காளன்
ஏப்ரல் 30, 2013 at 12:28 பிப 14 பின்னூட்டங்கள்
இதுவும் மோர்க் குழம்பு வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் ருசி
சிறிது வித்தியாஸப்படும் கேரள வகைச் சமையல்.
குறிப்பாக வாழைக்காய், சேனைக்கிழங்கு சேர்த்துச் செய்யப்படுவது.
அவர்கள் பாணி விருந்து சமையலில் கட்டாயம் இது இடம் பெறும்.
இது மிகவும் வித்தியாஸமான பாணியில் இருக்கும்
என்றுநினைத்திருந்தேன்.
அப்படி அதிகம் ஒன்றுமில்லை. அல்லது எனக்குத் தெரிந்த பாணி
இதுஎன்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அதிகம் ஸாமானில்லை. காயும் ஸிம்பிளாக ஒரு வாழைக்காய்,
100 கிராம் சேனைக் கிழங்கு இருந்தால் போதும்.
மற்ற வேண்டிய ஸாமான்கள் பார்க்கலாம்.
தயிர்—-2கப். அதிக புளிப்பு வேண்டாம்.
மிளகாய்—-வற்றல் ஒன்று
பச்சை மிளகாய்—2
மிளகுப்பொடி—கால் டீஸ்பூன் அல்லது மிளகாய்ப்பொடி
சீரகம்—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரை கப்பிற்கு அதிகம்.
ருசிக்கு உப்பு
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை
தேங்காயெண்ணெய்—1 டீஸ்பூன்
பச்சை கறிவேப்பிலை சிறிது.
பச்சரிசி—கால் டீஸ்பூன்.
காய்களை, ஒரு அங்குல நீளத்திற்கு தோல் சீவி நறுக்கி
சுத்தப்படுத்தி வைக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் அரிசியைப் பிசரி வைக்கவும். அரைக்க
எளிதாக இருக்கும்.
சிறிது நேரம் கழித்து ,பச்சைமிளகாய்,சீரகம்சேர்த்து தேங்காயை
நன்றாக அரைத்து வைக்கவும். மிக்ஸியில்தான்.
காயை தண்ணீர் விட்டு மிளகு, அல்லது மிளகாய்ப்பொடி,சிறிது,உப்பு
சேர்த்துவேக வைக்கவும்.
வேக வைத்த காயை வடிக்கட்டி வைக்கவும்.
தயிரைக் கடைந்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்
காயில் சிறிது உப்பு போட்டிருப்பதால் தயிரில் திட்டமாக உப்பைப்
போடவும்.
காயுடன் சேர்த்து, கடைந்த தயிரைத் திட்டமான தீயில் பால்
பொங்குவது போல ஒருகொதிவிட்டு இறக்கவும். அவசியமானால்
சிறிது தண்ணீர் முதலிலேயே சேர்க்கவும்.
தேங்காயெண்ணெயில் கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றலை
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
காளன் ரெடி. ஒரு முறை நன்றாகக் கிளறிவிடவும்.
சாதத்துடனும், விருப்பமானவற்றுடனும், சேர்த்துச் சாப்பிடலாம்.
பாருங்கள். எப்படி என்று?
நான் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கிப் போட்டு செய்தேன்.
ருசிதான் அதுவும். மிளகுப்பொடிக்கு பதில் மிளகாய்ப்பொடி
சேர்த்தேன். கலர் வந்திருக்கிரது.
Entry filed under: குழம்பு வகைகள்.
14 பின்னூட்டங்கள் Add your own
மகிஅருண் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
VAI. GOPALAKRISHNAN | 12:43 பிப இல் ஏப்ரல் 30, 2013
சமையல் குறிப்பு அருமை.
காளன் என்ற பெயர் வித்யாசமாக காளான் போல உள்ளது.
கிழங்குகளில் உருளைக்கிழங்கு தவிர, சேனை, கருணை, சேம்பு போன்ற எதுவுமே எனக்கு ஏனோ பார்க்கவே கூட பிடிப்பதில்லை.
2.
chollukireen | 5:51 பிப இல் மே 1, 2013
காளன் என்ற பெயர் மலையாளத்து பெயர். நம்ம பாலக்காட்டு தமிழ்க்குடும்ப குறிப்பு இது. காளானை, காளான்னு யார் சொல்ரா? மஷ்ரூம்னு ஜம்பமா சொல்ரா இல்லையா? இது ஞாபகமே வரலை. உருளைக் கிழங்கு போட்டும் செஞ்ஜுட்டா போட்டு. காய் மாரினா என்ன. நானும் வெண்டைக்காய் வதக்கிப் போட்டுதான் செய்தேன். எல்லார் ஆத்திலும் பிடித்த,பிடிக்காத
கிழங்குகள் இருக்கு. குறிப்பு அருமைன்னு எழுதினது போதும். வரவாளும் படிப்பா. உங்கள்
கமென்டிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 2:02 பிப இல் ஏப்ரல் 30, 2013
வித்தியாசமாக உள்ளது…
செய்து பார்ப்போம்…
செய்முறை குறிப்பிற்கு நன்றி…
4.
chollukireen | 5:53 பிப இல் மே 1, 2013
கொஞ்சம்தான் வித்தியாஸம். பாருங்கள். நன்றி. அன்புடன்
5.
