல முறையில் மேன் மேலும் ஓங்க நானும் ப்ரார்த்திக்கிறேன். தொடர்ந்து அன்பைக் கொடுங்கள். நன்றி அன்புடன்
11.
kalyanimurugankalyani.M | 4:17 பிப இல் ஏப்ரல் 20, 2013
vaazhththukkal amma. ungal pani menmelum thodara en vaazhththukkal. vaazhga valamudan
kalyani.
12.
chollukireen | 12:03 பிப இல் ஏப்ரல் 21, 2013
மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும். உங்களைப் பிடிக்கவே முடிவதில்லை. திடீரென்று வருகிறீர்கள். உங்களை எப்படித் தொடர்பு கொள்ளுவது? சொல்லுங்கள். பிறகு ஒருதரம் வாழ்க வளமுடன் சொல்லுங்கள். அன்புடன்
13.
venkat | 2:52 முப இல் ஏப்ரல் 21, 2013
மனம் நிறைந்த வாழ்த்துகள் காமாக்ஷிம்மா… தொடர எல்லாம் வல்லவன் அருள் கிடைக்கட்டும்…..
14.
chollukireen | 11:36 முப இல் ஏப்ரல் 21, 2013
மிகவும் நன்றி. தொடர்ந்து ஆதரவைக் கொடுங்கள், என்றும் அன்புடன்
15.
Sheela | 8:50 முப இல் ஏப்ரல் 26, 2013
Mami,
Namaskaram & hearty congrats. Innum niraiya anniversary vara vazthukal.
Ithu FB la en varavillai?
with regards
16.
chollukireen | 10:54 முப இல் ஏப்ரல் 26, 2013
ஆசிகள் ஷீலா எல்லோருக்கும்.ஸந்தோஷம்.
அதிகம் வயதுக்கு வேண்டாம். நீ இப்போதுF.Bயில் பிஸியாக இருப்பது
தெரிகிரது. நானும் பார்ப்பதுடன் ஸரி. உன் வரவுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
17.
RAMU | 4:22 முப இல் ஏப்ரல் 27, 2013
Keep up the good work MAMI.
All the best.
RAMU(Matunga).
18.
chollukireen | 7:22 முப இல் ஏப்ரல் 28, 2013
உன் வரவு மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வந்து பின்னூட்டங்கள் `கொடுக்கலாமே!!!!!!!!!!!!
நம் குடும்பங்களின் நாலாவது தலைமுறையின் ரெப்ரஸென்டேடிவ்வாக பின்னூட்டம் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. மிகவும் பெருமைப் படுகிறேன். நன்றி. அன்புடன்
19.
Darshini | 8:15 முப இல் ஏப்ரல் 29, 2013
vazhlthukkal pattima…
20.
chollukireen | 9:00 முப இல் ஏப்ரல் 29, 2013
வாவா பேத்தி தர்ஷினி வாழ்த்துகளுக்கு ஸந்தோஷம்.
அன்புடன் பாட்டி
21.
gardenerat60 | 2:05 பிப இல் மே 29, 2013
அம்மா! நான்கு வருடங்கள் நிறைவுக்கு வாழ்த்துக்கள். (நான் தான் மிக லேட்).
இன்னும் பல பல நினைவுகளையும், நிகழ்வுகளையும் கட்டாயம் பகிர வேண்டி , அம்புடன் கோருகிறேன்.
இரண்டு குழம்பும், கூட்டும் , கறிகளும் இந்த அவசர காலத்தில் , பண்ணி வைக்க யாருக்கு பொறுமை இருக்குதோ, அவர்களை நமஸ்காரம் பண்ண வேண்டும். அந்த அன்பான சமையலை சாப்பிட முடிந்தால், அமிர்தம் தான்.
கட்டாயம் எழுதுங்கள் அம்மா. எங்களுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.
22.
gardenerat60 | 1:53 பிப இல் மே 30, 2013
அம்மா! இத்தனை நாட்கள் பதிவுகளை படிக்க முடியால் , இருந்தது, வீட்டில் அனைவருக்கும் ஒன்று மாத்தி ஒன்று உடல் நலம் குறைவினாலும், அதி தீவிர சம்மர் கொடுமையினாலும் தான். இந்த வருடம் , கடந்த இரண்டு மாதங்களாக, தண்ணீர் பிரச்சினை, கரண்ட் கவலை, வீட்டில் சிறு ரிப்பேர்கள்,பல கல்யாணங்கள், (ஏன் மே மாதத்தில், இந்த கல்யாணங்களை நடத்துகிறார்கள்) இத்தனை நடுவிலும், மனதில் பதிவுகளை படிக்கவில்லை என்பது உறுத்திக்கொண்டே இருந்தது.
தினமும் காலையில் பகவானை’ கடவுளே, பிசியான நாளாக இருக்கட்டும்.. உன் அருள்’ என்று வேண்டுவேன். அவர் உடனே ஆசீர்வதித்து விட்டார். .
இனி ஒரு வாரம் ஹாய்யாக பிள்ளை வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க திட்டம்., கடவுள் அருள் இருந்தால்.(டிக்கட் கிடைத்தால்).
இன்று தான் வெதர் கொஞ்சம் மழையினால் குளிர்ந்தது. எங்கள் ஹைதரபாத் எரி வெய்யில் பற்றி தனி பதிவு மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
கட்டாயம் தங்கள் பதிவுகளை படித்து மகிழ ஆசையாக உள்ளது.
இத்தனை நாட்கள் தாமதம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். The loss was mine Amma!
நமஸ்காரம்.
23.
chollukireen | 2:37 பிப இல் ஜூன் 1, 2013
vபட்டு நீங்கள் வந்து பின்னூட்டமிட்டது மகிழ்ச்சி. வெயில்நாள்.
களைப்பு,எவ்வலவோ அஸௌகரியஙகள் உங்களுக்கு. எதையுமே நான் யோசனை செய்யவில்லை. மன்னிக்கவும். நீங்கள் வந்து பின்னூட்டமிடவில்லையே என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது எல்லோரும் நல்ல ஆரோக்யத்துடனிருக்க வேண்டுகிறேன். உன் விரிவான பதிலுக்கு நன்றியம்மா. அன்புடன்
24.
gardenerat60 | 5:13 பிப இல் ஜூன் 1, 2013
அம்மா!. நீங்கள் என்னை மன்னிக்கவும். உங்கள் மனதை நோகடித்தேனா!. இங்கள் ஆசீர்வாதங்களுக்கு, என் நமஸ்காரங்கள்.
ப்ளாக் படிக்காமலும், எழுதாமலும் இருப்பது, குறையாக உள்ளது. இப்போது, இங்கே, வெதர் கொஞ்சம் பரவாயில்லை. குழாயில் தண்ணீரும் வந்தது ;-).