அன்னையர் தினம்.
மே 11, 2013 at 11:40 முப 19 பின்னூட்டங்கள்
அன்னையர் தினம் என்று பிரித்துக் கொண்டாட வேண்டிய அவசியம்
இல்லாமலேயே ஒவ்வொருநாளும் அன்னையை மனதிலிருத்தி
கொண்டாடிக்கொண்டே இருக்கும் , மகன்கள்,மகள்களின் ஞாபகப்
பிரதிபலிப்பாகத்தான் இந்தநாள் இருக்கிறது.
இந்த நாள் இனிய நாளாகவும் இருக்கிறது.
ஓ. இன்று அன்னையர் தினம் என்று கேட்டவுடனே அவரவர்கள்
எண்ணக் குவியல்களுக்கிடையே தாயைப் பற்றிய முக்கிய
நிகழ்வுகள் வரிசையாக கோர்வையாக பவனிவர ஆரம்பித்து
விடுகிறது.தாய் உடனிருந்தால் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்.
மற்றவர்களுடன் பகிர்ந்தால் அவர்களின் தாயைப்பற்றிய எண்ணக்
குவியல்களையும், அன்பையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த அன்னையர் தினம் நேபாலில் சித்திரை மாத அமாவாஸை
அன்று கொண்டாடப் படுகிரது.
ஆமாகோ மூங் ஹேர்னி என்பார்கள். ஆமா–அம்மா. மூங்—முகம்
ஹேர்னி—பார்ப்பது.
பிள்ளையானாலும், பெண் ஆனாலும், அவர்களாலியன்ற
பரிசுப்பொருள்கள், இனிப்பு பழம் என்று வாங்கிப்போய் கொடுத்து
நமஸ்கரித்து ஆசி பெருவார்கள்.
இது கட்டாயமாகச் செய்யவேண்டியது என்று சொல்லியும்,செய்தும்
பழக்கத்திலிருத்துவார்கள். என்னுடைய மூத்த பிள்ளையும்
காட்மாண்டுவினின்றும் போன் செய்து ஆசிகளைப் பெற்றான்.
அதனால் இதைக் குறிப்பிட்டேன்.
அம்மாஇல்லாதவர்கள்கோவிலுக்குப்போய்தேவியைவணங்கிவிட்டு
வரவேண்டும்.
இதே மாதிரி தகப்பனார்கள் தினமும் அவர்களுக்குண்டு. மஹாளய
பக்ஷத்தில் தகப்பனார் தினம் கொண்டாடுவார்கள்.
மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினம் இந்தியாவிலும் கொண்டாடப் படுகிரது.
இப்போது பரவலாக பிள்ளை, மருமகள் எனஇருவரும் வேலைக்குப் போவது வழக்கத்திலிருக்கிரது.
வயதான தாயாரை கூட வைத்துக்கொள்ள யோசிக்கிரார்கள்.
நடப்பதுதான் நடக்கும். அதனால் யாரும் யோசனை செய்யாதீர்கள்.
தாய்மார்களும் அனுஸரித்துப் போவார்களே தவிர வேறு என்ன
வேண்டும்.
அன்னையர் தினம் கொண்டாடப்பட இந்த ஒரு யோக்கியமான
அம்சமும் வேண்டும்.
இம்மாதிரி ஸமயத்தில் என்னுடைய தாயாரை நினைவுகூறுகிறேன்
எங்களுக்குமட்டும் தாயாராக இல்லை. அரிந்தவர்,தெரிந்தவர்கள்.
யாவருக்கும்,ஸமயத்தில் அவசிய அன்பையும் ,ஒத்தாசையையும்
நல்கி ஒரு அருமையான வியக்தியாகி இருந்து காலமானார்.
இப்போதும் வளவனூரில் அறிந்தவர்களைக் கேட்டால்
பாகிஅத்தை,பாகிமாமி,பாய்பாட்டி அந்த மாதிரி ஒரு மனுஷியை
பார்க்க முடியுமா? எவ்வளவு செஞ்சிருக்கா.என்பார்கள்.
