அன்னையர் தின தொடர்வு. 1
மே 21, 2013 at 11:50 முப 16 பின்னூட்டங்கள்
என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன்.
அவர் இருந்தா நூரைவிட அதிகம் வயது. இருக்க
வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப்
கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை
தெரிந்து கொள்ள முடிகிரது. அவரின் சிறிய வயது
காலத்தில் விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு
அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய
வேண்டும், என்பதால், சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது
பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர
நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன்
தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும்,
கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள். ஆதலால் வயது
வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம்.
அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல,
கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்
போலும்.
எல்லோரும்,எல்லோருக்கும், கொண்டு கொடுத்து சம்பந்தம்
செய்வதால் எல்லோரும் ஏதோவகையில்உரவினர்கள்தான்.
என் அம்மாவைப் போலவே அவர் அம்மாவும்
வயதானவருக்கு வாழ்க்கைப் பட்டவர்தான். அவர்
பெண்களுக்காவது இதில் விதிவிலக்கு உண்டா?
நான்கு பெண்களில் நான்கு நான்கு விதம் அவருக்கும்.
ஏன் ரொம்ப ஏழையா நீங்கள் என்று என் அம்மாவைக்
கேட்டேன்.
அப்படியெல்லாம் கிடையாது. நிலம்,நீர்,வீடு,வாசல்
எல்லோருக்கும் இருந்தது. அதையெல்லாம், விற்று,வாங்கி
கலியாணம் என்பதெல்லாம் நினைக்க முடியாத விஷயம்.
இருப்பதை வைத்துக்கொண்டுதான் செய்வார்கள்.
சாப்பாட்டிற்கு கஷ்டம் யென்பதே கிடையாது. தெரியவும் தெரியாது.
மலிந்த காலம். பணப்புழக்கம் அதிகம் இல்லை.
கௌரவமாக இருப்பதைக் கொண்டு ஸமாளிப்பதுதான்
ஸரி என்று நினைக்கும் காலம்.பெரியவா சொன்னா
கேட்கணும். அது ஒன்றுதான் தெரியும்.
வேரெ ஏதாவது கேளு. பதில் சொல்றேன்.
உங்க அக்காவெல்லார்க்கும் எப்படி கல்யாணம்.?
பெரிய அக்காவுக்கும் எனக்கும் மும்பது வயஸு
வித்தியாஸம். அவ முதலு.நான் கடைசி.
அக்காவோட மூணாவது பொண்ணும்,நானும் ஒரே வயஸு.
அக்காவை நன்னாதான் கொடுத்தா. அவ சீக்கிரமே விதவை ஆயிட்டா.
இரண்டாவது அக்கா, பரவாயில்லே அவ்வளவுதான்.
மூணாவது அக்கா இரண்டாந்தரமாதான் கொடுத்தா.சின்ன
வயது.
அப்பல்லாம் வசூரி கொடுமரொம்ப.அக்காவோடபுருஷரும்
இம்மாதிரி வந்து குளிர்ந்துட்டார்.
அக்காக்கு நாப்பது நாள் கரு வயத்துலே. பாட்டி இதை
துக்க காரியத்துக்குவந்தவாள் எல்லோருக்கும் சொல்லி
ஸந்தோஷமாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை இந்த
ஸமயத்தில் சொல்கிறேன் என்று சொல்லி, கற்பை
காப்பாற்ற ஸமூகத்தில் பகிரங்கப் படுத்த வேண்டி
இருந்தது, காலம் அப்படியெல்லாம் இருந்தது என்பாள்.
இரண்டு அண்ணாக்கள். குடும்பஸ்தர்கள். அந்த ஸமயம்
ஸொத்தை பங்கு போட்டுக் கொள்வதிலிருந்தார்களே தவிர
தங்கை பற்றி யோசனை இல்லை.குடும்பம் பிரிஞ்சுடுத்து.
இந்த ஸமயத்தில் ஊரெல்லாம் ஃப்ளூ. எங்கப்பாவிற்கு
மனைவி இழப்பு. ஆச்சு ஒரு இடம் காலி. இந்தப் பெண்ணா,
அந்தப் பெண்ணா என்று அப்போதே பேச்சு ஆரம்பம்.