Angelin | 3:20 பிப இல் ஏப்ரல் 30, 2013
மிக அருமையாக இருக்கு ..நானும் செய்துவிட்டு சொல்கிறேன் .பகிர்வுக்கு நன்றிம்மா
6.
chollukireen | 5:56 பிப இல் மே 1, 2013
அஞ்சு நீ வந்தது, ரொம்பவே மனதுக்கு மகிழ்வு.
கட்டாயம் நீ செய்வாய். பார்க்கலாம். அன்புடன்
7.
ranjani135 | 2:05 பிப இல் மே 1, 2013
மோர் குழம்பு போலத்தான் என்றாலும் ருசி சற்று மாறும் என்று தோன்றுகிறது. கிழங்கு ஒதுக்குபவர்கள் வெண்டைக்காய் அல்லது வேறு காய்கறி சேர்த்து பண்ணலாம்.
காளன் செய்துவிட்டு சொல்லுகிறேன்.
8.
chollukireen | 6:04 பிப இல் மே 1, 2013
பாலக்காட்டு சமையலில், வாழைக்காய்,சேனை,பூசணி,பரங்கி,முருங்கை,
தேங்காய் இவைகள் விசேஷம். சுலபமானதுதானே.
செய்து பார்ப்பதாகச் சொன்னது விசேஷம். எல்லோரும் எழுதியிருப்பதாலே கட்டாயம் ருசி வரவே செய்யும். என்ன பெருமை பாருங்கள்!!!!!!! மிக்க நன்றி. பின்னூட்டங்களும்
சுவையாகவே வந்து கொண்டு இருக்கிரது. அன்புடன்
9.
chitrasundar5 | 4:05 முப இல் மே 2, 2013
காமாக்ஷிமா,
மோர் குழம்பே கொஞ்சம் மாறிப்போய் காளன் ஆகியிருக்கிறது போலும். மிளகு சேர்த்து காய் வேக வைப்பது வித்தியாசமாக உள்ளது.சிம்பிளான குறிப்புதான்,செய்து பார்க்கிறேன்.
ஒருவேளை அவர்கள் ஊரில் மிளகாயைவிட மிளகு அதிக விளைச்சல் அல்லது குறைந்த விலையில் கிடைக்குமோ என்னவோ.அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 2:32 பிப இல் மே 2, 2013
கேரளா மிளகு விளைச்சலுக்குப் பெயர்போன இடம்.
உடல் நலத்திற்கும் மிளகு மிகவும் உயர்வானது. எல்லாம் காரணமாக இருக்கலாம். உங்க வெளிநாட்டிலும். மிளகு பிட்ஸா,பாஸ்தா என்று கூடவே
வருகிறது. பார் செய்து. பிரகு எப்படி என்று ஒரு முறையும் சொல்லவும். நன்றி அன்புடன்
11.
மகிஅருண் | 3:13 பிப இல் மே 3, 2013
பெயர் வித்யாசமாக இருக்கிறது. மிளகு சேர்த்து மோர்குழம்பு செய்ததில்லை, மிளகாய்ப்பொடி சேர்த்தும் செய்ததில்லை! அரிசியும் சேர்ப்பதில்லை…அப்ப என்னதான் பண்ணுவேன்னு கேக்கறீங்களா?! ஹிஹிஹ்..தேங்காய்+ப.மிளகாய்+சீரகம் இவைதான் அரைச்சு சேர்ப்பேன். ஒரு முறை சேனைக்கிழங்கு சேர்த்தும் மோர்குழம்பு செய்தேன். அடுத்த முறை உங்க காளன் செய்து பார்க்கிறேன்மா! எண்ணெய் மினுமினுங்க படம் சூப்பரா இருக்கு.
12.
chollukireen | 1:28 பிப இல் மே 6, 2013
மிளகு,விருவிருப்பானது. அரிசி தயிரை திக்காகச் செய்கிறது. வெகு துளி தானே? பச்சைமிளகாய் காரம் ருசி
கொடுக்கும். மிளகாய்ப்பொடி அதுவும்,கலரும் காரமும் கொடுக்கும். கலவை மாற்றி சுவை கொடுக்கிரது. என்னுடைய வியாக்கியானம் இது. முக்கியமானது,தயிரும்,தேங்காயும், அதன் காய்கறியும்.
உன்னுடைய கமென்ட் அழகானது. நன்றி அன்புடன்
13.
jayanthi | 10:07 முப இல் ஜூலை 24, 2013
intha mathiri samyal
14.
chollukireen | 1:46 பிப இல் ஜூலை 26, 2013
பிடித்திருக்கிரதா. நன்றி. வாருங்கள் அடிக்கடி. அன்புடன்