என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கத் தோன்றும். அவர்களால்
என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து ஒரு ஸோஷியல் ஒர்க்கராக இருந்தவர்.
வாழ்க்கையில் பிறந்த வீட்டில் கடைசிப் பெண்ணாகப் பிரந்து
பன்னிரண்டு வயதிற்குள் ஒரு நார்பத்தைந்து வயதுடையவருக்கு
வாழ்க்கைப் பட்டு,அங்கும் மாமியார்க் கொடுமைகள், அனுபவித்து,
ஏன் அந்த நாளைய வழக்கப்படி கணவர் மட்டும் என்ன, அடிமையாக
மனைவிகளை நடத்தும் காலந்தானே?
இவர் மட்டும் விதிவிலக்கா, இல்லையே!
விஞ்ஞானம் முன்னேராக்காலம். ஆண் குழந்தைகளை இழந்து
கணவர் ஓய்வு பெறும் போது, வருமானமில்லாத, வாழ்க்கை.
இரண்டு பெண் குழந்தைகள். இருந்த ஸொத்தை விற்று
அவர்களுக்கு வாழ்வளித்து விட்டு, பிறத்தியாருக்கு ஆஸ்ப்பத்திரி
போகணுமா,மாமியைக் கூப்பிடு, கலியாணமா,கார்த்தியா,
மாமியைக் கேளு என்ன செய்யணும் ஸரியா சொல்லுவா, யாருக்கேனும், வயதானவர்களுக்கு உடம்பு ஸரியில்லையா,
மிகவும் மோசமான நிலையா, துணைக்கு மாமியைக் கூப்பிடு,
பெண்ணுக்கு பிரஸவமா, தைரியத்துக்கு மாமியைக் கூப்பிடு,
எல்லாருக்கும் ,எல்லாவித ஒத்தாசையும் மாமி பண்ணுவா.
என்ற எண்ணம் வரும்படி நடந்து கொண்டவர் என் அம்மா. இருப்பதை, கிடைப்பதை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்
வியக்தி. ஒரு ஸந்னியாசினிபோல வாழ்ந்தவர்.
அப்பா ஓரிடத்திற்கும் போக மாட்டார். அவர் வேலைகள் ஒழுங்காக
நடக்க வேண்டும். பூஜை,புனஸ்காரம், மற்றது அவரின் தேவைகள்
எந்த குறைவும் வரக்கூடாது. ஸிம்மம் மாதிரிதான்
எதையும் என் அம்மா பிரதி பிரயோஜனம் பார்த்துச் செய்யவில்லை.
சின்ன பசங்கள் முதல்பெரியவர்கள்வரைபாகிமாமி,பாகிஅத்தையை
உபகாரமான மனுஷி, என்று ஸந்தோஷமாகக் கொண்டாடுவார்கள்.
அந்த பாகீரதி அம்மாளின் வாழ்க்கயைப் பற்றி அடுத்துச் சில
பதிவுகளில் எழுத வேண்டுமென்று இந்த வார்த்தை எழுதும்போது
மனதில் தோன்றுகிறது. பழைய கதைகள்தான்.
இந்த வருஷம் மே பன்னிரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை,
அன்னையர் தின நன்னாளில் அவரைப் பற்றி நான் இன்றே நினைவு
கூர்ந்துசிலதுளிகளைஉங்கள்யாவருடன்பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
என் அன்னையின் நினைவிற்கு இந்த நன்நாளில் அஞ்ஜலியை
ஸமர்ப்பிக்கிறேன்.
யாவரும் அன்னையை நேசித்து அன்பு செலுத்துங்கள்.
அன்னையைப்போலொரு தெய்வமில்லை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் பெண் மதிமாலை மிகவும் பெயர் போனது.
கடலைப்போல் மாதா ஸஹாயம்.அதற்குடல் செருப்பாய் தைத்து போடுதல் நியாயம்.
பெற்றதாய் தந்தைக்குத் தீங்கு செய்யும் பிள்ளையை தன் பிள்ளையே பழி வாங்கும்.