நாற்பது நாள் முடிந்தவுடன் , வண்டி கட்டிக்கொண்டு
மயிலம் போய் அம்மாவுக்கு ஒரு கல்யாணம். மொத்த
சிலவு முப்பத்தைந்து ரூபாய். ஒரு நாள் கல்யாணம் வீட்டில்
செய்ய மாட்டார்கள்
எவ்வளவு சுலபமாக குடும்பப் ப்ரச்சினை தீர்ந்து போச்சு.
முதல் மனைவி வழியில் ஆறுமாதக் குழந்தை கையில்.
அழகான குழந்தை. ஆசையோடு ஒட்டிண்ட குழந்தை.
மாமியார் படுத்தல். மனது கஷ்டப்படும். அவ்வளவுதான்.
பாட்டியின் அம்மா கொடுத்தது தன்னுடைய ஒரு காரை
என்கிற கழுத்தில் போடும் ஐந்து பவுன் நகை.
இல்லை இது இப்படிதான் நடக்கும் என்று எனக்கு தெரியும்.
அம்மாவின் வாக்குமூலமிது.
எது எப்படி இருந்தாலும், பிறந்தகத்து சீர்கள் வராவிட்டால்,
அது,யிது என்று பிரந்த வீட்டவர்களுடன் பகையை
வளர்ப்பது இவையெல்லாம் அப்போதைய பழக்கம்.
அதெல்லாம் சொல்லி மாளாது.
இப்படி அம்மாவும், பிரந்த வீடென்று போக முடியாது.
அக்கா வளர்ந்து கொண்டிருந்தாள். அம்மாவிற்கும் முதலில் ஆண் குழந்தை.
அம்மாவின் அம்மா எங்கள் அப்பாவிற்கு ஸகோதரி முறை.
இந்தப்பாட்டி படுத்து விட்டாள்.
அந்தப்பாட்டிதான் உதவிக்கு வந்தாள். பாட்டி போய்ச் சேர்ந்தாள்.
அம்மாவின் அம்மா பெண்ணுடனே தங்கி உதவி செய்து
காலம் முடியும் வரை உடனிருந்தாள். இதெல்லாம் என்ன கதை என்கிறீர்களா?
இப்படிதான் எழுதத் தோன்றியது. அடுத்து பிரகு பார்க்கலாம்.
நீங்களும் படியுங்கள். தொடரலாம்.
Entry filed under: அன்னையர் தினம்.
16 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:08 பிப இல் மே 21, 2013
//அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல,
கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்
போலும்.//
உணர்ச்சிமிக்கப் பதிவு. நன்றாக விபரமாகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். சிலவற்றை நினைத்தால் மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.
தங்களுக்கும் தங்களைப்பெற்ற தாய்க்கும் சேர்த்து என் அன்பான நமஸ்காரங்கள்.
பிரியமுள்ள கோபாலகிருஷ்ணன்
2.
chollukireen | 1:41 பிப இல் மே 22, 2013
ஆசிகள். உங்களுக்கு உடனே பதில் போட்டிருக்கவேண்டும். இன்டர்நெட் வேலைசெய்யவில்லை.
நன்றி. தவராது நமஸ்காரம் சொல்லி எழுதுகிறீர்கள். ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. என்னுடைய வயது அதற்கு உபயோகப் படுகிரது. என் அம்மாவிற்கும் சேர்த்து நமஸ்காரங்கள்
எழுதியுள்ளீர்கள். பெரியவர்களென்றால் மதிப்பு கொடுக்கும் உங்களை எல்லோரும் ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருப்பார்கள். உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்
3.
திண்டுக்கல் தனபாலன் | 12:31 பிப இல் மே 21, 2013
மனதில் எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி உள்ளீர்கள் என்று புரிகிறது…
4.
chollukireen | 1:40 பிப இல் மே 23, 2013
இரண்டு தலைமுறை ஸமாசாரம். எழுதும்போது ஞாபகங்கள் மனதைப் பாதித்தது உண்மை. நன்றி.அ்புடன்
5.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் | 2:51 பிப இல் மே 21, 2013
வணக்கம்
அம்மா
மனதை வருடி விட்டது அருமையாக எழுதியுளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
6.
chollukireen | 12:07 பிப இல் மே 23, 2013
உண்மைக் கதைகளல்லவா. உங்கள் மறுமொழிக்கு மிகவும் நன்றி. அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள். அன்புடன்
7.
ranjani135 | 4:58 பிப இல் மே 21, 2013
அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் தான் நடக்கும். பாவம்!கிடைத்த வாழ்க்கையை வாயை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டு அதிலும் நிறைவாக இருந்திருக்கிறார்கள்.