மதிஇது மதியிது பெண்ணே—புண்யவதியல்லவோ நீ மகராசி கண்ணே!1என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.
எல்லா தாயுள்ளங்களுக்கும் நன்றி செலுத்துவோம்.
தொடர்வோம். அன்புடன்
.
Entry filed under: அன்னையர் தினம்.
19 பின்னூட்டங்கள் Add your own
Geetha Sambasivam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Angelin | 12:24 பிப இல் மே 11, 2013
மனதை தொட்டன காமாட்சியம்மா பதிவின் ஒவ்வொரு வரிகளும் ..
எல்லா நாளுமே அன்னையரை கொண்டாடனும் .
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை ..
தொடருங்கள் நானும் உங்களோடு வருகின்றேன்
2.
chollukireen | 12:48 பிப இல் மே 11, 2013
அஞ்சு,வாவா, கட்டாயம் என்னுடன் வா. உன் பரிவுக்கு மிகவும் நன்றி. ஆசிகள். அன்புடன்
3.
VAI. GOPALAKRISHNAN | 12:28 பிப இல் மே 11, 2013
அருமையான ஆக்கம், மிகவும் பொறுமையாக ரஸித்துப்படித்து நெகிழ்ந்து போனேன்.
தொடர்ந்து எழுதுங்கோ.
தங்கள் தாயாரைப்பற்றி படித்ததும் மனம் கனத்துப்போனது. அவர்கள் செய்துள்ள தன்னலமற்ற தியாகமும், சமூகத்தொண்டுகளும் பாராட்டத்தக்கவைகள்தான்.
என் அம்மாவை மனதில் நினைத்துக்கொண்டு தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன். ஆசீர்வாதம் செய்யுங்கோ.
அன்புடன் + நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
4.
chollukireen | 12:46 பிப இல் மே 11, 2013
ஆசீர்வாதங்கள்.உங்களம்மாவும் யாவரையும் ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார்கள். எழுத யோசித்தேன்.
ஸரியாகுமாயென்ற யோசனை. ஊக்கமளிக்கும் உங்கள் பரிவு வார்த்தைகள், எழுத தெம்பு கொடுக்கும்.
நன்றி. உங்கள் நமஸ்காரங்களுக்கு உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும், க்ஷேமமான நன்மைகளளிக்க
கடவுளை வேண்டி ஆசீர்வாதங்களை அன்புடனளிக்கும் அன்புடன் மாமி
5.
Gopalakrishnan Vai. | 12:29 பிப இல் மே 11, 2013
அருமையான ஆக்கம், மிகவும் பொறுமையாக ரஸித்துப்படித்து நெகிழ்ந்து போனேன்.
தொடர்ந்து எழுதுங்கோ.
தங்கள் தாயாரைப்பற்றி படித்ததும் மனம் கனத்துப்போனது. அவர்கள் செய்துள்ள
தன்னலமற்ற தியாகமும், சமூகத்தொண்டுகளும் பாராட்டத்தக்கவைகள்தான்.
என் அம்மாவை மனதில் நினைத்துக்கொண்டு தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.
ஆசீர்வாதம் செய்யுங்கோ.
அன்பு நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
6.
VAI. GOPALAKRISHNAN | 12:30 பிப இல் மே 11, 2013
அருமையான ஆக்கம், மிகவும் பொறுமையாக ரஸித்துப்படித்து நெகிழ்ந்து போனேன்.
தொடர்ந்து எழுதுங்கோ.
தங்கள் தாயாரைப்பற்றி படித்ததும் மனம் கனத்துப்போனது. அவர்கள் செய்துள்ள தன்னலமற்ற தியாகமும், சமூகத்தொண்டுகளும் பாராட்டத்தக்கவைகள்தான்.
என் அம்மாவை மனதில் நினைத்துக்கொண்டு தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன். ஆசீர்வாதம் செய்யுங்கோ.
அன்பு நமஸ்காரங்களுடன்
கோபாலகிருஷ்ணன்
7.
chollukireen | 12:50 பிப இல் மே 11, 2013
ஆசிகள். மிகவும் நன்றி. ஊக்கமளிக்க உங்களின் வார்த்தைகள். மகிழ்ச்சி. அன்புடன்
8.
ranjani135 | 1:25 பிப இல் மே 11, 2013
அன்புள்ள காமாஷிமா
போன வருடம் நான் உங்களைக் கேட்டுக் கொண்டேன் உங்கள் அன்னையைப் பற்றி எழுதும் படி. இந்த வருடம் ஆரம்பித்திருக்கிறீர்கள்.
ஆரம்பமே மனதை நெகிழ வைத்துவிட்டது. எல்லோருக்கும் உபகாரியாக இருந்த ஒருவரைப் பற்றி படிக்க தயாராகிறேன். அந்தக் காலத்து மனிதர்களைப் பற்றி நினைக்கும்போது நாம் இத்தனை சௌகரியங்கள் இருந்து குடும்பம் நடத்துவது ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது, இல்லையா?
//கடலைப்போல் மாதா ஸஹாயம்.அதற்குடல் செருப்பாய் தைத்து போடுதல் நியாயம்.
பெற்றதாய் தந்தைக்குத் தீங்கு செய்யும் பிள்ளையை தன் பிள்ளையே பழி வாங்கும்.//
எத்தனை அழுத்தமான வரிகள்!
9.
chollukireen | 5:43 பிப இல் மே 11, 2013
நான் எழுதிக்கொண்டே வரும்போது சென்றவருஷம் நீங்கள் எழுதச் சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. நீங்களும் அதைக் குறிப்பிட்டு எழுதினது மிக்க மகிழ்ச்சி. ஒரே கோணத்தில் எண்ணங்கள். இது எதைக் குறிக்கிரது?
உடனே பதில் கொடுத்த யாவருக்கும் நன்றி.
உண்மையான செய்திகள். ஆடம்பர விஷயங்களில்லை. நெகிழ வைக்கும் காரணம் அதுதான். நானும் எழுதிவிட்டு —–அன்புடன்
10.
திண்டுக்கல் தனபாலன் | 2:56 பிப இல் மே 11, 2013
அம்மாயுடனான நினைவுகள் உருக வைத்தன…
சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள் அம்மா…
அன்னையர் தின அன்பான நல்வாழ்த்துக்கள்…
11.
chollukireen | 5:49 பிப இல் மே 11, 2013
திரு தனபாலன், உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் ஸந்தோஷம்.நினைவுகள், அம்மாதிரியானவைகள். உணர்ந்து எழுதியது.பாராட்டிற்கு மிகவும் நன்றி. அன்புடன்
12.
chitrasundar5 | 8:29 பிப இல் மே 11, 2013
காமாக்ஷிமா,
நீங்கள் சொல்வதிலிருந்து அன்னையர் தினம்,தகப்பனார் தினம் என்று ஏற்கனவே நாம் கொண்டாடியவைகள்தான் இன்று ஆங்கிலப் பெயரில் சொல்லும்போது எளிதாக உலகம் முழுவதும் பரவியிருக்கிறது போலும். உங்களுக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.
பாகீரதி அம்மாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன், எழுதுங்கமா.கடைசி நான்கைந்து வரிகள் மனதில் பதிந்துவிட்டது.
“பிறந்த வீட்டில் கடைசிப் பெண்ணாகப் பிறந்து பன்னிரண்டு வயதிற்குள் ஒரு நாற்பத்தைந்து வயதுடையவருக்கு வாழ்க்கைப் பட்டு”_____அவர்களின் தியாகத்தை நினைத்து வணங்குவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்!அன்புடன் சித்ரா.
13.
chollukireen | 6:35 முப இல் மே 13, 2013
இந்துக்கள், அவரவர்கள் வீட்டில், அவர்களுக்கு இயன்ற
முறையில் தாய்,தகப்பனாரகளுக்கு,ச்ரார்தம்,அதாவது திதி கொடுக்காது விடுவதில்லை. அந்த நாட்களில் இடைஞ்சல் ஏற்பட்டால். அதற்காகவுள்ள வேறு நாட்களில் அதைச் செய்து முடிப்பார்கள். கொண்டாட்டம்
என்று இல்லாவிட்டாலும், கட்டாயம் செய்தாக வேண்டும் என்ற நியதியையும் கடை பிடிக்கிரார்கள்.