நாம் இப்போது அனுபவிக்கும் வாழ்க்கை எத்தனை மேலானது என்று தோன்றுகிறது.
//துக்க சமயத்தில் சந்தோஷமாகச் சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி கற்பைக் காப்பாற்ற வேண்டியிருந்தது//
மனது மிகவும் சங்கடத்தில் ஆழ்ந்தது.
8.
chollukireen | 12:04 பிப இல் மே 23, 2013
ஆமாம். எல்லாவற்றையும்,ஸகஜமாக ஏற்றுக்கொண்டு இயல்பாக வாழ்ந்திருக்கிரார்களென்பதுதான்
மறுக்க முடியாத உண்மை. காலங்கள் அவ்வப்போது மாறி நாமும் அதற்க்கேற்றார்ப்போல மாறிவருகிறோம்.அந்தக் காலத்தில் குழந்தைச் செல்வமும் அதிகம். படிப்பினைகளும் அதிகம்.
இந்தக்காலத்தில் படிப்பினைகள் மாத்திரம் அதிகமாகவே கிடைக்கிரது. உன் பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
9.
chitrasundar5 | 6:51 பிப இல் மே 21, 2013
காமாக்ஷிமா,
“அவர் பெண்களுக்காவது இதில் விதிவிலக்கு உண்டா?”___இந்த வரியை அவர் மனதிற்குள் நினைத்திருக்கலாம்.ஒருவேளை அந்த நாளில் அதைக்கூட நினைக்க முடியாத அளவிற்கு வளர்த்திருக்கலாம்.
முதலில் ‘வசூரி’ என்பது என்னவென்று புரியாததால் அந்த பத்தியில் ஏகக்குழப்பம்.பிறகு விக்சனரியில் பார்த்து தெளிவாகிட்டேன்.உங்க மூன்றாவது பெரியம்மாவின் நிலை மனதைப் பிழிகிறது.
அப்போதெல்லாம் மாப்பிள்ளையின் வயது மாமியாரின் (மணப் பெண்ணின் அம்மா) வயதைவிட அதிகமாய் இருக்குமாம்.சொல்லக் கேட்டிருக்கேன். இதனால் இளம் வயதில் விதவையாவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
மயிலம் முருகன் கோயிலுக்கு நானும் பலதடவை போயிருக்கேன்மா.
“இப்படிதான் எழுதத் தோன்றியது”_____இப்படி எழுதினால்தானே படிக்க ஆர்வமாய் இருக்கிறது.தொடருங்கள்,நாங்களும் தொடர்கிறோம்.அன்புடன் சித்ரா.
10.
chollukireen | 11:54 முப இல் மே 23, 2013
ஸுக,துக்கங்களைப் பிற்பாடு சொல்லும் போது கதைகளாகி விடுகிரது. அம்மாதிரி என் அம்மாவும்,பின்நோக்கிச் சென்று, லயிப்போடு சொல்வார்களாதலால் விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகிரது. நல்லது,கெட்டது அதன் போக்கில் நடந்து கொண்டிருந்தாலும், விஞ்ஞான முன்னேற்றத்தால்
விகிதாசாரங்கள் மிகவும் குறைந்திருக்கிரது ஒவ்வொரு விஷயத்திலும்.
மயிலம் புகழ் பெற்ற முருகன் கோயில். நம்முடைய வட்டாரம் அல்லவா? உனக்கும் ஞாபகம் வருவதில் ஸந்தோஷம். தொடருங்கள், நாங்களும் தொடர்கிறோம். வரவேற்பிற்கு நன்றி, அன்புடன்
11.
gardenerat60 | 2:26 பிப இல் மே 29, 2013
//’இது எல்லாம் என்ன கதை ‘//… இது தான் கதை, உண்மை கதை. மனசிலே ஓடும் எண்ணங்களை அப்படியே தெளித்து எங்களை நெகிழ வைக்கும் கதை.,
எங்களை அம்மா பாட்டிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று எட்டிப்பார்க்கத் தூண்டும் கதை.
அம்மா, தொடருங்கள். கடந்த தலைமுறைகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது தெரிந்தகொள்வது எத்தனை அவசியம்!. பல பாடங்கள் பொதிந்து உள்ளன.
12.
chollukireen | 11:34 முப இல் ஜனவரி 18, 2021
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
அம்மாவின் கதை ஆரம்பம். பாருங்கள். படியுங்கள் அன்புடன்
13.
நெல்லைத்தமிழன் | 3:51 பிப இல் ஜனவரி 18, 2021
சென்ற தலைமுறைக்கும் முந்தைய தலைமுறை.. 50களின் கதை. படிக்கும்போது அந்தக் கால நிலவரம் தெரிகிறது. என் அம்மாவும் சொல்லுவார், அவருடைய அப்பா, கவர்ன்மெண்ட் வேலை பார்க்கும் வாத்தியாருக்குத்தான் கல்யாணம் செய்து வைக்கிறேன்மா, கடைசி வரைக்கும் சாப்பாட்டிற்கு ஒரு குறைவும் இருக்காது என்று.
மாமியார் கொடுமைகள் – சென்ற/இந்தக் காலத்தில் என்றால் தனிக்குடித்தனம் (இந்தக் காலத்தில் என்று சொல்லமுடியாது. இப்போல்லாம், பையனுக்கு பேகேஜே இருக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். காலத்தின் கோலம்). அதற்கு முந்தைய காலத்தில் மாமியாரின் ஆளுமைக்கு அடங்கி இருக்கணும். பாவம்தான்.
பெண்கள்தாம் நம் குடும்பப் பாரம்பர்யத்தை கஷ்டத்தைத் தாங்கிக்கொண்டு வளர்த்தவர்கள். அவர்கள் வணங்கப்படவேண்டும்
தொடருங்கள்
14.
chollukireen | 11:41 முப இல் ஜனவரி 19, 2021
இது மிகவும் பழைய கதைதான். இருந்தாலும் அந்தகாலத்தைக் கண்முன்னால்க் கொண்டு வருகிறது. இன்னும் மோசம் அவர்களுக்கு முந்தையத் தலைமுறை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இன்னும் பின்னைய தலைமுறைகளையும் பாரத்தாகிறது . மனிதர்களின் உறவே வேணடாம் என்கிறதோ என்று ஸந்தேகம் எழுகிறது இந்தக் காலத்தில். அன்புடன்
15.
Geetha Sambasivam | 8:15 முப இல் ஜனவரி 19, 2021
அம்மாவின் கதை மனதை உருக்கி விட்டது. எங்க வீட்டில் என் பாட்டி (அம்மாவின் அம்மா) ஐந்து வயதில் திருமணம் ஆனதாகச் சொல்லுவார். தாத்தாவின் வயது பதினெட்டு! ஆனால் முதல் திருமணம் தான். வரதக்ஷிணை தாத்தாவை மாமனார் வீட்டில் வக்கீலுக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது நிபந்தனை என்பார்கள். இத்தனைக்கும் தாத்தா குடும்பம் வசதியானது தான். ஆனால் அந்தக் காலங்களில் வரதக்ஷிணை என்பது கௌரவம் என நினைத்திருக்கிறார்கள். நீங்கள் எழுதி இருக்கும் மாமியார் கொடுமைகள் இப்போவும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கு! 😦 பெண்கள் தான் மனசு வைச்சு மாறணும்.
16.
chollukireen | 11:54 முப இல் ஜனவரி 19, 2021
மாமியாரே வேண்டாம் என்ற காலமிது. எங்கள் அப்பாவின் மூத்த ஸகோதரிக்கும் இம்மாதிரி ஐந்து வயதில் விவாகமாம்.ஆறு ஏழு வயதிற்குள் யாவும் முடிந்தும் விட்டதாம் . பின்னாளில் கேள்விப்பட்டதுதான். மனைவிக்குப் பரிவான கணவர்களும் அதிகமில்லை. காலம் மாறிவிட்டது. எவ்வளவோ பல தினுஸுக் கதைகள். காசுபணம் வேண்டும். என்னாளிலும்.அன்புடன்