அதனால் நாம் மறைந்த எவர்களையும் மறப்பதில்லை.
உன் பின்னூட்டம் எனக்கு ஊக்கத்தைத் தருகிரது.
ஸந்தோஷம். அன்புடன்
14.
gardenerat60 | 2:18 பிப இல் மே 29, 2013
அம்மா, மனசை பிசைந்தது.
அன்னையர் தினம் மட்டுமல்லாமல், பல தினங்களில் அன்னையை நினைத்து, வியப்படைகிறேன். அவள் செய்த தியாகங்களையும், அவள் எதையும் எதிர் பார்க்காமல், சிம்பிளாக , எங்களுக்காகவே இருந்ததையும் , நினைத்து மனம் நெகிழ்கிறேன். அவள் எனக்கு மகளாக அடுத்த சென்மத்தில் பிறந்தால் .. கடவுளிடம் வேண்டுகோளும் பெண்டிங்கில் …(அசட்டு பட்டு).
உங்கள் தாயாரை பற்றி படித்து மனசு வருத்தப் பட்டாலும், அந்த உயர்ந்த மனிஷி, மத்தவர்களுக்கு எத்தனை உதாரணங்களை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. அன்பு ஒன்று தான் மனிதர்களை வழி நடத்துகிறது!.
15.
chollukireen | 11:30 முப இல் ஜனவரி 11, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இது ஒரு தொடராகவே நான் எழுதியது. 2013 இல் அன்னையர் தினத்திற்காக நான் எழுதிய பதிவு இது. தொடர்ந்து கதைபோல இருக்கும் இதைப் படிததுக் கருத்து சொல்லுங்கள். புதுப் பதிவு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதுவும் சரித்திரம் தான். எல்லா திங்கட் கிழமைகளில்த் தொடர்ந்து பதிவு செய்கிறேன்.அன்புடன்
16.
நெல்லைத்தமிழன் | 1:12 முப இல் ஜனவரி 12, 2021
பழையகால நினைவுகள்….. பெண்களுக்கு எவ்வளவு துயரமானவை… அதனையும் மீறி பெண்கள் தங்கள் நினைவை இருந்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். உங்கள் தாயாரும் அப்படித்தான்.
தந்தையர் தினம், அன்னையர் தினமென்று உண்டா? இன்று அமாவாசை தர்ப்பணம்….. இன்னும் சில நாட்களில் மாதப்பிறப்பு தர்ப்பணம்..
தொடர்கிறேன்.
17.
chollukireen | 11:26 முப இல் ஜனவரி 12, 2021
நாம் அவர்களக்குக் கொண்டாடுவதெல்லாம் அவர்களின் மறைவு தினத்தில் அல்லவா? இம்மாதிரி தர்ப்பணதினங்களும் அவர்களின் ஞாபக தினம்தானே. அதையும் ஞாபகதினமாகக் கணக்குப் போடுகிறேன்.
மற்றபடி நீங்கள் உணர்ந்து படித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. இன்னும் விரிவடைகிறது. அன்புடன்
18.
Geetha Sambasivam | 6:48 முப இல் ஜனவரி 13, 2021
அருமையான நினைவுகள். அம்மா என்றாலே தெய்வம் தானே. உங்கள் அன்னையை நீங்கள் நினைவு கூர்ந்த விதம் அருமையானது. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கேன்.
19.
chollukireen | 10:59 முப இல் ஜனவரி 13, 2021
ய்ரைப்பற்றியும் இப்படிப்பட்ட பதிவுகள் எழுதினால்தானே அறியமுடியும். அதுவும உள்ளது உள்ளபடிதான் பகிர்ந்திருக்கிறேன். உஙகள் வரவிற்கு நன்றி. அன்புடன்